Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

QNet மற்றும் ACN பற்றிய விளக்கம் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

QNet மற்றும் ACN பற்றிய விளக்கம் தேவை

இந்த இரு நிறுவனங்களிலும் கணக்கு வைத்திருப்போர் அல்லது அவை பற்றி அறிந்தோர் அல்லது இவற்றின் மூலம் நன்மையடைந்தோர் பயனடைந்தோர் அல்லது தீமையடைந்தோர் தயவு செய்து அறியத்தாருங்கள். இந்த நிறுவனங்களின் பேச்சு தற்சமயம் பிரான்சில் தமிழர்களிடையே அதிகமாக உள்ளது.

நன்றி.

நல்ல வேளை இங்க வந்து கேட்டீங்கள் இதுக்குள்ள போறதுக்கு முதல்.

தமிழர்களை உலகத்தில இருக்கிற எல்லா இனமும் எமாத்தி முடிஞ்சு, இனி எங்களை ஏமாத்திறதுக்கு யாரு இருக்கினம்? யாருமே இல்லாட்டில் என்ன. தமிழனை ஏமாத்த எங்கயாவது இருந்து ஒரு தமிழன் வருவான்.

இந்த வரிசையில் தற்பொழுது இணைஞ்சிருக்கிறது ACN வீடியோ இலவச தொலைபேசி நிறுவனத்தினர்.

இதை ஒரு நிறுவனம் என்டு சொல்லுறதை விட ஒரு கொள்ளைக்கும்பல் என்று சொல்லலாம். இப்ப சுவிசில இவையள் மும்முரமா ஆட்கள் சேர்க்கத்தொடங்கி இருக்கினம்.

சரி இப்ப விசயத்துக்கு வருவம்.

ACN என்ட நிறுவனம் பல ஆண்டுகளாக விடியோ தொலைபேசி சந்தையில வெற்றிகரமா நடந்து கொண்டிருக்கிற ஒரு நிறுவனமாம்.

கிட்டத்தட்ட 21 நாடுகளில இவையளுக்கு மில்லியன் கணக்கில வாடிக்கையாளர்கள் இருக்கினமாம். இவையின்ர சேவையில சேர்ந்து பணக்காரர்கள் ஆன ஆக்களின்ர போட்டோக்கள் அடிங்கிய ஒரு விளம்பர புத்தகமும் கையில் கொண்டு வருவினம்.

நீங்களும் எப்படி பணக்காரர் ஆகலாம் என்டு உங்களுக்கு மூளைச்சலவை செய்யப்படும்.

acn-video-phone.jpg

இவையின்ர தொழில் தான் என்ன?

நீங்கள் தற்பொழுது பாவிக்கும் தொலைபேசி இணைப்பிற்கு செலுத்தும் அதே மாதாந்த பணத்தை தான் இவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அனைவருடனும் (இது பொய்) இலவசமாக பேசலாம் என்பார்கள். சிறிலங்கா இந்தியா போன்ற நாடுகளிற்கும் விடியோ தொலைபேசி பாவிக்கலாம் என்பார்கள். நீங்கள் இவர்கிளிற்கு ஒரு வாடிக்கையாளரை சேர்த்துவிட்டால் உங்களிற்கு கமிசன் கிடைக்கும். பின்பு நீங்கள் சேர்த்துவிடுபவர் கொண்டு வந்து சேர்த்துவிடுபவர்களிற்கும் உங்களிற்கு கமிசன் கிடைக்கும்.

மேலே குறிப்பிட்டது போல இவர்களின் சேவை 21 நாடுகளில் உள்ளது. இந்த 21 நாடுகளில் சிறிலங்கா, இந்தியா, மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள் இல்லை. அப்படியென்றால் இந்த நாடுகளிற்கு விடியோ தொலை பேசி அழைப்பு சாத்தியமில்லையா? இருக்கிறது. இங்கே தான் இவர்களின் ஏமாற்று வேலை வெளிவருகின்றது. சிறிலங்காவில் வசிக்கும் உங்கள் உறவினரிடம் இந்த சேவை இருக்க முடியாது (சிறிலங்காவில் இவர்களின் சேவை இல்லை).ஆனால் உங்களின் உறவினரிடம் விடியோ பார்த்து பேசும் தொலைபேசி இருந்தால் நீங்கள் அவருடன் பேசலாம். ஆனால் இலவசமாக அல்ல! ACN வைத்திருப்பவர்களுடன் மட்டுமே நீங்கள் இலவசமாக பேசலாம். ஆனால் இதை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே நீங்கள் கேட்டால் ஆம் இலவசம் என்று உங்களை ஏமாற்றுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் அதை உடனடியாக எழுத்து மூலமாக தர முடியுமா என்று கேட்கவும். எப்படியும் எதோ சொல்லி உங்களை சமாளிப்பார்கள். ஏமாற வேண்டாம்!

சரி இதெல்லாம் கவனிக்காமல் நீங்கள் கையெழுத்துப்போட்டு அவர்களின் சேவையில் இணைந்து விட்டிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு மாதம் களித்து உங்கள் பில் வருகிறது. பில்லை பார்த்து நீங்கள் அதிச்ச்சியடைந்து இவர்களிற்கு புகார் செய்து கடிதம் எழுதுகிறீர்கள். எங்கே அனுப்புவீர்கள்? அவர்களின் சுவிசின் முகவரி இது தான் (நான் நினைக்கினறேன் அனைத்து நாடுகளிலும் இதே நடைமுறையை தான் பின்பற்றுவார்கள் என்று): ACN Communications Schweiz GmbH, c/o TMF Services SA, Rue de Hesse 16, 1200 Genève (தகவல் http://www.moneyhouse.ch/). இங்கே இவர்களின் இரண்டாவது கோல்மால் வேலை அப்பட்டமாகின்றது. அதாவது நீங்கள் கையொப்பம் இட்ட பத்திரத்தில் இவர்களின் முகவரி வெறுமனே ACN Communications Schweiz GmbH, Rue de Hesse 16, 1200 Genève என்று மட்டுமே இருக்கும். இப்பொழுது நீங்கள் புகார் கடிதம் அனுப்புவதென்றால் எங்கே அனுப்புவிர்கள்? ஆம், நீங்கள் கையெழுத்திட்ட படிவத்தில் உள்ள ACN Communications Schweiz GmbH, Rue de Hesse 16, 1200 Genève முகவரிக்கு தான் அனுப்புவிர்கள் (வேறு முகவரி நீங்கள் அறிந்திருக்கு சாத்தியம் இல்லை). ஆனால் இது போய் சேர்வது சாத்தியமில்லாத ஒரு விடயம். அதாவது உங்கள் வீட்டில் நீங்கள் ஒருவரை வாடகைக்கு வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீடு உங்களின் பெயரில் உள்ளது. நீங்கள் வாடகைக்கு வைத்திருப்பவர்க்கு யாராவது அவரின் பெயரை எழுதி கடிதம் போட்டால் வந்து சேராது என்பதை விளங்கிக்கொள்கிறீர்களா? ஆனால் நீங்கள் வாடகைக்கு வைத்திருப்பவரின் பெயரை எழுதி விட்டு c/o என்று உங்களின் பெயரை போட்டால் வந்து சேரும். இந்த நிறுவனத்தாரிற்கு நீங்கள் புகார் அனுப்பும் போது c/o TMF Services SA என்று முகவரியையும் சேர்க்க வேண்டும் என்று உங்களிற்கு எப்படி தெரியும்? இதை அவர்கள் உங்களிடம் சொல்லவும் மாட்டார்கள். அப்படியே நீங்கள் இவர்கள் மேல் சட்ட நடிவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் உங்களிற்கு வந்து சேரும் அதிக படியான நட்டத்தொகை CHF 20'000.00 மட்டுமே. இவர்களின் ACN Communications Schweiz GmbHவின் கப்பிட்டல் (capital) வெறும் CHF 20'000.00 மட்டுமே.

இப்படியான சேவைகளை இங்கே Snowball System அல்லது Pryamide system என்று சொல்வார்கள்.

சரி ஒரு தடவை கணக்கு பார்ப்போம்.

ஒரு நாள் சுவிசில் உள்ள ஒருவர் சுவிசின் முதலாவது வாடிக்கையாளர் ஆகின்றார். அவர் தனக்கு தெரிந்த ஒருவரை ACN நிறுவனத்தில் சேர்த்து விடுகின்றார். ஒவ்வொருவருக்கும் கமிசன் வரும் என்பதால் உற்சாமாக ஆட்களை சேர்க்கு முயற்சி செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமும் ஒரு வாடிக்கையாளரை கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். புதிதாக இணைபவர்களும் ஒவ்வொருவரை கொண்டு வருகிறார்கள். இப்படியே போனால் 27 வாரங்கள் சென்ற பின் அதாவது அரை வருடத்திற்கு பிறகு சுவிசில் கிட்டத்தட்ட 134 மில்லியன் ACN வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும். இது சாத்தியமா?

இதை நீங்கள் அவர்களிடம் சொன்னால் இன்டர்நெட்டில் வருகின்ற அனைத்தும் உண்மையாகி விடுமா? அங்கே யார் என்ன எழுதினாலும் உண்மை என்று நம்பி விடுவீர்களா என்று உங்களை குறுக்குக்கேள்வி கேட்பார்கள்.

சரி நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம்.

சுவிசில் இருந்து வெளிவரும் http://www.ktipp.ch/ என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றது.

Comparis.ch என்ற இணையத்தளமும் இதையே சொல்கின்றது.

இவர்கள் மேல் Australiaவில் வழக்கு உள்ளது என்று இந்த இணையத்தளம் சொல்கின்றது.

கொஞ்சம் இன்டர்நெட்டை தோண்டிப்பாத்த இவங்கட சுத்துமாத்து வேலையள் தெரியவரும்.

இந்த தமிழ் பணப்பேய்களை எங்கே கண்டாலும் ஒதுங்கியே நில்லுங்கள். ஏமாந்து போற நாங்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்திற தமிழங்களும் இருக்கத்தான் செய்வினம்.

மேலதிக விபரம் வேண்டும் என்றால் கேளுங்கள்.

ஒரு வருடத்திற்க்கு முன் இந்த கும்பலிற்க்கு சுவிசில் முகவர் வேலை செய்தது இப்பவும் பணியாளராக இருக்கிற ஒரு எருமை தான். அநேகமா அது இப்பவும் இதை செய்யுது என்டு நினைக்கிறன்.

Qnet நான் இப்ப தான் கேள்விப்படுகிறன். ஆனால் இன்டர்நெட்டில உள்ள தகவல்களின் படி பாத்தா இதுவும் இந்த ACN மாதிரி ஒண்டு தான்.

Edited by கருத்து கந்தசாமி

.

இவர்கள் அமெரிக்கர்கள் என்கிறது விக்கிபீடியா. .

http://en.wikipedia.org/wiki/ACN_Inc.

ஆம். ஆனால் இவர்களின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. ஒவ்வொரு நாட்டு சட்டத்திற்கும் ஏற்றாற்போல் மாறுபடும். ஆனால் ANC என்பது மட்டும் அப்படியே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கருத்து கந்தசாமி மற்றும் ஈசன்

இது பற்றி இன்னும் பலரின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

அண்மையில் என்னைச்சந்தித்த ஒருவர் தனது நண்பர் இதன் மூலம் கிழமைக்கு 9 ஆயிரம் ஈரோக்களை பெறுவதாக கூறினார். அத்துடன் எனது உறவுகள் சில அதிலும் அண்மையில் ஊரிலிருந்து வந்த இளசுகள் இதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். எனவே உண்மையையும் அவர்களது பாதையையும் செப்பனிடும் பொறுப்பு எனக்குண்டு என்ற காரணத்தால்தான் இதை இங்கு முன் வைத்தேன்.

எனவே தயவு செய்து மற்றவர்களுடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் இங்கு எதிர்பார்க்கின்றேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டில் கிட்டத்தட்ட பத்து வருடத்துக்கு முன்பு இந்த ஏ சி என் காச்சல் வந்தது. அப்போது எப்படி என்றால் தொலைபேசி இணைப்பு உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் இலவசமாகக் கதைத்துக் கொள்ளலாம் என்பதே. நானும் எனது இணைப்பை ஏ சி என் னுக்கு மாத்திப்போட்டன் இப்பிடி எல்லா புலம்பெயர் தமிழர்களும் மாத்திப்போட்டார்கள் பிறகென்ன காசில்லமல் கதைதான். இதனால் கொம்பனிக்காரனுக்கு நட்டமோ இல்லையோ தமிழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகளது விகிதம் அதிகமாகி விட்டது. அதுக்குப் பிறகு கொம்பனிக்காரன் அனைத்து இணைப்புகளையும் இன்னொமொரு கொம்பனிக்கு நல்ல விலைக்கு வித்துப்போட்டு வந்தவ்ழியே போய்ச்சேர்ந்திட்டான். இப்போதும் எனது கைத்தொலைபேசி இலக்கம் 910 எனும் இடை இலக்கத்தில்தான் இருக்கிறது இவ்விடயிலக்கத்தையுடைய தொலைபேசி எண்ணை யாராவது வைத்திருந்தால் ஓ அப்ப இவரும் நம்மட ஆளோ என னினைப்பதுண்டு. தேவையில்லாது ஏமாறவேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு

நன்றி தங்கள் கருத்துக்கு

ஆனால் நீங்கள் இலாபமடைந்தீர்களா? என்பது பற்றி தெளிவில்லாதுள்ளது.

இங்கு இதை நான் பதிந்தது

இதைப்பற்றிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ளவே.

ஆனால் இங்கு குற்றச்சாடடுகளே வந்துள்ளன. தயவு செய்து சம்மந்தப்பட்டவர்கள் தமது பங்களிப்பு அதனால் கிடைத்த அல்லது கிடைக்கக்கூடிய பெறுபேறுகள் பற்றி எழுதவும்.

வணக்கம் விசுகு

நான் இதில் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இந்த முகவர்கள் எனது வீட்டிற்க்கு வந்த போது திட்டி அனுப்பியுள்ளேன். இவர்கள் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்க்கு முதலே எனக்கு இவர்களின் நோக்கம் விளங்கிக்கொள்ள முடிந்தது.

- இவர்கள் யோக்கியமானவர்கள் என்றால் வீடு வீடாக சென்று இப்படி ஆட்கள் சேர்க்கத்தேவை இல்லை. இவர்களின் சேவையில் திருப்பதி என்றால் மக்களே வருவார்கள்.

- தங்களை இவ்வளவு பெரிய நிறுவனம் என்று சொல்பவர்கள் ஏனைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போல் விளம்பரம் செய்தாலே மக்கள் தேடி வருவார்கள்.

- இவர்கள் எதற்காக வீடு வீடாக செல்வதற்க்கு பதிலாக மக்கள் திரளும் ஒரு நிகழ்விலோ அல்லது கொண்டாட்டங்களிலோ இதனை செய்வதில்லை? அங்கே பல கேள்விகள் வரும் என்பதற்காக (இது போன்ற விடயங்களில் எப்போழுதுமே இந்த முறை கையாளப்படும்).

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். ஆனால் நீங்கள் இதில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களின் அனுபவத்தை தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்பதால் எனது கருத்துக்களை இத்துடனே முடிக்கின்றேன்.

நேரடியா பாதிக்கப்பட்டவர்கள் முன் வருவார்களா என்பது சந்தேகமே. இருந்தாலும் நானும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அப்படி யாரும் வராவிடின் இன்டர்நெட் தேடு இயந்திரங்களில் தேடவும். உங்கள் நாட்டில் வசிக்கும் ஏனையவர்களின் கருத்தை நீங்கள் அறியலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால்வரை தாயகத்தில் நின்று இங்கு வந்த எனது உறவு ஒன்று QNet இல் இது போன்ற ஒரு தொழிலைத்தொடங்கிவிட்டு ஓடி ஓடி ஆட்கள் சேர்த்தவண்ணம் உள்ளார். அந்தவகையில் என்னையும் அணுகினார்.

எனக்கு சும்மா இருந்து கொண்டு பணம் எண்ணலாம் என்பதில் நம்பிக்கை இல்லை என்றாலும் நான் பதிவதன்மூலம் அவருக்கு நன்மை கிடைக்கும் என்பதால் ஆம் என்று சொல்லவேண்டியநிலை. ஆனால் எனக்கு நேரமில்லை. எனவே எனது மகனைப்பதிந்துவிடலாம் என மகனிடம் சொன்னபோது அவன் இன்ரனெற்றில் தட்டிப்பார்த்துவிட்டு கருத்து கந்தசாமி சொல்வதை அப்படியே சொன்னான்.

அதனால்தான் இங்கு அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களைக்கேட்டேன். இன்னும் காத்திருக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.