All Activity
- Today
-
யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
படிப்பதினால் மட்டும் அறிவு வளர்வதில்லை. என்னடா விளையாட்டு வீட்டைபோய் படியிங்கோடா. அவன் சித்தப்பாவின் அதட்டல் அவனையும் அவன் அண்ணனையும் மற்றும் நண்பர்களையும் நடுங்கி ஒடுங்கவைக்கும். அவர் கையில் அருகே இருக்கும் வேலியில் ஒடித்த நீண்ட கிளிசூரியோ பூவரசம் கம்பு ஒன்று மேலும் கீழும் ஆடி அண்ணன் தம்பி இருவரினதும் கால் கைகளைப் பதம்பார்க்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரங்களில், லீவு நாட்களில்கூட அவர்கள் விளையாடும் இடங்களில் நடக்கும் சம்பவம். சித்திரையில் அதுவும் வருடப்பிறப்பு அன்று தம்பி பிறந்த தோசம் காரணமாகவே சில மாதங்களில் அவர்கள் அப்பா இறந்துவிட்டதாக சொந்தங்களால் காரணம் கூறப்பட்டது. காரணம் எதுவக இருந்தாலும், பெரியப்பாக்களும் சித்தப்பாவுமே இவர்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும் சித்தப்பா சற்று வித்தியாமானவர். தான் பெற்ற பிள்ளைகளை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கும் அவர் தன் அண்ணனின் பிள்ளைகளை அதட்டி ஒடுக்கி வைத்திருப்பதில் கர்வம் கொள்பவர். அண்ணனின் பிள்ளைகள் என்றாலும் அவர்களைச் சீராக வளர்க்கிறேன் என்று தன்னை ஒரு சிறந்த காவலனாக காட்டிக்கொள்வதில் பெருமை கொள்பவராக இருந்தார். அண்ணனின் பிள்ளைகளை ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வளர்த்தெடுப்பேன் என்று எல்லோரிடமும் சொல்லி இறுமாப்படைவார். ஆனால் “படிடா படிடா” என்று படுத்துபவருக்கு என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் என்று சொல்லவோ வழிகாட்டவோ தெரியாது. ஒரு டாக்டர், எஞ்சினியர் என்றால் தன் பிள்ளைகளைத் தன்வழி வருவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும். கடையொன்றில் சிப்பந்தியாக வேலைபார்க்கும் சித்தப்பாவால் உப்பு எப்படிக் கட்டுவது, சீனி, சக்கரை எப்படிச் சரை கட்டுவது என்பதைத்தவிர வேறென்ன சொல்லிக்கொடுக்க முடியும். “அடியாதமாடு படியாது” என்பது போன்ற முதுமொழிகளுகான விளக்கங்களை தனது பெரியப்பாவின் பிள்ளைகள்மூலமே பரிசோதனை செய்து விளங்கிக்கொள்வது வழக்கமான செயலாகியது. கல்கி, குமுதம், ஆனந்தவிகடனில் வரும் கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து தம்பிக்கு தானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் கையெழுத்தை அவனாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. அத்தனை மோசமான எழுத்து வடிவங்கள். இருந்தும் சிறந்த எழுத்தாளர், திரைப்படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி பாராட்டுகள் வாங்கும் கலைஞர் கருனாநிதியின் கையெழுத்து ரெம்பவும் மோசமானது என்பதையும், அவர் எழுதுவதை வாசிக்கக் கூடிய ஒருவரை உதவிக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியையும் அவன் அறியவந்ததும், வந்த தயக்கம் நீங்கியது. அவன் எழுத்தையும் வாசித்து அறியக்கூடியவர்கள் உலகில் இல்லாது இருப்பார்களா? சூரியன் காலையில் பிரகாசமாக எழுந்தான், மாலையில் ஒளியிழந்து மறைந்தான், சந்திரன் மலர்ந்தான் என்று ஏதேதோ எழுதி வீரகேசரிக்கு அனுப்பும் எண்ணத்தோடு அண்ணா அக்காமாரிடம் காட்டினான், அவர்கள் அதனைச் சிரமத்தோடு வாசித்தாலும் பின்பு செய்த பரிகாசம் அவன் ஆர்வத்தை அடக்கிச் சோர்வடையச் செய்தது. அவ்வேளையில்தான் யாழ் இணையம் என்ற ஒரு களத்தை திரு மோகன் அவர்கள் ஆரம்பித்தார். களத்தில் இணையும் வழிமுறைகளும் இருக்கவே அவனும் இணைந்து உறுப்பினராகி எழுத ஆரம்பித்தான். சித்தப்பா பிள்ளைகளின் வேண்டுதலில், சித்தப்பா தன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த கணனியில், அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சென்று பயிற்சி பெற்றுவந்தது இணையத்தில் எழுத உதவியது. இணையம் அவனையும் அரவணைத்தது. சித்தப்பாவின் பிள்ளைகள் அவர்கள் அப்பனைப்போல் அல்லாது நண்பர்கள்போல் பழகினார்கள். யாழ்கள உறவுகளும் அவன் எழுதும் தமிழை வரவேற்றுப் பாராட்டவே வானத்தில் பறந்தான். இன்றும் பறக்கிறான். பறக்கும்போது அவன் சிந்தனையில் எழுந்த, தமிழின் பெருமைகளை அறிந்த, அறிந்தும் மறந்த சில விடயங்களைத் திரும்பவும் நினைவூட்ட விரும்பினான். அதனால் அவன் விருப்பமும் கீழே பதிவாகியுள்ளது. தமிழினம் முதல் தலைமுறை: நாம் இரண்டாம் தலைமுறை: தாய் தந்தை மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி நான்காம் தலைமுறை: பூட்டன் பூட்டி ஐந்தாம் தலைமுறை: ஓட்டன் ஓட்டி ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள் ஏழாம் தலைமுறை: பரன் பரை பரன்+பரை இதுவே பரம்பரை எனும் தமிழ்சொல்லாக மருவி வழக்கில் உள்ளது. ஒரு தலைமுறை என்பது தோராயமாக 60 வருடங்கள் என்றும், 7 தலைமுறை 480 வருடங்கள் என்றும் ஈரேழு தலைமுறை 960 வருடங்கள் என்றும்(கிட்டத்தட்ட 1000 வருடங்கள்) ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதின்நாங்கு தலைமுறையாக என்று பொருள் வருமாறு தமிழ் மொழி வகுத்துள்ளது. இப்படியான அமைப்பு வேறெந்த மொழிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எண்கணிதம் 1= ஒன்று -one 10= பத்து -Ten 100= நூறு -Hundred 1000= ஆயிரம் -Thouand 10000= பத்தாயிரம் -Ten Thousand 100000= நூறாயிரம் -Hundred Thousand 1000000= பத்துநூறாயிரம் -One Million 10000000= கோடி -Ten Million 100000000= அற்புதம் - One Hundred Million 1000000000= நிகரபுதம் - One Billion 10000000000= கும்பம் - Ten Billion 100000000000= கணம் - Hundred Billion 1000000000000= கற்பம் - One Trillion 10000000000000= நிகற்பம் - Ten Trillion 100000000000000= பதுமம் - Hundred Trillion 1000000000000000= சங்கம் - One Zillion 10000000000000000= வெல்லம் - Ten Zillion 100000000000000000= அன்னியம் - Hundred Zillion 1000000000000000000= அர்த்தம் - ? மேலும் எழுத ஆங்கிலத்தில் சொற்கள் தெரியவில்லை. 10000000000000000000= பராத்தம் - ? 100000000000000000000= பூரியம் - ? 1000000000000000000000= முக்கோடி - ? 10000000000000000000000= மகாயுகம் - ? நாம் கெடுவதற்குக் காரணங்களை நமது ஒளவை மூதாட்டியாரும் அழகாகச் சொல்லியுள்ளார். 01 பார்க்காத பயிரும் கெடும் 02 பாசத்தினல் பிள்ளையும் கெடும் 03 கேளாத கடனும் கெடும் 04 கேட்டால் உறவும் கெடும் 05 தேடாத செல்வம் கெடும் 06 தெகிட்டினால் விருந்தும் கெடும் 07 ஓதாத கல்வியும் கெடும் 08 ஒழுக்கமில்லா வாழ்வும் கெடும் 09 சேராத உறவும் கெடும் 10 சிற்றின்பம் பெயரும் கெடும் 11 நடாத நட்பும் கெடும் 12 நயமில்லா சொல்லும் கெடும் 13 கண்டிக்காத பிள்ளை கெடும் 14 கடன்பட்டால் வாழ்வு கெடும் 15 பிரிவால் இன்பம் கெடும் 16 பணத்தால் அமைதி கெடும் 17 சினமிகுந்தால் அறமும் கெடும் 18 சிந்திக்காத செயலும் கெடும் 19 சோம்பலினால் வளர்ச்சி கெடும் 20 சுயமில்லா வேலை கெடும் 21 மோகித்தால் முறைமை கெடும் 22 முறையற்ற உறவும் கெடும் 23 அச்சத்தால் வீரம் கெடும் 24 அறியாமையால் முடிவு கெடும் 25 உழாத நிலமும் கெடும் 26 உழைக்காத உடலும் கெடும் 27 இறைக்காத கிணறும் கெடும் 28 இயற்கையை அழிக்கும் நாடும் கெடும் 29 இல்லாளில்லா வம்சம் கெடும் 30 இரக்கமில்லா மனிதம் கெடும் 31 தோகையினால் துறவு கெடும் 32 துணையில்லா வாழ்வு கெடும் 33 ஓய்வில்லா முதுமை கெடும் 34 ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் 35 அளவில்லா ஆசை கெடும் 36 அச்சப்படும் கோழை கெடும் 37 இலக்கில்லா பயணம் கெடும் 38 இச்சையினால் உள்ளம் கெடும் 39 உண்மையில்லா காதல் கெடும் 40 உணர்வில்லாத இனமும் கெடும் 41 செல்வம் போனால் சிறப்பு கெடும் 42 சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும் 43 தூண்டாத திரியும் கெடும் 44 தூற்றிப்பேசும் உரையும் கெடும் 45 காய்க்காத மரமும் கெடும் 46 காடழிந்தால் மழையும் கெடும் 47 குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும் 48 குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும் 49 வசிக்காத வீடும் கெடும் 50 வறுமை வந்தால் எல்லாம் கெடும் 51 குளிக்காத மேனி கெடும் 52 குளிர்ந்து போனால் உணவு கெடும் 53 பொய்யான அழகும் கெடும் 54 பொய்யுரைத்தால் புகழும் கெடும் 55 துடிப்பில்லா இளமை கெடும் 56 துவண்டிட்டால் வெற்றி கெடும் 57 தூங்காத இரவு கெடும் 58 தூங்கினால் பகலும் கெடும் 59 கவனமில்லா செயலும் கெடும் 60 கருத்தில்லா எழுத்தும் கெடும் இந்த 60ஐயும் அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை கெடவே கெடாது.
-
Paanch started following யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
-
நல்ல சமாரியன் (அல்லது) யூதன்
மனிதம் சாகவில்லை, அது ஒருபோதும் சாகாது ........! 🙂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் சீமான் இவ்வளவு காலமாக உழைப்பில்லாமல் எப்படி வாழ்கிறார் என்பதை மேலே பட்டியல் இட்டுள்ளேன். அதன் அடிப்படையில் கள்ளன் என்கிறேன். நீங்கள் சீமானுக்கு கவர் எடுக்க வந்தால் அவர் ஏன் கள்ளன் இல்லை என உங்கள் கருத்தை தாராளமாக எழுதலாம். மாறாக நீங்கள் செய்தது, சொன்னது என்ன? நான் சீமானுக்கு திரள்நிதி கொடுக்கவில்லை எனவே நான் அவரின் களவை நான் கேள்வி கேட்க கூடாது. தேவையில்லாமல் தலைவரை, இயக்கத்தை இந்த சகதிக்கு முட்டு கொடுக்க இழுத்தீர்கள். தவிபு வை இயக்கம் என்பதா புலிகள் என்பதா என முட்டையில் உரோமம் புடுங்கினீர்கள். இவற்றுக்கான எதிர்வினையே என் பதிலகள். சீமானுக்கு முட்டுகொடுக்க யார் சருவசட்டியை தூக்கி வந்தாலும் அதே சருவசட்டியை வாங்கி மண்டையில் ஒண்டு போட்டே ஆக வேண்டும். #பெருமை அல்ல கடமை.
-
"மூன்று கவிதைகள் / 33"
"மூன்று கவிதைகள் / 33" 'மின்னலாய் ஒரு பின்னல்' அன்பு பெருகும் இல்லம் நலமாக அழகு மிளிரும் வாழ்வும் அறிவு வளர்க்கும் கல்வியும் ஆதரவு தந்து துணை புரியட்டும்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். ....................................................... 'காகித ஓடம் கடலலை மேலே' காகித ஓடம் கடலலை மேலே காற்று மோத கவிழ்ந்தது போல காலம் செய்த கொடுமை இதுவோ? ஆழம் அறியா பெண்ணின் மனதில் ஆசை வைத்து அழிந்தது அழகோ? ஆதரவு அற்று அலைவது மெய்யோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................... 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே பூத்திருந்த புன்னகை வாடியது ஏனோ? மௌன மொழியில் பேசிய கண்களே நாணம் கொண்ட அழகு முகமே பிரியும் எண்ணம் எதனால் வந்ததோ? தேனினும் இனிக்கும் தென்றலின் குரலே உள்ளம் சுடும் சொற்கள் எதற்கோ? வெள்ளம் எனக் காதல் பொழிந்தவளே கள்ளம் இன்றி அன்பைக் காட்டியவளே தள்ளிப் போக எண்ணுதல் அறமோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். துளி/DROP: 2111 ["மூன்று கவிதைகள் / 33" https://www.facebook.com/groups/978753388866632/posts/34483738357941371/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 142 மேலும், 'புத்தரும் அவருடைய போதனைகளும்' என்ற தலைப்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் சேர்த்துள்ளேன். / Additionally, I am including the topic 'The Buddha and His Teachings' in both Tamil and English. பகுதி: 142 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" [4] மகாத்மா காந்தி ஒரு முக்கிய இந்தியத் தலைவராக இருந்தார், அவர் வன்முறையற்ற உள்நாட்டு ஒத்துழையாமைக்காக வாதிட்டார் மற்றும் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். கௌதம புத்தர் தனிநபர் விடுதலை மற்றும் ஆன்மீக அறிவொளியில் கவனம் செலுத்தியபோது, காந்தி அமைதியான வழிமுறைகள் மூலம் சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை வலியுறுத்தினார். இருப்பினும், இரு நபர்களும் இரக்கம், அகிம்சை மற்றும் உண்மையைத் தேடுவதை [compassion, nonviolence, and the pursuit of truth] ஊக்குவித்தனர். [5] மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தில் ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். இன சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக [racial equality and social justice] வாதிட்டார். கௌதம புத்தரைப் போலவே, கிங் அகிம்சையைப் போதித்து சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர முயன்றார். அவர்களின் சூழல்களும் செயல்பாட்டு முறைகளும் வேறுபட்டாலும், இரு நபர்களும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிப்பதன் மூலமும் அநீதிகளை சவால் செய்வதன் மூலமும் அந்தந்த சமூகங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினர். பண்டைய இந்தியாவின் மத மற்றும் தத்துவ நிலப்பரப்பில் கௌதம புத்தரும் இந்து மதமும் இரண்டு தனித்துவமான ஆனால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். அவற்றுக்கிடையே ஒற்றுமைகள் மற்றும் இரண்டுக்கும் இடையில் நிறைய பொதுவான கூற்றுக்கள் அல்லது தத்துவங்கள் இருந்தாலும் [similarities and overlaps between them], அவர்களின் போதனைகள், நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. எது என்னெவென்றாலும், இந்த ஒப்பீடுகள் சுருக்கமானவை மற்றும் பொதுமைப்படுத்தப்பட்டவை, ஏனெனில் ஒவ்வொன்றும் தனித்துவமான குணங்கள், போதனைகள் மற்றும் வரலாற்று [unique qualities, teachings, and historical significance] முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. கௌதம புத்தர் கிமு 6 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியாவாகக் கருதப்படும் பகுதியில் வாழ்ந்தார். அந்தக் காலத்தில் இந்து மதத்தின் மத மற்றும் சமூக சூழலில் ஒரு சீர்திருத்த இயக்கமாக பௌத்தம் உருவானது என்பதே உண்மை. மறுபுறம், இந்து மதம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான ஒரு பன்முகத்தன்மை கொண்ட மற்றும் உலகின் பழமையான ஒரு மதமாகும். இது பரந்த அளவிலான நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் தத்துவ அமைப்புகளை உள்ளடக்கியது. இந்து மதத்திற்கு என தனிப்பட்ட குறிப்பிட்ட நிறுவனர் என்று ஒருவரும் இல்லை. மேலும் வரலாறு முழுவதும் பல்வேறு முனிவர்கள், ஞானிகள் மற்றும் ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற முக்கிய சமயங்களைப் பொறுத்தவரையில், புத்தர், இயேசு கிறிஸ்து, முகம்மது நபி என்று சிலரைக் நாம் குறிப்பிட்டுக் கூறலாம். Part: 142 / APPENDIX – "The Buddha and His teachings" Mahatma Gandhi: Mahatma Gandhi was a prominent Indian leader who advocated for nonviolent civil disobedience and played a pivotal role in India's independence movement. While Gautama Buddha focused on individual liberation and spiritual enlightenment, Gandhi emphasized social and political change through peaceful means. Both figures, however, promoted compassion, nonviolence, and the pursuit of truth. Martin Luther King Jr.: Martin Luther King Jr. was an influential leader in the American civil rights movement, advocating for racial equality and social justice. Like Gautama Buddha, King preached nonviolence and sought to bring about positive change in society. While their contexts and methods of activism differ, both figures left a lasting impact on their respective societies by inspiring millions and challenging injustices. Gautama Buddha and Hinduism are two distinct but interconnected entities in the religious and philosophical landscape of ancient India. While there are similarities and overlaps between them, there are also significant differences in their teachings, beliefs, and practices. These comparisons are brief and generalized, as each has unique qualities, teachings, and historical significance. Gautama Buddha lived in the 6th and 5th centuries BCE in the region that is now present-day Nepal and northeastern India. Buddhism originated as a reform movement within the religious and social context of Hinduism during that time. Hinduism, on the other hand, is a diverse and ancient religion that has evolved over thousands of years. It encompasses a wide range of beliefs, practices, and philosophical systems. Hinduism has no specific founder and has been shaped by various sages, seers, and teachers throughout history. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 143 தொடரும் / Will follow துளி/DROP: 2112 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 142 https://www.facebook.com/groups/978753388866632/posts/34483787094603164/?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் கள்ளன் என்று சொல்பவர்களை எல்லாம் நானும் கள்ளன் என்று சொல்ல வேண்டும். இது எந்த வகையான மனநிலை சகோ. அதுவரை துரத்தி துரத்தி?? இது எந்த வகையான கருத்தாடல் சகோ???
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
உலக சந்தையில் எரிபொருளின் விலையேற்றமும் அதனால் ஏற்பட்டுவரும் பொருளாதாரச் சிக்கல்களும் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகின்றன. போர் தொடங்குமுன்னர் ஒரு லீட்டர் ஒரு டொலர் அறுபது சதத்திற்கு விற்கப்பட்ட டீசலை நான் இன்று மூன்று டொலர்கள் 20 சதங்கள் கொடுத்து வாங்குகிறேன். இரு மடங்கைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. இதனோடு பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த பொருட்களின் விலைகள் சடுதியாக 50 சதத்திலிருந்து ஒரு டொலர்கள் வரை அதிகரித்திருக்கிறது. இது போதாது என்று வட்டி வீதத்தினை குறைந்தது இரு முறையாவது அதிகரிக்கவேண்டி நேரிடும் என்று அவுஸ்த்திரேலிய மத்திய வங்கியின் ஆளுனர் எதிர்வு கூறுகிறார். நிலைமை இப்படியிருக்கிறது. ஆனாலும், இப்போர் ஆரம்பிக்கப்பட்டமைக்கான சில காரணங்கள் இருக்கின்றன. அவையாவன, ஈரான் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட வேண்டும், நீண்டதூர ஏவுகணை உற்பத்தியைக் கைவிடவேண்டும், இஸ்ரேலினைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் குழுக்களுக்கான தனது நிதி, ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை கைவிடவேண்டும் என்பன. ஆனால், இவை எவற்றையும் தான் கைவிடப்போவதில்லை என்று ஈரான் கூறுவதாலேயே போர் ஆரம்பித்தது. முன்னர் 2000 கிலோமீட்டர்கள் பாய்ந்துசென்று தாக்கும் ஏவுகணைகளுடன் நிறுத்திக்கொள்வேன் என்று கூறிய ஈரான், இரு நாட்களுக்கு முன்னர் சுமார் 4000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் இரண்டினை இந்துசமுத்திரத்தின் டியேகோகார்சியா தீவில் அமைந்திருக்கும் இங்கிலாந்து - அமெரிக்க கூட்டு இராணுவ தளம் மீது ஏவியிருக்கிறது. ஒரு ஏவுகணை பாதி வழியில் தானாக வீழ்ந்துவிட, இரண்டாவது அமெரிக்கக் கடற்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஆக, ஈரான் தனது ஆயுத பெருக்கத்தை நிறுத்தப்போவதில்லை என்பதுடன் இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக அழிக்கும் தனது நோக்கத்தினையும் கைவிடவில்லை என்பது உறுதியாகிறது. போதாக்குறைக்கு தான் அழிக்கப்பட்டால், உலக பொருளாதாரத்தையும் சேர்த்து அழித்துச் செல்வேன் என்றும் சபதமிட்டிருக்கிறது. போர் பெருமளவு தூரத்தினைக் கடந்து வந்துவிட்டது. சீன - ரஸ்ஸிய உதவியினால் இன்றுவரை தாக்குப்பிடிக்கும் ஈரானின் முல்லாக்களும், அவர்களின் இராணுவ வல்லமையும், அணுவாயுதக் கனவும் முற்றாக அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் எனும் நாட்டிற்கு மட்டுமல்லாது, மொத்த உலகிற்கும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் இருப்பு ஆபத்தானது. ஆகவே போர் தொடரப்பட்டு, ஈரான் முல்லாக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, அயல்நாடுகளுக்கும் உலகிற்கும் ஆபத்தில்லாத ஈரான் உருவாகும்வரை சண்டை தொடரப்படுதல் அவசியம். எதிர்கால மத்திய கிழக்கும், மொத்த உலகும் அமைதியை அடைய வேண்டுமென்றால் இப்போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முழுமையான வெற்றியுடன் முடிக்கப்படுதல் அவசியமானது. அதற்கான விலையினை உலகம் செலுத்துவதும் தவிர்க்க முடியாதது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் படிந்தது பேரம் 08. புதுவையில் விசிக தனித்துப் போட்டியாம்.
-
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
ஈரான் தூதுவருக்கு நன்றி!இந்தச் செய்தியை அமெரிக்கா மற்றும் மேற்குலகத்துக்கும் கொடுக்கப்பட்ட செய்தியாக அந்த நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
புலவர் started following இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இங்கு சிலர் கூறுவதுபோல யுத்த நிறுத்தம் இடம்பெறவில்லை. யுத்தம் 4 ஆவது வாரமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், ஹோர்மூஸ் நீரிணையினால் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குவதை 48 மணி நேரத்திற்குள் நிறுத்தாவிட்டால் ஈரானின் எண்ணெய் மற்று எரிவாயு உற்பத்திநிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இத்தாக்குதலே 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட நடக்கவிருக்கும் அல்லது நடந்துகொண்டிருக்கும் பேச்சுக்களுக்குக் கால அவகாசம் கொடுப்பதற்காகவே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய ஈரானிய நிலைகள் மீதான தாக்குதல்கள் வழமைபோல அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இஸ்ரேல் வழமைபோல ஈரானின் இராணுவ இலக்குகள் மீதும் அரச - இராணுவத் தலைமைகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருக்கிறது. ஈரானும் அயல் நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறதுது. அமெரிக்கா யுத்தத்திலிருந்து பின்வாங்காது விட்டாலும், இச்சண்டைகளில் இருந்து இராஜதந்திர ரீதியில் விலகிக்கொள்வதற்கான ஏதுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இதனாலேயே பேச்சுக்களுக்கு இடம் விடும்வகையில் சில தாக்குதல்களை மட்டும் பிற்போட்டிருக்கிறது அமெரிக்கா. போர் நிறுத்தப்படவில்லை. ஈரான் மீதான இராணுவ அழுத்தங்களை அது தொடர்ச்சியாக பிரயோகித்து வரும் வேளை, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முற்றான உதவிகளை வழங்கியேவருகிறது. மேலும் போர் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணங்களாக தான் முன்வைத்தவற்றை விடாப்பிடியாக இன்றுவரை கூறியே வருகிறது. ஆக, தொடர்ச்சியான கடும்தாக்குதல்களை சிறிதுகாலத்திற்கு மட்டுப்படுத்திவிட்டு, விட்டுக்கொடுக்காத பேச்சுக்களில் ஈடுபடவே அமெரிக்கா விரும்புகிறது. இப்போரைப் பொறுத்தவரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் இராணுவ வல்லமையினனையும், இராணுவக் கட்டுமானங்களையும் கணிசமாக அழித்துவிட்டன. ஈரானின் ஏவுகணைச் செலுத்திகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்புத் தொலிற்சாலைகளையும் கணிசமானளவு அழித்திருக்கின்றன. ஈரானைப் பொறுத்தவரை அயலில் உள்ள வளைகுடா நாடுகளின்மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. அமெரிக்கத் தளங்கள் மீதும், தூதரகங்கள் மீதும் கணிசமான தாக்குதலை நடத்தியிருக்கின்றது. இதுவரையில் 13 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது 10 அமெரிக்க விமானங்கள் முழுவதுமாகவோ பகுதியாகவோ சேதமடைந்திருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஹோர்மூஸ் நீரிணையூடாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலினை நடத்தி அப்பகுதியூடான கப்பற்போக்குவரத்தினை முற்றாகத் தடுத்து வைத்திருக்கிறது. தனது இராணுவ நிலைகள், கட்டுமானங்கள் கடுமையாக அழிக்கப்பட்டிருக்கும்பொழுதிலும், தீவிரமாக எதிர்த்தாக்குதலினை நடத்தியே வருகிறது. இருபக்கமும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், எத்தரப்புமே அறுதியான வெற்றியினை இதுவரை பெறவில்லை. அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் தொழிநுட்ப பலத்தினால் அவர்களின் கை ஓங்கியிருப்பினும் ஈரானும் தொடர்ந்தும் போரிட்டே வருகிறது. அமெரிக்கா தனது தீவிரத் தாக்குதல்களை மட்டுப்படுத்தியிருப்பதாகக் கூறினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர் தீவிரத்துடன் நடத்தியே வருகிறது. ஈரானுடன் அமெரிக்கா பேச்சுக்களில் ஈடுபட்டாலும்கூட தமது தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்றே நெத்தன்யாகு அறிவித்திருக்கிறார். இப்போரின் ஊடாக ஈரானின் இராணுவ வல்லமையினை முற்றாக அழித்துவிடவும், தன் மீது ஈரான் செலுத்தும் பாதுகாப்பு அச்சுருத்தலினை நிரந்தரமாகவே அகற்றிவிடவும் இஸ்ரேல் முயல்கிறது.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 04:37 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார். அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241832
-
-
ஈராக்கில் ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகம் மீது வான்வழித் தாக்குதல்: தளபதி உட்பட 15 பேர் பலி
ஈராக்கில் ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகம் மீது வான்வழித் தாக்குதல்: தளபதி உட்பட 15 பேர் பலி Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 03:54 PM மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகத்தை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், அதன் பிராந்தியத் தளபதி உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கின் 'ஹாஷத் அல்-ஷாபி' என அழைக்கப்படும் மக்கள் அணிதிரட்டல் படைகளின் அன்பார் மாகாண நடவடிக்கைகளுக்கான தளபதி சாத் அல்-பைஜி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவருடன் மேலும் 14 போராளிகளும் உயிரிழந்துள்ளனர். உயர்மட்டத் தளபதிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு மீளாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கொடூரமான தாக்குதலை அமெரிக்காவே நடத்தியுள்ளதாக ஈரான் ஆதரவுப் படைகளின் அமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. "எமது வீரர்கள் கடமையில் இருந்தபோது அமெரிக்க வான்படை திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது" என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரைத் தொடர்ந்து, ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில் நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல், மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் விரிவடைவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் எல்லைகளைக் கடந்து, தற்போது லெபனான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் ஆட்கொண்டுள்ளமை சர்வதேச ரீதியாக பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. https://www.virakesari.lk/article/241821
-
அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 03:26 PM அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1892-ல் கட்டப்பட்ட நீதிமன்றக் கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீதிமன்றக் கட்டிடத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஃப்ளாய்ட் மாவட்ட மேலாளர் ஜேமி மெக்கார்ட் தெரிவித்துள்ளார். தீ விபத்து நடந்த நேரத்தில் நீதிமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாக ஃப்ளாய்ட் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நீதிமன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள ஆபத்துகளைக் கருத்திற்கொண்டும், எஞ்சியுள்ள பகுதிகளை ஆய்வு செய்யவும் ஏதுவாக, இன்று செவ்வாய்க்கிழமை (24) பிளாய்ட் கவுண்டி நீதிமன்றம் மூடப்படும். மீண்டும் நாளை புதன்கிழமை (25) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241818
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்ஒண்டு குறையுதே அண்ணா. Handbag ஐ விட ஏழு கிலோ HandLuggage உண்டே. 😂
-
ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா தாக்குதல்: இலங்கையின் அழைப்பில் வந்த கப்பல் – ஈரான் தூதுவர் விளக்கம்
ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா தாக்குதல்: இலங்கையின் அழைப்பில் வந்த கப்பல் – ஈரான் தூதுவர் விளக்கம் Published By: Vishnu 24 Mar, 2026 | 05:06 AM (நா.தனுஜா) ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி 'மிலான் - 2026' நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி வருகைதந்ததாகவும், அவ்வேளையிலேயே ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் வலுப்பெற்றிருக்கும் பின்னணியில், இவ்விவகாரம் தொடர்பான சமகால நிலைவரம் மற்றும் ஈரான் நிலைப்பாடு என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் திங்கட்கிழமை (23) கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 - 25 ஆம் திகதி வரை நடைபெற்ற 'மிலான் - 2026' சர்வதேச கடற்படை பயிற்சி மற்றும் அணிவகுப்பில் கலந்துகொண்டு, இந்தியக் கடற்பரப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 - 44 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் நடாத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் (ஐரிஸ்) டெனா குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தூதுவர் டெல்கோஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இம்மாதத் தொடக்கத்தில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்கா நடாத்திய தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா கப்பலில் இருந்த சுமார் 104 பேர் கொல்லப்பட்டனர். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் போரை எதிர்கொள்வதற்கோ அல்லது எதிர்த்தாக்குதல்களை நடாத்துவதற்கோ எவ்விதத்திலும் தயார்நிலையில் இருக்கவில்லை. அதேபோன்று இந்தத் தாக்குதல் போர் நடைபெறும் பகுதியிலிருந்து பல கடல் மைல் தொலைவில் இருந்த கப்பலின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற 'மிலான் 2026' நிகழ்வில் பங்கேற்ற ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி அந்நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டது. அந்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை நோக்கி வருகைதந்தன. அக்கப்பலில் இருந்தவர்கள் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயாராக ஆயுதங்களுடன் இருக்கவில்லை. அதுமாத்திரமன்றி அமெரிக்காவின் அத்தாக்குதலில் மரணித்தவர்களில் பலர் படைவீரர்கள் அல்ல. மாறாக அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாவர். அதேவேளை ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா உள்ளிட்ட கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு கோரிக்கை விடுத்து 11 மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் எம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட போதிய தகவல்கள் இல்லை. அதுபற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம். மேலும் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீதான தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் கப்பல் இன்னமும் திட்டமிடப்பட்டது போல திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. அக்கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட ஈரானியர்கள் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/241784
-
நல்ல சமாரியன் (அல்லது) யூதன்
சார் இது ரொம்ப டூமச்😋 இங்கே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள். இதற்குமேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- கொழும்பில் இருந்து சவுதிஅரேபியா வழியாக ஒருநாள்
- லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
2009 இல் நீங்களும், உங்கள் பரம்பரைகளும் பாதுகாப்பாக ஜேர்மனியில் இருந்தீர்கள் அல்லவா? ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கோ, அல்லது இலண்டனில் உள்ள விகாரைக்கோ வந்து ஒரு போத்தலில் பெற்றோலை நிரப்பி எரிய விட்டு ஏன் எறியவில்லை? ஒரு மேற்கு நாட்டில் இருக்கும், இன மத வேறுபாடின்றி மக்களின் உயிரை காக்கும் தன்னார்வ அமைப்பின் மீது தாக்குதலை நடத்ததாத இனமாக நாம் இருப்பதில் ஒரு தவறும் இல்லை. அப்படி ஏதேனும் மோட்டுதனமாக செய்திருப்பின் இன்றுவரை அது வெளிநாட்டில் எம்மை அடக்க ஒரு கருவியாக பயன் பட்டிருக்கும். இப்படியான முட்டாள் சிந்தனையாளர்கள் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருந்தபடியால்தான் நாமும், போராட்டமும் தலைமையும் தோற்றுப்போகும் படி ஆனது. பிகு இதை செய்தது ஈரானின் உளவு அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு இயக்கம். சாதாரண யூகே வாழ் முஸ்லிம்கள் அல்ல. இந்த பழியில் இருந்து தம்மை பாதுகாக்க யூகே முஸ்லிம்கள் படாத பாடு படுகிறார்கள். ஆனால் - இதைவைத்து ரிபோர்ம் கட்சி - முஸ்லிம் எதிர்ப்பை ஊதி வளர்கிறது. இப்படியா அடி முட்டாள்தனங்களை ஏன் செய்ய கூடாது, அவை இப்படி செய்தோர் சார் சமூகத்கை பாதிக்கும், இதை வரவேற்பது எவ்வளவு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த தன்னார்வ அமைப்பினரோடு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு படைப்பாக கீழே 👇- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
அமெரிக்க படைகளுக்கு ஒரு ஓய்வு நிலை தேவைப்படுகிறது, ஆயுதங்கள் சேகரிக்க குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க ஒரு நேரம் தேவையாகலாம், அல்லது நான் போர் நிறுத்தம் கோரினேன் இரான் மறுத்துவிட்டது எனும் ஒரு மாயையை ஏற்படுத்தி மற்றைய நாடுகளை போரில் இழுக்கும் தந்திரம், கச்சா எண்ணெய் விலை சரிவு, இதனால் தன் நிதி நிலையை ஸ்திர படுத்தல், ஈரானை பேச்சு என ஏமாற்றிக்கொண்டு மறு வழியில் போரை உக்கிரமாக தொடர்தல். ட்ரம்பே சொல்லிவிட்டார், எனது எண்ணம் அடிக்கடி மாறுமென. இவர் தெரியாமல் காலை வைத்து விட்டு இப்போ வெளியேற முடியாமல் வேறு வழியுமில்லாமல் தவிக்கிறார். இவ்வளவு தூரம் இந்த போர் தொடருமென அவர் நினைத்திருக்க மாட்டார், வெனிசுலா மாதிரி ஒரு இரவில் முடித்து விடலாமென நினைத்தே தொடங்கியிருப்பார். இவரது அழைப்பையே மற்றைய நாடுகள் உதாசீனம் செய்து விட்டன, இப்போ நெத்தன்யாகு ஈரானை அழிக்க உலக நாடுகளை ஒன்று சேரும்படி அழைக்கிறார். இவர்களால் முடியவில்லை உலக நாடுகள் வரவேண்டுமாம். ட்ரம்ப் சொல்வதுபோல் எந்தப்பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று இரான் அறிவிக்கிறது, ட்ரம்ப் ஒருதலைபட்சமாய் பேசுகிறாரே என்னவோ? இரான் விரும்பாத, எதிர்பாராத போரை தொடங்கியவர்கள் இவர்கள், இப்போ எதற்காக போர் நிறுத்த வேண்டுமென்கிறார் ட்ரம்ப்? ஈரான் அழிக்கப்படவேண்டிய நாடு, எங்களுக்கு அச்சுறுத்தலானது என்று கூறி சும்மா இருந்த ஈரானை வம்புக்கிழுத்தவர்கள் இவர்கள், அதே மாதிரி இரான் நினைப்பதில் தவறில்லையே, அவர்கள் கெட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்கள் தாங்கள் யாரென்பதை நிரூபிக்கவே செய்வார்கள். அதோடு இவர்களின் அச்சுறுத்தலை முறியடித்து தன்னை பாதுகாத்துக்கொள்வதில் தப்பில்லை. இல்லை, ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.- நல்ல சமாரியன் (அல்லது) யூதன்
யாழில் உள்ள பலர் யூத வெறுப்பாளர்கள் என்பதை நான் அறிவேன். அதன் பின்னால் உள்ள காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். முரண் நகையாக, அதே ஆட்களில் சிலர் இலங்கை முஸ்லிம்கள் மீது பொது பல சேன செய்த அட்டூழியங்களை நான் எதிர்த்த போது என்னை பழித்தவர்களாக இருந்தனர். மேலும் சிலர் யசீதிகள் மீது ஐசில் செய்த அட்டூழியங்களை கண்டும் காணதவராய் இருந்தனர். ஐம்பதை தொடப்போகும் எனக்கு, வாழ்க்கை கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று, இந்த உலகில் நாம் அறச்சீற்றம் கொள்வது கூட தேர்ந்த எம் நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே என்பதே. நான் கூட 2009 மேயில் அடைந்த மன உளைச்சல் போல் வேறு எந்த போருக்கும், மனித அழிவுக்கும் அடையவில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்து என வரும் போது இனம், மதம், நிறம் பார்க்காமல் உதவும், அப்படி உதவுபவர்களை தடக்கி விழுத்தும் எண்ணம் தவறு என்ற புரிதல், மனித தன்மை இன்னும் தமிழர்களிடம் எஞ்சி உள்ளது. அல்லது உள்ளது என நான் நம்ப விரும்புகிறேன். நிற்க, அண்மையில் யூத தன்னார்வ நிறுவனம் ஒன்றின் 5 முதலுதவி வண்டிகள் இலண்டனில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தன்னார்வ அம்பூலனன்ஸ் சேவை யூதர்களால் நடத்தப்பட்டாலும் அது எல்லோருக்கும்மானது. சில வருடங்கள் முன் வட மேற்கு இலண்டனில்…வீதியால் போகும் போது நடைபாதையில் ஒரு நடுத்தர வயது ஆசிய பெண் தடுக்கி விழுந்தார், என் கண்முன்னே. அது பிரெக்சிற்ரால் இலண்டனில் ஓட்டுனர் தட்டுப்பாடு இருந்த காலம். 999 ஆம்புலன்ஸ்சுக்கு அடித்தால், வண்டி அனுப்ப 3 மணி நேரம் எடுக்கும் என்றார்கள். அந்த பெண் வலியால் கதறி கொண்டு இருக்கிறார். அவரை விழுந்த இடத்தில் இருந்து அரக்க கூடாது அது உடைவுகளை மேலும் சிக்கலாக்கும் என்பது எனக்கு முதலுதவி பயிற்சி சொல்லி தந்த பாடம். விழுந்த காலமோ குளிர் மைனசில் இருக்கும் காலம். தரையில் கிடப்பதும் ஐஸ் கட்டியில் கிடப்பதும் ஒன்றேதான். மேலும் 999 க்கு அழைப்பை எடுக்கிறேன். அவர்களுக்கும் விபரீதம் விளங்கினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அப்போது இன்னொரு வெள்ளை இன பெண் நாயோடு வந்தார். என்ன என என்னிடம் விபரங்களை கேட்டு விட்டு, பட பட என தன் போனில் இருந்து அம்பூலனசுக்கு போன் அடித்தார். 5 நிமிடத்தில் அம்பூலனஸ் வந்தது. வீழ்ந்து கிடந்த ஆசிய பெண்ணை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனது. யார் இவர்கள் என கேட்டேன், தனியார் அம்பூலன்ஸ் எண்டால் செலவை யார் ஏற்பது என எண்ணியபடியே… இது ஒரு யூத தன்னார்வ அமைப்பு. மத, இன அடையாளம் இன்றி யார் உதவி என அழைத்தாலும் வருவார்கள் என சொல்லி சென்றார் அந்த பெண்மணி. அந்த 5 அம்பூலன்ஸ்தான் அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் தீக்கிரையானது. (எதுவும் கற்பனை அல்ல)- அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
👍 ஓம் சரியாக சொல்லியிருக்கிறார்- அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
பெரிய அழிவை பார்க்காமல் விடமாட்டர்கள் போலுள்ளது☹️- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
ஏற்கனவே சீனாக்காரன் வேற அமெரிக்காவுக்கு மேலால பலூன் விட்டு நீளம் அகலம் பாத்திட்டான்....
Important Information
By using this site, you agree to our Terms of Use.