Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தமிழர்களை சந்திக்கும் முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ken-Livingston-150seithy.jpg

நாளை லண்டனில் தொழில்கட்சியினர் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்திக்கும் ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சந்திப்பில் முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London) கலந்துகொள்ளவுள்ளார்.

இச்சந்திப்பின் போது முக்கிய விடையங்களாக லண்டன் நகர போக்குவரத்து, மற்றும் தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்தல் என்பன பேசப்படவுள்ளன.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறீலங்கா விடையம் முக்கிய பேசு பொருளாக அமைந்திருப்பதாலும், நேற்று முந்தினம் இரவு சன்ல் 4 தொலைக்காட்சியில் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தப்பட்ட சிறீலங்காவின் கொலைக்களங்கள் - பாகம் 2 "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" எனும் ஆவணம் படம் வெளிவந்துள்ள நிலையிலும் இச்சந்திப்பில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்கள்ஐ தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

நாளை சனிக்கிழமை 17-03-2012 காலை 10.30 மணிக்கு Station Road, Harrow, HA1 2XF M எனும் முகவரியில் அமைந்துள்ள Harrow Civic Centre மண்டபத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் அதிகளவான பிரித்தானியத் தமிழ் மக்கள் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று ஏற்பாட்டாளர்களான தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பு (Tamils for Labour) கேட்டுக்கொண்டுள்ளது.

Date: Saturday, 17th March 2012 at 10.30am

Venue: Harrow Civic Centre, Station Road, Harrow, HA1 2XF

London-tamils17-03-12-001.jpg

http://www.seithy.co...&language=tamil

சிறு வயதில் "ஐயா மேடைக்கு வருகிறார்" என்ற நாடகம் அடிக்கடி பார்த்த ஞாபகம், தேர்தல் காலங்களின் எவ்வாறு நாம் நடக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறிய நாடகம் அது!! .. ஏறக்குறைய முஸ்லீங்களின் கொள்கை!... இனி நாம் புலத்தில் முஸ்லீங்களின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்!! ... அது எமக்கும் நல்லது! ... எம்மை இவர்களுக்கென்று மட்டும் அடையாளப்படுத்தாமல், வருபவர்களுக்கு தொப்பியை புரட்டி காட்டுவோம்!

... அவ்வாறே .... லண்டன் மேஜர் தேர்தல்களிலும் ... கென் லிவிங்ஸ்டன் வந்தால் சிவப்பு மஞ்சலாக நிற்போம்!! இல்லை பொறிஸ் ஜோன்ஸன் வந்தால் நீலமாக காட்டுவோம்!

... இல்லை கருத்துக்கணிப்புகள் வரத்தொடங்க ... யார் வெல்வார்கள் என்று உறுதியாக தெரியவர .. நிரந்தரமாக ஒட்டி ஆதரவு வழங்குவோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை ...புலத்தில வாழும் தமிழர்கள் எல்லாம் இந்த கொள்கையை பின்பற்ற வேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் "ஐயா மேடைக்கு வருகிறார்" என்ற நாடகம் அடிக்கடி பார்த்த ஞாபகம், தேர்தல் காலங்களின் எவ்வாறு நாம் நடக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறிய நாடகம் அது!! .. ஏறக்குறைய முஸ்லீங்களின் கொள்கை!... இனி நாம் புலத்தில் முஸ்லீங்களின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்!! ... அது எமக்கும் நல்லது! ... எம்மை இவர்களுக்கென்று மட்டும் அடையாளப்படுத்தாமல், வருபவர்களுக்கு தொப்பியை புரட்டி காட்டுவோம்!

... அவ்வாறே .... லண்டன் மேஜர் தேர்தல்களிலும் ... கென் லிவிங்ஸ்டன் வந்தால் சிவப்பு மஞ்சலாக நிற்போம்!! இல்லை பொறிஸ் ஜோன்ஸன் வந்தால் நீலமாக காட்டுவோம்!

... இல்லை கருத்துக்கணிப்புகள் வரத்தொடங்க ... யார் வெல்வார்கள் என்று உறுதியாக தெரியவர .. நிரந்தரமாக ஒட்டி ஆதரவு வழங்குவோம்!!!

கனடாவில் கிட்டத்தட்ட இதேமாதிரிதான் நடக்குது..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறு வயதில் "ஐயா மேடைக்கு வருகிறார்" என்ற நாடகம் அடிக்கடி பார்த்த ஞாபகம், தேர்தல் காலங்களின் எவ்வாறு நாம் நடக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறிய நாடகம் அது!! .. ஏறக்குறைய முஸ்லீங்களின் கொள்கை!... இனி நாம் புலத்தில் முஸ்லீங்களின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்!! ... அது எமக்கும் நல்லது! ... எம்மை இவர்களுக்கென்று மட்டும் அடையாளப்படுத்தாமல், வருபவர்களுக்கு தொப்பியை புரட்டி காட்டுவோம்!

... அவ்வாறே .... லண்டன் மேஜர் தேர்தல்களிலும் ... கென் லிவிங்ஸ்டன் வந்தால் சிவப்பு மஞ்சலாக நிற்போம்!! இல்லை பொறிஸ் ஜோன்ஸன் வந்தால் நீலமாக காட்டுவோம்!

... இல்லை கருத்துக்கணிப்புகள் வரத்தொடங்க ... யார் வெல்வார்கள் என்று உறுதியாக தெரியவர .. நிரந்தரமாக ஒட்டி ஆதரவு வழங்குவோம்!!!

உண்மை சகோதரம்.  நாம் எல்லா கட்சியிலும் இருந்து பின் வெல்லும் குதிரைக்கு யூதர் போல் பந்தயம் கட்டவேண்டும். 

பிரித்தானிய தமிழ் தொழிலாழர் குழுவிற்கு நன்றி.  நல்ல விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மாநகர முதல்வருக்கான லோக்கல் கவுன்சில் தேர்தல் மே யில் நடக்க இருக்கிறது. அப்போது பிரச்சாரத்துக்கு வருபவர்களிடம் எமது தாயகத் துயரங்களைச் சொல்லி அதைப் போக்க.. குரல் கொடுக்கவும் ஆதரவளிக்கவும் மக்கள் தாமாக முன் வந்து கேட்டுக் கொள்ள வேண்டும். இது எமது பிரச்சனைகளை பல்வேறு நாட்டுப் பின்னணி கொண்ட மக்களும் விளங்கவும் கரிசணை கொள்ளவும் உதவும்.

நான் எனது தொகுதியில் ஒரு பாகிஸ்தான் பின்னணியில் வந்த கவுன்சிலராக உள்ள பெண்மணியிடம் வாக்குக் கேட்டு கட்சிச் சீட்டுக் கொண்டு வந்த போது.. சில விடயங்களை channel 4 காணொளியை மையப்படுத்தி பகிர்ந்து கொண்டேன். பாகிஸ்தான் இலங்கையில் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவது குறித்து சொன்ன போது அவர் ஆச்சரியம் அடைந்தார். தமக்கு இதுகள் தெரியாது என்று..! எனவே நாம் தாம் சாத்தியமான எல்லா வழிகளிலும் எமது துயர்களுக்கான காரணிகளை உலக மக்களுக்கு சொல்லி அவர்களின் ஆதரவை எமது கோரிக்கைகளின் பால் திரட்டிக் கொள்ள வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

ஈஸ்டாமில் உரும்பிராய் போல் சத்தியநேசன் இம்முறையும் தேர்தலில் நிற்கிறரா?

முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London)உடனான தமிழ் மக்களின் சந்திப்பு நேற்று லண்டன் ஹறோ பகுதியில் அமைந்துள்ள Harrow Civic Centre மண்டபத்தில் நடைபெற்றது.

தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால் (Tamils for Labour) ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு நேற்று காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1:30 மணிவரை வரை நடைபெற்றது.

இச்சந்திப்பில் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London), Rt Hon. Joan Rayan(Ex Home office Minister), Dawn Butler (Ex Youth Minister), Naveen Shah (GLA Member), Dr. Onkar Sahota(GLA Candidate for Ealing and Hillingdon), Mr. Sen Kandiah (Tamils for Labour) ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில் கடந்த ஒரு வாரமாக ஜெனீவாவில் தங்கிநின்று ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுடன் இணைந்து தமிழர் தரப்பு பிரச்சனைகளை எடுத்துரைத்து தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் Rt Hon. Joan Rayan (Ex Home office Minister) அவர்கள் கூறுகையில்…

தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் இழைக்கப்பட்ட அனீதிகள் தற்போது தான் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு தமிழர்களஅகிய நீங்கள் அனைவரும் எடுத்த கடும் முயற்சியே காரணம். அத்தோடு தற்போது நான் ஜெனீவா ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கடந்த சில நாட்களாக பங்குபற்றியிருந்தபோது தமிழர் பிரதிநிதிகளாக அங்கு நின்று பலர் உழைப்பதை காணமுடிந்தது. குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், குளோபல் தமிழ் போரூம், பிரித்தானியத் தமிழர் பேரவை என்பன தொடர்ச்சியாக வேலைசெய்து வருகின்றனர்.

சன்ல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான விடையங்கள் தமிழர்தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க முக்கிய சாட்சியாக அமைந்துள்ளது. ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இம்முறை சிறீலங்கா விடையமே முக்கிய இடத்தை பிடித்துள்ளமையால் ஒரு திருப்புமுனை வர நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தமிழர்கள் தங்களுடைய விடுதலையை பெறும் வரை, நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London)கூறுகையில்…

தமிழர்களின் பிரச்சனையை, வேதனையை நான் நன்கு அறிவேன். உங்களுக்கான எனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும். குறிப்பாக எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தான் மீண்டும் லண்டன் நகர முதல்வராகும் பட்சத்தில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான நிகழ்வுகள், அமைதிவழிப் போராட்டங்கள் என்பவற்றிற்கான அனுமதி வழங்கப்படும் எனவும், அத்தோடு வருடத்தில் ஒரு நாள் தமிழர்களின் நாளாக பிரகடனப் படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதில் உரையாற்றிய Mr. Sen Kandiah (Tamils for Labour) அவர்கள் கூறுகையில் பிரித்தானியத் தொழில்கட்சியானது தமிழர்களின் பிரச்சனையை நன்கு அறிந்தவர்களாகவும், தமிழர்களுக்கு உதவத் தயாராகவு இருக்கின்றனர். கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் தொடர்ச்சியாக தமிழர்களுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும், வெளியுமாக குரல்கொடுத்துவருகிறார்கள். எமக்காக குரல் கொடுக்கும் இவர்களை தொடர்ச்சியாக பலமான பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டியது தமிழர்களின் கடமை. எனவே அவர்களின் ஒன்றுகூடல்களில் அதிகளவான தமிழர்கள் தொடர்ந்தும் பங்குகொள்ள வேண்டியதும், அவர்களை தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றிபெறச்செய்வதன் ஊடாகவுமே எமது பிரச்சனைகளுக்கான விடைகளை இலகுவில் கண்டறிய முடியும் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.