Jump to content

எத்தனை மரங்கள் தாவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தர்சினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். அழகானவள். தன்னம்பிக்கை மிக்கவளும் கூட. ஆனால் இப்ப ஒரு மாதமாகத்தான் அவளது நம்பிக்கை தடம்புரண்டு போனதில் தன்மீதே நம்பிக்கை அற்றவளாகி செய்வது அறியாது தவிக்கிறாள்.

பெற்றோர்கள் அவளை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்தனர். அவளும் பெற்றோர் சொல் கேட்டு ஒழுங்காக வளர்ந்தவள் தான். இப்ப கொஞ்ச நாட்களாக குற்றம் செய்யும் உணர்வு. சதீசை என்று சந்தித்தாலோ அன்று பிடித்தது சனி. அடிக்கடி தாய் சொல்வதுதான் உந்த பேஸ் புக் நல்லதில்லை அம்மா. நெடுக உதுக்குள்ள கிடக்காதேங்கோ என்று. அப்ப விளங்கவே இல்லை.

பேஸ் புக் இல் சதீசை பார்த்த உடனேயே இவளுக்கு மனம் தடுமாற தொடங்கிவிட்டது. அவனும் எப்ப பார்த்தாலும் சற் பண்ண தயாராக இருப்பான். இவளும் நிர்பாட்டுவதில்லைத்தான். ஆனாலும் எந்நேரமும் அவனுடன் உரையாடச் செல்வதில்லை. இவளைச் சீண்டியபடி சதீசிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும். இவள் எல்லாவற்றுக்கும் பதில் போடவில்லையாயினும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே  இருப்பான்.

இவள் இத்தனை காலத்தில் பெற்றோரை விட்டுப் பிரிந்து வந்திருப்பது இதுவே முதற் தடவை. அவளுக்கு பல்கலைக்கழகம் தூர இடத்தில் கிடைத்தது அவளது துரதிஸ்ரம்தான் என்று இப்பதான் விளங்குகிறது. சதீஸ் கூட நகரத்தின் ஒரு  பல்கலைக்கழகத்தில் பயில்வதாகவே இவளுக்குக் கூறியிருந்தான். அவன் கூறியவற்றை எல்லாம் மடைத்தனமாக எப்படி எல்லாம் நம்பினாள்.

நல்ல காலம் இந்த  அளவில் தப்பித்ததே பெரிதுதான். அம்மாவுக்கு இந்த விடயம் தெரிந்தால் ........ நினைக்கவே பயமாக இருந்தது தர்சினிக்கு. முதலில் தொலை பேசி எண் கேட்டு அவன்தான் எழுதினான். இவள் முதலில் கொஞ்சம் யோசித்தால்தான். பிறகும் அவனின் குரலைக் கேட்போமே என அடிமனத்து ஆசை வெல்ல இலக்கத்தைக் கொடுத்தவள்தான். இன்று இப்படி வந்து நிற்கிறது.

இரவு பதினொன்று பன்னிரண்டு ஏன் விடிய மூன்று மணிவரை கூடத் தூங்காது அவனுடன் கதைத்ததை நினைக்க இப்ப வெறுப்பாக இருக்கிறது அவளுக்கு. எப்படி எல்லாம் பேசி என் மனத்தைக் கரைத்தான். அவனில் மட்டும் பிழை சொல்லி என்ன என்னிலும் தவறுதான். அம்மாவைப்போல் இலங்கையில் பிறந்த பெண்ண என்றாலும் பரவாயில்லை. இந்த நாட்டில் பிறந்துவிட்டு நல்ல பாடசாலையில் படித்தது நல்ல மதிப்பெண்களோடு பல்கலைக்கழகம் சென்ற எனக்கு சிந்திக்கத் தெரியவில்லையே என தன் மேலேயே கழிவிரக்கம் தோன்ற கண்களில் நீர் முட்டியது.

அப் பல்கலைக்கழகத்தில் தமிழர்களே இல்லாததும்தான் தன்னை அவன்பால் சாய வைத்ததோ? எல்லோருமே வேற்றினத்தவர். ஒரு சீன இனத்தவளும் ஒரு மலாய் பெண்ணுமே இவளுடன் நெருக்கமாயினர். இவளுக்கு ஏனோ அவர்களிடமும் பெரிதாக ஒட்டவில்லை. அதனால்த்தான் மனம்விட்டுப் பேச ஒருவன் கிடைத்ததும் மடங்கிவிட்டேன் என தன் மனதைச் சமாதானம் செய்துகொண்டாள்.

அம்மாவும் பாவம். வேலையுடன் வீட்டுவேலை சமையல். தம்பியைப் பார்ப்பது என எத்தனை எண்டுதான் செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இவளை போனில் எழுப்பி ஐந்து நிமிடமாவது கதைத்துவிட்டு வேலைக்கு இறங்கிவிடுவார். இதைவிட ஒரு தாய் என்னதான் செய்ய முடியும். படிப்பில மட்டும் கவனத்தை வையம்மா. அதுதான் கடைசிவரை கை கொடுப்பது என அடிக்கடி தாய் கூறுவதைக் கேட்க முன்பெல்லாம் எரிச்சல் வரும். திரும்பத் திரும்ப தாய் ஏன் கூறினார் என இப்போதான் விளங்குகிறது.

அன்று பேஸ் புக் இல் நண்பி ஒருத்தி அனுப்பியிருந்த விழா அழைப்பிதழைப்  பார்த்தவளுக்கு, உடனேயே ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. சதீஸ் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் வரும்படி அலைத்திருந்தனர். உடனே சதீசுக்கு தொலைபேசி எடுத்து நீயும் எதிலாவது பங்குபற்றுகிறாயா என்று இவள் கேட்டபோது இல்லை என்று ஆர்வமின்றிக் கூறினான் இவளை பாக்கவேணும் என நச்சரிப்பவன், இன்று வா என்று எதுவுமே கூறவில்லை.

அவன் கேட்டுக் கேட்டுச் சலிப்படைந்து விட்டுவிட்டான் என்றே இவள் எண்ணினாள். இம்முறை அவனுக்குச் சொல்லாமல் போய் அவன்முன் நின்று அவனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தவேண்டும் என அவள் முடிவு செய்து கொண்டாள். தான் விழாவுக்கு வருவதை தன் நண்பிக்கு மட்டும் சொல்லி, யாருக்கும் கூறவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாள்.

அன்று காலையில் எழுந்து அழகான ஆடை அணிந்து,  சதீஸின் முகம் மகிச்சியில் எப்படி மாறும், ஓடிவந்து என்னை அணைத்துக் கொள்வானா?? முத்தம் தருவானா என்றெல்லாம் கற்பனயில் மிதந்தபடியே மூன்று மணிநேரத் தொடருந்துப் பயணத்தைக் முடித்து, தரிப்பிடத்தில் இறங்கியவள் மனம் சொல்லமுடியாத மகிழ்வில் துள்ளியது.

ஒரு பத்து நிமிடம் நடந்துதான் யூனிக்கு வரவேண்டியிருக்கும் என்று நண்பி கூறியதால், தன் போனில் நவியை ஒன செய்தபடி மனதில் எதிர்பார்ப்பும் படபடப்பும் சேர விரைவாக நடந்தாள்.

தூரத்தில் வளாகம் தெரிகிறது. சதீஸ் வந்திருப்பானா?? இன்னும் வரவில்லையா?? என எண்ணியபடி  நண்பிக்கு போன் செய்தாள். நண்பி வந்து இவளை அழைத்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிச் செல்கையில் தூரத்தில் சதீஸ் போல் இருக்கே என எண்ணிய வினாடியே மனதெங்கும் அடைக்க மீண்டும் வடிவாகப் பார்த்தவளுக்கு நெஞ்சில் கத்திக்கொண்டு குத்தியதுபோல் வலித்தது.

சதீஸ் ஒரு பெண்ணை அணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தான். இவளுக்கு ஒருகணம் கோபம், அவமானம், ஏமாற்றம் என அத்தனை உணர்வுகளும் ஒருசேர வந்தன. உடனேயே திரும்பிவிட நினைத்தவள் நண்பியை வா என்று கூடச் சொல்லாது விரைவாக  சதீஸ் இருக்குமிடம் சென்று, நீ எல்லாம் ஒரு மனிசனா என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.

இவளின் நண்பிதான் இவள் பின்னால் ஓடிவந்து. தர்சினி நில்லு. என்ன நடந்தது என்று சொல்லிவிட்டுப் போ என இவளைப் பிடித்து நிறுத்தினாள். அவளுக்கு கோபத்தில் முகம் சிவந்து கண்களில் நீர் முட்டியது. அவன் நிற்குமிடத்தில் அழக்கூடாது என்று, வெளியே வா சொல்லுறன் என்று நண்பியின் கையை இறுகப் பற்றியபடி நடந்தாள்.

இது நடந்து இப்ப ஒரு மாதம் ஆகிறது. ஒருவாரம் அவள் பித்துப் பிடித்ததுபோல் தான் இருந்தாள். இப்ப சதீஸ் தெளிய வைத்துவிட்டான். அடுத்தநாளே இவளது போனுக்கு அவன் அழைக்க இவள் போனை நிப்பாட்டி வைத்துவிட்டாள். அவன் பேஸ் புக்கில் அவளுக்கு செய்தி அனுப்பினான். அவள் தொலைபேசியை எடுக்காவிடில் அவள் அவனுக்கு காதல் தலைக்கேறி இருந்தபோது அனுப்பிய குறுஞ் செய்திகளை எல்லாம் எல்லோரும் பார்க்கும்படி போடப்போவதாக.

அவளுக்குக் கோபம் வந்தாலும் என்ன செய்வது ,எப்படி இவனைக் கையாள்வது எனக் குழம்பிப் போனவளாக அவன் கூறியபடி போனை இயக்கினாள். எனக்கு உன்னைத்தான் பிடித்திருக்கு. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அவளுக்கு முத்தமிட்டேன். என்னை நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் தொலைபேசியில் மிரட்டுவதுபோல் கூறினான்.

போயும் போயும் இப்படி ஒருவனையா காதலித்தேன் என வேதனை கொண்டவள் ஒருவாறு முடிவுக்கு வந்தாள். தவறு செய்தது அவன் நான் ஏன் பயப்பட வேண்டும் என எண்ணியவள் காவல் நிலையம் செல்ல முடிவெடுத்து வீதியில் இறங்கினாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழம்பித் தெளிவது மனசு. இதுவரையில் விழித்துக் கொண்டஅவளது நல்ல காலம்.

நடைமுறையில் அடிக்கடி நிகழும் ச ம்பவம். பகிர்வுக்கு நன்றி . பாராட்டுக்கள் 

 

.எத்தனை  மலர்கள் தா வும் பட்டாம் பூச்சி ........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கா.. பையன்களை மட்டும் இப்படி செய்வதில்லை... பெண்களும்தான் இப்படி பலர்... மனதுள் தெளிவான சிந்தனையும் எதிர்காலம் பற்றிய தெளிவும் உள்ள எந்த ஒரு ஆணும் பெண்ணும் தெளிவாக இருப்பார்கள்.. இன்றைய பல சமூகப் பிரச்சினைகளுக்கு இந்த முகப்புத்தகம் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பெரியளவு காரணியாக இருக்கின்றன.. இவற்றை எவ்வாறு கையாள்வது என்ற தெளிவற்றவர்கள்தான் இப்படியான பிரச்சினைகளுக்குள் போய் விழுகிறார்கள்..தர்சினி தெளிவான பெண் என்று தெரிகிறது..இந்தக்கதை உண்மை என்றால் கண்டிப்பாய் இனி ஒரு முறை இப்படி ஏமாறமாட்டார்.. நல்ல கதை நன்றி அக்கா பகிர்விற்கு..

Posted

 பகிர்வுக்கு நன்றிஅக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி  பதிவுக்கு

 

களவும் கற்றுமற............

இதுவும்  கடந்து போகும்.......

அதுவே  வாழ்க்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி  பதிவுக்கு

 

களவும் கற்றுமற............

இதுவும்  கடந்து போகும்.......

அதுவே  வாழ்க்கை

 

முதலில் இப்படி ஒரு தவறான கருத்தை விதைப்பதை நிறுத்துவோம் அண்ணா.

 

'களவும் கற்று மற'

 

burglar.jpg

தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா?. கூடவே கூடாது. அதை ஒரேயடியாக நீக்கவேண்டும் இல்லையேல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிந்து அதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இப்பழமொழியை நீக்குவதை விட இதன் உண்மைப் பொருள் என்ன என்று கண்டறிந்து அதை மக்களுக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும் என்னும் ஆவலில் ஏற்பட்டது தான் இந்த ஆய்வு.

பழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று தான் ' இளையோரை வழிநடத்துதல்' ஆகும். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் நன்மைகள் பெறலாம் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவை பல பழமொழிகள். அத்தகைய பழமொழிகளுள் ஒன்று தான் இந்தப் பழமொழியும். 'தவறுகளைச் செய்யாதே' என்று தான் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்களே ஒழிய ' தவறுகளைப் பழகிக்கொள் பின்னர் மறந்துவிடு' என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். இனி இப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று காண்போம்.

paanchaali+sapatham.jpgஅக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே.

 
இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

' கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.' - குறள் எண்: 935.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கறு மற.'

(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

பி.கு: சூதாடும் இடத்தைக் குறிக்கின்ற 'கழகம்' என்ற சொல்லை தமிழக அரசியல் கட்சிகள் பல தங்களது பெயருடன் இணைத்து வைத்துள்ள நோக்கம் என்னவோ?. சூதாடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதுபோலவே அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதன் மறைபொருள் இப்போது தான் புரிகிறது.

 

http://thiruththam.blogspot.de/2009/02/blog-post_1218.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி  ஜீவா,

அருமையான  விளக்கம்

தேவையானதும் கூட.

 

ஆனால் இவை மருகி  இப்படி ஆயின  என்பதற்கும் காலம் பதில் சொல்கிறது

களவும் கற்றுமற  என்பதும்

களவெடு

பின்னர் அனுபவப்பட்டு  வாழு  என்பதாக நான் நினைத்து எழுதவில்லை

அனுபவமே அதி  உத்தம பாடம் என்றே களவும் கற்றுமற  என்பதை நான் எடுக்கின்றேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

களவும் கற்றுமற............

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

 

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது

கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை.

 

திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையைக் கற்பு என்றும் கொள்வது தமிழ்நெறி. களவையும் கற்பையும் கைகோள் என்பர். இத் தொடரில் கை என்பது கைப்பற்றி வாழும் ஒழுக்கத்தைக் குறிக்கும். இந்த ஒழுக்கம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் கற்பியல் என்னும் தலைப்பில் விளக்குகிறது

 

இந்தக் களவு என்பது திருமணம் வரை மட்டுமே இருக்க வேண்டும்

திருமணத்தின் பின்னர்  களவொழுக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.

இதனாலேயே களவும் கற்று மற என்ற தொன்மொழியும் உண்டாகியது :D .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

 

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது

கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை.

 

திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையைக் கற்பு என்றும் கொள்வது தமிழ்நெறி. களவையும் கற்பையும் கைகோள் என்பர். இத் தொடரில் கை என்பது கைப்பற்றி வாழும் ஒழுக்கத்தைக் குறிக்கும். இந்த ஒழுக்கம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் கற்பியல் என்னும் தலைப்பில் விளக்குகிறது

 

இந்தக் களவு என்பது திருமணம் வரை மட்டுமே இருக்க வேண்டும்

திருமணத்தின் பின்னர்  களவொழுக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.

இதனாலேயே களவும் கற்று மற என்ற தொன்மொழியும் உண்டாகியது :D .

 

 

அது வாத்தியார்

(இதை எல்லாம் தாண்டித்தானே ஐயா  வந்தோம்)

நன்றி  நேரத்துக்கும் கருத்துக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வருகை தந்த உறவுகள் நிலா அக்கா, சுபேஸ், கரன், விசுகு அண்ணா, ஜீவா, வாத்தியார் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

 

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது

கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை.

 

திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையைக் கற்பு என்றும் கொள்வது தமிழ்நெறி. களவையும் கற்பையும் கைகோள் என்பர். இத் தொடரில் கை என்பது கைப்பற்றி வாழும் ஒழுக்கத்தைக் குறிக்கும். இந்த ஒழுக்கம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் கற்பியல் என்னும் தலைப்பில் விளக்குகிறது

 

இந்தக் களவு என்பது திருமணம் வரை மட்டுமே இருக்க வேண்டும்

திருமணத்தின் பின்னர்  களவொழுக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.

இதனாலேயே களவும் கற்று மற என்ற தொன்மொழியும் உண்டாகியது :D .

இந்தக் கதையின் நாயகிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

இவர் இங்கு காதல் எனும் பாதையில் தடக்கி விழுந்திருக்கின்றார்.

அல்லது விழ வைக்கப்பட்டுள்ளார். இப்போது விழித்துக் கொண்டார்

கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுமேரியர் :D 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கதையின் நாயகிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

இவர் இங்கு காதல் எனும் பாதையில் தடக்கி விழுந்திருக்கின்றார்.

அல்லது விழ வைக்கப்பட்டுள்ளார். இப்போது விழித்துக் கொண்டார்

கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுமேரியர் :D 

 

வாத்தியார் இப்பதான் நித்திரையால எழும்பின்னியள் போல :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொல்லைக் கொடுத்து அடி வாங்கிறது என்று இதைத்தான் சொல்வது :)  :D  :lol:

Posted

கதையின் கரு நல்லது ஆனால் சொன்ன விதத்தில் தடுமாற்றம்.

Posted

ம்ம்

நான் தான் பாவம் காதலிச்சா பெண்ணையே கலியாணம் கட்டியபாவி ;)

 

மிக  அருமை யதார்த்தமும் கூட இப்படி பல இன்னும் இருப்பதுதான் வேதனை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துக்களைப் பரிமாறிய உறவுகள் சாத்திரி,அஞ்சரன் ஆகிய உறவுகளே நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவின் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார். 'உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்' என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செல்போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதாக தினேஷ் கூறுகிறார். ஐபோனை உரியவரிடம் ஒப்படைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி? அறநிலையத் துறை அதிகாரிகள் சொல்வது என்ன? '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள் கட்டடக்கலை: தமிழ்நாட்டின் பழங்கால கோவில்களில் துல்லியமாக மூலவர் சிலை மீது விழும் சூரிய ஒளி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட்: தீட்சிதர்கள் - விசிகவினர் இடையே என்ன நடந்தது?   சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) பணிபுரிந்து வருகிறார். இவர்தான், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் ஐபோனை தவறவிட்டதாகக் கூறி தற்போது அதனை திரும்பப் பெற முயன்று வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சென்றிருந்த போது, என்னுடைய ஐபோன் (13 புரோ மேக்ஸ்) தவறி உண்டியலில் விழுந்துவிட்டது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். டிசம்பர் 19-ஆம் தேதியன்று உண்டியல் திறக்கும்போது தகவல் தெரிவிப்பதாக, கோவில் நிர்வாகம் கூறியது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்ட போது ஐபோன் கிடைத்தாலும் கூட, அது என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக, அறநிலையத்துறை விதிகளின்படி கோவில் உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம' என அதிகாரிகள் கூறிவிட்டனர்" என்றார். உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி? "அன்றைய தினம் மதிய நேரத்தில் சாமி கும்பிடுவதற்காக கந்தசாமி கோவிலுக்கு சென்றேன். அப்போது தவறுதலாக உண்டியலில் ஐபோன் விழுந்துவிட்டது" என்கிறார் தினேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிகாரிகள் 'உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம்' என்று கூறிவிட்டதால் நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகு அதிகாரிகள் அவர்களுக்குள் ஆலோசித்துவிட்டு, 'ஐபோனில் உள்ள தரவுகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று என்னை தொடர்பு கொண்டு கூறினர். ஆனால், என்னால் மீண்டும் கோவிலுக்குச் செல்ல முடியாததால் ஐபோனில் உள்ள தரவுகளை நான் எடுக்கவில்லை." என்றார். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் தகராறு - விவாகரத்து கோரிய தம்பதியரை சேர்த்துவைத்த நீதிமன்றம்7 மணி நேரங்களுக்கு முன்னர் அம்பேத்கர், காங்கிரஸ் இடையிலான உறவு உண்மையில் எப்படி இருந்தது?6 மணி நேரங்களுக்கு முன்னர் கோவில் செயல் அலுவலர் சொல்வது என்ன? "கோவிலின் ராஜ கோபுரத்துக்கு அருகில் ஆறு அடி உயரத்தில் உண்டியல் உள்ளது. அந்த உண்டியலில் ஐபோன் தவறி, உள்ளே விழுவதற்கு வாய்ப்பே இல்லை" என்கிறார் திருப்போரூர் கந்தசாமி கோவிலின் செயல் அலுவலர் குமரவேல். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோவிலுக்கு ஆகஸ்ட் மாதம் சாமி கும்பிடுவதற்காக தினேஷ் வந்துள்ளார். ஆனால், ஐபோனை காணவில்லை என செப்டம்பர் மாதம் தான் அறநிலையத் துறைக்குக் அவர் கடிதம் கொடுத்தார்" என்கிறார். அறநிலையத் துறைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'உண்டியலில் செல்போன் விழுந்திருக்கலாம். நீங்கள் உண்டியலை திறக்கும் போது சொல்லுங்கள். வந்து பார்க்கிறேன்' என்று தினேஷ் குறிப்பிட்டிருந்தார். "உண்டியல் திறக்கும்போது பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிப்போம். அதன்படியே அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்கிறார் குமரவேல். பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட வந்தபோது, தனது ஐபோன் தவறி உண்டியலில் விழுந்துவிட்டதாக கோவில் செயல் அலுவலருக்கு தினேஷ் எழுதிய கடிதம்.. `கடவுளுக்கே சொந்தம்' கடந்த வியாழன் அன்று திருப்போரூர் முருகன் கோவிலின் உண்டியல்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது, 52 லட்ச ரூபாய் ரொக்கம் 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளி ஆகியவற்றுடன் ஐபோன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "தினேஷ் கடந்த 19-ஆம் தேதி கோவிலுக்கு வரும் போதே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவரை தன்னுடன் அழைத்து வந்திருந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள உண்டியலில் ஐபோன் கிடைத்தது. அந்த ஐபோனை கொடுக்குமாறு தினேஷ் கேட்டார். 'அப்படியெல்லாம் உடனே கொடுக்க முடியாது. உங்கள் ஐபோன் என்பதற்கான விவரங்களை ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். உயர் அதிகாரிகளிடம் விவாதித்துவிட்டு பதில் சொல்கிறோம்' என்று நாங்கள் கூறினோம்" என்கிறார் கோவில் செயல் அலுவலர் குமரவேல். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?2 மணி நேரங்களுக்கு முன்னர் மோசமான ஃபார்மால் தவிக்கும் கோலி: சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து பாடம் கற்பாரா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விதிகள் என்ன சொல்கின்றன? "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி, காணிக்கையாக விழுந்த பொருள்கள் அனைத்தும் கோவிலின் கட்டுப்பாட்டில் இருக்கும்" என்று கூறும் குமரவேல், "உண்டியலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் போடலாம். அதன் பிறகு. அந்த பொருள் கோவிலுக்கு சொந்தமானதாகவே கருதப்படும். உண்டியலில் காணிக்கையாக வரும் பொருட்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். அந்த ஐபோன் அவருடையது தானா என்பதற்கான ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம்" என்கிறார். "இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தைக் கேள்விப்பட்டதில்லை. எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு சிறப்பு விதிவிலக்காக உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார் குமரவேல். ஆறடி உயர உண்டியலில் ஐபோன் தவறி விழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கோவில் செயல் அலுவலர் கூறியது பற்றி தினேஷிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, "தவறுதலாக உள்ளே விழுந்துவிட்டது" என்று மட்டும் பதில் அளித்தார். மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். தமிழ்நாடு அமைச்சர் கூறியது என்ன? ஐபோன் விவகாரம் தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "அதுகுறித்து தீர விசாரித்த பிறகு முடிவுக்கு வருவோம்" என்றார். "உண்டியலில் எதாவது பொருள் விழுந்துவிட்டால் அது சுவாமியின் கணக்கில் வரவு வைப்பது வழக்கம். இதற்கு சட்ட ரீதியாக நிவாரணம் கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்" என்றார் சேகர்பாபு. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yv4ezz1kyo
    • பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்தர் கஹூம்பி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது. கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. யார் அந்த மாணவர்? தனியார் நிறுவனங்களுக்கும் அரசிற்கும் இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார் நெல்சன் அமென்யா. கென்யாவின் சமீபத்திய வரலாறு. ஊழல் நடவடிக்கைகளால் உருவான பெரியபெரிய ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க சட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது. பிரான்ஸில் தற்போது எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் 30 வயதான அமென்யா, இந்திய பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்திற்கும் கென்ய அரசுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் என்று சில ஆவணங்களை அவர் ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி? அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? மற்ற நாடுகளிலும் அதானி குழுமத்திற்கு சிக்கல் வருமா? அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்தாரா? அமெரிக்கா குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது ஏன்? - முழு விவரம்   இது அந்த நாட்டின் மிகப்பெரிய, அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் தொடர்புடையது. மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறது அந்த விமான நிலையம். "இதனை முதன்முறையாக பார்த்த போது, மற்றொரு அரசாங்க ஒப்பந்தம் என்று தான் நினைத்தேன். அந்த விவகாரத்தின் தீவிரம் எனக்கு தெரியவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் அமென்யா. ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவருடைய பிம்பம் உயர்ந்து வருகிறது. அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஜோமோ விமான நிலையத்தை புதுப்பித்து, நிர்வாகம் செய்வதற்கான குத்தகை ஒப்பந்த முன்மொழிவு அது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை அதானி குழுமம் முன்மொழிந்திருந்தது. தொடர்ந்து அந்த ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது கென்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் இந்திய பன்னாட்டு நிறுவனமே அனைத்துவிதமான லாபத்தையும் சம்பாதிக்கும் என்றும் அவர் உணர்ந்திருந்தார். இது ஒரு நியாயமான முன்மொழிவாக அவருக்கு தெரியவில்லை. அவர் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை படித்த போது, அதிகமாக முதலீடு செய்தாலும் கூட, கென்யாவால் அதில் நிதிசார் லாபம் ஈட்ட முடியாத வகையில் அது இருந்ததாக கூறுகிறார் அமென்யா. அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து பேசிய போது, அது நிச்சயமாக உண்மையானது என்று கூற தனக்கு காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். "இந்த ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ துறைகளில் இருந்து எனக்கு கிடைத்தன," என்று அவர் தெரிவித்தார். கந்தஹார் விமான கடத்தல் - அந்த மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகளாக தொடரும் ஒரு மாற்றம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இரான்: 'பாலியல் துன்புறுத்தல்கள் இங்கு சகஜம்', கட்டாய ஹிஜாபுக்கு எதிராக சிறை சென்ற பெண்ணின் கதை8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் நான் கொஞ்சம் பயந்தேன் - அமென்யா அதானி குழுமம் இஸ்ரேல், அமீரகம், ஃபிரான்ஸ், தன்சானியா, ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் , உள் கட்டுமானம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் நிறுவனர் கௌதம் அதானி இந்தியாவின் முக்கிய தொழிலதிபராக திகழ்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராகவும் அவர் அறியப்படுகிறார். தன்னுடைய முதலீட்டை அதானி குழுமம் 30 ஆண்டுகளில் ஈட்ட முடியவில்லை என்றால், அந்த இழப்பை கென்யா ஈடுகட்ட வேண்டும் என்கிற வகையில் ஒப்பந்தம் இருப்பதை அமென்யா கண்டறிந்தார். "அதிபர், கென்ய விமானத்துறை, அமைச்சர் போன்றோர் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றிவிட்டனர்," என்று அவர் குற்றம்சாட்டினார். தனது கையில் உரிய ஆவணங்கள் இருந்த போதிலும் அடுத்து செய்வதறியாது தடுமாறினார் அமென்யா. அவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. கென்யாவில் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பலரும் கடந்த காலத்தில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர். "நான் கொஞ்சம் பயந்தேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய பணியை, வாழ்க்கையை நான் பணயம் வைக்கிறேன். நான் அப்படி செய்ய வேண்டும்?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டதாக அவர் கூறுகிறார். இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல என்று உணர்ந்திருக்கிறார். "கோழைகள் தான் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமே" என்கிறார் அவர். அவருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை அவர் முழுமையாக ஆராய்ந்த பிறகு, அமென்யா அந்த ஆவணங்களை அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றினார். அது கென்யாவில் பெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்தது. ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 'வ.உ.சிக்காக நடந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் இப்போது இல்லை' சாகித்ய அகாடமி விருது வென்ற வேங்கடாசலபதி6 மணி நேரங்களுக்கு முன்னர் 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 30 ஆண்டுகள் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தி, நிர்வகிக்க அதானி குழுமம் திட்டமிட்டிருந்தது மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை "இதனை நான் என் நாட்டிற்கு செய்யும் கடமையாக நினைத்தேன். நான் என் நாட்டில் இருந்து தொலை தூரத்தில் இருந்தாலும் கூட, என் நாட்டிற்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. நான் கென்யா முன்னேறிய நாடாக, ஊழலற்ற நாடாக, தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதை நான் பார்க்க வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார் அமென்யா. அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தானா இந்த விமான நிலைய ஒப்பந்தம் என்று தான் கவலைப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். அதானி குழுமத்தின் ஒப்பந்தமானது வழக்கத்திற்கு மாறான விதிமுறைகளைக் கொண்டிருந்தது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததால் தான் அது ஒரு எச்சரிக்கையாக மாறியது. அதில் கென்யாவின் சட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தது என்றும் குற்றம் சாட்டுகிறார் அமென்யா. "இந்த அதிகாரிகள், அதானி குழுமம் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. கொள்முதல் செயல்முறைகளையும் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை." வரி செலுத்துவோரின் பணம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வகை செய்யும். பொது கருத்துக் கேட்பு கூட்டம் உட்பட சட்ட தேவைகளை, இந்த விவகாரத்தில் தவிர்த்துவிடலாம் என்று சில அரசு அதிகாரிகள் நம்பியதாகவும் குற்றம்சாட்டுகிறார் அவர். கென்ய விமான நிலைய ஆணையம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக, பங்குதாரர்களுடன் ஆலோசிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. "இது ஏப்ரல் மாதத்தில் நடந்தது. ஜூலை மாதத்தில் நான் இந்த ஆவணங்களை வெளியிட்டேன். அந்த திட்டம் தொடர்பாக எந்த பொது கருத்துக் கேட்புக் கூட்டமும் நடைபெறவில்லை. அப்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக ஒரே ஒரு மாதம் மட்டுமே இடைவெளி இருந்தது," என்கிறார் அமென்யா. "நான் இந்த ஆவணங்களை வெளியிட்டவுடன், அவசர அவசரமாக போலியாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்த முயன்றனர். அவர்கள் கென்ய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர்," என்றார் அவர். அதானி குழுமம் கூறியது என்ன? கென்யாவில் பல அரசு அதிகாரிகளும், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும், இந்த ஒப்பந்த செயல்முறைகளில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. அதானி குழுமத்தினரும் அமென்யாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறுகிறது. "கென்யாவில் அரசு மற்றும் தனியார் துறை இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றியே திட்டம் முன்மொழியப்பட்டது. உலக தரத்திலான விமான நிலையத்தை உருவாக்குவதும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி கென்ய பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதுமே அதானி குழுமத்தின் நோக்கம்" என்று பிபிசியிடம் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆலோசனைகள் ஒப்பந்தமாக இறுதி வடிவம் பெறவில்லை என்பதால் அங்கே ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடப்படவில்லை என்று அதானி குழுமம் கூறுகிறது. எரிசக்தி தொடர்பான மற்றொரு முன்மொழிவும் ஆலோசனை கட்டத்தில் தான் இருக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. "குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளில் கென்ய சட்டங்களை மீறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம்," என்று அதானி குழுமம் கூறியது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் ஒவ்வொரு திட்டத்தையும், இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முழுமையாக பின்பற்றி அர்பணிப்புடன் நிர்வகிக்கின்றோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு5 மணி நேரங்களுக்கு முன்னர் கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எந்த சட்ட நடைமுறைகளையும் மீறவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது அதானி குழுமம் அமெரிக்காவின் பங்கு ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டை கென்ய அரசு மாற்றிக் கொள்வதற்கு அமென்யா மட்டும் காரணமில்லை. அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த பிறகே கென்யா நடவடிக்கையைத் துவங்கியது. அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகள்முன் வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்தனர். கடந்த நவம்பர் மாதம், கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, அதானி குழுமத்துடனான இரண்டு திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "முறைகேடு தொடர்பான மறுக்கமுடியாத ஆதாரங்கள் அல்லது நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருக்கின்ற போது, நான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டேன்," என்று ரூட்டோ கூறினார். விசாரணை முகமைகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ரூட்டோ அறிவித்ததை கென்ய மக்கள் கொண்டாடினார்கள். "இந்த அறிவிப்பு வந்த போது நான் வகுப்பில் இருந்தேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை," என்று அமென்யா கூறினார். "எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்" என்று அவர் கூறினார். அவரை ஒரு ஹீரோவாக உணரவில்லை என்று கூறுகிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல குறுஞ்செய்திகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குவிந்தன. இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?18 டிசம்பர் 2024 ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது அமென்யா என்ன செய்கிறார்? வகுப்பு முடிந்து நாற்பது நிமிடங்கள் கழித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "அடியோஸ் அதானி" என்ற புகழ்பெற்ற பதிவை பதிந்தார் அமென்யா. "அது ஒரு முக்கியமான தருணம்… நான் செய்த பணிகளுக்கு பலன் கிட்டியது" பல தனிப்பட்ட ரீதியிலான அழுத்தங்களை பல மாதங்கள் எதிர்கொண்ட பிறகே இந்த வெற்றியை உணர்ந்தேன். அதானியின் விமான நிலைய ஒப்பந்த ஆவணங்களை வெளியிட்ட பிறகு அதானி குழுமமும் கென்ய அரசியல்வாதி ஒருவரும் அமென்யா மீது மானநஷ்ட வழக்கை தொடுத்தனர். தொடர்ந்து இந்த தளத்தில் இயங்குவதா என்ற கேள்வியை அவருக்குள் அது எழுப்பியது. "அரசாங்கத்திடம் இருந்து ஒரு சிலர் என்னிடம் வந்தனர். அவர்கள் எனக்கு பணம் தரவும் முன்வந்தனர். ஆனால் அவர்கள் என்னிடம் வந்து, இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்," என்று நினைவு கூறினார் அமென்யா. அதை நான் செய்திருந்தால் அது மிகப்பெரிய தவறாக இருந்திருக்கும். அது கென்ய மக்களை ஏமாற்றும் செயல் என்றார். "விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தியவர்களை அவர்கள் கொண்டாடுவதை நான் பார்த்தேன். அவர்கள் ஹீரோக்களா? உங்கள் நாட்டில் விமான நிலையம் வர இருப்பதை தடுப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?" என்று டிசம்பர் மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ கூறினார். "அது எப்படி கட்டப்படும் என்பது பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த விமான நிலையத்தில் கால் வைக்காதவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதையாவது எதிர்க்க வேண்டும்," என்றும் அவர் கூறினார். மற்றொரு புறம், அமென்யா இன்னும் மான நஷ்ட வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். சட்ட உதவிகளுக்காக அவர் நிதி திரட்டிவருகிறார். கென்யாவில் அவருக்கு எதிர்காலம் இருக்குமா என்பது நிச்சயமற்றது என்றும் அவர் கூறினார். "உளவுத்துறைகளிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் வந்தன. நான் செய்தது தொடர்பாக பலர் அங்கே கோபத்துடன் உள்ளனர் என்பதால் கென்ய மக்கள் நான் மீண்டும் அங்கே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்," என்று அமென்யா தெரிவிக்கிறார். நியாயமான செயலுக்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக கூறும் அமென்யா, "நம்மை காப்பாற்ற ஒருவர் வருவார் என்று நாம் காத்துக் கொண்டிருக்க தேவையில்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7ve809gmlqo
    • எங்கள் தவறுகளை அடையாளம் காணும்வரை பிறரை நாம் குற்றம் சொல்ல முடியாது. 
    • மருந்து எப்போதோ ஆயத்தம் செய்யப்பட்டுவிட்டது. நோய்க்கூறு முற்றும்போது பாவிக்கப்படும்.  😉
    • "வன்னியில் உள்ள தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, பொட்டுஅம்மான்,  நியூயோர்க்கில் உள்ள உருத்திரகுமாரன் போன்றவர்கள்  ஒஸ்லோவின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று பாலசிங்கம் பதிலளித்தார். மேலும், இலங்கை இராணுவத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ராஜபக்சவுக்கு எதிராக உலகம் விடுதலை புலிகளை ஆதரிக்கும் என்றும் அவர்கள் தவறான விடயங்களை கூறி பிரபாகரனைநம்பவைத்தும் விட்டார்கள்." போராட்டத்தை அழித்தது  வெளிநாடு வாழ் போலித் தமிழ்த் தேசிய வியாபாரிகள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.