Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவில் சிறிலங்கா அரசின் விவரணப்படம்! முறியடித்து தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம்

Featured Replies

http://naathamnews.com/?p=4598

சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற உப மாநாடொன்றில் சிங்களக் காடையர்கள் நடத்திய அடாவடித்தனம் கடும் பரபரப்பை ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா அரகு இந்த விவரண்படத்தினை திரையிட முற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈழத்தமிழனத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைத்து சிங்கள தேசத்துக்கான ஆதரவினைத் திரட்ட முனையும் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவோம் என நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியைக் கோரும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நா.த.அரசாங்கத்தின் வள அறிஞர்கள் குழுவில் பங்கெடுத்திருக்கும் சர்வதேச சட்டவாளரும் நா.த.அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப்பிரதிநிதியுமான கருத்துக் கரன் பார்கர் அம்மையார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்...

http://youtu.be/nBlygbz0dfA

நாங்கள் பலர் பலநாட்களாக இங்கே ஐ.நாமனித உரிமைச் சபையில் நின்று முயற்சிகள் எடுத்து வருகிறோம். இப்போ, ஐ.நா சில நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றது.

இங்கே குறிப்பிடத்தக்கது என்னவென்றால், தமிழ்மக்களை இழுவுபடுத்தி பேசி சிறிலங்கா அரசு பிரேரணைக்கு எதிராக காட்டிவரும் மூர்க்கத்தனமான போராட்டமாகும். தமிழ் மக்களுக்காகவும், தீவின் மற்றயவர்களுக்காவும் தொழில்படும் எல்லோரும் ஒரு நல்ல பிரேரணையை கொண்டுவர முடிந்தவரை கடுமையாக உழைக்கிறோம்.

ஈழத்தமிழர்களுக்கு சேவைசெய்ய கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். ஈழத்தமிழர்கள், இலங்கைத்தீவின் உள்ளேயும் வெளியேயும் பலவந்ததிற்கு ஆளாக்கபட்டிருக்கிறார்கள். தாயக மக்களையும் புலம் பெயர் மக்களையும் சிறிலங:கா அரசு குற்றவாளிகள் போல் நடத்துகிறது. சிறிலங்கா அரசு அவர்களையும் அவர்களில் பண்பாட்டையும் இலக்குவைத்து தாக்குகிறது.

ஐ.நா மனித உரிமைச் சபைக்கான நா.த.அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவின் இன்னுமொரு பிரதிநிதியான பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆகிய Joan Ryan அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

http://youtu.be/W9JKz-pmZUk

நாங்கள் தமிழ் மக்களுக்கு, ஒரு சமாதானம், அமைதி, இணக்கபாடு ஒன்று காண்பதற்காக மூன்று கிழமைகளுக்கு மேல் இங்கே உழைக்கிறோம். சிறிலங்கா அரசு இந்த பிரேரணையில் காணப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிர்ப்புக்காட்டி வருகிறது.

நாம், அதாவது இங்கே சிறிலங்கா தமிழருக்காக பாடுபடுபவர்கள், இந்த பிரேரணையை ஒரு ஆரம்ப முயற்சியாகத்தான் பார்க்கிறோம். நிச்சயமாக இந்த பிரேரணை மனித உரிமைகள் சம்பந்தமாகவோ, அல்லது பொறுப்பு கூறல் தொடர்பாகவோ வேண்டியவை எல்லாவற்றையும் உள்ளடக்கவில்லை.

இது நிச்சயமாக தமிழ்மக்களுக்கு வந்த துயரங்களையோ அல்லது நிகழந்த அட்டூளியங்களையோ முழுமையாக கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் நாம் இது முதல் படியென்றுதான் என்றதை நம்புகிறோம்.

முற்று முழுதாக நிவாரணம் காணுவதை தட்டிக்கழித்துவிடும் இலங்கையை, பொறுப்பு கூறலில் ஈடுபடவைக்கத்தக்கதொரு வலிமையை, இது பேரவைக்கு கொடுக்கும், அதனால்த்தான் இவ்வளவு கடுமையாக இந்த பிரேரணையை நிறைவேற்ற உழைக்கிறோம்.

நாம் இது தமிழ்மக்கள்ளின் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒருவருக்கும் சொல்ல முயலவில்லை. நீங்கள் இந்த பாதையில் இருக்கும் கஸ்டங்களையும், இந்த முதல் அடிஎடுத்து வைப்பதில் இருக்கும் சிக்கல்களையும் கண்டு கொள்ள முடியும்.

ஆனாலும் இந்த பிரேரணையை நிறைவேற்றி வைக்கமுடியுமென்றுதான் நம்புகிறோம். அந்த நம்பிக்கையில் தான் மிக கஸ்டபட்டு இந்த பிரேரணைக்கு உழைக்கிறோம்.

உண்மையில் அதன்பின்னர் இதை நடைமுறைப்படுத்தி இலங்கையை பொறுப்பு கூறவைக்க இன்னும் மிக மிக கடினமாக உழைக்கவேண்டியிருக்கும், அதற்கு தாம் எம்மை தயார் படுத்தியிருக்கிறோம். இந்த பிரதிநிதிகள் குழுவிடமிருந்தும், மற்றைய தமிழ் அமைப்புக்களிடமிருந்து இதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என வெளிவந்துள்ள செய்தி குறித்து, தமிழக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதி சுகிந்தன் முருகையா அவர்கள், சுதந்திரமான அனைத்துலக விசாரணையினையே தொடர்சியாக நாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை உள்ளடக்குவதற்கு இந்தியா பாடுபடவேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

http://youtu.be/h-HMkNOaMXU

இதேவேளை, அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புகள், ஐ.நா மனித உரமைச் சபையில் தோன்றியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவில் பங்கெடுத்திருக்கும் பேராசிரியர் பொல் நியூமென் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாதம் ஊடகசேவை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

முக்கிய குறிப்பு

இப்படத்தில் வரும் சாட்சிகள் சொந்த விருப்பத்தில் தெரிவிக்கபட்டவையல்ல

(ஆதாரம் சாட்சிகளின் வாய் அசைவுகளில் தெரிந்துகொள்ளலாம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்கா அரசின் விவரண படத்தை ஒருத்தரும் சட்டை செய்ய போவதில்லை. 

புலி இல்லையே?  

சிங்களத்தின் இந்த ஆவணம், அடுத்த சனல் நாலின் மூன்றாவது ஆவணத்திற்கு வழிசமைக்கலாம்.

அடுத்தடுத்த ஐ. நா. மனித உரிமை தொடரில் அது வெளியாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதைதான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதைதான்..! :D

அதுதுதுதுதுது

  • கருத்துக்கள உறவுகள்

புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதைதான்..! :D

:lol: :lol: :lol::D

http://naathamnews.com/?p=4598

ஐ.நா மனித உரிமைச் சபைக்கான நா.த.அரசாங்கத்தின் வழக்அறிஞர் குழுவின் இன்னுமொரு பிரதிநிதியான பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆகிய Joan Ryan அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

முற்று முழுதாக நிவாரணம் காணுவதை தட்டிக்கழித்துவிடும் இலங்கையை, பொறுப்பு கூறலில் ஈடுபடவைக்கத்தக்கதொரு வலிமையை, இது பேரவைக்கு கொடுக்கும், அதனால்த்தான் இவ்வளவு கடுமையாக இந்த பிரேரணையை நிறைவேற்ற உழைக்கிறோம்.

................

................

உண்மையில் அதன்பின்னர் இதை நடைமுறைப்படுத்தி இலங்கையை பொறுப்பு கூறவைக்க இன்னும் மிக மிக கடினமாக உழைக்கவேண்டியிருக்கும், அதற்கு தாம் எம்மை தயார் படுத்தியிருக்கிறோம். இந்த பிரதிநிதிகள் குழுவிடமிருந்தும், மற்றைய தமிழ் அமைப்புக்களிடமிருந்து இதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாதம் ஊடகசேவை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா? - பிளேக் பதில் [ புதன்கிழமை, 21 மார்ச் 2012, 00:29 GMT ] [ கார்வண்ணன் ]

blake%202011.jpgஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தத் தீர்மானத்தின் நோக்கம் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது அல்ல.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே.

மூன்று வாரங்களுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு நான் வந்த போது கூட, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்றுக்குச் செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயக்கத்துடன் தான் இருந்தது.

சிறிலங்கா முழுமையான பயனையும் அடைவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் பிளேக் நிராகரித்துள்ளார்.

ஏற்கனவே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன் 2006, 2009ம் ஆண்டுகளில் சிறிலங்கா அரசு ஒத்துழைத்து செயற்பட்டதாகச் சுட்டிக்காட்டிய பிளேக், ஐ.நாவின் பல சிறப்பு அறிக்கையாளர்கள் அங்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வது சிறிலங்காவுக்கு நன்மை தரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

http://www.puthinapp...?20120321105827

Edited by மல்லையூரான்

இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அது தானாகவே பொய்யென்றாகிவிடும்.

மிகக் குறுகிய காலத்துகுளேயே இதை சிங்களவன் செய்து முடித்திருக்கின்றான்.

அவர்களுடைய உழைப்புகள் எல்லாம் அபிவிருத்தியை நோக்கியல்ல அதுல்லாம் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விடவே செலவு செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.