Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு அவகாசம் வழங்கத் தயார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

puthiya%20thurookam.gif

ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் விசேட அறிக்கை சமர்பித்து இன்று உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி எந்த ஒரு நாட்டையும் பெயர் குறிப்பிடும் தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இலங்கையை காப்பாற்றும் முகமாக இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை " உரிமை தீர்மானம் தொடர்பில் இலங்கையை இந்தியா பிணை வழங்கி காப்பாற்றுகின்றது " (India bails out Lanka on rights resolution ) என பிரபல இந்திய அரசியல் விமர்சகர் பி.கே. பாலச்சந்திரன் வர்ணித்துள்ளார்.

தற்போது நடைபெறும் கூட்டத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய உலகளாவிய காலார்ந்த ஆய்வு (UPR ) கூட்டத்தின் போது, தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் தீவிரமாக கவனிக்கலாம் என இந்திய பிரதிநிதி மேலும் ஆலோசனை சொல்லியுள்ளார். இலங்கை தொடர்பில் அடுத்த அக்டோபர் மாதம் உலகளாவிய காலார்ந்த ஆய்வு (UPR ) கூட்டம் நடக்க உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டை பற்றி ஆய்வு செய்யும் இந்த கூட்டம், இலங்கை தொடர்பில் கடந்த 2008 ம் வருடம் கடைசியாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் தருவதற்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிகிறது. இதையே இலங்கை மறைமுகமாக ஐநா மனித உரிமை ஆணைக்குழுடம் கோரி வருகின்றது. இதையே இந்தியாவும் இப்போது ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளது.

ஒருவேளை அமெரிக்காவின் தீர்மானம் வந்தாலும் அது, பாரிய கடுமையானதாக இல்லாமல் இருக்கும். இந்தியா சொன்னால் அமெரிக்க கேட்கும். அத்தகைய ஒரு அந்த உப்பு-சப்பு அற்ற தீர்மானத்தில் பெரும்பாலும் இலங்கையின் பெயர் குறிப்பிடப்படாமல் அமைய கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ,ராமதாஸ், சீமான், நெடுமாறன், கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்து தரப்பும்ஆரவாரமாக சொன்னாலும் இந்திய மத்திய அரசு இவர்கள் எவரையும் சட்டைசெய்யவில்லை. முதல்வர் ஜெயலலிதாவும், கருணாநிதியும் தமது தூதுவர்கள் மூலம் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கடிதமும் எழுதினார்கள்.

ஆனால் இவற்றைவிட சில நாள் முன்பு இலங்கை பாதுகாப்பு செயலாளர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனனிடம் தொலைபேசியில் பேசி இதை சாதித்துள்ளார். எனவே தமிழ்நாட்டு முதல்வரைவிட இலங்கை பாதுகாப்பு செயலாளர், இந்தியாவிலேயே பலம் வாய்ந்தவர் என்பதும் தெரியவருகிறது.

இதில் இன்னொரு பரிணாமமும் இருக்கிறது. கூட்டமைப்பு கட்சியை ஜெனீவாசெல்லாமல் தடுத்தது இந்தியா என்ற ரகசியம் தற்போது வெளியாகிவிட்டது. இந்தியா சொன்னதால் ஜெனீவா போகாத கூட்டமைப்புக்கு, ஜெனீவாவில் தீர்மானம் தொடர்பில் இந்தியா செய்யப்போகும் காரியமும் முன்கூட்டியே தெரியுமா என்பது இப்போது பலர் மனங்களிலும் உதயமாகியுள்ள கேள்வி.

இலங்கை அரசாங்கத்திற்கு, இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்துதான் ஆறு மாத கால அவகாசம் தர போகிறார்களா? இதன் விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என இந்த ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.eeladhesa...lle-nachrichten

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி -- 1

ஜெனிவாவில் காங்கிரஸ் அரசு:

sonia-gandhi_56.jpg

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நடந்து வந்த திவீர வாதம் ஒழிந்து அனைத்து இன மக்களும் சுபிட்சமாக வாழ தற்போது வழி வகை ஏற்பட்டுள்ளது. கற்று கொண்ட பாடங்கள்( பாடம் நானேல்லாம் எல்.கே.ஜி இருந்து படித்தது இது புது பாடம் போல தெரியுது) நல்லிணக்க குழுக்குளின் அறிக்கையை செயல்படுத்த போதுமான அவகாசம் இலங்கைக்கு அளிக்கபடவேண்டும். ஆப்கானிஸ்தான் அண்டார்டிக்கா என மேற்கு நாடுகள் தீவிரவாதம் என தலையீடு செய்த விவகாரங்கள் எல்லாம் இன்றும் அமைதி நிலைக்கு திரும்ப வில்லை.. நாங்களும் (கனவில்) பல வீடுகளை போரினால் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு அமைத்து தந்து கொண்டு இருக்கம்.. இவ்வாற சர்தேச தலையீடு இலங்கையில் மேலும் இன மோதல்களுக்கு வழி வகுக்கும். இலங்கைக்கும் இன்னும் கூடுதல் கால அவகாசம் 3050 ஆண்டுவரை அளித்து 4050 ஆண்டு வரும் பொதுகூட்டத்தில் இதை பற்றி விவாதிக்கலாம்..

----------------------------------------------------------------------

---------------------------

-----------------------------

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவை விரைவாக ஈழ தமிழரை கொன்றொழிக்க அவகாசம் கொடுகிறார்கள். 

உங்களை நம்பின காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விரோத தேசமாம் இந்தியாவின் கொள்கை தமிழர் தலை நிமிர்ந்து வாழக்கூடாது என்பதேயன்றி எதுவுமில்லை.அதற்குத்தோதாக எமது ஓட்டுப்பொறுக்கி அரசியலில் களிசடைத்தனமாக சொறிதேய்க்கும் சுமந்திரன் வகையறாக்களை தன்னகத்தே உள்வாங்கிய சம்பந்தர் தலைமையிலான கூத்தமைப்பு. கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சறோஜினி சிதம்பரநாதன். சிவாஜிலிங்கம் போன்றோரை ஓரம் கட்டி வைத்துவிட்டு தேர்தலைச் சந்திகும்படி தமிழர் விரோததேசம் கட்டளை இட்டிருந்தது. அதற்கு கூத்தமைப்பு இதன் மூலம் பலமிழக்கும் என கருத்துக்கூறியபோது, உதயன் அதிபரும் கடந்தகாலங்களில் சப்றாயுனிகோ எனும் பெயரில் தமிழர்களது பெரும்தொகைப் பணத்தைச் சுவாகா பண்ணியவருமான சரவணபவானுக்கு தேர்தல் வாய்ப்புக் கொடுத்து., அவர்களால் வ்ரும் எதிர்ப்பினை பத்திரிகைகொண்டு அடக்கிவிடலாம் எனவும் ஆலோசனை கூறி. மிரட்டியும் உருட்டியும் பணியவைத்தது. அன்றேல் தமிழர்மத்தியில் கூத்தமைப்புக்கு பதிலாக இன்னுமொரு அரசியல் கட்சியை சரவணபவானைக் கொண்டே உருவாக்கவும் முடியும் என பயங்காட்டியது. இப்போதும் தமிழர் விரோத தேசம் இந்தியா, கூத்தமைப்பு முரண்டுபிடித்தால் இந்த ஆயுதத்தை வைத்தே மிரட்டுகிறது. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் கஜேந்திரன் விளம்பரமாக வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கான பதிலை சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் விளம்பரமாகப் போடாமல் அதெ இதழில் செய்தியாக உதயன் வெளியிட்டதை கஜேந்திரனிடம் இப்போது கேட்டாலும் சொல்லுவார். தமிழர்கள் தாங்களாகவே தமது விடுதலையை வெண்றெடுகக்கூடிய அரசியல் தலைமையை தெரிவு செய்வதில் சோம்பேறித்தனம் காட்டுபவர்கள் அதைவிட தமிழர்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீண்டகால திட்டமிடல்களுடன் இயங்கக்கூடிய எந்தவொரு புத்திஜீவிகளைக்கொண்ட மூளைவலுக் கட்டுமானம் இதுவரை எம்மிடம் இல்லை.இப்போது இருக்கும் தமிழர் தலைவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் ஏதோ ஒரு தேவைக்கு விலை போபவர்கள் அன்றேல் பதவியை அலங்காரத்துக்கு தக்க வைத்திருப்போரே. இவற்றுக்கு மத்தியில் நாம் வ்டுதலையை வெண்றெடுக்க இன்னுமொரு தலவனின் வருகைகாகக் காத்திருப்பதே எமஹு தலைவிதி. தந்தை செல்வா தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவெண்டுமெனக் கூறியதன் பின்னாடி, எந்தவித அரசியல், சமூகப் பின்புலமும் இல்லாது எம் தலைர் வந்து இப்போராட்டத்தை இவ்வளவு தூரத்திற்கு நகர்த்தி சர்வதேசத்தின் காதுகளுக்கு எமது குரல்களை கேட்குமளவிற்குச் செய்தாரோ, அதேதலைவன் வருகைக்காய் தமிழினம் காத்திருப்பதே மேன்மையானது. அது இன்றோ அன்றேல் நாளையோ இல்லையேல் இன்னமும் பல பதிண்ம வருடங்கள் கழித்தோ நிறைவேறலாம் அது வரை விடுதலை வேள்வியின் வேட்கை குறையாது காத்திருப்போம்.முள்ளிவாய்கால் முடிவல்ல அது இன்னுமொரு தேடலின் தொடக்கம். ஆம் எமக்கான தலைவரின் தேடலின் தொடக்கம்.

நெருக்கடி முற்றியதால் அவகாசம் பெறுவதே சிங்கள - இந்தியப் பயங்கரவாதிகளின் திட்டம் என்பதை பிரீஸின் ஆரம்ப நகர்வுகளில் இருந்து தெளிவாக விளங்கியது. இந்திய அரச பயங்கரவாதிகளின் ஐ. நா. உரையும் அதையே குறிப்பிட்டது. பாகிஸ்தான், சீனாவின் கோரிக்கைகளும் அதுவாகவே இருந்தது.

சிங்களப் பயங்கரவாத அரசு உறுதிமொழிகளை வழங்குவதும், அவகாசம் பெறுவதும், பின்னர் உறுதிமொழிகளை காற்றில் விட்டு தமிழினத்தை இந்தியக் காட்டுமிராண்டிகளின் உதவியுடன் அழிப்பதுவும் நீண்டகால வரலாறு.

தமிழினத்தை சிதைக்க இந்தமுறை இந்திய - சிங்களப் பயங்கரவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சம்பந்தன் - சுமந்திரன் இரட்டையரும் உதவியுள்ளனர். வெள்ளிக்கிழமை நடந்த கூடத்தில் கூட்டமைப்பு உறுப்பினர் பலரை அமைதிப்படுத்த சம்பந்தன் கையாண்ட வழிமுறைகள் என்னவென்று தெரியும். சிங்கள - இந்தியப் பயங்கரவாதிகளின் உறுதிமொழிகள் மீண்டும் காற்றில் பறந்தால், மீண்டும் தமிழினம் குறைந்தது ஏழு மாதங்களுக்கு பாரிய அழிவுகளை தொடர்ந்து சந்திக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் விரோத தேசமாம் இந்தியாவின் கொள்கை தமிழர் தலை நிமிர்ந்து வாழக்கூடாது என்பதேயன்றி எதுவுமில்லை.அதற்குத்தோதாக எமது ஓட்டுப்பொறுக்கி அரசியலில் களிசடைத்தனமாக சொறிதேய்க்கும் சுமந்திரன் வகையறாக்களை தன்னகத்தே உள்வாங்கிய சம்பந்தர் தலைமையிலான கூத்தமைப்பு. கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சறோஜினி சிதம்பரநாதன். சிவாஜிலிங்கம் போன்றோரை ஓரம் கட்டி வைத்துவிட்டு தேர்தலைச் சந்திகும்படி தமிழர் விரோததேசம் கட்டளை இட்டிருந்தது. அதற்கு கூத்தமைப்பு இதன் மூலம் பலமிழக்கும் என கருத்துக்கூறியபோது, உதயன் அதிபரும் கடந்தகாலங்களில் சப்றாயுனிகோ எனும் பெயரில் தமிழர்களது பெரும்தொகைப் பணத்தைச் சுவாகா பண்ணியவருமான சரவணபவானுக்கு தேர்தல் வாய்ப்புக் கொடுத்து., அவர்களால் வ்ரும் எதிர்ப்பினை பத்திரிகைகொண்டு அடக்கிவிடலாம் எனவும் ஆலோசனை கூறி. மிரட்டியும் உருட்டியும் பணியவைத்தது. அன்றேல் தமிழர்மத்தியில் கூத்தமைப்புக்கு பதிலாக இன்னுமொரு அரசியல் கட்சியை சரவணபவானைக் கொண்டே உருவாக்கவும் முடியும் என பயங்காட்டியது. இப்போதும் தமிழர் விரோத தேசம் இந்தியா, கூத்தமைப்பு முரண்டுபிடித்தால் இந்த ஆயுதத்தை வைத்தே மிரட்டுகிறது. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் கஜேந்திரன் விளம்பரமாக வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கான பதிலை சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் விளம்பரமாகப் போடாமல் அதெ இதழில் செய்தியாக உதயன் வெளியிட்டதை கஜேந்திரனிடம் இப்போது கேட்டாலும் சொல்லுவார். தமிழர்கள் தாங்களாகவே தமது விடுதலையை வெண்றெடுகக்கூடிய அரசியல் தலைமையை தெரிவு செய்வதில் சோம்பேறித்தனம் காட்டுபவர்கள் அதைவிட தமிழர்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீண்டகால திட்டமிடல்களுடன் இயங்கக்கூடிய எந்தவொரு புத்திஜீவிகளைக்கொண்ட மூளைவலுக் கட்டுமானம் இதுவரை எம்மிடம் இல்லை.இப்போது இருக்கும் தமிழர் தலைவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் ஏதோ ஒரு தேவைக்கு விலை போபவர்கள் அன்றேல் பதவியை அலங்காரத்துக்கு தக்க வைத்திருப்போரே. இவற்றுக்கு மத்தியில் நாம் வ்டுதலையை வெண்றெடுக்க இன்னுமொரு தலவனின் வருகைகாகக் காத்திருப்பதே எமஹு தலைவிதி. தந்தை செல்வா தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவெண்டுமெனக் கூறியதன் பின்னாடி, எந்தவித அரசியல், சமூகப் பின்புலமும் இல்லாது எம் தலைர் வந்து இப்போராட்டத்தை இவ்வளவு தூரத்திற்கு நகர்த்தி சர்வதேசத்தின் காதுகளுக்கு எமது குரல்களை கேட்குமளவிற்குச் செய்தாரோ, அதேதலைவன் வருகைக்காய் தமிழினம் காத்திருப்பதே மேன்மையானது. அது இன்றோ அன்றேல் நாளையோ இல்லையேல் இன்னமும் பல பதிண்ம வருடங்கள் கழித்தோ நிறைவேறலாம் அது வரை விடுதலை வேள்வியின் வேட்கை குறையாது காத்திருப்போம்.முள்ளிவாய்கால் முடிவல்ல அது இன்னுமொரு தேடலின் தொடக்கம். ஆம் எமக்கான தலைவரின் தேடலின் தொடக்கம்.

எமது தலைவன் எப்போதும் எம்முடனே இருக்கிறான்.

அவன் ஸ்ரீ லங்கா, இரானிய கொன்கிரசுக்கு ஆட்டு மந்தையாக இருக்க எங்களை வளர்க்கவில்லை. 

ஸ்ரீ பாரசீக கூட்டத்திற்கு கலிகாலம் தொடக்கி திராவிடருக்கு விடிவு கிடைக்கும் காலம் வருகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா இலங்கை சார்பாக இருப்பது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு அமெரிக்கா ஏதேனும் செய்ய நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதுவல்ல முக்கிய பிரச்சனை மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் ஏற்ப நாங்களும் விய+கங்களை மாற்றி அமைப்பதே சரியான இலக்கு. இதில் இந்தியாவை சுற்றிப்ப+ட்டுப்போடுதல் முக்கியமாகும். சதுரங்கம் விளையாடுதில் இதுதான் முக்கியபங்கு. நீதி என்று ஒன்று இவ்வுலகத்தில் இன்று இல்லை. பசுவதை கூடாது என்று சொல்லும் இந்து சமயம் கூட உன்னைக் கொல்லவரும் பசுவையும் நீ கொல்வதில் தவறில்லை என்று சொல்லியுள்ளது. எமக்கு ஆபத்து டின்னம்போது இந்தியாவை எடைக்கும் வழிவகைகளைக் கையாளவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கூத்துக்கு கூட்டமைப்பு ஆடுகிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.இது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சறோஜினி சிதம்பரநாதன். சிவாஜிலிங்கம் போன்றோரை ஓரம் கட்டியதில் ஆரம்பித்து பிரபாகரனின் கொள்கை பிழை என்று அறிக்கை விட்டு பின்னர் தமிழீழ கொள்கையை கைவிடுகிறோம் என்பதற்கு பாராளுமன்றத்தில் சத்தியபிரமாணம் எடுத்தது ,ஐ.நாவுக்கு செல்லாதது(சரி பிழைக்கு அப்பால்) என அடுக்கிக்கொண்டே போகலாம். தமது சொந்தப்புத்தியில் அல்லது தமிழ் மக்களின் குரலை பிரதிபலிப்பவர்களாக இவர்களின் செயல்கள் இல்லை.

கூத்தமைப்பை கலைத்து போட்டு நல்ல உணர்வுள்ளவ்ர்களை தேர்ந்தெடுக்க வேணும் .. எதிரில் துப்பாக்கிய நீட்டி பயந்து போகிறார்களா இல்லைய என தேர்ந்தெடுக்க வேணும்.. யாழ்பாண கல்லூரி மாணவர்கள் .. பழைய மாணவர்கள் .. தோழர் தீபசெல்வன் போன்றவர்களுக்கு இனி வாய்ப்பளிக்க வேணும் ..

ஏனப்பா ஒண்ணுக்குபோல..?

உங்களூக்கு தெரியாது அதான் ராஜ தந்திரம்..

ஏனப்பா சாப்பிடல..?

உங்களுக்கு தெரியாது அதான் ராஜ தந்திரம்..

ஏனப்பா தூங்கல ..?

உங்களுக்கு தெரியாது அதான் ராஜ தந்திரம்...

ஆகா.... ஓகோ..

ஆக ராஜ தந்திரம் என்பது அடுத்தவன் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களின் வாயை மூட வேண்டியது கடமை ஆகிறது.. அல்லது ஆஸ்பத்திரியில் கருநா போல ஒளிந்து கொள்வதும் கடமை ஆகிறது

நீங்கள் ஏன் இப்படி பேசி கொண்டு இருக்கிறீர்கள் ..

இதுவும் ராஜதந்திரம் தான்..

:icon_mrgreen: :icon_mrgreen:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.