Jump to content

தடுமாற வைக்கும் உறவுகள்


Recommended Posts

பதியப்பட்டது

"அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள்.

வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட்டாலும் வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைவு மேலும் மேலும் வருத்திக்கொண்டே இருக்கும். அதற்குள் அண்ணி வேறு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எந்நேரமும் போனில் அலட்டிக்கொண்டேயிருப்பாள் என்று எண்ணியே அன்று முதல் தான் வேலைக்குச் செல்வதென்று முடிவு செய்திருந்தாள் வித்தியா.

அதிகாலையில் வேலைக்குச் செல்லும் அண்ணாவிற்கு தேநீர் வைத்துக் கொடுப்பதில் இருந்து இரண்டு வேலைகளை முடித்துவிட்டு நடுச்சாமம் வரும் அண்ணா ரவிக்கு இரவுச்சாப்பாடு செய்து கொடுப்பதுவரை இவளின் தலையில்தான். அம்மா இருக்கும் மட்டும் இவைகள் எல்லாம் அவளே பார்த்துக்கொண்டாள். அம்மாவும் அலுக்காமல் சலிக்கமால் தன் பிள்ளைகளுக்குத்தானே என்ற ஓர் உணர்வுடனே அண்ணியின் குத்தல் கதைகளையும் கேட்டும் புன்னகையுடனே சகித்து வந்தாள். சில சமயங்களில் அண்ணியின் லொள்ளுக்கள் தாங்கமால் வித்தியா எதிர்த்துக் கதைக்க முற்பட்ட பொழுதெல்லாம் அம்மர்

"இஞ்சை பார் பிள்ளை! எப்படியிருந்தாலும் அவா உனது அண்ணி. ஒரு காலத்தில் எனக்கு எதாவது நடந்தால் அவர்கள்தான் உனக்கு தாயும் தகப்பனுமாக இருந்து நல்ல காரியங்கள் எல்லாம் செய்து வைக்க வேண்டும். ஆகவே பொறுமையாக இருக்கப்பழகு" என்று அறிவுரை கூறுவாள்.

ஐக்கெட்டை போடச் சென்றபோது அண்ணியின் அழைப்புக் கேட்டது. "ஆமா, நித்திரை தூக்கத்தில் மாகராணிக்கு கீழே வந்து கதை சொல்ல இயலாமல் இருக்கு ஆக்கும்" என்று நினைத்தபடியே திரும்பவும் மாடி ஏறி வந்து "என்ன அண்ணி?" என்று கேட்டாள்.

"இல்லை வித்தியா எனக்கு சரியான தலையிடியாக இருக்கின்றது, நீர் வேலையால் வரும்போது ஒரு 2 பால் பக்கற்றுக்கள் வாங்கிக்கொண்டு வாரும்" என்று கூறினாள்.

"என்ன அண்ணி, கடையில் பால் என்ன கடனாகவா வேண்டுவது?" என்று கேட்க நினைத்துவிட்டு "ஒக்கேய் அண்ணி நான் வரும்போது வாங்கி வருகின்றேன்" என்று கூறிவிட்டு கதவைத் திறந்து பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

பனிமழை பொழிந்துகொண்டு இருந்தது. பனி பொழியும்போது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது கரைய வெளிக்கிட்டால்தான் குளிர் தாங்க முடியாது என்று நினைத்தபடியே பஸ் நிலையத்தை அடைந்தாள்.

முதல் பஸ் நிலையம் என்றபடியால் ஆட்கள் குறைவாக இருந்தது. பஸ் வண்டியினுள் நுழைந்தபோது அங்கே இருந்தவர் ஒரு தெரிந்த தமிழ் பஸ் சாரதி என்றபடியால் ஒரு புன்னகையுடன் "வணக்கம்" என்று மட்டும் கூறிவிட்டு ஓர் ஆசனத்தில் போய் அமர்ந்தாள்.

புலம் பெயர்ந்து வந்தாலும் நம்முடைய ஆட்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்கின்றார்கள். இதற்கு காரணம் எம்மினத்தவரின் முயற்சியும் நம்பிக்கையும்தான். எமக்கு என்று நிம்மதியாக இருக்க ஒரு நாடு இருந்தால் நாம் எல்லாம் ஏன் அகதியாக எல்லா இடங்களிற்கும் அலைய வேண்டும்? என்ன வளம் இல்லை எம் ஊரில்? குளிர் இல்லை, தண்ணீருக்கு காசு கட்டத் தேவை இல்லை, அநேகமாக எல்லோருக்கும் சொந்த வீடுகள் உண்டு, ஆகவே வீட்டு வாடகையும் இல்லை. வீட்டுத் தோட்டத்திற்குள்ளேயே வீட்டிற்கு தேவையான மரக்கறிகளை பயிரிடலாம். அன்பான உறவினர்கள், ஐய்யோ என்ற குரல் கேட்டு ஒடி வரும் அயலவர்கள் என எம்மை சுற்றியே ஓர் ஆனந்தம் பரவிக்கொண்டிருக்கும்.

அந்த அழகான ஊரை விட்டுவந்து இங்கு கொட்டும் பனியின் குளிரால் கண்ணால் வழியும் நீரைத் துடைக்ககூட கையை தூக்க முடியாது. அவ்வளவிற்கு கைகள் எல்லாம் விறைத்துப் போயிருக்கும். அதோடு காற்றும் சேர்த்து வந்தால் சொல்லவே தேவையில்லை. உயிர் போய் வரும்.

கடந்தகால கற்பனையில் மிதந்திருந்த வித்தியா யாரே "பெல்" அடிக்கும் சத்தம் கேட்டு தன் சுயநினைவுக்கு வந்தாள். "என்ன இது விடியற்காலையிலேயே ஒரே குழப்பமாக இருக்கின்றதே! இன்று என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை" என்று நினைத்துவிட்டு தான் இறங்க வேண்டி இடமும் வந்துவிட்டதை உணர்ந்து இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

அப்போது அவசரம் அவசரமாக வந்த அவள் நண்பி ஒரு கடித உறையை அவள் கையில் திணித்து "இந்தா, இக்கடிதம் நேற்று உனக்கு வந்தது. உன்னுடைய வீட்டிற்கு போன் எடுத்தால் உனது அண்ணிக்குப் பிடிக்காது. அதுதான் இப்போ நான் வேலைக்கு போகும் வழியில் உன்னிடம் தந்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்று கூறிவிட்டு மறுபக்கமாக நடக்கத் தொடங்கினாள்.

கடிதத்தில் இருந்த கையெழுத்தைப் பார்த்ததும் அது யாரிடம் இருந்து வந்தது என்று புரிந்துவிட்டது. ஓரு சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அவளின் பெயருக்கு வரும் பல கடிதங்கள் காணாமல் போயிருந்தன. அதற்குக் காரணம் பல நாட்களுக்குப் பின்னர்தான் அவளுக்கு விளங்கியது. அம்மாவிடம் சொல்லி அழுதாள். மகளின் அழுகையைக் கண்ட அம்மா, "அண்ணா வரட்டும் இதைப்பற்றிக் கேட்கிறேன்" என்று கூறி மகனின் வருகைக்காக காத்திருந்தாள். "மகன் வீட்டிற்கு வந்ததும், "தம்பி இவள் வித்தியாவிற்கு இரண்டு மூன்று கடிதங்கள் அவள் ப்ரண்ட்ஸ் போட்டவையாம். இன்னும் வரவில்லையாம். நீ கடிதப்பெட்டியை செக் பண்ணினாயா?" என்று கேட்டாள்.

எங்கிருந்தோ அண்ணியின் காதுக்குள் அது கேட்டுவிட்டது. "ஆமாம் இவாவுக்கு வரும் கடிதங்களை நாங்கள்தான் எடுத்து வைத்திருக்கிறோம் என்ற மாதிரியெல்லோ உங்கள் கதை போகுது. கடிதம் வந்தால் உங்குதானே இருக்கும்" என்று கத்தி ஒரு பெரிய கலாட்டாவையே உருவாக்கிவிட்டிருந்தாள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவள் தனது நண்பியின் விலாசத்தை பாவிக்கத் தொடங்கினாள். அதன்படியே அவளின் மனதைப் பறித்த அந்த மன்மதனும் நண்பியின் விலாசத்திற்கே கடிதத்தை அனுப்பியிருக்கிறான்.

அம்மா இறந்தபிறகு வரும் முதல் கடிதம் அது. கட்டாயம் அவளுக்கு ஆறுதலாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள் அருகில் இருந்த கோப்பிக் கடைக்குள் புகுந்து அமைதியான ஓர் இடத்தை தெரிவு செய்து அமர்ந்து ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்தாள். அதே கையெழுத்து. அதே பரிவுடன் ஆறுதல் கூறி நீண்டதொரு கடிதத்தை எழுதியிருந்தான் அவளின் மன்மதன். கடிதத்தை படித்து முடித்தவள் மீண்டும் கனவுலகில் சஞ்சரித்தாள்.

எப்படி அண்ணாவிடம் இந்த விடயத்தை சொல்லப்போகின்றேன். அண்ணா ஏற்றுக்கொண்டாலும் அண்ணி விடுவாளா? இக்கதையை அறிந்தாலே உடனே தன் தங்கையுடன் என்னையும் ஒப்பிட்டு கதைக்கத் தொடங்கிவிடுவாளே. அவளின் தங்கை நல்லவளாம்! குனிந்த தலை நிமிராமல்தான் நடப்பாளாம். ஆனால் அவள் பாடசாலையில் விடும் கூத்துக்களை பாவம் வீட்டிற்குள்ளேயே நாளெல்லாம் வளையவரும் அண்ணிக்கு எப்படித் தெரியப்போகுது? யாரிடம் சொல்லி இந்தக்கதையை அண்ணாவிற்கு தெரியப்படுத்துவது? பல உறவுகள் இருந்தாலும் யாரின் மேலேயும் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. எல்லோருமே ஓருவரை ஒருவர் குறை சொல்வதிலும், மற்றவர்களைப்பற்றி வீண் கதைகள் கதைப்பதிலும் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். என்னுடைய கதையை கேள்விப்பட்டால் அவ்வளவுதான். பேப்பரில் போட்ட விசேட செய்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

மாலையில் வேலை முடிந்து அலுப்புடன் வீடு நோக்கிச் சென்றாள். நல்லாய் ஒரு குளியல் குளித்தால்தான் அலுப்பு எடுபடும் என்று நினைத்தவாறே குளியலறையுள் சென்றாள். நன்றாக சுடு தண்ணிரை தலையில் ஊற்றி குளித்துவிட்டு தலையைத் துடைத்தவறே அறைக்குள் சென்றவள் தனது கைப்பையை பார்த்ததும் அதிர்ந்தாள். கைப்பையை யாரோ கிளறியத்தற்கான அடையாளங்கள் அங்கே தெரிந்தன. நடுக்கத்துடன் மன்மதனின் கடிதத்தை தேடினாள். ஆனால் அது கிடைக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை உடனே ஊகித்துக் கொண்டாள்.

எதுவுமே அறியாதமாதிரி குசினினுக்குள் சென்று தேநீர் போடும்போதுதான் அண்ணி வாங்கி வரச்சொன்ன பால் பைக்கற்றுக்களின் நினைவு வந்தது. ஓ காட்! என்று நினைத்தவள் இன்று ஒரு பெரிய பிரச்சனை இருக்கு என்று நினைத்தாள். எது நடந்தாலும் எல்லாவற்றையும் தாங்குகின்ற சக்தியை என்க்குத்தா கடவுளே! என்று பிரார்த்தித்த வண்ணம் முன் சோபாவில் போய் அமர்ந்தாள்.

அண்ணி யாருக்கோ மாறி மாறி போன் எடுத்து கிசுகிசுத்து கதைத்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். மனம் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தது. என்ன கேட்கப் போகிறார்கள்? என்ன பதில் சொல்லப்போகின்றேன்? என்று அவளின் இதயம் படக் படக்கென்று அடித்து கொண்டிருந்தது. அண்ணா அடித்தாலும் பரவாய் இல்லை. ஆனால் அண்ணியின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க முடியாதே என்று நினைத்தவாறே கடவுளே கடவுளே என்று கடவுளை துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தாள்.

என்ன அதிசயம்! என்றும் இல்லாதவாறு அண்ணன் அன்று வேலையால் சீக்கிரம் வந்து கொண்டிருந்தான். அண்ணைக் கண்ட அண்ணி நமட்டுச் சிரிப்புடன் எழுந்து கதவை திறக்கச் சென்றாள். இன்று நான் தொலைந்தேன் என்று நினைத்தாள் வித்தியா. அம்மா அம்மா என்று அவள் மனம் பதறியது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் எனக்கு ஆதரவாக கதைத்திருப்பாளே. இப்போ இருவரின் கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்லப்போகின்றேன்? என்று கைகளைப் பிசைந்தாள்.

அண்ணண் சப்பாத்தைக் கழற்றாமலே கோலுக்குள் வந்தான். மறுகணம் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வித்தியாவின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விழுந்தது. அதிர்ச்சியினால் தலைசுற்றியது அவளுக்கு. "அம்மா இறந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் உனக்கு காதலா?; எங்களை மதியாமல் இப்படியெல்லாம் செய்ய உனக்கு இப்படி திமிர் வந்திட்டுதா?" என்று அண்ணன் பொரியத்தொடங்கினான்.

"கடித்தத்தைக் கண்டவுடன் அவாவிற்கு பால் பக்கற்றும் மறந்து போச்சு" இது அண்ணி.

யார்? எவன்? எப்படியனாவன்? என்று ஓரு வார்த்தை கூட கேட்கமால் அண்ணா ஏதோ ஏதோ எல்லாம் சொன்னார், கத்தினார், பயமுறுத்தினார். "வேலைக்கு போய் கிழிச்சது காணும் வீட்டில் அண்ணிக்கு துணைக்கு இரு" என்று அதிகார கட்டளையுடன் கூறிவிட்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டார்.

ஆமாம் அண்ணி இங்கு வேலை செய்கின்ற கடுமையில் அவாவிற்கு துணை நான் இருக்கணுமா? எனக்குத் துணையாகத்தான் அவா இருக்கணும் என்று சொல்ல ஆசைப்பட்டாள். ஆனால் முடியவில்லை. என்னென்றால் அம்மாவின் வார்த்தைகள் அவளைக் கட்டிப்போட்டன. எண்ணங்கள் இப்படி இருந்தபோதும் அண்ணனின் கைபட்ட கன்னம் வலித்துக்கொண்டே இருந்தது. அழுது கொண்டே தனது அறையை நோக்கி நடந்தவள் தனது வாழ்வைப்பற்றி தான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயா சூழ்நிலைக்கு ஆளாக்கப் பட்டதை உணர்ந்தாள்.

காதல் கலியாணம் செய்து கொண்ட அண்ணனே காதலுக்கு எதிரியா? என்று நினைத்தாள். இனி வேலைக்குப் போவதும் முடியாத காரியம். வேலைக்கு போகமால் 3 நேரமும் சமைத்து சாப்பிட்டுவிட்டு இந்த அறைக்குள்ளேயே வலம் வரவேண்டுமா? அப்போ எனது கனவுகள் எல்லாம் மண்ணாகப் போகப்போகின்றனவா? இன்று சகோதரனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எனது வாழ்வை நானே சீரழிக்கப் போகின்றேனா? கொஞ்சக் காலம் பொறுத்திரு பின்பு இவைகளை யோசிப்போம் என்று அண்ணன் ஓரு வார்த்தை கூறியிருந்தால்கூட அண்ணனின் வார்த்தைகளுக்கு காலம் எல்லாம் காத்திருக்க அவள் தயாராக இருந்தாள். ஆனால் கேவலம் ஒரு வார்த்தைகூடக் கேளாது தனது தனது கன்னத்தில் அறைந்துவிட்டு தன் முடிவைச் சொன்ன அண்ணன் எந்த வகையில் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவப் போகின்றார்?

காதலை ஒரு புறம் வைப்போம். அண்ணா வேலைக்குப் போகதே என்று சொன்னதன் அர்த்தம் படிக்கவும் போகக்கூடாது என்பதுதானே. ஆகவே வேலைக்குப் போகாமல், படிக்காமல் வீட்டிலிருந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு நாலு சினிமா நாடகங்களைப் பார்த்து பொழுது போக்கப் போவதால் என் எதிர்காலத்திற்கு எதாவது நன்மை உண்டா? அண்ணாவுடன் நான் வாழப்போகும் காலங்கள் ஆகக்குறைந்தது இன்னும் 3 வருடங்கள்தான். அதற்குப்பிறகு நான் கலியாணமாகி வேறு வீடு செல்லும்போது ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரியா போகவேண்டும்? என் வாழ்க்கையில் எவ்வளவையோ சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் எனது உள்ளம் இந்த 3 வருட சிறை வாழ்க்கையை ஏற்குமா? அண்ணியின் குத்தல் கதைகள், கேலிக்கதைகள் எல்லாமாகச் சேர்ந்து என்னை பையித்தியம் பிடிக்கும் அளவிற்கு அல்லவா கொண்டு செல்லப்போகின்றன? இரவு முழுவதும் யோசித்து யோசித்து ஓரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது தவித்தாள். அதிகாலையில் அந்தத் தவிப்பால் ஏற்பட்ட களைப்பால் தன்னையறியாமலேயே உறங்கிவிட்டாள்.

கள உறவுகளே வித்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.

Posted

ரமாக்கா வித்யாவை காதலனோடு போய் சந்தோசமாக வாழ சொல்லுங்கோ. :P

Posted

விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?

விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!

ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?

ம்ம் சரமாரியா கதைகள் எழுதி அசத்துறீங்க ரமா- பாராட்டுக்கள்- தொடருங்கள்-! 8)

Posted

வீட்டில் அன்பில்லாமல் இருப்பதைவிட தனது காதலனோடு போய் மகிழ்வாய் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வித்தியா எடுக்கும் முடிவு நிச்சயம் அவள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தனது குடும்பத்தை கருத்தில் கொண்டும் இருக்கும். அதாவது தனது படிப்பு, வேலை, காதல், இவற்றை நோக்கி பயணிக்கும் அதே நேரம் அவளது உறவான அண்ணனை பற்றியும் சிந்திக்க வேண்டியவளாய் உள்ளதால்... காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியவைப்பாள். நிச்சயம் காதலின் வலியையும்..அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் மனதிற்கேற்ப அவளது காதலை இணைத்து வைப்பான்

Posted

றமாக்க நீங்கள் கதை சொன்ன விதம் அருமை.இது இங்க நடக்கிற பல சம்பவங்களில் ஒன்று.காதலன் நல்லவன் என்று நம்பினால் பேசாம வித்தியா காதலனோட போய் வாழுறதுதான் நல்லது.அண்ணிமாரை என்னதான் பண்ணுறது.....லூசு அண்ணாவா இருக்கிறார்...தங்கச்சிட்ட ஒரு வார்த்தை கேப்பம்.....அம்மாக்குத் தெரியுமா என்று கேப்பம் என்றொரு நினைப்பில்ல.சா என்ன அண்ணனோ.

Posted

றமாக்க நீங்கள் கதை சொன்ன விதம் அருமை.இது இங்க நடக்கிற பல சம்பவங்களில் ஒன்று.காதலன் நல்லவன் என்று நம்பினால் பேசாம வித்தியா காதலனோட போய் வாழுறதுதான் நல்லது.அண்ணிமாரை என்னதான் பண்ணுறது.....லூசு அண்ணாவா இருக்கிறார்...தங்கச்சிட்ட ஒரு வார்த்தை கேப்பம்.....அம்மாக்குத் தெரியுமா என்று கேப்பம் என்றொரு நினைப்பில்ல.சா என்ன அண்ணனோ.

சினேகிதி :):lol:

ஏன் இவ்ளோ டென்ஸன் - சும்மா கதைதானே! :roll: 8)

Posted

உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் நிலா வர்ணன் அருவி நிதர்சன் சிநேகிதி.

மற்றவர்களின் கருத்துக்களையும் பார்த்துவிட்டு பின்பு எல்லோரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.

Posted

ரென்ஸன் என்றில்லை வர்ணன்...சரி ரென்ஸன் என்றே வைப்பமே.இது வெறும் கதையா? நீங்கள் இப்பிடிக்கேள்விப்பட்டதே இல்லையா? .....

http://snegethyj.blogspot.com/2005/06/blog...og-post_21.html இது எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கான்ர கதை. காதலனுடைய அம்மா புரிந்துணர்வுள்ளவர் ஆதலால் அந்த அக்காவை அத்தானின்ர பிடியிலிருந்து அழைத்துச்சென்றுவிட்டார்.தற்

Posted

ம்ம்- நீங்கள் சொல்வது சரி சினேகிதி-

கேள்விபடுறதென்ன - நேரடியாவே பார்த்திருக்கன் - விந்தியா போன்ற நிலையில் உள்ளவர்களை-! 8)

Posted

வித்தியா எடுக்கும் முடிவு நிச்சயம் அவள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தனது குடும்பத்தை கருத்தில் கொண்டும் இருக்கும். அதாவது தனது படிப்பு, வேலை, காதல், இவற்றை நோக்கி பயணிக்கும் அதே நேரம் அவளது உறவான அண்ணனை பற்றியும் சிந்திக்க வேண்டியவளாய் உள்ளதால்... காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியவைப்பாள். நிச்சயம் காதலின் வலியையும்..அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் மனதிற்கேற்ப அவளது காதலை இணைத்து வைப்பான்

அண்ணனிற்கு தங்கையின் உணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை. தாய் இறந்த சோகத்தில் இருக்கும் தன் தங்கையை அரவணைக்கத் தெரியாதவர் புரிந்து இணைத்துவைப்பார் என்று பகற்கனவுதான் காணமுடியும். அண்ணனிற்கு காலையில் தேனீர் கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கவேண்டுமா :roll:

காதலித்து திருமணம் செய்பவர்கள் தான் அனேமாக காதலிற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தாயின் பிரிவின் தொடராக தங்கையின் காதல் விவகாரம் அறிந்து அண்ணா உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். நியாயம் தான் அதற்காக கை ஓங்கிற வேலை ரொம்ப ஓவர்.

நம்மட பார்வையின் படி.. ஒரு அமைதியான சூழலில யாற்றையும் தலையீடின்றி அண்ணாவிற்கு தன்ர நிலைமையை எடுத்து விளக்கி.. காதலன் பற்றியும் கூறி அண்ணாக்கும் அவகாசம் கொடுத்து.. அவரை புரிய வைக்க ஒருமுறை வித்தியா முயற்சி செய்யலாம். அதற்கு அண்ணாவும் அண்ணியும் ஒத்து வராவிட்டால்.. வெளிநடப்பு செய்து. தன்ரை வாழ்வை தானே அமைக்கிறது தான் நல்லது. வாழப்போறது வித்தியா தானே.. அடுத்தவையின் விருப்பத்தை விட அவாவின் விருப்பம் தான் முக்கியம். இருந்தாலும் அண்ணா என்ற உறவு தான் வித்தியாவிற்கு எஞ்சி இருககிற உறவு.. அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கிறது நல்லது. அதை விட காதல் செய்ததுக்காய் படிப்பு வேலை போன்ற வற்றை நிப்பாட்டிறது காட்டுமிராண்டித்தனம். (ஊரில இப்படி பாத்திருக்கிறன் இங்கையுமா..??)

நல்லாய் கதை எழுதிறியள் றமா.. எழுதுங்க.. எழுதுங்க.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரமா

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று கூறுவார்கள். அண்ணியின் "தலையணை மந்திரங்களுக்கு" அண்ணன் அடங்கிப்போவது இயற்கைதான். ஆனால் அண்ணன் அடித்துவிட்டார் என்பதற்காக காதலுடன் ஓடிப்போக முடியுமா? காதலனின் வசதிகளையும் கவனிக்கவேண்டுமல்லவா?

இன்னும் ஒரு பழமொழி "முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்"

சிலவற்றை பெறவேண்டும் என்றால் சிலவற்றை இழக்கத்தான் வேண்டும். அண்ணனின் மனத்தை அவர் வழியில் சென்றுதான் மாற்றவேண்டும். ஒரே இரத்தம்தானே இருவரிலும் ஓடுகிறது. இன்று கோபித்த அண்ணன் நாளை மாறவும்கூடும்தானே.

"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்" என்றும் சொல்வார்கள்.

காதல் புனிதமானது. வித்தியாவை அண்ணனுக்குக் கட்டப்பட்டு இருக்கச்சொல்லுங்கள், இல்லையென்றால் கட்டுப்பட்டவள்போல் நடிக்கச் சொல்லுங்கள், படிக்கச் சொல்லுங்கள், என்ன நடக்கின்றது என்பதனையும் காதனுக்கு அடிக்கடி இரகசியமாக தெரியப்படுத்தச் சொல்லுங்கள்.

எதற்குக் கடிதம் எழுதவேண்டும்? இது பழைய காலக்காதல். இப்போதுதான் காதல் செய்வதற்கு கணனி, கைத்தொலைபேசிகள் இருக்கின்றனவே!

"பொறுத்தார் புூமி ஆள்வார்" என்பதும்

"மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவிப்பாயும்" என்பதும் பொய்யல்ல!

காலம் நிச்சயம் அவர்களை ஒன்று சேர்க்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரமாம் நன்றாக கதை எழுதுறீங்கள். வாழ்த்துக்கள். அந்த அண்ணா என்ன என்று கேக்காமல் அடிச்சது ரூ மச். இருந்தாலும் அவக்கு இருக்கிற ஒரு உறவு அண்ணா என்றதால் பொறுமையாக ஒரு முறை எல்லாவற்றையும் கூறிப்பார்க்கலாம். அவர் அதற்கு சம்மதிக்காவிட்டால். அவரது காதலன் அவ்வை நன்றாக வைத்து பார்ப்பார் என்று நம்பிக்கை இருந்தால் அவ காதலனிடம் செல்வதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன்,

Posted

ரமாக்கா வித்யாவை காதலனோடு போய் சந்தோசமாக வாழ சொல்லுங்கோ.

ம்ம் செய்யலாம் தான். ஆனால் அண்ணா என்று ஒரு உறவுக்கு களங்கம் விளைவிக்க அவளுக்கு விருப்பம் இல்லையாம். :cry:

விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?

விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!

ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?

சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம். :cry:

வீட்டில் அன்பில்லாமல் இருப்பதைவிட தனது காதலனோடு போய் மகிழ்வாய் இருக்கலாம்

ஆமாம் அருவி ஆனால் ஏதோ ஒன்று அவளை அங்கு இருந்து போக விடமால் செய்யுதாம் :cry:

அவளது உறவான அண்ணனை பற்றியும் சிந்திக்க வேண்டியவளாய் உள்ளதால்... காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியவைப்பாள். நிச்சயம் காதலின் வலியையும்..அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் மனதிற்கேற்ப அவளது காதலை இணைத்து வைப்பான்

அண்ணண் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றாள் நிதர்சன்.

காதலன் நல்லவன் என்று நம்பினால் பேசாம வித்தியா காதலனோட போய் வாழுறதுதான் நல்லது

ம்ம் அப்படி செய்யலாம் தான் அம்மாவின் பெயருக்கும் இழுக்காடு வரக்கூடாது அல்லவா?

அண்ணா என்ற உறவு தான் வித்தியாவிற்கு எஞ்சி இருககிற உறவு.. அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கிறது நல்லது. அதை விட காதல் செய்ததுக்காய் படிப்பு வேலை போன்ற வற்றை நிப்பாட்டிறது காட்டுமிராண்டித்தனம். (ஊரில இப்படி பாத்திருக்கிறன் இங்கையுமா..??)

நித்தியா காதலைவிட அண்ணாவிற்கும் படிப்பிற்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றா. அதனால் தன் வாழ்வு பாழக்கப்பட்டுவிடுமோ என்றா பயம் வேறு. என்ன செய்வது மனம் என்பது குரங்கு போல தானே.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்" என்றும் சொல்வார்கள்.

காதல் புனிதமானது. வித்தியாவை அண்ணனுக்குக் கட்டப்பட்டு இருக்கச்சொல்லுங்கள், இல்லையென்றால் கட்டுப்பட்டவள்போல் நடிக்கச் சொல்லுங்கள், படிக்கச் சொல்லுங்கள், என்ன நடக்கின்றது என்பதனையும் காதனுக்கு அடிக்கடி இரகசியமாக தெரியப்படுத்தச் சொல்லுங்கள்.

இருக்கலாம் தான் ஆனால் படிக்க போகக்கூடாது வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லிவிட்டாரே அண்ணா. எத்தனை நாளைக்கு தான் வீட்டில் முடங்கி கிடப்பது? அதனால் அவளின் எதிர்காலம் பாதிக்க படதா?

இருந்தாலும் அவக்கு இருக்கிற ஒரு உறவு அண்ணா என்றதால் பொறுமையாக ஒரு முறை எல்லாவற்றையும் கூறிப்பார்க்கலாம்

இதை தான் அவளும் நினைத்து புளுங்கின்றாள்.

உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். இது எனது கற்பனையில் உருவான கதை என்றாலும் பல நிஐங்களும் இதனோடு அண்டி இருக்கின்றது. இங்கே கூறப்பட்ட கருத்துக்கள் சிலருக்கு பலவேளைகளில் பயன்படலாம். வித்தியாவின் முடிவிற்கு நீங்களும் உங்களால் இயன்ற அறிவுரைகளை சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்யப்போகின்றாள் என்பதை பொறுத்து இருந்து பார்த்து உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

றமா உங்கள் கதை அருமை.ஆனால் தயவுசெய்து குடும்பத்துடன் சேர்ந்து வாழுறதுதான் நல்லது.காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியும். நிச்சயம் காதலின் வலியும்.அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் காதலை இணைத்து வைப்பான்.

கடவுளுக்குதான் தொரியும்

Posted

மேற்கோள்:

விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?

விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!

ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?

சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம்.

அப்போ தமிழ் கலாச்சாராம்-விந்தியாக்கு- இப்பிடியே அண்ணிக்கு பால் பக்கற் வாங்க கடைக்கு போறதும்- அண்ணன்கிட்ட செமத்தியா அடிவாங்கிறதுமா - ரமா?

அவளுக்கு லைவ் இல்லையா?

அதே நேரம் இப்பிடி தங்கச்சிய வேலைகாரி போல நடத்துற அவ அண்ணன் எந்த கலாச்சாரத்த படிச்சிட்டு- இதெல்லாம் பண்ணினாராம்-? 8)

Posted

இருக்கலாம் தான் ஆனால் படிக்க போகக்கூடாது வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லிவிட்டாரே அண்ணா.

சாறி..எனக்கு இப்படி மனைவி சொல்லை கேட்டு ஆடும் அண்ணர்களை சுத்தமாக பிடிப்பதில்லை..

:evil: :evil:

வித்திய..முடிந்த வரை அண்ணரை மாற்ற பார்க்கலாம்..

முடியா விட்டால்..நம்பிக்கையானவர் என்றால்..அவருடனேயே போய் வாழலாம்..பட்..நான் சொல்லி என்ன..அவங்க தான் முடிவு எடுக்கணும் :P :roll:

Posted

மேற்கோள்:

விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?

விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!

ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?

சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம்.

அப்போ தமிழ் கலாச்சாராம்-விந்தியாக்கு- இப்பிடியே அண்ணிக்கு பால் பக்கற் வாங்க கடைக்கு போறதும்- அண்ணன்கிட்ட செமத்தியா அடிவாங்கிறதுமா - ரமா?

அவளுக்கு லைவ் இல்லையா?

அதே நேரம் இப்பிடி தங்கச்சிய வேலைகாரி போல நடத்துற அவ அண்ணன் எந்த கலாச்சாரத்த படிச்சிட்டு- இதெல்லாம் பண்ணினாராம்-? 8)

வர்ணன் நீங்கள் சொல்வது சரி தான் என்றாலும் வீட்டை விட்டு வெளியில் சென்றால் சமுதாயம் வித்தியாவை தானே கெட்டவளாக பார்க்கும்? வீட்டில் நடப்பவை அவர்களுக்கு தெரியவா போகுது? அண்ணிக்கு பால் பக்கற் வாங்குவது பெரிய விடயம் இல்லை ஆனால் அண்ணணும் அண்ணியும் அவளின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்கள். அதனால் தான் கட்டாய முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு போய் இருக்கின்றாள். வெளியில் போனாலும் அவள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் தானே. அத்துடன் காதலன் அவள் இருக்கும் நாட்டில் என்பதையும் கவனத்தில் கொள்க.

நன்றி வர்ணன் உங்கள் கருத்துகளுக்கு

Posted

றமா உங்கள் கதை அருமை.ஆனால் தயவுசெய்து குடும்பத்துடன் சேர்ந்து வாழுறதுதான் நல்லது.காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியும். நிச்சயம் காதலின் வலியும்.அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் காதலை இணைத்து வைப்பான்.

கடவுளுக்குதான் தொரியும்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஐீவா.

ஆனாலும் இன்னும் அந்த அண்ணணுக்கு காதலின் வலி புரியலையே என்று தான் அவளும் கவலைப்படுகின்றாள்.

அது சரி கடவுளுக்கு என்ன தெரியும் ஐீவா?

Posted

சாறி..எனக்கு இப்படி மனைவி சொல்லை கேட்டு ஆடும் அண்ணர்களை சுத்தமாக பிடிப்பதில்லை..

:evil: :evil:

வித்திய..முடிந்த வரை அண்ணரை மாற்ற பார்க்கலாம்..

முடியா விட்டால்..நம்பிக்கையானவர் என்றால்..அவருடனேயே போய் வாழலாம்..பட்..நான் சொல்லி என்ன..அவங்க தான் முடிவு எடுக்கணும் :P :roll:

அப்படிப்பட்ட அண்ணண்களை யாருக்கு தான் பிடிக்கும் சகி? நம்பிக்கைக்குரியவனுடன் போய் வாழலாம் தான். பட் அவரும் ஓர் அண்ணன் என்றா நிலை என்பது தடுக்கின்றது சகி.

நீங்கள் சொல்லித்தான் முடிவு எடுக்கணும் என்று இல்லை ஆனால் முடிவு எடுக்க தடுமாறுகிறவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ராமா அக்கா.. கதை நல்லா இருக்கு..வித்யாவை அவ காதலனோடு சேர்த்து வையுங்க.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரமா

களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல. திருமணம் முடிந்து குடும்பம், பிள்ளைகள் என்று வரும்போது நிச்சயம் நெருங்கிய உறவுகளின் அன்பும், அரவணைப்பும் அவசியம். உங்களுக்காக இல்லாவிட்டலும் உங்களின் வருங்காலச் சந்ததியினருக்கு இவை அவசியம். இதனை யாரும் அனுபவித்துத்தான் அறிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல. அடுத்தவர்களைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.

இது கற்பனைக்கதையாக இருந்தாலென்ன, நாளாந்தம் நடக்கும் கதையாக இருந்தாலென்ன எதனையும் ஆலோசித்து முடிவெடுப்பதுதான் நல்லது.

வித்தியா கூறியதுபோல் இன்னும் 3 வருடங்களுக்குள் அவளின் வாழ்வில் ஒரு திருப்பம் வரத்தான் போகிறது. அவள் வசிப்பது தாயகம் என்றால் நிலமை வேறாக இருக்கலாம். ஆனால் அவள் புலம்பெயர்ந்த நாட்டில் வசிப்பதால் தனது வாழ்க்கையை, வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை வித்தியாவுக்குத்தான் உண்டு.

"அன்பால் எவரையும் வெல்லலாம்" இதுவே எனது கருத்து.

நன்றி

Posted

ரமா

களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல. திருமணம் முடிந்து குடும்பம், பிள்ளைகள் என்று வரும்போது நிச்சயம் நெருங்கிய உறவுகளின் அன்பும், அரவணைப்பும் அவசியம். உங்களுக்காக இல்லாவிட்டலும் உங்களின் வருங்காலச் சந்ததியினருக்கு இவை அவசியம். இதனை யாரும் அனுபவித்துத்தான் அறிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல. அடுத்தவர்களைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.

இது கற்பனைக்கதையாக இருந்தாலென்ன, நாளாந்தம் நடக்கும் கதையாக இருந்தாலென்ன எதனையும் ஆலோசித்து முடிவெடுப்பதுதான் நல்லது.

வித்தியா கூறியதுபோல் இன்னும் 3 வருடங்களுக்குள் அவளின் வாழ்வில் ஒரு திருப்பம் வரத்தான் போகிறது. அவள் வசிப்பது தாயகம் என்றால் நிலமை வேறாக இருக்கலாம். ஆனால் அவள் புலம்பெயர்ந்த நாட்டில் வசிப்பதால்.

"அன்பால் எவரையும் வெல்லலாம்" இதுவே எனது கருத்து.

நன்றி

இன்னும் அண்ணா அண்ணி என்று வாழப்போவது ஒரு சிறிய காலம். அதற்குள் தன் வாழ்நாளை சிறைப்படுத்தி பல சந்தர்ப்பங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். அவை அவர்கள் திருந்தியோ அல்லது மனம்மாறியோ வரும் போது காலம் கடந்திருக்கும். அதன் பின் அவள் வாழ்வு சீரழியும்போது இவர்கள் வந்து நிற்பார்களா அல்லது தமது குழந்தை அவர்களின் வாழ்க்கை என்று இவளை ஒதுக்குவார்களா? இவள் அவர்களிற்கு ஒரு பாரம் என்றே தள்ளிவைப்பார்கள். அதன் பின் படும் வேதனைகள்??????

தாயகத்திலோ புலம்பெயர்ந்து வாழ்ந்தாலோ தன் வாழ்வு பற்றி தீர்மானிக்க வேண்டிய நியாயமான உரிமை அது ஆணோ பெண்ணோ அனைவருக்கும் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரமா

நீங்கள் கூறும் உரிமை சரி. நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமக்குள் இருக்கும் குடும்பப் பிணைப்புக்கள், பாசங்கள் எல்லாம் பெரும்பாலும் அப்படியேதான் இருக்கின்றன. காலம் மாறி வருகின்றதுதான் ஆனால் நாம் வாழும் நாட்டவர்கள்போல் நமது பழக்க வழக்கங்கள் முற்றாக மாறிவிடவில்லை.

இன்னும் 25 வருடங்களின் பின்னர் என்றால் கதை வேறாக இருக்கலாம் ஆனால் இது தற்காலக் கதைதானே!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.