Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: நேற்று முதல் முழுக்க முழுக்க அநியாயத்துக்கு ஒரு எஸ்எம்எஸ் மக்களை குழப்போ குழப்பென்று குழப்பி வருகிறது. [size=3][size=4]அதாவது வரும் அக்டோபர் 17-ம் தேதி மட்டும் 36 மணிநேரம், அதாவது ஒன்றரை நாள் தொடர்ந்து பகலாகவே இருக்கும். 2400 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்ச்சி நடக்கிறது - இதுதான் அந்த எஸ்எம்எஸ்![/size][/size] [size=4][/size] [size=4]குறிப்பு: நான்காண்டுகளுக்கு முன்பும் இப்படியொரு வதந்தி வந்து மறைந்தது நினைவிருக்கலாம்.[/size] [size=4]http://tamil.oneindi....html#image5663[/size]

  2. மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/05/180.html இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?

    • 3 replies
    • 387 views
  3. இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp…

  4. 18ஆவது குழந்தைக்கு பெற்றோராகும் தம்பதியினர் பிரிட்டனை சேர்ந்த ஒரு தம்பதியினர் தமது 18ஆவது குழந்தை பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். லங்கஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த 38 வயதான சூ ரெட்போர்ட்டுக்கும் அவரின் கணவர் நோயல் ரெட்போர்ட் என்பவருக்கும் 17 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்தபிள்ளையான கிறிஸ் என்பவருக்கு 25 வயதாகிறது. மகள்களில் மூத்தவரான சோபிக்கு 21 வயதாகிறது. இந்த நிலையில், நோயல் – சூ தம்பதிக்கு மற்றொரு குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது கர்ப்பிணியாகவுள்ள சூ விரைவில் 18 ஆவது குழந்தைக்கு தாயாகவுள்ளார். இக்குழந்தையை தமக்கான கிறிஸ்மஸ் பரிசு என இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவே தமது கடைசி குழந்தையாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரி…

  5. இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி 18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம் தொடர்கின்றது. Mühlhausenஅருகாமையில் தொடர்ந்துகொண்டிருக்கும் நடைப்பயணம் ஐரோப்பிய வடகடலையும் சுவிஸையும் இணைக்கும் Rain நதி ஓரமாக நகர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுவிஸை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணத்தை தொடர் எழுச்சியுடன் ஜெனிவா வரை அழைத்துச் செல்வதற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். தமிழர்களின் வெளியக வெகுயனப் போராட்டங்களினதும் உள்ளக இராயதந்திர நகர்வுகளினதும் …

  6. அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன. 2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர் டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார். தன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட…

  7. 19 வருடங்களாக தினமும் திரையிடப்படும் தில்வாலே துஹானியா லே ஜயாங்கே 19 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வெளி­யான தில்­வாலே துஹா­னியா லே ஜயாங்கே (டிடி­எல்ஜே) திரைப்­படம் மும்­பை­யி­லுள்ள திரை­ய­ரங்­கொன்றில் இன்னும் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. ஷாருக்கான் கஜோல் நடித்த இத்­தி­ரைப்­படம் 1995 ஒக்­டோபர் 20 ஆம் திகதி வெளி­யா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆத்­திய சோப்ரா இயக்­கிய இப்­ப­டத்தை அவரின் தந்தை யாஷ் சோப்ரா தயா­ரித்­தி­ருந்தார். மும்­பையின் பிர­பல திரை­ய­ரங்­கான மராதா மந்­திரில் இப்­படம் இன்னும் தினமும் காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. எதிர்­வதும் டிசெம்பர் 12 ஆம் திக­தி­யுடன் தொடர்ச்­சி­யாக 1000 வாரங்கள் திரை­யி­டப்­பட்ட திரைப்­படும் எனும் சாத­னையை இப்­படம் பெற­வுள்­ளது. அதன் பி…

  8. நீதிமன்றங்களையும், பொலிசாரையும் 19 வருடங்களாக ஏமாற்றி வந்த மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நபரை, பண்டாரவளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த கப்பில பண்டார தர்மசிரி என்ற 48 வயதுடைய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், கடந்த 2002 ஆம் ஆண்டு, மே மாதம் 14 ஆம் திகதி இரவு தமது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றிருந்தார். இது குறித்த வழக்கு பதுளை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து குறித்த நபரை சந்தேக நபராகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட குறித்த கொலை வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம்…

  9. 190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது. https://www.polimernews.com/dnews/89421/190-ஆண்டுகளுக்கு-முந்தையகையெழுத்து-பிரதி-ரூ.6.20கோடிக்கு-ஏலம் Bronte manuscript sells for 780,000 euros at Paris auction Written …

    • 0 replies
    • 369 views
  10. செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என அழைக்கப்படும் குறித்த ஆமை கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆமை 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191ஆவது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான காணொளியை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆமையின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என அதற்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/283378

  11. [size=3]1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.[/size] [size=3]1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெக்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.[/size] [size=3]இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,[/size] [size=3]சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேரதிச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும்.[/size] [size=3]பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா …

  12. 1971 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் ஒரே மாதிரியான நாட்காட்டி.! மனித சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல், போர்கள் என சாமானியர்கள் முதல் செல்வந்தவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது. மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரை பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் வேலையிழப்பிலும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஆறுதலான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாக உள்ளது. இதற்கிடையே 2021ம் ஆண்டு ‘கலண்டர் அதிசய’ ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஐம்பது வருடத்திற்கு முன்பு உள்ள 1971ம் ஆண்டு கலண்டரும்…

  13. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனால் கழுகின் சிறகை காயப்படுத்த முடியவில்லை. சோகத்துடன் பறந்து போய்விடுகிறது. இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அமெரிக்க உள்துறை(U.S. Department of the Interior) பதிவேற்றியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46320.html#sthash.xJjzcEwy.dpuf

    • 0 replies
    • 302 views
  14. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும்வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என மருத்துவர்கள் நம்புகிறார்கள். https://thinakkural.lk/a…

  15. 2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை! ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor Orbán) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களு…

  16. சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால், ஹுவாங் பிங் என்ற தாத்தா மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். அரசு அதிகாரிகள் பல முறை தாத்தா விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தாத்தா. கடைசி வரை பிடிவாதம் பிடித்தார். வேறு வழியில…

  17. 2 கோடி நன்கொடை வழங்கிய இலங்கை நபர்! என்னத்திற்கு தெரியுமா? திருப்பதி ஏழுமலையானிற்கு இலங்கையை சேர்ந்த வியாபாரி ஒருவர் மிகப்பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரியே புதன்கிழமை ரூ. 2 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானின் பக்தரான இவர் ஒவ்வொரு ஆண்டும் அன்ன தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திருமலையில் உள்ள ஸ்ரீவத்ஸா ஓய்வறையைக் கட்டி அவர் தேவஸ்தானத்த…

  18. ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 2 வயதான ஆட்டுக்குட்டி ஒன்று உலகப் பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதன் உடலில் அரேபிய மொழியில் அல்லாவின் நாமத்தைக் கொண்டிருப்பதே ஆகும். இதன் காரணமாக இவ் ஆட்டுக்குட்டியானது ஈத் அல் அட்ஹா விழாவை முன்னிட்டு 128,000 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/Ds2ijLnhwhY http://www.seithy.co...&language=tamil

  19. 2 தலை, 6 கால்களுடன் காணப்படும் அதிசய கடல் ஆமை உக்ரைன் நாட்டில் கீவ் நகில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இரு தலையுடன் மற்றும் 6 கால்களுடன் கூடிய அதிசய கடல் ஆமை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அது மட்டுமின்றி இந்த ஆமை வேறு சில புதுமைகளுடன் காட்சி அளிக்கிறது. அதாவது சுமார் 5 வயதுடைய இந்த ஆமையின் மேற்பகுதி ஓடானது இருதயம் போன்று காணப்படுவதுடன் இதற்கு 6 கால்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த ஆமையை ஏராளமான மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது குறிப்பிடத்தக்கது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Gjm1KVaa7c4 http://www.youtube.com/watch?v=Gjm1KVaa7c4

  20. 2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தம் குடித்த இளம்பெண்: மருத்துவமனையிலும் ரத்தம் கேட்டு அடம் Posted by: Siva Published: Tuesday, February 26, 2013, 14:24 [iST] கோவை: கோவையில் 2 தெரு நாய் மற்றும் 7 கோழிகளைக் கொன்று அவற்றின் ரத்தத்தை குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவை மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மனைவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் முக்…

  21. தி.மலை: அவனவன் ஒரு மனைவியை சமாளிக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, இருவரையும் தேர்தலில் நிற்க வைத்து, வெற்றியும் பெற வைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், வழூர் அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள் என்பது தான் சுவாரஸ்யம். இரு மனைவிகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வரும் தனசேகர், விவசாயம் செய்து வருகிறார். மனைவிகள் இருவரும் வெவ்வேறு கிராம பஞ்., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால், இருவரை…

    • 8 replies
    • 1.4k views
  22. 2 மாதம் லீவில் செல்லும் ஃபேஸ்புக் அதிபர்! பொதுவாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக சிறிது காலம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்கள், "எங்களுக்கு கடமையே கண்" என சொல்லிட்டு, பணி உயர்விற்காக விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திலயே தீயா வேலை செய்வார்கள். இதே போன்ற நடைமுறை ஃபேஸ்புக் நிறுவனத்திலும் உண்டு. ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் போது அவர்கள் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். பெரும்பாலும் இந்தச் சலுகையை யாரும் பயன்படுத்தாத நிலையில், முதல்முறையாக அந்தச் சலுகையை பயன்படுத்தி விடுப்பில் செல்ல…

  23. அமெரிக்காவின் கிராமப் பகுதியான கென்டக்கியில், 5 வயது சிறுவன், தனது 2 வயது சகோதரியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள் வசிக்கும் கென்டக்கியில், பிள்ளைகள் வளர்ந்து 5 வயது ஆவதற்குள், அவர்களுக்கு என்று குடும்ப உறுப்பினர்கள் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து பயிற்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்டியன் என்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி எதிர்பாராத விதமாக அவனது கையில் கிடைத்தது. அவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரியை விளையாட்டாக சுட, அந்த துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த குண்டு, சிறுமியின் நெஞ்சை துளைத்துச் சென்றது. இந்த சம்பவத்தால், அவரது குடும்பத…

    • 4 replies
    • 421 views
  24. 2 வருடங்கள் தேனிலவு கொண்டாடிய ஜோடி : 6 கண்டங்களில் 33 நாடுகளுக்கு பயணம் 2014-05-15 11:21:47 தேனிலவு கொண்டாட்டம் ஒரு வாரம் ஒரு மாதம் நீடிக்கலாம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த திருமணமான ஜோடி ஒன்று சுமார் 2 வருடங்கள் தேனிலவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மைக் மற்றும் ஏன் ஹொவார்ட் ஆகிய இந்த ஜோடி தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய 6 கண்டங்களில் 33 நாடுகளிலுள்ள 302 இடங்களுக்கு பயணித்துள்ளனர். திருமணமானவுடன் தமது தொழிலை இராஜினாமா செய்துவிட்டு வீட்டையும் வாடகைக்கு கொடுத்துவிட்டு தமது பொருட்களுடன் திட்டமிடப்படாத தேனிலவு பயணத்துக்கு தயாராகியுள்ளனர். 675 நாட்கள் நீடித்த இந்த தேனிலவு கொண்டாட்ட சுற்றுலா பல வாழ்நாள் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபங்களு…

    • 12 replies
    • 1.2k views
  25. இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன. இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆங்லியன் வாட்டர் நிறுவனத்தின் தொல்பொருட்கள் மதிப்பீட்டாளரான ஜோ எவரிட் கூறினார். இரும்புக் காலம் என்பது கிறிஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.