Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jayalalitha.jpg

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை பிரமுகர்கள் இந்தியா வர விரும்பும்போது தமிழகத்தை கலந்து ஆலோசித்த பின்னர்தான் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கை அதிபரின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வந்தபோது அவரைத் தாக்க முயற்சி நடந்தது. இதுபோல இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வந்தபோது தாக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளதை ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசிடம் இருந்தோ அல்லது இலங்கை அரசிடம் இருந்தோ தகவல் எதுவும் வரவில்லை எனில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருந்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும் என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

http://www.saritham.com/?p=53115

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானும் வெறியில் அட்டகாசம் செய்ததாக கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வரக் கூடாது- பிரதமருக்கு ஜெ. கடிதம்

07-jayalalitha-45-300.jpg

சென்னை: தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் இலங்கைப் பிரமுகர்களை தமிழகத்திற்குள் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும் இலங்கைப் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதையும் மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நடந்து கொண்டு வரும் விதம் குறித்து தமிழக மக்கள் முழுமையாக அறிந்துள்ளனர். ஈழத் தமிழர்கள் கெளரவமாகவும், கண்ணியத்துடனும் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். மேலும் சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்தை இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கவில்லை என்பதும் தமிழகத்தின் கருத்தாகும்.

இந்தப் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனிப்பட்ட பயணமாக, மாநில அரசுக்கு எந்தவிதத் தகவலையும் கூட தராமல் அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு வருகையின்போது ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் என்பவர், 9.1.2012 மற்றும் 10.1.2012 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, இலங்கை அரசிடமிருந்தோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரும் எழுதியுள்ள கடிதம் எனது பார்வைக்கு வந்தது. அந்த கடிதத்தின் தொணி, அதில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள், தேவையில்லாதது, நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது.

இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், விஐபிக்கள் மாநில அரசுக்குத் தகவல் கொடுக்காமல் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 16.9.2011, 24.2.2012 ஆகிய நாட்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்கம் தரக் கூடாது, ஊக்குவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

http://tamil.oneindia.in/news/2012/03/07/tamilnadu-discourage-frequent-visits-lankan-vip-to-tn-aid0091.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் பாஸ் இல்லாமல் யாரும் வர முடியாது அம்மா சொல்லிட்டாங்க,

அப்பால ....... யாராச்சும் வந்தங்கன்ன அம்முட்டுதான் சொல்லிப்போட்டேன்.

ஜெயலலிதா கெட்டவரோ நல்லவரோ ஆனால் அழையாதோ வாசல் மிதியாதே என்பதை சிங்கள அமைச்சு கூட்டம் உணர்ந்தால் நல்லது.

சரியான பாதை. காங்கிரசின் வாலை தமிழ் நாட்டில் ஒட்ட நறுக்க வேண்டும். கருணாநிதி இனி காங்கிரசுடன் கவனமாக இருப்பர். ஜெயா அம்மையாரை தேர்தல் வரை இப்படிச் சீண்டிக்கொண்டிருந்தாரகள் என்றால்த்தான் தேர்தலுக்கு நல்லது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மையார் என்ன சிங்களத்திற்கு பாதுகாப்புக் கொடுக்கத்தான் கேட்கிநாரா? அல்லது சிங்கள இங்கு வரக்கூடாது என்ற தொனியில் எழுதுகின்றாரா?

இவங்கள் சிலேடையில் பேசுவது அநேகமான தமிழர்களுக்கு விளங்குவதில்லை.

அது தான் தமிழர்களுக்கு எதிரான ரஜனி, 2009 இல் நடிகர்களின் சிங்களத்திற்கு எதிரான கண்டனக்கூட்டத்தில் '30வருடமாக என்னதான் செய்கின்றார்கள்? நீங்கள் எல்லாம் ஆம்பிளைகள் தானா? முடியாவிட்டால் விட்டிட்டு போகவேண்டியது தானே" என்று சிலேடை மொழியில் சிங்களத்திறகு உசார் கொடுத்ததை தமிழர்கள் ஆகா ரஜனியும் எங்கள் பக்கம் என்று பறைதட்டித்திரிந்த தமிழர்களும் உள்ளனர்.

இப்படி தமிழை வடிவா விளங்கிகொள்ளுங்கையா?

நீங்கள் இப்படி தான் விளங்கி கொண்டீர்களா? ம்ம்..புரிகின்றது.

நீங்கள் இப்படி தான் விளங்கி கொண்டீர்களா? ம்ம்..புரிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.