Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வர்த்தகரை விடுவிக்க 100 மில்லியன் ரூபா கப்பம் கோருகிறது வெள்ளைவான் ஆயுதக்குழு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhiteVan.jpg

கொழும்பில் தமிழ் வர்த்தகரைக் கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரது குடும்பத்தினரிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

வெள்ளவத்தை கனல் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்பாக கடந்த சனிக்கிழமை மாலை 42 வயதான பிரபல வர்த்தகர் ராமசாமி பிரபாகரன் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த ஏழு பேர் கொண்ட குழுவொன்று அவரது மனைவி மற்றும் மகள் முன்பாகவே வர்த்தகரைக் கடத்திச் சென்றது. வர்த்தகரைக் கடத்திச் சென்றவர்கள் அவரது மனைவியிடம் சனிக்கிழமை இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 100 மில்லியன் ரூபா பணம் தந்தால் அவரை விடுவிப்பதாக கூறியுள்ளனர்.

கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக குற்றம்சாட்டி இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட அவர், தன்னைக் காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்திருந்த அடிப்படைஉரிமை மீறலுக்காக 90 மில்லியன் ரூபா நட்டஈடு தரக்கோரி சிறிலங்கா குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=50482

சமரச அரசியல் செய்து வாழலாம் மற்றும் தாயகத்திற்கு தேவையில்லாமல் பிரயாணம் மேற்கொள்ளுபவர்கள் இந்த நூறு மில்லியன் ரூபாய்களை கொடுத்து இவரை விடுவிக்கவேண்டும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தானே செத்திட்டார் என இன்னும் ஒரு பதிவில் போட்டியிருக்குது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97989&hl=&fromsearch=1

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தானே செத்திட்டார் என இன்னும் ஒரு பதிவில் போட்டியிருக்குது

http://www.yarl.com/...l=&fromsearch=1

:( :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில வசந்தம் நாறுது. 

பாதுகாப்பு கொத்திக்கு சால்வை போடோணும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தானே செத்திட்டார் என இன்னும் ஒரு பதிவில் போட்டியிருக்குது

http://www.yarl.com/...l=&fromsearch=1

இவர் செத்திட்டார் எண்டு அதில எங்க போட்டிருக்கு அக்கோய்?

செத்திட்டார் எண்டு அதில எங்க போட்டிருக்கு ரதி ???

  • கருத்துக்கள உறவுகள்

இவர் செத்திட்டார் எண்டு அதில எங்க போட்டிருக்கு அக்கோய்?

அவர் செத்திட்டார் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம்...நான் தான் தவறுதலாக விளங்கிட்டேனோ தெரியாது...மிகப் பெரிய தவறுக்கு வருந்துகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.