செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வாஷிங்டன்: வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று செளதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்துள்ளார். செளதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது ட்வீட், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சியை பயன்படுத்துவது அவர்கள் வீட்டில் இருப்பதை பிறர் கவனிக்கக்கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் சன்னி முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பெண்கள் கற்பழிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் …
-
- 25 replies
- 3k views
-
-
வீட்டில் கழிப்பறை இல்லாததால் வேறொருவரை மணந்த மணப்பெண்! மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர். அப்போது மணப்பெண் சார்பில் மணமகன் வீட்டாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்க…
-
- 0 replies
- 433 views
-
-
வீட்டில் குழந்தையை பிரசவித்த தாய் - குழந்தை உயிரிழப்பு ; தாய், தந்தை கைது யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களான தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி வீட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அதனை அடுத்து அவருக்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் , மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிக…
-
- 1 reply
- 535 views
-
-
வீட்டில்... கஞ்சா செடிகளை வளர்த்து, விற்க... தாய்லாந்து அனுமதி! தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம். தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு, அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது. ‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்து…
-
- 2 replies
- 419 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்காகக் குழாய் மூலமாக சாராயம் வழங்குவது போல ஒரு காட்சி வரும். இப்போது அந்தக் காட்சி கேரளாவில் நிஜமாகி உள்ளது. தேர்தல் வெற்றிக்காகவெல்லாம் மதுபானம் வழங்கப்படவில்லை, அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீட்டுக் குழாய்களில் மதுபானம் வந்திருக்கிறது. என்ன நடந்தது? கடத்தப்பட்ட அல்லது பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்களை கலால்துறை கைபற்றி வைத்திருக்கும் அல்லவா? அது போல திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான விடுதியில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை அப்புறப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புற…
-
- 0 replies
- 559 views
-
-
-
- 50 replies
- 3.2k views
- 1 follower
-
-
வீட்டு வேலைகளில் உதவ மறுத்த கணவரின் பிறப்புறுப்பை வெட்டித் துண்டித்த மனைவி சர்வதேச பெண்கள் தினத்தில் தனக்கு மலர்களை வழங்கி வாழ்த்துத் தெரிவிக்க தவறியதுடன் வீட்டு வேலைகளிலும் தனக்கு உதவ மறுத்தமைக்காக தனது கணவரின் பிறப்புறுப்பை மனைவியொருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் வட கிழக்கு ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது. வஸ்லுயி பிராந்தியத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்ப வம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மரினெலா பெனீ என்ற 40 வயது மனைவியே இவ்வாறு தனது கணவரை மோசமான முறையில் தாக்கியுள்ளார். இதனால் பிறப்புறுப்பில் படுகாயத்துக்குள்ளான அய…
-
- 8 replies
- 658 views
-
-
வீட்டு வேலைகளுக்காக மனைவிக்கு 218,300 டொலர்கள் இழப்பீடு – ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்காக 218,300 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 25 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த போது வீட்டு வேலை செய்ததற்காக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து, 218,300 டொலர்களை ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், 25 வருடங்களின் பின்னர் கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரியுள்ளார். வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மனைவி நீ…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
வீட்டுக் கூரையை பிரித்து, அதில் தாயாரின் சடலத்தை எரித்த மகள்கள்! ஒடிஷாவின் கலாகண்டி மாவட்டத்தில் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச் சம்பவம் நடந்துள்ளது. கலாகண்டி மாவட்டத்தில் உள்ள தோக்ரிபாடா கிராமம்தைச் சேர்ந்தவர் கனாக் சத்பதி. 75 வயது நிரம்பியவர். இவருக்கு நான்கு மகள்கள். கனாக் சத்பதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் இருவரின் கணவர்கள் இறந்து விட்டனர். இருவரை கணவர்கள் கை விட்டு விட்டனர். இதனால் மகள்கள் தங்கள் குழந்தைகளுடன் தாயாருடன் ஒரே வ…
-
- 0 replies
- 392 views
-
-
வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டு கொன்ற தந்தை! லாகூர்: பாகிஸ்தானில், வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்று கவுரவக் கொலை செய்து உள்ளார் ஒரு கல்நெஞ்சம் படைத்த தந்தை. பாகிஸ்தானில் கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் அங்கு 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர். கவுரவக் கொலையை மையப்படுத்தி ‘எ கேர்ள் இன் தி ரிவர்’ என்ற ஆவணப் படத்துக்கு நேற்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஷர்மீன் ஒய்த் சினாய் என்ற பெண் தயாரித்து இருந்தார். இதை பாகிஸ்தானில் விழாவாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு ஒரு பெண் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ…
-
- 0 replies
- 337 views
-
-
வீட்டுக்குள் இருங்கள் இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்- தெலுங்கானா முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டில் இருங்கள். இல்லாவிடின் சுட்டுத் தள்ளுவோம் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் இதன் தீவிரம் புரியாமல் வழக்கமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறுப்படுகின்றது. இதையடுத்தே பொலிஸாருக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவை ஏற்படுமெனின் இராணுவத்தை அழைப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/வீட்டுக்குள்-இருங்கள்-இல/
-
- 0 replies
- 201 views
-
-
வீட்டுக்குள் நுழைந்த சவரத் தொழிலாளிக்கு நேர்ந்த கதி! வீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்ற சவரத் தொழிலாளியைக் காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் பீகாரில் நாலந்தா அருகே அரங்கேறியிருக்கிறது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாதாம். மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை. இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ…
-
- 1 reply
- 436 views
-
-
வீட்டுக்குள் நுழைந்த நாகபாம்பை விரட்ட வீட்டையே இடித்து தரைமட்டமாக்கிய பெண் * அத்துருகிரியவில் சம்பவம் வீட்டுக்குள் புகுந்த ஐந்து அடி நீளமுள்ள நாகபாம்பைத் துரத்துவதற்காக அத்துருகிரியவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் சொந்த வீட்டையே இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். நளினி அத்தநாயக்க என்ற பெண்மணியே நாகபாம்பை வீட்டிலிருந்து துரத்துவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் முழுமையாக தோல்வி அடைந்த நிலையில் அவருடைய வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டு தற்போது அயலவர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நளினி அத்தநாயக்கவின் கணவர் வெளிநாட்டில் பணி புரிகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு. தாயும், குழந்தையுமாக அத்துருகிரியவி…
-
- 9 replies
- 2.2k views
-
-
மனைவி மற்றும் அவரது கைக்குழந்தையை கொன்று புதைப்பதற்காக வீட்டுக்குள் புதைக்குழியை வெட்டிய மில்லனிய பெல்லன்குடாவைச்சேர்ந்த பீ.ஜி ரவிந்திர பெரேரா(42) என்பவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஜகத் கஹதகம உத்தரவிட்டுள்ளார். வேலையற்றிருக்கும் சந்தேகநபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மனநலவைத்திய அதிகாரியான நீல் பெர்னண்டோவிடம் முன்னிலைப்படுத்தி வைத்திய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108578-2014-04-29-07-07-53.html
-
- 0 replies
- 351 views
-
-
ஒரு குடிமகன் தான் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த அத்தனை பேரையும் புத்தாண்டில் வீதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். புத்தாண்டு நேரத்தில் பட்டாசு, வாண வேடிக்கைகள் இல்லாவிட்டால் அது அழகிருகாயிருக்காது. அத்தோடு கடந்த வருடத்தை கவலையோடு அனுப்பி வைக்கவும் வரும் வருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பதற்கும் தண்ணி போட்டுத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒருவர் நள்ளிரவில் போட வேண்டிய தண்ணியை மாற்றி பகல் நேரத்தில் போட்டதால் அவரது வாணவேடிக்கையை இரசிக்க முடியாமல் போயிற்று. யேர்மனியில் Hessen மாநிலத்தில் Bebra என்ற இடத்தில் 52 வயதான ஒருவர் நண்பகல் தனது வீட்டுக்குள் இருந்து வாணம் விட்டிருக்கின்றார். அவர் விட்ட வாணம் அவரது வீட்டுக்குள்ளேயே அவர் வாங்கி வைத்திருந்த் பட்டா…
-
- 5 replies
- 1.1k views
-
-
வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி சிறைக்கு செல்ல அமெரிக்க கோர்ட் தீர்ப்பு வாஷிங்டன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இணையம் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற = 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார் ஒரு நீதிபதி. இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எ…
-
- 0 replies
- 342 views
-
-
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினரை சினப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீட்டு உரிமையாளர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் றேசெஸ்ரர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த வீடு மற்றும் காரின் உரிமையாளரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.வீட்டை தீவைத்து எரித்து விட்டு அவர் பாதுகாப்பான இடம்ஒன்றில் நிலையெடுத்திருந்து சினப்பர் துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார். இந்தச் சம்பவத்தில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் ம…
-
- 4 replies
- 592 views
-
-
பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல்லாண்டுகள் கழித்தும் அந்த காமிக்ஸ் புத்தகம் மிகச் சிறப்பான நிலையில் இருந்தது. கட்டுரை தகவல் கிரேஸ் எலிசா குட்வின் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தங்களது மறைந்த தாயின் பரணில் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று சகோதரர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பழைய செய்தித்தாள்களின் குவியலுக்கு அடியில், அவர்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்தனர். முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகங்களில் அதுவும் ஒன்று. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் (Man of Steel) சாகசங்கள் குறித்த ஜூன் …
-
-
- 1 reply
- 148 views
- 1 follower
-
-
சுத்தம் செய்தபோது கிடைத்த லாட்டரி அமெரிக்காவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் 'நன்றி தெரிவிக்கும்' நாளை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கிடைத்த லாட்டரி சீட்டின் மூலம் தம்பதியருக்கு இந்திய மதிப்பில் சுமார் 12.7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில லாட்டரி சீட்டுகள் கிடைத்தன என்கிறார் டினா எரென்பெர்க். கிடைத்த லாட…
-
- 0 replies
- 369 views
-
-
ரோட்டோரம் நின்று திருநங்கைகளை "அழைத்த" 100 பேர் கைது. திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக 100 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன. அதன்படி, ஒரு சில திருநங்கைகள், நுங்கம்பாக்கம் சாலைகளின் இருபுறமும் இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாகி வருகிறது. அத்தகைய சமயங்களில் அவ்வழியாக கார், பைக்கில் போகிறவர்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி அழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே எழுந்து வந்தன.இந்த திருநங்கைகளில் பெரும்பாலானோர் நன்றாக படித…
-
- 0 replies
- 567 views
-
-
வீதி கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி! வீதியில் கிரிக்கெட் விளையாட்டியதனால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து செல்லும் குறுக்கு வீதியில் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வண்ணம் கிர…
-
- 0 replies
- 273 views
-
-
வீதி விபத்தில் நெதர்லாந்து பெண் மரணம்! அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பல்வெஹெர பகுதியில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடை ஒன்றின் முன் நிறுத்துவதற்காக வீதியில் இடதுபுறமாகத் திரும்பிய போது அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அதே திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மேற்படி வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென வீதியின் வலது பக்கம் திரும்பி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியுள…
-
- 0 replies
- 230 views
-
-
வீதிக் காவல் தடையைத் தாண்டி பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதத்தைக் கையளித்த 5 வயதுச் சிறுமி அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நகரிலுள்ள வீதியொன்றினுடாக தனது விசேட வாகனத்தில் புதன்கிழமை பயணித்த போது, 5 வயது சிறுமியொருவர் ஒருவாறு பாதுகாப்பு தடையைத் தாண்டி வந்து பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதமொன்றை கையளித்து பாப்பரசரது மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கொன்ஸ்ரிரியூஷன் வீதியின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைகளுக்கு அப்பால் பாப்பரசரை காணும் முகமாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் சோபி குரூஸ் என்ற மேற்படி சிறுமியும் ஒருவ…
-
- 1 reply
- 335 views
-
-
வீதித்தடுப்பில் மோதி வானில் பறந்து மாடிக் கட்டிடத்தில் பாய்ந்து சொருகி நின்ற கார்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதித் தடுப்பில் மோதி வானில் பறந்து அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில் அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வௌ்ளை நிற சொகுசுக் கார், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து எகிறிய கார், அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்…
-
- 12 replies
- 703 views
-
-
வீதியால் செல்வோரை... துரத்தி, துரத்தி... தாக்கும் காகங்கள், கருங்குளவிகள்! வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தி தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, “குறித்த வீதியினை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். வீதி ஓரத்தில் காணப்படும் பனங்கூடல் மற்றும் எருக்கலை பற்றை காடுகளினுள், கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன கூடு கட்டியுள்ளன. …
-
- 5 replies
- 491 views
- 1 follower
-