செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
யாழில் இடம் பெற்ற விபத்தில்... 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்! யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளின் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன், வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.…
-
- 0 replies
- 238 views
-
-
ரெட்புள் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரரான கிறிஸ் பீஃவிஃவர் யாழ்ப்பாணத்தில் தனது சாகச நிகழ்வுகளை இன்று நிகழ்த்தினார். யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்துக்கு முன்னால் இன்று பிற்பகல் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வினைக் கண்டுகளிப்பதற்கென பெருந்திரளான மக்கள் அங்கு வருகை தந்தனர். மேலும் அவர்கள் கிறிஸ் பீஃவிஃவரின் மோட்டார் சைக்கிள் சாகசங்களுக்கு கைதட்டி உற்சாகமளித்தனர். கிறிஸ் பீஃவிஃவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் தனது சாகச நிகழ்வுகளை முன்னெடுக்கின்றார். இதேவேளை இவரின் மேலும் இரண்டு சாகச நிகழ்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாக மாவத்தை (கிறீன்பாத்) மற்றும் டபிள்யுடீசி (பிஓசி வீதி) இலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. …
-
- 4 replies
- 535 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 FEB, 2024 | 10:44 AM யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது, தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வழமை போன்று, தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர…
-
- 1 reply
- 419 views
- 1 follower
-
-
யாழில் இருந்து வந்த கடிதம்! இன்று காலை அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் பிரதமர் மஹிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உளுந்துக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், அதன் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து யாழ்ப்பாண வர்த்தக சேம்பர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தது. தமிழ் மக்களின் உணவில் உளுந்து முக்கியமானதாக இருப்பதாகவும் யாழ். வர்த்தக சேம்பர் தமது கடிதத்தில சுட்…
-
- 0 replies
- 366 views
-
-
நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான். https://vampan.net/wp-content/uploads/2021/12/269565160_242147331382458_1406662015373078646_n.mp4?_=1 https://vampan.net/34938/
-
- 5 replies
- 529 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் நபரொருவர் வாங்கிய ரோல்ஸில் துருப்பிடித்த கம்பித் துண்டொன்று காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த 21ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையால் கடைகளில் உணவுகளைக் கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/302386
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
யாழில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் – மனைவி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி! குழந்தை பிறந்து 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரை மாய்த்த சோக சம்பவம் யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர். குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனை அறிந்த துணைவி அதே இராசயத்தை உட்கொண்டுள்ளார். …
-
- 11 replies
- 1.4k views
-
-
யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், சுன்னாகம், உடுவில் பகுதியில் நேற்று (03) நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டரின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் சிறுவன், நெல் அறுவடை இயந்திரத்தில் ஏற முயன்று கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது தந்தை ஓட்டி வந்த டிராக்டரின் பின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/142393…
-
- 0 replies
- 116 views
-
-
யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு! யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1409594
-
- 3 replies
- 408 views
-
-
13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https:/…
-
- 1 reply
- 187 views
- 1 follower
-
-
யாழில் ஏற்பட்ட கடும் சூறாவளி – எவருக்கும் பாதிப்பு இல்லை யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சுழல் காற்று காரணமாக பாரிய நீர்மட்டம் வான்வெளியில் வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் கடல் எல்லையில் பல தடவைகள் இவ்வாறான சுழற்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் எல்லையில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொய்ன்ட் பெட்ரோ மீனவர்கள் மேலும் தெரிவித்தனர். …
-
- 4 replies
- 406 views
- 1 follower
-
-
யாழ்.சுழிபுரம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் இடத்தை முற்றுகையிட சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, சுழிபரம் – வறுத்தோலை பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அடையாளம் காணப்பட்ட வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது வீட்டிலிருந்து வெளியேவந்த பெண்கள் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன்போது அயல் வீட்டு இளைஞன் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அந்த இளைஞனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸார் முன்னிலையில் இளைஞன் மீது பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீட்டுக்குள்ளிருந்து வந்த ஆண் ஒருவரும் இளைஞன் மீது தா…
-
- 5 replies
- 664 views
-
-
யாழ். மயிலங்காடு வேம்படி ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தான அம்மன் கடந்த வியாழக்கிழமை(21) மாலை திடீரெனக் கண் திறந்து பார்ப்பதாகத் தகவல் பரவியிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் குறித்த காட்சியை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் அம்மனின் கண்கள் மூடிப் பின்னர் மீண்டும் திறந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை(22) காலை-07 மணியளவில் மூலஸ்தானத் திருக்கதவு திறக்கப்பட்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்களினால் பிராயச் சித்த அபிஷேகம், பூசை வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன. அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் அம்மனின் கண் மீண்டும் மூடப் பெற்றது. அன்றைய தினம் பிற்பகல்-03.30 மணி முதல் ஆ…
-
- 0 replies
- 434 views
-
-
யாழில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/யாழில்-கத்திக்-குத்தில்/
-
- 0 replies
- 464 views
-
-
காதலியோடு உல்லாசமாக இருந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன் காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/artic…
-
- 0 replies
- 367 views
-
-
குடும்பப் பெண்ணை ஓட்டோவில் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது. சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 30 ஆம் திகதி மந்திகை மருத்துவமனையில் மனநோய்க்குச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தன்னை முதியவர் ஒருவர் ஓட்டோவில் கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று முதியவருக்கு எதிராகக் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் http://www.cineinbox.com
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழில் குடும்பஸ்தரின் உயிரைப் பறித்த 800 ரூபாய்! 800 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இளைஞர் ஒருவரிடம் 800 ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், அதனைத் திரும்பச் செலுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து இளைஞர் அந்நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் …
-
- 0 replies
- 250 views
-
-
யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது! யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்ட…
-
- 2 replies
- 396 views
- 1 follower
-
-
https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள். யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.
-
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
யாழில் சரிந்து விழுந்த 200 வருட பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 01:05 PM யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று திங்கட்கிழமை (நவ. 14) இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது. குறித்த மரம் வீதியின் குறுக்காக சரிந்து விழுந்ததில் முன்னால் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீதியில் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் …
-
- 0 replies
- 681 views
- 1 follower
-
-
மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். அவர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசி…
-
- 4 replies
- 815 views
- 1 follower
-
-
சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாப்பிளை சிங்கப்பூரில் இருப்பதாக கூறி திருமணப் பேச்சு நடந்துள்ளது. யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது வரை கல்வி கற்ற மாப்பிளை 2006ம் ஆண்டு தமது குடும்பத்துடன் கொழும்பு சென்று கொழும்பில் தாய் மற்றும் தந்தை இறந்த பின்னர், தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் 2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து அவர் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது சித்தி அவருக்கு புறோக்கர் மூலம் பெண் பார்க்…
-
- 3 replies
- 922 views
-
-
யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது! யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1341855
-
- 3 replies
- 659 views
-
-
யாழில் தங்க நகை அணியாத பெண் மீது தாக்குதல்! தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீதியில் யாரும் அற்றவேளை குறித்த பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்காததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப…
-
- 7 replies
- 831 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 04:27 PM யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/172089
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-