Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டும்! - கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-india-flagseithy.gif

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுகுறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டுதடவை கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன் போது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தும் மேற்படி இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டம் ஊடாக தமிழர்களுக்கான நியாயமான தீர்வு குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மாத்திரமே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையிலேயே கூட்டமைப்பின் இந்திய விஜயமும் அமையவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவிடம் பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச முடியுமெனவும் அதனால் கூட்டமைப்பு கட்டாயம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி இலங்கை அரசின் நிலைப்பாட்டை கிருஸ்ணாவுடன் இணைந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அழுத்தங்களையும் பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை புறந்தள்ளிச் செயற்படுவது கடந்தகால கசப்பான அனுபவங்களை மீண்டும் தமிழர்களுக்கு உருவாக்கிவிடுமோ என்று கூட்டமைப்பின் தலைமை அஞ்சுவதாகவும் குறிப்பாக இந்தியாவை மீறி செயற்படுவதால் இந்திய அரசு தமிழர் தரப்பை புறக்கணிக்கக் கூடும் எனவும் கூட்டமைப்பு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் ஆலோசனைகளுக்கு ஊடாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதே ராஜதந்திர நகர்வாக அமையும் அதனையே சர்வதேச நாடுகளும் விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.எனவே எதிர்வரும் இந்திய விஜயத்தின் பின்னரோ அல்லது முன்னரோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்கும் என எதிர்பார்க்கலாம் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.co...&language=tamil

இந்த அழுத்தத்தை கூட்டமைப்பும் தமிழர்களும் எதிர்பார்த்தது தான். ஆனால், இதற்கு கூட்டமைப்பிடம் ஏதாவது திட்டம் இருக்கின்றததா?, என்பதே கேள்வி.

இதேவேளை சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை புறந்தள்ளிச் செயற்படுவது கடந்தகால கசப்பான அனுபவங்களை மீண்டும் தமிழர்களுக்கு உருவாக்கிவிடுமோ என்று கூட்டமைப்பின் தலைமை அஞ்சுவதாகவும் குறிப்பாக இந்தியாவை மீறி செயற்படுவதால் இந்திய அரசு தமிழர் தரப்பை புறக்கணிக்கக் கூடும் எனவும் கூட்டமைப்பு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் ஆலோசனைகளுக்கு ஊடாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதே ராஜதந்திர நகர்வாக அமையும் அதனையே சர்வதேச நாடுகளும் விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.எனவே எதிர்வரும் இந்திய விஜயத்தின் பின்னரோ அல்லது முன்னரோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்கும் என எதிர்பார்க்கலாம் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்தால் அவர்களை விடுத்து ஒரு தீர்ப்பை இந்த குழு தெரிவு செய்யுமா? அதை அமுல்படுத்துமா? அதற்கு இந்தியா இணங்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இந்தியாவை புறம்தள்ளிவிட்டு மேற்கு நாடுகளின் உதவியை நாடுவது நல்லது ...

ஏன் என்றால் இந்தியா நம்பி இருந்த தமிழர்களுக்கு கருவறுத்தளவுக்கு மற்றைய நாடுகள் நடந்து கொள்ளாது.

இந்தியாவுடன் ஆடிய 30 வருட ஆட்டம் போதும் :(

அது சரி கூட்டமைப்புக்கு எந்த நாடும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்களே ....... :icon_idea:

அது சரி கூட்டமைப்புக்கு எந்த நாடும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்களே .......

இதன் கருத்து, கூட்டமைப்புச் சொல்கிறது " அப்பா நெல்லு மூட்டைச் சாக்குக்குள் இல்லை"

பிழையை விட்டது அமெரிக்காவும் மேலை நாடுகளும். இவர்கள் கூட்டமைப்பைத் தேவையில்லாமல் கூப்பிட்டு ஆட்டம் காட்டி விட்டு, இப்போ ஒன்றும் செய்ய இல்லை. ஆனால் இலங்கை இந்தியாவை உசார்ப்படுத்தி இருக்கிறது. இந்தியா மேலை நாடுகளுக்கு ஐ.நா விசாரணை அவசியமில்லை, ஏன் எனில் தன்னால் இலகுவாக ஒரு தீர்ப்பைக் கொண்டுவர முடியும் என்கிறது போல் இருக்கிறது.

இப்போது மேலை நாடுகளின் தொடர்புகளைப் பயன் படுத்தி கூட்டமைப்பு இலங்கை-இந்தியா கூட்டாக ஆரம்பித்திருக்கும் புதிய சதுரங்கத்தை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும். பாராளுமன்றக்குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றுவதாயின்:

1.பேச்சுவார்த்தைகள் நேர அட்டவணைப்படி நடக்க வேண்டும். போரால் துன்புற்ற மக்களுக்கு, வீடுகள் கட்ட வேண்டும், அவர்கள் குடியமர்த்தப்பட வேண்டும். இவற்றுக்கு தமிழருக்கு அதிகாரம் வேண்டும். 60 வருடங்கள் பேசுப்பட்ட விடையமென்பதால் பேச்சு வார்த்தை 3 மதங்களுக்கு மேல இருக்கக் கூடாது.,

2.அது உண்மையில் இந்தியா(கிருஸ்ணா) கூறிய மாதிரி 13+ ஆக இருக்க வேண்டும். அதில் எந்த ஏமாற்று சொல் மாயா ஜாலங்களையும் இந்தியாவோ இலங்கையோ பாவிக்க கூட்டது. இந்தியா சும்மா எதையாவது இலங்கையிடம் கேட்டு சொல்ல முடியாது.

3.ராஜீவ் காந்தியின் 13ம் திருத்தம் மாதிரி இல்லாமல் வரும் முடிவு 3 மாதத்திற்குள் தேர்தல்(இலங்கை) நடாத்தப்பட்டு 6 மாதததிற்குள் அமூலாக்கபடவேண்டும். உடனடி தேர்தல் மிகவும் முக்கியம். இல்லையேல் சிங்களமக்கள் ஏற்கவில்லை என்று கூறி அடுத்து வரும் அரசாங்கம் உடனடியாக அரசியல் அமைப்பை மாற்றிவிடும்

4.வரும் முடிவை நடைமுறப்படுத்தும் பொறுப்பை இந்தியா சர்வதேசத்திற்கு விட்டு வைக்க வேண்டும். IPKF இன்னொருதடவை தமிழீழம் வரக்கூடாது.

5.தீர்வு 3 மாதங்களுக்குள் எட்டாதவிடத்து மேலைநாடுகள் இந்தியாவிடம் போர்க்குற்ற விசாரணைக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

6.பேச்சுவார்த்தைக் காலங்களில் நடைபெறும் ஐ.நா அல்லது மேலைநாட்டு கூட்டங்களில் கூட்டமைப்பு பங்கெடுப்பதை இலங்கையோ அல்லது இந்தியாவோ தடுக்க முயற்சிக்க கூடாது.

7. ஐ.நா. தனது நிபுணர் அறிக்கை மீதான நடவடிக்ககளை இந்த பேச்சு வார்த்தகள் தடுக்கக் கூடாது.

8.கூட்டமைப்பு பங்கு பற்ற முடியாத காலங்களில், புலம் பெயர் தமிழரின் தேர்தல்களில் தெரிவு செய்யபட்ட அமைப்புக்கள் தாயக தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்ய மேலை நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வாக்குறுதிகளை கூட்டமைப்பு மேலை நாடுகளிடம் பெற முயவேண்டும். அப்போதுதான் இந்தியாவின் ஏமாற்றுக்களை சமாளிக்க முடியும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பினால் எங்களுக்கு ஒன்றும் கிடைக்காது.புலிகள் ஆயுதப்போராட்டம் செய்தவர்கள் அவர்களை இந்தியா செயற்பட முடியாமல் பல இடையூறுகளைச் செய்தது. இறுதியில் அழித்தது.ஆனால் கூட்டமைப்பு அரசியல் போராட்டம் செய்கிறது.அதனை எந்த விதத்திலும் இந்தியாவால் முடக்க முடியாது.இந்த யதார்த்தத்தை கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் அதை நிறைவேற்றஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட புலிகளை ஆதரிக்க மேற்கு நாடுகள் தயங்கின.ஏனெனில் இதனை முன்னுதாரணமாக ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் எடுத்துக்கொள்ளும் பொழுது பெருஞ்சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.இதனாலாலேயே புலிகளும் மக்களும் அழிவதை மௌனமாக அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.இந்த மௌனமே இலங்கை இந்திய அரசுகள் காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலையைச்செய்ய உற்சாகமளித்தது.ஆனால் இந்த இடைவெளிக்குள் சீனா உள்ளே புகுந்ததை ஆண்மையில்லாத இந்தியா வேறுவழியின்றியும் தமிழர்கள் உரிமைகளைப்பெற்றுக் கொள்ளக் கூடாது என நினக்கும் மலையாள வெளியுறவுத்துறை அதிகாரிகளின் தவறான அணுகுமுறைகளாலும் சகித்துக் கொண்டாலும் உலக வல்லரசு அமெரிக்காவால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே கூட்டமைப்பு இந்தியாவைப் புறந்தள்ளி அமெரிக்காவிடம் பேசவேண்டும்.திருகோணமலைத்துறைமுகத்தில் நீங்கள் கடற்படைத்தளம் அமைக்கலாம் எமக்கு விடுதலையைப் பெற்றுத்தாருங்கள் என்று பேரம்பேச வேண்டும். அமெரிக்கா ஐநாவையே மதிக்காமல் செயற்படும் நாடு.அதை விட்டு சிறீலங்காவிற்குப் பயப்படும் பயந்தாங்கோழி இந்தியாவை நம்பி மோசம் போக வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது கூடமைப்பு இந்தியவிஜயத்தை நிறுத்தி வைத்து உள்ளதாக இதில் சொல்லபட்டுள்ளது. இதில் எவளவு உண்மையோ தெரியாதுThe TNA, which had earlier planned on traveling to India this month to express its woes with regard to the dialogue with the government, has now decided against making the trip, at least for the time being.

Nevertheless, the party has managed to raise its concerns with the international community, especially with the visiting US envoys..

http://www.thesundayleader.lk/2012/02/12/us-india-alliance-puts-pressure-on-sri-lanka/

டெல்லியின் போக்கிற்கே இலங்கையை விட்டுவிட்டால் அது சில ஆண்டுகளில் சீனாவின் முழுக்கட்டுப்பாட்டிற்கும் உள்ளாகிவிடும். அதை அமெரிக்கா விரும்பாது.

இப்பொழுது அமெரிக்கா அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதில் எமது தலைவிதி தங்கியுள்ளது. அமெரிக்கா, தேவைப்படும் என்றால், இந்தியாவை மீறி தமிழர் தரப்பை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அதில் இந்தியாவே அதிகம் இழக்கும். ஏனெனில் இந்தியாவுக்கு இலங்கையில் உள்ள கடைசி நண்பர்கள் தமிழர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவுக்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகூதா சொன்னதே சரி. இந்தியாவைப்புறந்தள்ளி தமிழர்கள் நிலைப்பாட்டில் அமெரிக்கா முடிவெடுக்கும் நிலையினைத்தமிழர்கள் உருவாக்கவேண்டும். இதற்கு ஐரோப்பிய நாடுகளும் பச்சை குத்தும். அமெரிக்கா தான் வலுகாத்திரமான முடிவெடுக்கும்

அது சரி கூட்டமைப்புக்கு எந்த நாடும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்களே ....... :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97781&view=findpost&p=727660

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் விவகாரத்தில் அமெரிக்க தலையிடுவதை தடுக்க சிங்களம் தலையால் நடக்கிறது.

நாமும் விடாமல் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

முடிந்தால் இந்த காங்கிரஸ் செநேட்டர்களுக்கு கடிதம் எழுதுங்கள் .

http://www.dailymirror.lk/news/16736-strengthen-sl-us-ties-member-of-congress-urge-obama-.html

A group of influential members of Congress have urged President Barack Obama to strengthen ties between the United States and Sri Lanka, noting Sri Lanka’s May 2009 triumph over terrorism, its flourishing trade ties with U.S. companies and its regional strategic importance, the Sri Lankan Embassy in Washington stated.

“After three decades of internal strife, Sri Lanka has an opportunity to move forward as a unified nation guided by its

democratic ideals and institutions,” the letter states.

“For the first time in more than a generation, the United States has an opportunity to develop a relationship with a united Sri Lanka,” the letter tells President Obama. “Accordingly, we urge your Administration to take steps to strengthen our ties with Sri Lanka.”

The letter was spearheaded by Rep. Jack Kingston (R-Ga.,) and signed by 11 other members of Congress in both the Democrat and Republican parties. Rep. Kingston was one of three Congressmen who travelled to Sri Lanka last fall to explore its post-conflict reconciliation and development work. Representatives Ben Chandler (D-Ky.) and Heath Shuler (D-N.C.), also took part in the trip and signed the letter.

The letter notes that Sri Lanka has, “opened dialogues with a number of U.S. companies for the acquisition of heavy equipment, aircraft, energy technologies and other products,” and it highlights the importance strengthening, “Our mutual strategic interests in foreign policy and defence by maintaining the peace in the waterways near and along the Indian Ocean and continuing a military training partnership.”

The letter also emphasises Sri Lanka’s post-conflict efforts to resettle the displaced and rebuild stricken areas and pursue a program of reconciliation among its ethnic groups.

“We welcome Sri Lanka's willingness to preemptively report on its civil conflict by establishing a politically diverse and independent Lessons Learnt and Reconciliation Commission,” the letter states. “As Sri Lanka pursues these positive steps, it should know it has a friend in the United States.”

Sri Lanka’s Ambassador to the United States, Jaliya Wickramasruiya, praised the Congressional call for stronger Sri Lankan-US ties.

“We welcome this call for even stronger relations between Sri Lanka and the US,” Ambassador Wickramasuriya said. “We have had diplomatic relations with the US for 64 years, and we have always supported its strategic and trade priorities. We are also a partner in the fight against terrorism. Both of our democracies will benefit from the initiatives these Congressional leaders propose.”

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்திற்கு நாய்ச்சேவகம் செய்வதன் ஊடே இந்திய அரசு தன் கருமம் சாதித்திக் கொண்டிருக்கின்றது. (தன் குடிமக்களை நாய் போல் வேடையாடிக் கொண்டிருக்க, நாய் மட்டும்தானே எஜமானின் காலை நக்கிக் கொண்டிருக்கும்) இந்த நாய்க்குபின்னால் கூட்டணிபோனால், நாய் வளர்க்கும் நாய் ஆகிவிடுவார்கள்!

போர்குற்றத்தில் இருந்து சிங்களத்தைக் காக்க இரண்டு நாய்கள் கிடத்துவிடும் சிங்களத்திற்கு!

தம் சுற்றத்தை தீவிர பகைவர்களாக வரித்துக் கொண்டுள்ள நாடு, உலகத்திலேயே இந்தியா ஒருன்றுதான்.

"செய்யாமல் செய்த உதவிக்கு தர வானும், மண்ணும் போதாது" இதுபோலவே செய்யாமல் செய்த தீமைக்கு பழி ஆற்ற உயிரை அளித்தல் கூடா தீராது. சிங்களத்திற்கு இன்று இவரக்ள் என்ன செய்தாலும், இந்த பிரச்சினையின் விதை இவர்களாலேயே விதைக்கப்பட்டது, எனவே எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் சிங்களமக்களிற்கு முதல் நிலையான எதிரி இந்தியாவேதான், இதை கடவுளாலேகூட மாற்ற முடியாது. எனவே அப்படி சிங்கள மக்களின் நட்பிற்கு மருதே இல்லாத நிலமை தமிழர்களின் நட்பை பெறுவதே ஒரு மருந்தாக பெற்றிருக்க வேண்டும். இருந்தும் அவர்களிடம் இருந்த ஊழல் மயமான நிர்வாகம் நாட்டின் தேவை வரவேற்கும் பாதையில் அவர்களை இயங்க விடுவதில்லை. ஜெ,ஆரின் மாணிக்க கல்லுக்கு அன்று றமேஸ் பண்டாரி கவிண்டதைப் போல் மேனன்களையும், நாராயணன் களைய்யும் சிங்களப் புள்ளி மான்கள் கவிட்டு விட்டது. பல்லாடும் முதுமைக்கு வண்ண மயில்களின் மஞ்சம் மகிந்தன் பரிசளிததும். குருதி கொப்பளித்துக் கொண்டிருந்த மானிடத்தின் அவலம் அவர்கள் கண்ணிற்கு காணாமல் போனது. பெண்சுகத்திற்கும், பொன்சுகத்திற்கும் தங்கள் நாட்டில் மட்டுமா மனிதாபிமான துரோகம் செய்பவர்கள் அவர்கள். ஐயா விமானம் ஏறிவந்தாலும் நாய், நாய்தானே!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் பிள்ளையே மதிக்காத தந்தமை பெருமை பேசுதலிலும்,

தன் மக்களின் கண்ணீரையே பகையாகக் கொண்ட ஒரு அரசு கீர்த்தி பேசுதலிலும் என்ன உண்டு?

இந்தியா, ஒரு வல்லரசானால் உலகிற்கு இன்னும் எத்தனை மகிந்தர்கள் பரிசாகக் கிடைப்பார்கள்?

காந்தியம் என்ற கொள்கைக்கு பிற்ப்புக் கொடுத்த தாய் பிரித்தானியா!

காந்தியம் என்ற வாழ்விற்கு மரணம் கொடுத்த காலன் இந்தியா!

மரணத்தைப் படைத்தவனே காந்தியத்தின் புகழை வலிந்து சூடுகின்ற்றான்!

புல் தின்னான புலியை கொண்டுவாருங்கள் இந்திய ஆட்சிக்கு அது சருகும் தின்னும்.

நக்கீரனை அழைத்து வாருங்கள் இங்கே அவர் முத்தாக உதிருவார் வார்த்தைகள் இப்படி "ஒரு கலைஞன் சிவப்பாக இருக்கலாம், கறுப்பாக இருக்கலாம் ஆனால் அவன் கலைஞரோடு மட்டும்தான் இருப்பான்" சுயமரியாதை கொண்ட யானைகளை எல்லாம் முதுகெலும்பு இல்லாதனவாய் மாற்றும் இந்த இந்திய ஆட்சி!

ஆனால் இவற்றை விட அதிசயம் இந்த முதுகென்புத் திருட்டு ஒரு சிலரில் புலத்தில் கூட நிகழத்த முடிகின்றது. அது எப்படி தண்ணிருக்குள் இருக்கும் போதுதானே இந்த ஊழல் முதலையின் பலம் அதிகம், இந்தியாவுக்கு வெளியால் இதன் பலம் எப்படிச் செல்லும் என்று புரியாமல் இருக்கின்றது. உழைத்து உண்ணப் பிடிக்காதன எங்கு இருந்தாலும் இந்த வலையில் சிக்கும் போல் தெரிகின்றது!

Edited by தேவன்

ஒவ்வொரு காலமும் இந்தியா சிங்களத்துக்காகத் தமிழரை ஏமாற்றியுள்ளது. அதற்கு எப்போதும் தமிழரைப்பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இந்திய மீனவர் படுகொலைக்கு தீர்வு காணாத இந்தியா எங்களுக்கான எந்தத் தீர்வையும் பெற்றுத் தராது. ஆகவே இந்தியாவை நம்பக் கூடாது. இதுவும் சமாதானப் பேச்சுவார்த்தை, விஜய்நம்பியார், போல் ஒரு மாய மான்;தான். ஆகவே கூட்டணி மிக அவதானமாகக் காய் நகர்த்த வேண்டும். குறிப்பாக அமரிக்காவையும் இதில் இணைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.