Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க் குற்றவாளி சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் பான் கீ மூனிடம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navi-Pillay-150news.jpg

இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா, பான் மூனின் அமைதிக்காப்பு படைக்கான சிரேஸ்ட ஆலோசனைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் தாம் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அரசை அமைதி காப்பு படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகளுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவுமே நியமித்துள்ளன.

எனவே போர்க்குற்ற சந்தேகத்திலுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் தமது அலுவலகம் உரிய கவனம் செலுத்தி வருவதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். இந்தநிலையில் நவநீதம்பிள்ளையின் கருத்து குறித்து ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் உடனடியாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி தரப்பும் நவநீதம்பிள்ளையின் கருத்துக்குறித்து உடனடியாக விமர்சனம் எதனையும் வெளியிடப்படவில்லை.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாவே  நிரந்தர சில்வாவின் படை நூற்றி எட்டு பேர் ஹைட்டி குழந்தைகளை பாலியல் வன்முறை படுத்தியதுக்கு தண்டனை கிடைச்சதே? 

UN rights chief raises concern about Sri Lanka to Ban

UN human rights chief Navi Pillay said on Monday that she has raised concerns in a letter to Secretary-General Ban Ki-moon about the appointment of a Sri Lankan army general to Ban’s senior advisory panel on peacekeeping.

Pillay’s worries relate to General Shavendra Silva, currently Sri Lanka’s deputy UN ambassador, who commanded the Sri Lankan army’s 58th Division during the final assault against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2009.

http://www.firstpost.com/fwire/un-rights-chief-raises-concern-about-sri-lanka-to-ban-212252.html

ஏனையவர்களும் பான் கீ மூனின் குரங்குச் சேட்டையைக் கண்டிக்க வேண்டும்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மட்டுமல்ல, இன்ரசிட்டி பிரஸ் செய்தியாளர் மத்தியூ லீ போன்றவர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவரும் நிலையில் .... புலம்பெயர் எம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட, அதி மதிப்புக்குரிய மேன்மைதங்கிய நா.க.த.அ வின் பிரதமராம் உருத்திரகுமாரர் தலைமையிலான கும்பல், இந்நியமனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ன? இன்று வரை ஏதாவது அறிக்கையாவது வெளியிட்டதா???? :o

<_<

ஏன் கேபி, ஒன்றும் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளாரா???????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநிலையில் நவநீதம்பிள்ளையின் கருத்து குறித்து ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் உடனடியாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி தரப்பும் நவநீதம்பிள்ளையின் கருத்துக்குறித்து உடனடியாக விமர்சனம் எதனையும் வெளியிடப்படவில்லை.</span></span>                

http://www.seithy.co...&language=tamil

ஆற அமர இருந்து கலந்து ஆலோசித்து எல்லோரும் சேர்ந்து ஒரு அறிக்கைவிடுவார்கள். அது வரை நாம் மௌனம் காப்பது தான் நியாயம்.

முதலில் பன் கி மூனை ஐ.நா. போகவிட்டதற்கு தான் கேள்வி கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மட்டுமல்ல, இன்ரசிட்டி பிரஸ் செய்தியாளர் மத்தியூ லீ போன்றவர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவரும் நிலையில் .... புலம்பெயர் எம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட, அதி மதிப்புக்குரிய மேன்மைதங்கிய நா.க.த.அ வின் பிரதமராம் உருத்திரகுமாரர் தலைமையிலான கும்பல், இந்நியமனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ன? இன்று வரை ஏதாவது அறிக்கையாவது வெளியிட்டதா???? :o


  1. என்ன விதமான நடவடிக்கைக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய தயாராக இருக்கிறீர்கள்?
  2. அந்த பங்களிப்பு எவ்விதமாக இருக்கும்? பணமாகவா?
  3. அறிக்கை தயாரிப்பதற்கு உதவுவீர்களா?
  4. அல்லது மொழிபெயர்ப்பாவது செய்து கொடுப்பீர்களா?

யாழ்களத்தில் பொழுதுபோக்காக கேள்விகள் கேட்பது மட்டும்தான் தங்களால் முடிந்த பங்களிப்பா? இது மட்டும்தான் தங்களால் முடிந்த பங்களிப்பென்றால் அவர்கள் தங்கள் கேள்விகளை திரும்பியும் பார்க்காதது எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்றல்லவா?

  1. என்ன விதமான நடவடிக்கைக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய தயாராக இருக்கிறீர்கள்?
  2. அந்த பங்களிப்பு எவ்விதமாக இருக்கும்? பணமாகவா?
  3. அறிக்கை தயாரிப்பதற்கு உதவுவீர்களா?
  4. அல்லது மொழிபெயர்ப்பாவது செய்து கொடுப்பீர்களா?

யாழ்களத்தில் பொழுதுபோக்காக கேள்விகள் கேட்பது மட்டும்தான் தங்களால் முடிந்த பங்களிப்பா? இது மட்டும்தான் தங்களால் முடிந்த பங்களிப்பென்றால் அவர்கள் தங்கள் கேள்விகளை திரும்பியும் பார்க்காதது எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்றல்லவா?

இத்தகைய கேள்விகளை வழமையாக முன்வைப்பவர்கள் கையாலாகத் தனமுடைய அரசியல்வாதிகள் தான்!

சிங்கள அரச பயங்கரவாதிகள் கூட ஒருபோதும் தம் மீது குறை சொல்லும் எதிர்க்கட்சிகள் மீது இத்தகைய கேள்விகளை முன்வைத்ததில்லை. மாறாக தமிழின அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு தேவையான கருத்துக்களை யார் சொன்னாலும் அவற்றை காதில் வாங்கியே செயற்பட்டு வந்துள்ளனர்.

நாம் வழிநடத்துகிறோம் என்று முன்வந்தவர்கள் தாமே செய்யவேண்டிய வேலைகள் பலவுண்டு. இல்லையெனின் தாம் பிரதிநிதிப் படுத்தும் மக்களிடம் இருந்து வரும் இத்தகைய கேள்விகளுக்கு பொறுமையாக முகம் கொடுக்கப் பழகவேண்டும்.

அதைவிட்டு பதவிகளில் சோம்பேறிகளாக அமர்ந்து கொண்டு, எதுவும் செய்ய முடியாமைக்கு காரணத்தைத் தேடி, கையாலாகத்தன அரசியல் செய்யக் கூடாது!

  • பங்களதேஸ், இந்திய, பாகிஸ்தான் ஐ.நா. நிரந்தபிரநிதிகள் சில்வாவை மாற்றகோரிக்கை
  • சிங்களம் இன்றசிட்டி பிரஸ் நிருபருக்கு கடிதம்
  • நவநீதம்பிள்ளை அவர்களின் குற்றச்சாட்டு நேர்மையற்றது என சிங்களம் தெரிவிப்பு

Bangladesh PR Tells ICP Silva "Not Acceptable" As UN Adviser, He, India & Pakistan Have Told Sri Lanka to "Fix It"

http://www.innercitypress.com/silva3asianfix021412.html

'மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்த நவநீதம்பிள்ளையின் கருத்துத் தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி!

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நவநீதம்பிள்ளை அண்மையில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைக்கான ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக சிலங்காவின் முன்னாள் படைத்துறை அதிகாரியும், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேள்வி எழுப்பியுள்ள நவநீதம்பிள்ளை, அந்நியமனம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுக்காக நபர் ஒருவரை நிராகரிப்பது நியாயமற்றது என ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் கிளை தெரிவித்துள்ளது.

இவ்வாறான விமர்சனங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுக்க விதிகளுக்கும் புறம்பானது என ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் கிளை குறிப்பிட்டுள்ளது.

மனிதவுரிமை மீறல்களைப் புரிந்தவர்கள் என்று சந்தேகப்படும் தனிநபர்கள் பற்றிய பட்டியல் ஒன்றை தாம் பேணி வருவதாக குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துக்கு கவலை தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=8b360c76-35e8-4b76-8481-68f1bcab748e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாடுகளின் ஐநா பிரதிநிதகளுக்கு மேலும் சில மனித உரிமை அமைப்புகளுக்கும் கடிதம் எழுத விரும்புவர்களுக்கு சில மின்னஞ்சல் கீழ உள்ளன:

sg@un.org -UN Secretary General Ban-Ki-Moon

den@un.org, angela.kane@un.org, khanj@un.org, uk@un.int, Baird.J@parl.gc.ca, bairdj@parl.gc.ca, adamsb@hrw.org, beckerj@hrw.org, neistaa@hrw.org, Yolanda.Foster@amnesty.org, akeenan@crisisgroup.org, info@commonwealth.int, info@amnesty.ca, pirc@cpahq.org, Kontakt@info.diplo.de, imrv@humanrights.de, colombo.col@icrc.org, colombo.general@fco.gov.uk, colombo@unicef.org, secretariat@ncca.org.au, secretary@unicef.ca, info@amnesty.org.uk, secrt@ohchr.org, idp@ohchr.org, srilanka@hrw.org, secretary@unicef.org, r.dsouza1@wmin.ac.uk, customersupport@channel4.com, president@cfr.org, cmassey@cfr.org, senator@clinton.senate.gov, president@whitehouse.gov, williamson_graham@yahoo.co.uk, austria@un.int, bfapm@un.int, china@un.int, costarica@un.int, dimitrij.rupel@gov.si, dorabakoyannis@mfa.gr, france@un.int, info.mfa@gov.mt, info@mzv.cz, iprd@mfa.government.bg, iroda.konz@kum.hu, libya@un.int, mae@mae.ro, mexico@un.int, minforeign1@mfa.gov.cy, Minister@mne.gov.pt, mission@un-japan.org, msu.correspondence@fco.gov.uk, npillay@ohchr.org, private.office@fco.gov.uk, rzecznik@msz.gov.pl, sg@un.org, turkuno-dt@un.int, um@um.dk, UMI@formin.fi, un@mvp.hr, usa@un.int, vminfo@vm.ee, webadmin@mae.etat.lu, webmaster@dfa.ie, webmaster@mfa.gov.lv

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.