செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது. அந்…
-
- 8 replies
- 619 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hcgswansXZc
-
- 0 replies
- 882 views
-
-
தீபாவளியன்று "மப்பு" அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. நாங்க இருக்கோம்.. மது குடிப்போர் சங்கம். சென்னை: தீபாவளியன்று குடித்துவிட்டு மப்பு அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. எங்களது டிரைவர் உங்களை வீட்டில் பத்திரமாக கொண்டு போய் இறக்கிவிடுவார் என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது. பி.செல்லப் பாண்டியன் தலைமையிலான இந்த சங்கம் குடிகாரர்கள் நலனுக்காக இயங்கி வருகிறது. விதம் விதமான கோரிக்கைகளுடன் தினுசு தினுசாக போராட்டம் நடத்துவது இவர்களது செயல்பாடுகளில் ஒன்று. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி முதல் குடித்துவிட்டு மப்பு அதிகமானால் அவர்களுக்கு இலவச டிரைவர் உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன் விடு…
-
- 4 replies
- 561 views
-
-
பிரித்தானிய இளவரசியின் அரண்மனையில் வேலைவாய்ப்பு: ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியம்! பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் அரண்மனையில் தூய்மை பணியாளருக்கு ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படுகின்றது. இளவரசி எலிசபெத்தின் அரண்மனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரச இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்குத் தேர்வானோர் வின்ட்சர் காஸ்டில் அரண்மனை மட்டுமல்லாமல் பக்கிங்காம் அரண்மனை உள்…
-
- 6 replies
- 797 views
-
-
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த தன் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் 2 ஆம் எதிரியான நண்பனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் 3 ஆம் எதிரிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈட்டை பாதிக்கப்பட பெண்ணுக்கு வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு 4 மாதம் 14 ஆம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது…
-
- 2 replies
- 617 views
-
-
-
- 1 reply
- 493 views
-
-
வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற்றம் வியட்நாம் நாட்டில் வயிற்றில் சிக்கி கொண்ட கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஹனோய்: வியட்நாம் நாட்டில் 54 வயது மிக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தனர். அந்த ஸ்கேனில் அவரது வயிற்றின் இடது புறத்தில் கூர்மையான ஆயுதம் இருப்பது கண்டறியப்பட்டது. மீண்டும் சோதனை செய்ததில் கத்திரிக்கோல் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. அந்த கத்திரிக்கோல் 15 …
-
- 0 replies
- 299 views
-
-
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் தனியே வசித்து வந்த தாத்தா ஒருவரின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. டென்மார்க்கின் வடக்கு பகுதியில் டோயரிங் நகரில் ஒரு வீட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்டு வந்ததால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், அந்த வீட்டில் தனியே வசித்து வரும் 66 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அக்கம்பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்டதற்காக அவருக்கு கோர்ட்டில் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார். இந்நிலையி…
-
- 0 replies
- 621 views
-
-
யாழில், பயணத் தடை வேளையிலும்... இயங்கி வந்த, மதுபானசாலை முற்றுகை !! யாழ்ப்பாணம் -கோப்பாய் பொலிஸ் பிரிவில் மதுபான சாலை ஒன்று மதுவரித் திணைக்களத்தினால் சீல் செய்யப்பட்டதுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் திகதிவரை மதுபான சாலைகளை மூட மதுவரி ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அதனை மீறி மதுபான சாலையைத் திறந்த குற்றச்சாட்டில் அதன் முகாமையாளர், விற்பனையாளரும் அரச சாராயத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழ…
-
- 0 replies
- 289 views
-
-
தனது திருடும் பழக்கத்திற்கு முடிவு கட்டுவதற்காக தனது இரு கைகளையும் விரைந்து வந்த அதிவேக புகையிரதத்தின் சக்கரங்களுக்கு முன் வைத்து நபரொருவர் துண்டித்த விபரீத சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது. வட கிழக்கு எகிப்திலுள்ள டன்டா நகரைச் சேர்ந்த அலி அபிபி (28 வயது) என்பவரே தனது திருட்டுப்பழக்கத்தால் பெரிதும் துன்புற்று அதற்கு தண்டனை வழங்கும் முகமாக தனது கைகளை துண்டித்துள்ளார். அவர் இஸ்லாமிய ஷரியா சட்டத்தால் கவரப்பட்டே அந்த சட்ட விதிகளின் பிரகாரம் தனக்கு தண்டனையை வழங்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஷரியா சட்டம் திருட்டுக்கு கைகளை வெட்டுவதை தண்டனையாக விதித்துள்ள போதும் எகிப்தில் மேற்படி தண்டனை பின்பற்றப்ப…
-
- 5 replies
- 610 views
-
-
எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகத்தில் உள்ளதாக ஓய்வுபெற்ற விவசாயியான எடகபோ எப்பா தெரிவித்தார். எனினும் அவரிடம் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை. அவர் ஒரோமியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, 19 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சம்பவங்களை விபரித்துள்ளார். இத்தாலியால் எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டபோது, தான் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாக அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையானால் உலக வரலாற்…
-
- 0 replies
- 329 views
-
-
நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய 'பப்ளிசிட்டி திருடன்' சிக்கியது எப்படி? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ACTOR SOORI FACEBOOK கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் காணாமல்போன 10 சவரன் நகையை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் தனது சுய விளம்பரத்திற்காக முக்கிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவ்வாறு செய்து வருபவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். "ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர்…
-
- 2 replies
- 498 views
- 1 follower
-
-
விரைவில் வருகிறது கஞ்சா பீட்சா..எந்த நாட்டில் தெரியுமா? தாய்லாந்து நாட்டில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தாய்லாந்து நாட்டில் உள்ள 'கிரேசி ஹாப்பி பீட்சா' இந்த தகவலினை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் நிறுவனத்தின் மேலாளர் பானுசக் குன்சாட்பூன் கூறியதாவது, கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும். அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோ…
-
- 9 replies
- 572 views
-
-
சென்னை : தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் சென்னைப் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா (35). இவர்களது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம். ஆசையாக வளர்த்த நாயைக் காணவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஷர்மிளா. இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டில் யாருமற்ற நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஷர்மிளா. ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
-
- 11 replies
- 898 views
-
-
கைவிசேடம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல் April 16, 2022 தனக்கு கைவிசேடம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு தருமாறு கோரினார். இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரினார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனு…
-
- 7 replies
- 471 views
-
-
நிர்வாணப் பூங்காவில் சுய இன்பம் அனுபவித்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் பிரான்ஸிலுள்ள நிர்வாணப் பூங்கா ஒன்றில் 46 வயதான நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் 76 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லியோன் நகருக்கு அருகிலுள்ள நிர்வாணப் பூங்காவில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பூங்காவில் பெரும் எண்ணிக்கை யானோர் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, 46 வயதான நபர் பெண்களுக்கு முன்னால் சுய இன்பம் செய்து மற்றவர்களுக்கு தொந்தரை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது மேற்படி நபரின் நடவடிக்கையை நிறுத்துமாறு அவரிடம் முதியவர் கூறினார். இதற்கு…
-
- 5 replies
- 756 views
-
-
இந்த ரணகளத்திலும் இது தேவையா.. அடங்காத விஜய் மல்லையா..! #KingfisherCalendar2018 l கடன் பிரச்சனை, நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வெளிநாட்டுக்குப் பிரிமாற்றம், நிறுவன பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியது, சிபிஐ வழக்கு, தான் துவங்கி நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றம், நாடு கடத்த முயற்சி, தினசரி நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு மனுஷன் எப்படி இருப்பான். சாதாரண மனிதனாக இருந்தால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்குச் செல்வார்கள், ஆனால் விஜய் மல்லாயா வேற லெவல் என்ற சொல்ல வேண்டும். இன்றும் தனக்கென இருக்கும் ஸ்டைலில் சொகுசு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா என்று கேட்கு…
-
- 0 replies
- 691 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒரு செய்தியாளரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யார் ஏவினார்கள் என உறுதிப்படுத்தப்படவில்லை! Local Navy and Air Force officials told KCBS there were no planned launches for Monday evening. On Tuesday morning, the Pentagon also expressed surprise. “This is bizarre,” NBC quoted one unnamed U.S. government source as saying. http://www.cbsnews.com/stories/2010/11/09/national/main7036716.shtml
-
- 0 replies
- 489 views
-
-
ஆண்களே இதனைப் படிக்காதீர்கள்.. தாய்க்குலம் படித்து தண்டனையையும் தீர்மானிக்கட்டும் [sunday, 2011-02-27 12:14:23] தன்னை ஒரு கர்ப்பிணி எனக் கூறி வைத்தியசாலையில் அனுமதி பெற்றுக் கொண்ட ஒரு பெண்ணின் நாடித் துடிப்பை அறிய முயன்ற போது அவள் கர்ப்பிணியல்ல.. நடிப்பில் துடிப்புமிக்கவள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது. தன்னை ஒன்பது மாத கால கர்ப்பிணி என்று கூறிக் கொண்டு தனது தாயுடன் வந்த ஒரு பெண் கொழும்பு, களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளாள். பாவம்.. கர்ப்பிணிப் பெண்ணல்லவா? டாக்டர்கள் விரைந்து செயற்பட்டனர். குறிப்பிட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் நாடித் துடிப்பை முதலில் அறிந்து கொள்ளும் வழமையான பணியை அந்த டாக்டர்கள் ஆரம்பித்துள்ளனர். ஆனால,; …
-
- 3 replies
- 735 views
-
-
திரைப்படங்களில் குத்துப் பாடல் காட்சிகளுக்கு ஆபாசமாக உடை அணிந்து நடனமாடும் கவர்ச்சி நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேசத்தின் இந்து அமைப்புத் தலைவர் ஒருவர் யோசனை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில இந்து மகாசபையில் பொது செயலாளரான நவீன் தியாகி, "திரைப்படங்களில் ஆபாச உடை அணிந்து குத்துப் பாடல் காட்சிகளுக்கு நடனமாடும் நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், பள்ளி மாணவிகள் குட்டைப் பாவடை, ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிய கூடாது என்றும், பள்ளிச் சிறுமிகள் செல்போன்கள் உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்ப…
-
- 0 replies
- 303 views
-
-
ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார். தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்…
-
- 0 replies
- 584 views
-
-
உலகில் அதிகமானோரால் விரும்பிப் பருகப்படும் பானமாக திகழ்வது கோப்பியாகும். இவ்வாறு விரும்பி அருந்தப்படும் கோப்பி வகைகளில் பல வகைகள் உண்டு. எனினும் உலகில் விலையுயர்ந்த கோப்பி வகை எதுவென்று உங்களுக்கு தெரியுமா? அது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? அத் தகவல் சற்று சுவாரஸ்யமானது. இவ்வகை கோப்பியின் பெயர் ' கோபி லுவாக்' Kopi Luwak. ' கோபி லுவாக்' (Kopi Luwak) இவை இந்தோனேசியாவின் சுமாத்ரா, பாலி , ஜாவா மற்றும் சுலாவெசி தீவுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தீமோரிலும் இவை உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அங்கே இது 'மொடிட் கொபி' motit coffee மற்றும் 'கெபே லாகு' kafé-laku என அழைக்கப்படுகின்றன.…
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
Valéry Giscard d'Estaing (1926) இவர் , Valéry Giscard d'Estaing a été le troisième président de la Cinquième République française (1974-81).வரை பிரெஞ்சு ஐனாதிபதியாக இருந்தார். இவருக்கு ஒரு வருடத்துக்கு 2,5 millions €uros அரச பணம்செலவிடப்படுகிறதாம். காலையில் செய்தியைப்பார்த்ததும் கொஞ்சம் எரிச்சலாகிவிட்டேன்.. Valéry Giscard d'Estaing (1926) ÉCOUTER Inspecteur des finances, membre de l'Académie française et ancien parlementaire européen, Valéry Giscard d'Estaing a été le troisième président de la Cinquième République française (1974-81). Portrait officiel de Valéry Giscard d'Estaing Président de la République française (1974-1981) …
-
- 1 reply
- 527 views
-
-
ராபரேலி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் ஒரு திருமணம் கோலாகலமாக நடநது கொண்டு இருந்தது. மணமகள் இந்திரா (வயது 23) மணமகன் ஜூகல் கிஷோர் (வயது 25). வர்மாலா என அழைக்கப்டும் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு நடந்து முடிந்தது. மந்திரம் முழங்க இந்திரா கூடி இருந்த கூட்டத்தினர் நடுவே கிஷாரின் மனைவி என உறுதி செய்யப்பட்டார். திடீர் என மணமகன் சுருண்டு விழுந்தார் அவ்ருக்கு வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அனைவரும் பதற்றம் அடைந்தனர். உடனடியாக மணமகனின் உறவினர்கள் மணமகனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். மணமகள் மட்டும் இப்போது தனியாக நின்றாள். கிஷோரின் இந்த நிலை குறித்து தனக்கு ஏன் சொல்லவில்லை என கூறி பெற்றோரிடம் சண்டை போட்டார். உடனடியாக தனக்கு வேறு மணமகனை பார்த்து இந…
-
- 3 replies
- 622 views
-
-
மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது வழக்கு; வெடித்தது போராட்டம்! பிரான்சில் மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸில் அண்மையில் வருடாந்திர தெரு நாடக விழாநடைபெற்றுள்ளது. இவ்விழாவில் யுவதியொருவர் மேலாடையின்றிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்து அவரிடம் மேலாடையை அணியுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். எனினும் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதாகக் கூறி குறித்த யுவதி மேலாடையை அணிய மறுத்துள்ளார். அத்துடன் ஆண்களை போல பெண்களும் மேலாடை இன்றி செல்ல உரிமை …
-
- 0 replies
- 188 views
-