அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
மரபணு மாற்றம் ! மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்: கடுகின் காரம் குறையப்போவதில்லை! பல்வேறு அபாயங்கள் அடங்கிய, ஆரோக்கியத் திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகு, நம் சோற்றிலும் கலக்கக் கூடிய அபாயம் உருவாகி உள்ளது. இந்த வகை கடுகை சாகுபடி செய்ய அனுமதிப் பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது. தெரிந்து தான் செய்கிறதா... அதற்கு இப்படி வழிகாட்டு பவர்கள் யார்? வரலாறு: ரசாயனம் மற்றும் மருந்து தொழிலில் ஈடு பட்டுள்ள, 'பேயர்' என்ற பன்னாட்டு நிறுவனம், உலகளவில், பூச்சிக்கொல்லி சந்தையில் ஒரு பெரும் பங்கை வைத்துள்ளது. இதன் பணபலம் எப்பேர்பட்டது என்றால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பரப்புவதில் முன்னோடியாக இருக்கும், 'மொன்சான்டோ' நிறுவனத்தை, சமீ…
-
- 1 reply
- 721 views
-
-
வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பௌர்ணமி நாள். வழக்கம் போல வருகிற பௌர்ணமிதான். ஆனால் ஒரு வித்தியாசம். அன்று இரவு முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும்.ஒப்பு நோக்குகையில் சந்திரன் நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அன்றைய முழு நிலவை சூப்பர் நிலா என்று வருணிக்கலாம். பூமியை சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை மிகச் சரியான வட்டமாக இருப்பது கிடையாது . அதுங்கிய வட்டமாக உள்ளது. ஆகவே சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு அருகில் இருக்கிறது.வேற…
-
- 1 reply
- 492 views
-
-
வணக்கம் தொழில் நுட்ப அறிவு சார்ந்த நண்பர்களே . எனது கம்போர்சிங் ,இசை அமைப்பு ஆகியவற்றிற்கு CUBASE 5 என்னும் மென்பொருளை பாவித்து வருகிறேன் .தற்போது ஓடியோ ஒலிப்பதிவிற்கு மட்டுமல்ல வீடியோ ஒளிபபதிவிற்கு கூட அதை பயன்படுத்தும் வழி கண்டு ஆனந்தமடைந்தேன் .மிக இலகுவாக வீடியோ காட்சிக்கான இசையினை வழங்க கூடியதாய் உள்ளது .........நானாகேவே இந்த விடயத்தை கண்டு பிடித்தேன் ..ஆனால் வீடியோ இசை முடிந்தபின் அதை வீடியோ காட்சியுடன் சேர்த்து மிக்ஸ் டௌன் [mixdown ] செய்ய முயற்சித்துப்பார்த்தேன் ..முடியவில்லை .ஓடியோ மட்டுமே மிக்ஸ்டவுன் ஆகுது .இது சம்பந்தமாக யாருக்காவது தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள் நன்றி .
-
- 1 reply
- 652 views
-
-
ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது: 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம். மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …
-
- 1 reply
- 415 views
-
-
2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? மொபைல் போன்களில் கைரேகை அடிப்படையிலான அடையாளம் காணும் முறையை விடவும், முக அடையாள வசதி கொண்ட மொபைல் போன்களே 2020ம் ஆண்டு கோலோச்சும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கும் 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் மொபைல் போன் என்றாகி விட்டது. அதுபோ…
-
- 1 reply
- 828 views
-
-
பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, பூமியில் விழப் போகும் ERS - 2 செயற்கைக்கோள் 14 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு காலத்தில் முக்கியமானதாக கருதப்பட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று எந்நேரமும் பூமியின் மீது விழலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. ERS-2 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் 1995ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இருந்து பூமியை கண்காணிக்கும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியான இது 2011ஆம் ஆண்டு செயலிழந்து போனது. அதிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக பூமியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த செயற்கைக்கோள் தற்போது முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்து எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று எதிர்பா…
-
- 1 reply
- 553 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் பொஸ்ரன் டைனமிக்ஸ் (பொஸ்டன் இயங்குவியல்? இயக்கவியல்?) என்ற நிறுவனம் தன்னை உலகின் முன்னணி மனிதர்கள் விலங்குகள் போன்ற அசைவுகளை செய்ற்கையாக உருவாக்கக் கூடிய நிறுவனம் எனக் கூறுகிறது. அவர்களது பங்களிப்புகளாக யப்பானின் சொனி நிறுவனம் தமது பொழுதுபோக்கு ரொபோவினை தயாரிக்க பங்களிப்பு. அமெரிக்க இராணுவம் களமுனைகளிற்கு தயாராகுவதற்கான பயிற்சிகளிற்கு மாதிரி களமுனை விபரங்களை செயற்கையாக உருவாக்குவதில் பங்களிப்பு. எதிர்கால சவால்களை ஈடு செய்வதற்கு அமெரிக்காவின் ஈரூடக படையினர் காவிச் செல்லுவதற்கு பொருத்தமான ஆயுததளபாடத் தொகுதிபற்றி ஆய்விற்கான பரீட்சாத்த மாதிரிகளை உருவாக்க பங்களிப்பு. அவர்களின் 2 முக்கிய நிபுணத்துவமாக இருப்பது கணனி திரைகளில் மாதிரிகள…
-
- 1 reply
- 1.4k views
-
-
உலகிலேயே அதிநவீன மோதிரம் Touch HB Ring. இது காதலர்களுக்கும் தம்பதியர்களுக்குமான மோதிரம். இதை அணிந்து கொண்டால் உங்கள் அன்புக் குரியவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும். போன், ஸ்கைப் என்று எத்தனையோ கருவிகள் உறவுகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடுகின்றன. ஆனால் அவற்றைவிட இந்த மோதிரம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் கணவனும் மனைவியும் தனித்தனியாக இருந்தாலும் மோதிரத்தின் மூலம் அவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும்! அருகில் இருப்பது போலவே தோன்றும். ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, கணவன் அல்லது மனைவியின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பிறகு மோதிரத்தை அழுத்தினால் இதயத் துடிப்பைக் கேட்கலாம். இந்…
-
- 1 reply
- 635 views
-
-
நன்றி ஸ்டீவ்! நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அதுவரை எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் யாரென்றே தெரியாது. ஆப்பிள் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பது தெரியும். மேக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது ஆப்பிளுடையது என்று தெரியாது. மேக்கைப் பற்றி தெரிந்த விஷயம் விண்டோஸில் இந்த பக்கம் இருக்கும் க்ளோஸ் பட்டன் மேக்கில் அந்தப் பக்கம் இருக்கும் அவ்வளவுதான். அப்போது எனக்கு ஐபாட் பற்றிக் கூட தெரியாது. யாரோ ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பேசிய உரையை எனக்கு தந்தார். கேட்டேன். பிடித்திருந்தது. அதன் பிறகு நானும் என்னுடைய நண்பர்கள் இரண்டு முன்று பேருடன் பகிர்ந்து கொண்டேன். இணையத்தில் அதிகம் சுற்றத் தொடங்கியபின் அந்த வீடியோ அடிக்கடி கண்ணில் படத் தொடங்கியது. மீண்டும் …
-
- 1 reply
- 837 views
-
-
படத்தின் காப்புரிமை mikiell / getty நிலவின் வளிமண்டலத்தில் 'ஆர்கான்' என்ற வாயுவின் சமதானியை சந்திரயான்-2இன் உட்கருவி ஒன்று கண்டறிந்துள்ளது. இந்தத் தகவலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது நிலவில் கண்டுபிடிக்கட்டுள்ள ஆர்கான்-40 எனப்படுவது ஆர்கான் வாயுவின் சமதானியாகும் ஒரு தனிமத்தின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையில் நியூட்ரான்களையும் கொண்டிருந்தால் அது அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் சமதானி ஆகும். நிலவை சுற்றியுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை 'நிலவின் புறவெளி மண்டலம்' (lunar exosphere) என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த காற்று மண்டல…
-
- 1 reply
- 457 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
அமெரிக்காவின் புதிய (ரோபோட்) போர்வீரர்கள் : ச.ச.முத்து டேர்மினேற்றர் திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில்(1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும்,எரியும் தீச்சுவாலைக்குள் வீழ்த்தினாலும் மீண்டும் அந்த உருவம் எழுந்து இயந்திரமனிதனாக,மனிதனாக மாறி எதிரிகளை வேட்டையாடும்.ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேகர் இந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். ரைற்றானிக்,அவ்தார் படங்களை எடுத்த ஜேம்ஸ்கமரூனின் அருமையான ஒரு பாத்திரப்படைப்புஅது. இதைப்போலவே, புதிய ரோபோ போர்வீரர்களை களங்களில் இறக்கும் ஒரு திட்டத்தை பென்ரகன் கொண்டிருப்பதாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருக…
-
- 1 reply
- 804 views
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் இரண்டு சிறிய விண்கலங்கள் ஏவப்பட்ட உள்ளன இந்தியாவின் ஸ்பேடெக்ஸ் (SpaDeX) விண்கலன்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி டிசம்பர் 30ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகின்றன. 'ஸ்பேடெக்ஸ்' என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணி) என்பதன் சுருக்கம். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் நோக்கம் விண்கலத்தை 'டாக்' (Dock- இணைப்பது) மற்றும் 'அன்டாக்' (Undock- இணைப்பைத் துண்டிப்பது) செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதாகும். இவை பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் விண்…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் முதன்முதலாக பாறை ஒன்றை துளையிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் முதன்முதலாக பாறை ஒன்றை துளையிட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. பாறையில் துளையிட்டு அதன் மாதிரிகளையும் ரோவர் விண்கலம் எடுத்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 1.6 சென்டிமீட்டர் அகலமும், 6.4 சென்டிமீட்டர் ஆழமும் கொண்ட துளை ஒன்று பாறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த பாறை மூலம் முன்னொரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது. http://puthiyathalaimurai.tv/curio…
-
- 1 reply
- 563 views
-
-
பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது! பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக நேச்சர் மெடிஸின் என்ற மருத்துவச் சஞ்சிகை கூறு…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட இரத்தம் மனிதர்களுக்கு முதல் தடவையாக செலுத்தப்பட்டது By DIGITAL DESK 3 07 NOV, 2022 | 05:31 PM ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை இரத்தம் உலகில் முதல் தடவையாக மனிதர்கள் இருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு கரண்டிகள் அளவிலான சொற்ப அளவில், ஆய்வுடத்தில் உருவாக்கப்பட்ட இரத்தம் சோதனைக்காக இவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. குருதி மாற்றீடுகளுக்கு மனிதர்களின் நன்கொடைகளிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், முக்கியமான ஆனால், பெறுவதற்கு கடினமான அரிய வகையான வகைகளைச் சேரந்;த குருதிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்குவதை இந்த ஆய்வு நோக்க…
-
- 1 reply
- 368 views
- 1 follower
-
-
பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டும் திட்டமான, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. மாசுபட்டுள்ள கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ‘நமாமி கங்கா’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள இஸ்ரேலிய பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் தலைவர் யோனாதன் பென் ஜேகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறும்போது, “இத்திட்டம் தொடர்பாக இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் அத்துறையின் செயலாளரை நாங்கள் ஏற்கெனவே சிலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இத்திட்டத்தில் நாங்களும் பங்கேற்க விரும்புகிறோம். இத்திட்டத்துக்காக எங்களின் அனுபவம்…
-
- 1 reply
- 392 views
-
-
பெர்முடா முக்கோண மர்மம்... இதுதான் காரணமா? இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது. பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ? வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது…
-
- 1 reply
- 614 views
-
-
யப்பானில் துவிச்சக்கரவண்டி எப்படி நிறுத்தப்படுகிறது(park)? aaeb6737a3ca5574c0ab9b8a8d4dc3af
-
- 1 reply
- 734 views
-
-
The Ariviyal Tamil Mandram You Tube Channel hereby declares that the Intercontinental E - Learning In Tamil Module titled as "தமிழுக்கு ஏழு நிமிட இயக்கம்" is Launched on the eve of Pongal Day on the year 2013 based on the contribution given by Mr.Selvan from the United States of America. தமிழுக்கு ஏழு நிமிட இயக்கத்தின் முதல் விழியத்தை பொங்கல் தினத்தன்று வெளியிடுவதில் அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel மன நிறைவடைகிறது. உலகின் ஐந்து கண்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பரவியுள்ளார்கள். தமிழ் ஒரு பழமையான பாரம்பரியம் மிக்க உலக மொழி என்னும் நிலையை இது எடுத்து இயம்புகிறது. இரண்டு கண்டங்களில் வாழும் இரண்டு நண்பர்கள் , தமிழால் நட்புகொண்டு,தமிழா…
-
- 1 reply
- 778 views
-
-
உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும். இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம். நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் …
-
- 1 reply
- 853 views
-
-
நிக்கொலா ரெஸ்லா: 20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன் by vithai Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது. “ரெஸ்லாவின் தூரநோக்கும் புத்திக்கூர்மையும் இன்றி இன்றைய எமது மின்சாரக் கார் சாத்தியமில்லை” என அந்த நிறுவனம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. யார் இந்த ரெஸ்லா? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் என்றெல்லாம் பாடசாலையில் மனனமாகத் தீத்தப்பட்ட அறிதலோடு ஒரு பொதுமனிதஜீவியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டுக…
-
- 1 reply
- 578 views
-
-
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து இந்திய மருத்துவர் ஹேமந்த் சாதனை ! [saturday, 2014-02-22 11:52:31] உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது, “சோமா” என்ற புதிய ரசாயன கலவையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து டா…
-
- 0 replies
- 251 views
-
-
சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது ‘கொரோனல் ஓட்டை’ என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது. இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23ஆம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது. கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இர…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
அசுவினி என்றழைக்கப்படும் எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன. இவ்வசுவினிகளை பாதுகாக்க, உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. இவை தேனெறும்புகள் (honey ants) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வேலை அசுவினிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும், அவற்றிற்கு உணவளிப்பதும், அவை இடும் முட்டைகளை பாதுகாத்து வைப்பதில் தேனெறும்புகள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு குளிர்காலங்களில் முட்டைகளை சரியான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களுக்கு எடுத்துச்சென்ற…
-
- 0 replies
- 528 views
-