Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அமைதிப்படை ஆலோசனைக் குழுவிலிருந்து சவீந்திர சில்வா நீக்கம்

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப்பிரிவின் சிறப்பு ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையில் பிரதி வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்ட அமைதி காக்கும் படைப்பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பிலான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு ஆசிய நாடுகள் குழுவின் சார்பில் மேஜர் ஜெனரல் சவேந்திர நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், மேற்கத்தேய நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் இந்த நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், இவரின் நியமனத்தை மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியிருந்தன.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் இந்த நியமனம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விலக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப்பிரிவின் சிறப்பு ஆலோசனைக் குழு நியூயோர்க்கில் நேற்று முதல் முறையாகக் கூடிய போது, அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இக்கூட்டம் நடைபெற்ற அறையில் அமர்ந்திருந்த போதிலும், அவருடன் ஏனைய உறுப்பினர்கள் எவரும் கலந்துரையாடவில்லை. அத்துடன், ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்படவில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் கூறியதாக ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப்பிரிவின் சிறப்பு ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கும் கனேடிய இராஜதந்திரி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இக்கூட்டத்தில் கலந்து கொள்வது பொருத்தமற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னர், இந்தக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வது பொருத்தமானதல்ல என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என இந்த ஆலோசனைக் குழுவுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் Louise Frechette வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pooraayam.com/mukiaya/2497-2012-02-23-08-38-42.html

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவெந்திரா சில்வாவின் அடிபொடிகள் திணறுவதாக கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் நல்லதொரு செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. அதுசரி, யாரந்த அடிபொடிகள்??

  • கருத்துக்கள உறவுகள்

பான் கி மூன் அவர்களுக்கு ஆலோசனை சொல்ல

வேறு யாரும் கிடைக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பான் கி மூன் அவர்களுக்கு ஆலோசனை சொல்ல

வேறு யாரும் கிடைக்கவில்லையா?

கோட்டா முறையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்..! தெற்காசியாவோ, தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலதையோ சரிக்கட்டி இந்தப் பதவிக்கு அமர்த்தியிருக்கினம்..! ஆனால் அது பிழைச்சுப் போச்சு.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.