Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=3][size=4]தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், [/size][/size][size=4]சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தி…

  2. ஏர்போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து: செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும் சம்பவம் என்றும் வர்ணித்துள்ளார் ஒபாமா வர்ணித்துள்ளார். அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒபாமா இடையில் அயோவா மாகாணத்தில் தரையிறங்கினார். அப்போது அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி கலிபோர்னியாவில் உள்ள நாசாவின், ஜெட் புரபல்சன் ஆய்வகத்திற்குத் த…

  3. திரு­ம­ணத்தை நடத்­து­வ­தற்­கான தள­மாக மாற்­றப்­பட்­டுள்ள பிரித்­தா­னிய சிறைக்­கூடம் (படங்கள்) பிரித்­தா­னிய சொமர்­ஸெட்டில் 18 ஆம் நூற்­றாண்டு காலத்தில் குற்­ற­வா­ளி­களை சிறை வைக்கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட சிறைக்­கூ­ட­மொன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திரு­ம­ணங்­களை நடத்­து ­வ­தற்­கான தள­மாக மாற்­றப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி 7 அடி அக­லத்தை மட்­டுமே கொண்ட சிறைக்­கூ­டத்தில் திரு­மண ஜோடியும் திரு­மணப் பதி­வா­ள­ருமே ஒரு சமயத்தில் அமர்ந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/3328

  4. இலங்கையின் முன்னணி விருந்தகம் ஒன்றில் தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா என்று விடயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எனினும் பிரசுரிக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் சீட்டு உண்மையானதா என்பதை விருந்தகம் இன்னும் முறையாக உறுதிப்படுத்தவில்லை. குறித்த கட்டண சீட்டில் விருந்தகம் ஒரு வாடிக்கையாளரிடம் தோடம்பழச்சாறுக்காக 6, 075 ரூபாயை கட்டணமாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குறித்த கட்டணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் வரி 1,055.80 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக இலங்கையில் உள்ள விருந்தகங்கள், பல பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https…

  5. சோனியா காந்தி புத்தாண்டைக் கொண்டாட மாட்டார். டெல்லி: டெல்லியில் பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி கொடுமையாக மரணமடைந்த சம்பவத்தின் எதிரொலியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லி பாலியல் பலாத்காரக் கொடுமை தேசிய அவமானமாகும். இதையொட்டி கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இதேபோல காங்கிரஸ் பேரியக்கத்தினரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். நன்றி : http://tamil.oneindia…

  6. ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அந் நாட்டில் பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்வதை தடைசெய்யும் பொருட்டு சட்ட மூலமொன்றினை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மத சட்டதிட்டங்களின் படி நாய்கள் அசுத்தமானவையாக கருதப்படுகின்ற போதிலும் ஈரானில் பணம் படைத்தவர்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் மேற்கத்திய கலாசாரத்தினைப் பின்பற்றி இவைகளை பொது இடங்களில் அழைத்து வருவது சில நேரங்களில் இடையூறாக உள்ளதாக சர்ச்சைகளும் எழுந்தன. இச் சட்டமூலத்தின் படி செல்லப்பிராணி என்ற பெயரில் நாய்களை வளர்ப்பவர்கள் அவைகளை பொது இடங்களுக்கு நடைப்பயிற்சிக்காகவோ, வாகனங்களிலோ அழைத்து செல்லக் கூடாது. இதனை மீறினால் நாயின் உரிமையாளரிடமிருந்து …

  7. எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி …

  8. [size=2][size=4]இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயொருவருக்கு வழங்கப்பட்ட உலருணவு போசணைப் பொதியில் காணப்பட்ட டின் மீனுக்குள் கையுறையொன்றும் நூலொன்றும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி உலருணவுப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையமொன்றில் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் வெலிவிட்டிய, தெவ்துரே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குறித்த தாய், தெவ்துரே பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (ஜகத் டி சில்வா) [/size][/size] http://www.tamilmirr...0-09-14-19.html

  9. நிலாவில் நீண்ட தூரம் நடந்த சாதனையாளர் எட்கரின் மரணம்... வாஷிங்டன்: நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார். கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் நிலாவில் கால் பதித்தனர். அத்துடன் நிலாவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. இதன்மூலம் நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற பெருமை எட்கருக்குக் கிடைத்தது. இது மட்டுமின்றி 94 பவுண்ட் எடைகொண்ட சந்திர மண்டல பாறைகள்,…

  10. அவர் மேலும் குறிப்பிடுகையில் முள்ளிவாய்க்காள் நினைவு எமது நெஞ்சகங்களில் தீயாக பற்றிஎரிந்து போர் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி ஈழத்தமிழ் மக்களின் விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடவேண்டும் என்று தொடர்ந்து செல்கின்றது. http://eeladhesam.com

  11. பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து பலசெல் உயிரினங்களிலும் காற்றுசுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் ஒட்டுயிரியை கண்டுபிடித்துள்ளனர். சால்மோன் மீனின் தசைசெல்களில் உயிர்வாழும் ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுயிரிக்கு, ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், காற்றுசுவாசத்திற்கு முக்கியமானதாகும். இந்நிலையில் அவ்வமைப்பில்லாத உய…

  12. சட்டவிரோத மோட்டார்வண்டி நிறுத்தல் : டாங்கிகளால் அழிப்பு லித்துவேனிய தலைநகரான வில்நியுசில் அதன் நகரபிதா அங்கே சட்டத்தை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களை டாங்கி மூலம் நசுக்கினார். அதன் மூலம் தமது ஆத்திரத்தையும் கண்டிப்பான செய்தியையும் கூறியுள்ளார்.

    • 0 replies
    • 537 views
  13. இல­வ­ச­மாக ஆடை­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நூற்­றுக்கும் அதி­க­மான சிங்­கப்பூர் வாசிகள் நேற்று அரை நிர்­வா­ண­மாக ஆடை­ய­க­மொன்­றுக்கு திரண்­டனர். ஸ்பெய்னைச் சேர்ந்த டெஸி­குவெல் நிறு­வனம் அரை­நிர்­வா­ண­மாக வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஆடை­களை வழங்கும் திட்­டத்தை ஏற்­கெ­னவே பல நாடு­களில் மேற்­கொண்­டி­ருந்­தது. இந்­நி­று­வனம் சிங்­கப்­பூரில் முதல் தட­வை­யாக நேற்று வியா­ழக்­கி­ழமை இத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் அவர்­களின் தெரி­வுக்­கேற்ப ஓர் ஆடையை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தாக அந்­நி­று­வனம் அறி­வித்­தி­ருந்­தது. இல­வச ஆடை­களை பெறு­வ­தற்­காக சிங்­க­ப்பூரில் வசிக்கும் நூற்­றுக்கும் அதி­க­மான ஆண்­களு…

  14. வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்! வெயாங்கொடை, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காணியில் புதையல் தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் புதையல் இருப்பதாகக் கூறி பல வருடங்களாக புதையல் வேட்டையாடுபவர்களால் மேற்படி இடம் பல தடவைகள் தோண்டப்பட்டுள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருந்தனர். தொல்லியல் திணைக்களம் மேற்கொ…

  15. மரணித்த தனது மகனுக்கு தாய் ஒருவர் வீட்டில் வைத்து ஐந்து நாட்களாக உணவு ஊட்டிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நுகேகொட, கங்கொடவெல, பழைய கெஸ்பா வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. 60 வயதான தாயொருவர் தனது உயிரிழந்த 27 வயது மகனுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவு ஊட்டியுள்ளார். இந்த தாயும் அவரது மகனும் குறித்த வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளனர். மகன் உயிரிழந்து கட்டிலின் மீது காணப்பட்ட நிலையில் நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை அறியாத மானநோயாளியான தாய் தொடர்ந்து ஐந்து நாட்கள் இவருக்கு உணவூட்டி இருக்கின்றார். அயலவர்கள் குறித்த வீட்டியிலிருந்து துர்வாடை வருவதை உணர்ந்து சென்று பார்த்த போதே அந்த நபர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. பிரதேசவாசிகள் அவ்வீட்டுக்க…

  16. விபத்தில் காயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நபரிடம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்க நாட்டை சேர்ந்த El Salvador - வில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். எதிரே வந்த வாகனம் ஒன்று இவரது கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளான இவர் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடக்கிறார். அப்போது, அங்கு வந்த தொலைக்காட்சி நிருபர், இவரின் உயிரை காப்பாற்றுவதை விட்டு, அந்நபரிடம் பேட்டி கண்டுள்ளார், இங்கு என்ன நடந்தது? எதிரே வாகனம் வந்ததை பார்த்தீர்களா? என கேட்கிறார். அதற்கு அந்நபர் இல்லை என்று கூறுகிறார். …

  17. இங்கிலாந்தில் கேம்ரிஷ் நகரில் Travelodge விடுதி ஒன்றில் நிலம் கூட்ட பாவிக்கப்பட்டு வந்த தானியங்கி வக்கூம் கிளீனர்.. திறந்திருந்த கதவுக்குள்ளால்.. தப்பி ஓடிவிட்டது. நாள் கடந்தும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ரோபோ கிளீனர் தற்போது ஒரு பத்தைக்குள் செருகி இருந்த நிலையில் மனிதக் கிளீனரால் கண்டுபிடிக்கப்பட்டு.. மீண்டும் அதன் குடும்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாம். இதைப் போன்ற ஒன்று தான் தப்பி ஓடியுள்ளது. Robot vacuum cleaner escapes from Cambridge Travelodge. https://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-60084347

  18. தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு ! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது உங்கள் அருகில் ஒரு மலைப்பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது. கடந்த திங்களன்று…

  19. விபச்சாரம் தண்டனைக்குரிய குற்ற செயல். அதை தடுக்க விபச்சார தடுப்பு பிரிவு என்ற குழுவே காவல் துறையில் இயங்குகிறது. அதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கி நடவடிக்கை எடுத்து தான் வருகின்றனர் ஆனாலும் அரசர்கள் காலத்தில் இருந்து இன்று வரை விபச்சாரம் பல வித டெக்னிக்குகளில் லாட்ஸ், குடில்கள், கணவன் மனைவி போல் கடலில் படகுகளில் என பயணித்து உயிர்காக்கும் வாகனமான ஆம்லென்ஸ்களில் கூட தொடர்கிறதே. தனியார் மருத்துவமனை வாகனங்கள் ஆள் அரவமே இல்லாத நெடுஞ்சாலைகளில் சுமார் 20 கி.மி தூரம் சென்றடைவதற்குள் அவசர அவசரமாக முடித்துக் கொள்ள வேண்டும். இந்த சேவையில் கல்லூரி மாணவ மாணவர்கள் ஈடுபடுத்தல் படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு முறைக்கு சுமார் ரூ 2000 முதல் 7000 ரூபாய் வசூலிக்கிறார்களாம…

    • 0 replies
    • 536 views
  20. இறால்களுக்கு போதையூட்டும் உணவகம் – எங்கு தெரியுமா? அமெரிக்காவிலுள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர். “கஞ்சா புகை செலுத்தி இறால்களை கொல்வதால், அவற்றை உண்பவர்களுக்கு போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும். அதன் இறைச்சியின் தரம் அதிகரிக்கும்,” என அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சார்லட் கில் கூறியுள்ளார். கொதி நீரில் போட்டு இறால்க…

  21. டொரண்டோ மாநகர் மேயர் தேர்தலின் போது ராப் ஃபோர்டை எதிர்த்து போட்டியிட்ட பெண் வேட்பாளர் சாரா தாம்சன், இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் டொரண்டோ மேயரின் முகத்தின் குத்த வேண்டும் என்று எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மேயர் ராப் ஃபோர்டு தன்னுடைய பின்பக்கத்தை தட்டியதாகவும் அதற்காக அவருடைய முகத்தில் குத்த வேண்டும்போல் இருந்தது என்றும் டுவிட்டரில் எழுதியுள்ளார். ஒண்டோரியோ முதல்வர் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்ச்சியின்போது என்ன நடந்தது என்று தெரியாமல் டொரண்டோ ஊடகங்கள் திகைத்து நிற்கின்றன. தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மேயர் , மன்னிப்பு கேட்கும் வரை இதை விடப்போவதில்லை என…

    • 3 replies
    • 536 views
  22. அமெரிக்காவில், நடுவானில் பறந்த விமானத்தின் கதவு கழன்று, ஹோட்டல் கூரை மீது விழுந்தது. அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், மான்டரி விமான நிலையத்திலிருந்து, கடந்த வாரம், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. இதைஅடுத்து திரும்பி பார்த்த பைலட், விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். விமானத்தை தாழ்வாக பறக்க செய்து, கதவு எங்கே விழுந்திருக்கிறது, என்று தேடினார். இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால், விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு, விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள, ஹோட்டல் உரிமையாள…

  23. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண் ஐதராபாத் சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் சமீபத்தில் வீட்டிலிருந்து மாயமானார்.இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததோடு தீவிர விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது 35 வயது பெண் ஒருவருடன் அந்த பெண் ஹைதராபாத்துக்கு சென்றது தெரியவந்தது.இது தொடர்பாக அவர்களை காரில் அழைத்து சென்ற ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவர் ஐதராபாத் முகவரியை கொடுத்தார். பின்னர் போலீசார் அங்கு சென்ற போது அதிர்ச்சியடைந்தனர்.காரணம் இரண்டு பெண்களும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது, மேலும…

  24. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கேமரூனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர். இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.