Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு சீனாவுக்கு அனுமதி

Featured Replies

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு சீனாவுக்கு அனுமதி

மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குவதை விடுத்து விலையை குறைத்து நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தும் ஐ.தே.க. வின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான தயாகமகே எமது கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தயாகமகே இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மண்ணெண்ணெயின் விலையை இன்றைய அளவுக்கு உயர்த்தியதில்லை. இதனால் குப்பி விளக்கில் ஒளியைப் பெறும் மலையக மக்கள் கிராமங்களில் வாழும் மக்கள் ஏன் கொழும்பிலும் இந்நிலையில் வாழ்வோரும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் தமது படகுகளை பெற்றோலில் இயக்கிய பின்னர் மண்ணெண்ணெய் மூலமே அப்படகுகள் இயங்கும். விலையேற்றத்தால் மீனவர்கள் தமது தொழிலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். மீனவர்கள் மானியங்களைக் கேட்கவில்லை. விலைக்குறைப்பையே கேட்கின்றனர்.

மானியங்கள் வழங்குவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டு செலவீனங்கள் அதிகரிக்கும். இவையனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது விலைக்குறைப்புக்கு பெருமளவு நிதி செலவாகின்றது. எனவே மீனவர்களுக்கு எரிபொருள் விலைக்கழிவை வழங்க வேண்டும். மானியப் பணத்தை திறைசேரியூடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் குறைந்த விலைக்கு எரிபொருட்களை வழங்க முடியும்.

கடல் எல்லை

இன்று எமது நாட்டின் ஆழ்கடல் பிரதேசம் சீனாவிடம் முழுமையாக கையளிக்கப்பட்டுள்ளது. பெரிய கப்பல்களை பயன்படுத்தி எமது மீன் வளத்தை சீனா கொள்ளையடித்துச் சென்று டின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.

ஆனால் இது தொடர்பில் பணப்பரிமாற்றம் கமிஷன் பணம் எங்கு செல்கிறது எப்படி இந்த வியாபாரம் இடம்பெறுகிறது என்பதெல்லாம் பரம ரகசியமாகவே உள்ளது.

அமைச்சர்களால் இன்று தீர்மானங்களை எடுக்க முடியாது பொம்மைகளாகவே உள்ளனர். கூட்டுத்தாபன, திணைக்களங்களின் தலைவர்கள் செயலாளர்களின் ஆதிக்கமே தலைதூக்கியுள்ளது என்றும் தயாகமகே தெரிவித்தார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36765

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை  உளவு பார்பதற்கு சீனாவிற்கு அனுமதி. 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே சீனாகாரன்தான் வியாபார திருடனுகள்.

புல் புழு தவக்கை பாம்பு கரப்பான்பூச்சி என்னும் பல ஜந்துக்கள் இவங்கள் சாப்பிடும் விதத்தைப்பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

உலகத்திலேயே சீனாகாரன்தான் வியாபார திருடனுகள்.

புல் புழு தவக்கை பாம்பு கரப்பான்பூச்சி என்னும் பல ஜந்துக்கள் இவங்கள் சாப்பிடும் விதத்தைப்பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

பதிப்புரிமைத் திருட்டை தடுக்க அமெரிக்காவுக்கும் இவர்களுக்கும் பலவாண்டு இளுபறி. இதில் அமெரிக்கா எப்படி தென்அமெரிக்க நாடுகளுன் போதை பொருள்கடத்தலில் தோல்வி கண்டதோ அதே நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு சீனாவுக்கு அனுமதி

இந்தியாவுக்கான தூக்குக்கயிறு இறுகுகிறது

கிருஷ்ணா சொல்லுவார், சீனா மீன்பிடிப்பதால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை என்று. இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் சிறிலங்கா பொலிஸ் சுடுவதில் எந்தத் தப்புமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.