Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றன- தமரா குணநாயகம்!

Featured Replies

மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றன- தமரா குணநாயகம்!

Published on March 6, 2012-11:28 am ·

thamara1-150x150.jpgஇலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன என ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் கூறியுள்ளார்.

‘மேற்குலக நாடுகளின் உண்மையான இலக்கு ஆட்சி மாற்றம்தான். இலங்கையில் தாம் அடைய விரும்புவனவற்றில் இதுவும் ஒன்றாகும் என ஜெனீவாவிலுள்ள பல தூதுவர்கள் என்னிடம் கூறியுள்ளனனர் என தமரா குணநாயகம் தெரிவித்தார்.

இறைமை மிக்க ஏனைய நாடுகளில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டை அமெரிக்கா பின்பற்றி வருகிறது’ என அவர் கூறினார்.

இலங்கை ஒரு ‘தோல்வியடைந்த நாடு’ என பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் ஜெரமி பிரவுண் கூறியமை குறித்து தமரா குணநாயகம் பதிலளிக்கையில், ‘பயங்கரவாத நாடுகள்’, ‘முரட்டு நாடுகள்’ என்பனவற்றைப் போன்று ‘தோல்வியடைந்த நாடுகள்’ என்பதும் தேவதூத மற்றும் ஒழுக்கவியல் தோற்றத்துடன், இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்பதம் எனக் கூறினார்.

http://www.thinakkathir.com/?p=31928

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்நாட்டு மக்களை அந்த நாடே கொல்வது இறைமைமிக்க நாடா? பணத்திற்கும் பதவிக்குமாக எந்தப்பொய்யையும் கூறி வயிறு வளர்ப்பது போலக் கேவலம் ஏதும் கிடையாது. பிணத்தின் மேல் நின்று கொண்டு களிப்பில் கூத்தாட்டம் போடும் கூட்டம் தான் இது.

தமிழருக்குரியஉரிமைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டு தமரை கதைத்தால் இதை ஆமோதிக்கலாம்.

தமரா குணநாயகதடன் உரை பெற்ற தாயையும் தந்தையையும் பணத்திற்காகக் கொல்வது போன்றது

இறையாண்மை நாடு என்றால் என்ன என்பது இவருக்குத் தெரியாது.

அவ அமெரிக்காவுக்கும் புலத்துத் தமிழர்களுக்கிடையிலும் ஆப்பிறுக்க முயற்சிக்கிறா. யார் கூட இருக்கினமோ, தள்ளி நிற்கினமோ அமெரிக்க தன்ரை பாதையில் தான் போகும். அந்த ஆப்பிறுக்கல் பிரேரணையை பாதிக்காது. வீரவன்சா ஏற்கனவே அமெரிக்கா என்ன செய்ய போகுது என்று அடித்து கூறிவிட்டார். தமரா பிசி என்றதால் அதை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை போலும்.

அமெரிக்கா இலங்கை பிரேரணையை எற்றுக்கொள்வதாக எல்லா நாடுகளுக்கும் மின்னல் அஞ்சல் அனுப்பியபின் இலங்கை வழமை (எழுதும் உடன் படிக்கைகளை கிழிப்பது) போல அமெரிக்காவுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தான் பிரேரணைக்கு எதிர் என்று கூறி ஏமாற்றி விட்டது. இது கூட்டமைப்பு, இந்தியா எல்லோரையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. அமெரிக்கா இந்த ஏமாற்றத்தாலையும், தமாரா விட்ட மிச்ச சுத்தாலையும், தான் இலங்கைக்கு கொடுத்த வாக்குறுதிகளை விட்டு விட்டு UN Expert Panel அறிக்கையையும் இதில் கொண்டுவர முயல்கிறது. இந்த முறை அமெரிக்கா வென்றல் இலங்கை பல கருமங்களை உடனே செய்ய வேண்டிய நிர்க்கதிக்காளாகும்.

G.L.P. புத்தியாய் நேரத்திற்கே சறுக்கிப்போட்டார். தமரா ஐயாவிட்டை சபாஷ் வாங்க உழுத்துபோன புழுத்த நாத்தப் பொய்களை வாரி வழங்குகிறா. எதற்குப்பிறகும் தேவதாசிகள் ஊருக்குள் சிவிப்பார்கள். இதற்குப்பிறகு தமார UNHRC இல் யாருடைய முகத்தையும் பார்த்துக்கதைக்க முடியாது.

Edited by மல்லையூரான்

"இலங்கையில் தாம் அடைய விரும்புவனவற்றில் இதுவும் ஒன்றாகும் என ஜெனீவாவிலுள்ள பல தூதுவர்கள் என்னிடம் கூறியுள்ளனனர் என தமரா குணநாயகம் தெரிவித்தார்."

எந்த நேரத்தில் கூறினார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றன- தமரா குணநாயகம்!

Published on March 6, 2012-11:28 am ·

thamara1-150x150.jpg‘தோல்வியடைந்த நாடுகள்’ என்பதும் தேவதூத மற்றும் ஒழுக்கவியல் தோற்றத்துடன், இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்பதம் எனக் கூறினார்.

http://www.thinakkathir.com/?p=31928

உண்மை, இரு இனங்களை ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாவிடின் அது தோல்வியடந்த நாடுதான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றால் 'பயங்கரவாதம்" என்பது என்ன சொல்?

தமராவைக் கேட்கவேண்டிய கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jonathan Miller@millerC4 (Channel 4) is in Geneva today

tweeted this:

I'm in Geveva at human rights film fest chairing Sri Lanka debate after screening #killingfields. #Louise_Arbour & @callum_macrae on panel.


  • Also on Sri Lanka debate panel, Yasmin Sooka, from UNSG's expert group. UNHRC votes on SL on 22/3. Promises to be a bitter showdown

மகிந்தா ஆட்சியை விட்டு போவது சில வேலைகளைல் கெட்டதாகவே முடியும்.......

ரனில் வந்து சுதந்திரமாக வாழவிடுவது போல் விட்டு விட்டு மெற்கு உலகத்தலையே தீர்வு ஒன்றும்வேண்டாம் என்று கூற வைத்து விடுவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தா ஆட்சியை விட்டு போவது சில வேலைகளைல் கெட்டதாகவே முடியும்.......

ரனில் வந்து சுதந்திரமாக வாழவிடுவது போல் விட்டு விட்டு மெற்கு உலகத்தலையே தீர்வு ஒன்றும்வேண்டாம் என்று கூற வைத்து விடுவான்.

சுத்திவளைச்சு எங்கை வந்து நிக்கிறியள்?

சுத்திவளைச்சு எங்கை வந்து நிக்கிறியள்?

அப்போ முள்ளிவாய்க்கால் படுகொலையை வைத்து மகிந்தாவை வீட்டுக்கு அனுப்புறதா நோக்கம்?

இப்படி என்றால் அன்றைக்கு ரணிலை வெற்றி பெற விட்டு இருக்கலாமே? ரணில் வந்தால் நரியன் மேற்குலத்தோடு சேர்ந்து புலிகளை அழித்து தீர்வும் இல்லாம பன்னி போடுவான் என்று தானே மகிந்தாவைக் கொண்டு வந்தது?

இப்ப மகிந்தா ஆட்சியை விட்டு போனால்ச் அரி என்பது போல பேசினால்?

அப்போ உங்க எதிர்பாப்பு தான் என்ன?

மகிந்தாவை வைத்து தான் மேற்குலத்துடன் முரன்பட விட்டு ஒரு தீர்வை வாங்கிற வழியை பக்கனும். அந்த டீர்வில் மகிந்தாவின் அழிவும் வரும் ஏன் எனில் மைந்தாவின் அழிவுக்கு பின் தான் தீர்வும் வரும் ஆனால் ம்கிந்தா வீட்டுக்கு போனால் ஒன்ரும்வராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.