செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவு 250,வது பர்த்டே கொண்டாடி இருக்கிறது. லண்டனில் இது கோலாகல விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளை…
-
- 0 replies
- 479 views
-
-
வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை. "வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு" சொல்லிட்டு போன கல்யாண மாப்பிள்ளையை காணோமாம்! நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் என்ஜினீயராக இருக்கிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலையும் பார்த்து வருகிறார். இவருக்கு கல்யாணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, அதே நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளையை பிடித்திருந்தது.இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நேற்றுமுன்தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் நடக்க முடிவானது. கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு மணப்பெண்ணுக்கு மருதாணி வைக்கும் சடங்கு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. இதில் இரு குடும்பத்தின…
-
- 0 replies
- 479 views
-
-
புதிய காதலனுடன் முன்னாள் காதலி... கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பதிவு: ஜூன் 20, 2020 13:00 PM பங்காக் தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத் துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார். இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக் காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார்.ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிர…
-
- 0 replies
- 478 views
-
-
எட்டு கோடி ரூபாய்க்கு சமோசா சாப்பிட்ட அமைச்சர்கள்..! - இந்தியாவில்தான் இது நடக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் மகன். அதற்கு முன் முதல்வராக கோலோச்சிய மாயாவதியை வீழ்த்தி 2012ல் உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர்களுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிய வகையில் எட்டு கோடிக்கும் அதிகமாக தொகை செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். உ.பி சட்டமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கு டீ, காபி, சமோசா, குலோப் ஜாமூன் வாங்கிய வகையில் மட்டும் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 47…
-
- 0 replies
- 478 views
-
-
அரேபியர்களும் யூதர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி கட்டணம் மாத்திரம் அறவிடும் இஸ்ரேலிய உணவகம் இஸ்ரேலிலுள்ள உணவகமொன்று யூதர்களும் அரேபியர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி விலைக்கு உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்காக இந்தத் தீர்மானத்தை தான் மேற்கொண்டதாக இஸ்ரேலிய உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் தெரிவித்துள்ளார். உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் .................................................................................. “அரேபியர்களைக் கண்டு பயப்படுகிறீர்களா? யூதர்களைக் கண்டு அஞ்சுகிறீர்களா? எம்மைப…
-
- 6 replies
- 478 views
-
-
கார்கஸஸ், நவ.22 (டிஎன்எஸ்) கூலிப்படையினரால் தன்னை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.100 மில்லியன் டாலர் அளவுக்கு பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் வெனிசுலா அதிபர் ஹூவே சவோஸ் அந்நாட்டு தொழிலதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார். லத்தீன் அமெரிக்க நடான வெனிசுலா நாட்டின் அதிபராக இருப்பவர் ஹூவே சவோஸ் (57) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது அமெரிக்காவின் எதிரியாக உள்ளார். கார்கஸஸ் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் அதிபராக உள்ளேன். எனினும் எனது அரசியல் எதிரிகள் சிலர் என்னை வீழ்த்த அமெரிக்க உதவியுடன் திட்டம் தீட்டி வருகின்றனர். அதிலும் நாட்டின் குளோபல் விஷன் எனும் டி.வி. சானல் ஒன்றில் உரிமையாளர், கூ…
-
- 0 replies
- 478 views
-
-
பாவக்கறையை போக்க வேண்டியது இந்தியாவுக்கு அவசியமானது என்கிறார் விக்கிரமபாகு இலங்கைக்கு எதரிரான அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடாது தடுப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருவதாக இடது சாரி முன்னணியின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேவைக்காகவே பிரபாகரனுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் யுத்தம் மேற் கொள்ளப்பட்டது. எனவே இந்த பாவக்கறையை இந்தியா கழுவ வேண்டிய அவசியம் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்குண்டு. ஏனெனில் இந்தி…
-
- 0 replies
- 478 views
-
-
100 பேரை கொன்று குவித்த ரவுடி சுட்டுக்கொலை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். கூலிப்படையாக செயல்பட்டு சுமார் 100 பேரை கொன்ற ஜோகிந்தர் என்ற ஜக்கு பகல்வன், இன்று காலை ஒருகாரில் சென்றான். டிலா மோர் என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு காரில் வந்த 3 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஜோகிந்தரும் திருப்பி சுட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த ஜோகிந்தர் மற்றும் டிரைவர் சந்தீப் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோகிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெ…
-
- 0 replies
- 478 views
-
-
FILE இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 1455 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றங்கள் ஆவணப்பிரிவின் பதிவுகளின் படி இந்தியாவில் கடந்த 2000 ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை வெவ்வேறு வழக்குகளில் மொத்தம் 1455 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கபட்டவர்களில் சுமார் 370 பேர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தை 135 பேரோடு பிடித்திருப்பது பீகார். 125 மற்றும் 71 பேரோடு முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்கள் உள்ளன. தூக்கு தண்டனை விதிக்கபட்ட 1455 பேரில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேஷ், மிசோரம், நாகாலாந்து…
-
- 0 replies
- 478 views
-
-
சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவர் 16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் பெருமைபட தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்தவர் முஹகமது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி (வயது 78) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். இவர் சவுதி செய்தி இணையதளமான சபக்கிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, எனது 14 ஆவது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டேன். 2 வருடத்திற்கு பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். இப்படியாக ஆரம்பித்த தொடர் திருமணங்கள் தற்போது 16ஆகி விட்டது. எனக்கு 21 மகன்கள் 16 மகள்கள் உள்ளனர். மேலும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களையே …
-
- 1 reply
- 478 views
-
-
இதில் கவனிக்க வேண்டிய விடையம் என்ன என்றால் நேற்று நடந்த ஒரு விவாததில் எச்ச.ராஜா ஒரு சவால் விட்டு இருந்தார் முடிந்தால் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி பாருங்கள் என்று , அவர் சொல்லி ஒரு நாளும் ஆக்க வில்லை அதுக்கு , கொஞ்சம் முதல் நடந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் வாழ்த்தரங்கம்.....முடிஞ்சவன் மோதிப் பார் முடியாதவன் வேடிக்கை பாரு.......................... படங்கள் முகப் புத்தகம்............
-
- 2 replies
- 478 views
-
-
6 மனைவிகள், 54 குழந்தைகள்: `பெரிய்ய...' குடும்பஸ்தர்! பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது. அப்துல் மஜீத் என்பவருக்கு 54 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் 12 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், தற்போது 42 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் அப்துல் மஜீத். பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று பி.பி.சி செய்தியாளர் மொஹம்மத் காஜ்மி தெரிவிக்கிறார். அப்துல் மஜீத் ஓட்டுநராகப் பணியாற்றியவர். குவெட்டாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்ட…
-
- 4 replies
- 478 views
-
-
அமெரிக்க அதிபர் மாளிகை எதிரே வைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 1964ம் ஆண்டு முதல் இங்கு செயற்கையான மரம் வைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. இதேபோல், நியூயார்க் நகரில் புகழ்பெற்ற ராக்கிபெல்லர் மையத்தில் (Rockefeller tree) உள்ள 77 அடி உயர கிறிஸ்துமஸ் மரமும் ஒளியூட்டப்பட்டது. https://www.polimernews.com/dnews/91502/50-ஆயிரம்-வண்ண-விளக்குகளால்ஜொலிக்கும்-கிறிஸ்துமஸ்மரம்
-
- 0 replies
- 478 views
-
-
இளம்பெண்ணிடமிருந்து பேய் வெளியேறும் மிரட்டல் வீடியோ Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (18:31 IST) ஒரு இளம்பெண்ணை பிடித்துள்ள பேயை விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மக்களுக்கு, பேய், ஆவி, பிசாசு ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கை உண்டு. அங்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, அவ்வப்போது பலருக்கு பேய் ஓட்டப்படுகிறது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது போல் பயங்கரமான ஒன்றை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பேய் பிடித்திருப்பதாக கூறப்படும் இளம்பெண்ணை, ஒரு வெள்ளை நிற கட்டத்தினுள் அமர வைக்கிறார்கள். பேய் ஓட்டுபவரின் உதவியாளர், அந்த பெண்ணை பிடித்துக் கொள்ள அவர் வாயிலிருந்து ரத்தம் வழிகிறது. மேலும்…
-
- 2 replies
- 478 views
-
-
வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்த விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறிய ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் வெற்றிகளை இவரே அரச தொலைக்காட்சியான ரூபவாஹின…
-
- 0 replies
- 478 views
-
-
டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: இது தேவையா? புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்று பல்வேறு இயற்கைக்கு எதிரான விஷயங்களிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடையின் விற்பனையாளர், உதவியாளர் உள்பட அனைத்திற்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து வகையான மது வகைகள் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப…
-
- 3 replies
- 477 views
-
-
-
13 கர்ப்பிணி மனைவிகளுடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஒருவரின் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களை கலக்கி வருகிறது.நைஜீரியா நாட்டை சேர்ந்த இந்நபர் தனது 13 மனைவிகளையும் ஒரேநேரத்தில் கருத்தரிக்க வைத்ததாக அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படமும், படம்சார்ந்த தவலும் உண்மையாக இருக்குமா? அல்லது, பொய் தகவலா? என்பது உறுதிப்படுத்த முடியாத நிலை ஒருபுறம் இருந்தாலும் மேற்படி 13 பெண்களும் தங்களது கணவருடன் ஒரே வீட்டில் சண்டை, சச்சரவு இல்லாமல் வாழ்ந்து வருவதாக ஒரு உபரி தகவலும் வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் பெண்கள் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் தங்களது சக்களத்திகளைப் பற்றி மிக உயர்வாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மனித உடலியல் அடிப்படையின்படி, ம…
-
- 4 replies
- 477 views
-
-
துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ். போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள் போட்டு குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். Dubai Policeشرطة دبيVerified account@DubaiPoliceHQ صور: سمو الشيخ منصور بن محمد بن راشد آل مكتوم أثناء عملية السحب والإعلان عن الفا…
-
- 1 reply
- 477 views
-
-
குடிவாடா நாகரத்தினம் நாயுடு, அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி!!! ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்..! ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்..! பள்ளிப் பாடமாக நாகரத்தினம் நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்…
-
- 1 reply
- 477 views
-
-
ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்கவேண்டும். இதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான வைகோ. ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய நாடாளுமன்ற நீதிமன்றம் ஆகியவற்றின் கீழாக இந்த சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை உடன் வாபஸ் பெறவேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அந்தப் பிரேரணையில் வலி யுறுத்தப்பட வேண்டுமெனவும் வைகோ தெரிவித்துள்ளார். பி…
-
- 2 replies
- 477 views
-
-
மாரடைப்பு ஏற்பட்டதாக நடித்து, பல உணவகங்களில் பில் கட்டாமல் ஏமாற்றியுள்ளார் 50 வயது நபர் ஒருவர். ஸ்பெயின் நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், பெரிய உணவகங்களை குறிவைத்து, அங்கு சென்று சாப்பிடுவார். உணவருந்திவிட்டு பில் கட்டவேண்டிய சமயம் வரும் போது மாரடைப்பு ஏற்பட்டது போல நெஞ்சில் கைவைத்து கொண்டு சரிந்து விடுவார், அல்லது மயங்கி கீழே விழுந்துவிடுவார். இவரது நிலையை பார்த்து பயந்து, உணவகத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து இவரை அனுப்பி வைப்பார்கள். இந்த கதை சுமார் 20 உணவகங்களில் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு உணவகத்தில் இருந்து அவர் தப்பி ஓட நினைத்த போது இந்த நாடகம், அம்பலமாகியுள்ளது. அவர் சாப்பிட்ட உணவி…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
மன்னரின் நாயை கிண்டல் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு 37 வருட சிறை தாய்லாந்து மன்னரின் நாயை இணையத்தளத்தில் விமர்சித்ததற்காக அந்நாட்டு பிரஜை ஒருவர் 37 வருட சிறை தண்டனையை அனுபவிக்க இருக்கின்றார். மன்னரின் நாய் குறித்து கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட அந்நாட்டு தொழிலாளி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்படவுள்ளது. அவரின் இந்த பதிவிற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் எவ்வாறான பதிவு ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவலை வெளியிட அந்நாட்டு இராணும் மறுத்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெச் என்பவர் இருந்து வருகிறார். அங்கு மன்னர் …
-
- 5 replies
- 477 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் அரசாங்கத்தில் இணைவாரா?? August 14, 2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறித்த தகவலை அனுப்பியுள்ளார். இருப்பினும், அரசாங்கம் அதற்கு இன்னும் சாதகமான பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் கட்சிக் குள்ளான உள் பிரிவு காரணமாக பாதி பேர் விரக்தி யடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/6…
-
- 1 reply
- 477 views
-
-
அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம்2020-12-25T20:33:07+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore அமெரிக்காவின் நாஸ்வில் நகரில் பாரிய வெடிப்புசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று வெடித்துச்சிதறியுள்ளது பலகட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/100800
-
- 0 replies
- 477 views
-