செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
[size=4]இங்கிலாந்து மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது.[/size] [size=4]இங்கிலாந்தில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் சர்வே நடத்தியது. இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என தெரியவந்தது. கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உ…
-
- 5 replies
- 785 views
-
-
அமெரிக்காவில் தனக்கு சொந்தமாக லம்போர்கினி கார் வாங்குவதற்காக வெறும் 3 டாலருடன் 5 வயது சிறுவன் நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் சென்று போலீசாரை மிரள வைத்துள்ளான். பரபரப்பான உட்டா நெடுஞ்சாலையில், மெதுவாக சென்று கொண்டிருந்ததை காரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் ஒருவர் நிறுத்தி, அருகில் சென்று பார்த்தபோது காரை 5 வயது சிறுவன் ஓட்டி வந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார். மேற்கொண்டு விசாரித்ததில், தனக்கு லம்போர்கினி கார் வாங்கி தரச் சொல்லி தன் தாயிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 3 டாலர்களுடன் கலிபோர்னியாவுக்கு சென்று லம்போர்கினி கார் வாங்க சிறுவன்…
-
- 5 replies
- 657 views
-
-
விசேட படப்பிடிப்பு நிகழ்வுடன் விவாகரத்தை கொண்டாடிய யுவதி 2016-06-16 12:21:58 திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்களின் போது மணமக்கள் விதவிதமாக படம் பிடித்துக் கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால், அவுஸ்திரே லியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது விவா கரத்தை யொட்டி விசேடமான படப்பிடிப்பு நிகழ்வொன்றை (போட்டோ ஷொட்) நடத்தியுள்ளார். 24 வயதான கெத்தரின் மேய்சன்பர்க் எனும் யுவதியே இந்த விநோத நிகழ்வை நடத்தியுள்ளார். தனது பதின்மர் பருவத்திலிருந்தே இவர் தனது காதலனுடன் இணைந்திருந்தார். சில வருடங்களுக்கு முன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அண்மையில் இவர்கள் விவாகரத்து செய்தனர். இதனை…
-
- 5 replies
- 448 views
-
-
மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் அமைச்சர் பொற…
-
-
- 5 replies
- 538 views
- 1 follower
-
-
'தண்ணீருக்காக தன்னந்தனியாக வெட்டிய சுரங்கம்' - பத்மஸ்ரீ விருது பெறும் கர்நாடக விவசாயியின் உத்வேகக் கதை தண்ணீருக்காக தன்னந்தனியாக சுரங்கம் வெட்டி, தரிசு நிலத்தை மரப் பண்ணையாக மாற்றிய கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி அமை மகாலிங்க நாயக் பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளார். உத்வேகமூட்டும் இவரது வாழ்க்கைக் கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம். கடந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் கோவையைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி பாப்பம்மாள். தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து இயற்கையான உணவு என ஆரோக்கியமான முறையில் வாழ்ந்து வருகிறார் பாப்பம்மாள். விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட மூதாட்டி பாப்பம்மாளை கௌரவிக்கும் விதமாக பத்ம விருது வழங்கப்பட்டது. மூதாட்டி பாப்பம்மா…
-
- 5 replies
- 748 views
-
-
திருமணத்திற்கு பிறகு கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் மற்றவர்களுடன் கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.பிரித்தானிய நாட்டை சேர்ந்த Durex ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ‘உலகளவில் தன்னுடைய துணைக்கு தெரியாமல் அல்லது துணைக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவரிடம் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வதில் எந்த நாடு முன்னணியில் உள்ளது’ என ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் 51 சதவிகித தம்பதிகள் திருமணத…
-
- 5 replies
- 1.6k views
-
-
கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்…
-
- 5 replies
- 945 views
-
-
(எம்.எப்.எம் பஸீர்) நான்கு வருடங்களாக பாடசாலை மாணவனொருவனை பாலியல் நடவடிக்கைககளுக்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலையொன்றின் கணினி ஆசிரியை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டது. கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம இதற்கான உத்தரவை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு பிறப்பித்தார். 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு அதிகாரிகள் நீதிமன்றிற்கு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து நீதிவான் இந்த…
-
- 5 replies
- 600 views
-
-
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார். தந்தையார் முச்சக்கர வண்டிஓடுனராகவும் தாயார்குடும்ப பெண்ணாகவும் கொண்டபெரியஅளவிலான பின்புலங்கள் இல்லாதகுடும்பத்தில் பிறந்தகுறித்த குழந்தையானது இதுவரைஏடுதொடக்க பாடாத நிலையில் இவ்வாறு அதி சிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யா…
-
-
- 5 replies
- 389 views
- 1 follower
-
-
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் பயத்தின் காரணமாக கதறி அழுத காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள இரண்டு கிராமங்களை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது. அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாஃபர் அல் தையர் என்ற இளைஞரை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஜாஃபர் அல் தையருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரியாவிடை அளித்தனர். அந்த இளைஞரை கட்டிப்பிடித்து தாக்குதல் வெற்றி பெற…
-
- 5 replies
- 535 views
-
-
அண்மையில் திருவண்னாமலையில் சித்தர் ஒருவர் தரையிலிருந்து வானத்தை நோக்கி பறந்து சென்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிலர் இதனை பொய் என்று இன்னும் சிலர் இப்படி ஒரு விடயம் சாத்தியம் இல்லை என்றும் வாதாடி வருகின்றனர். இது சாத்தியமே என்று அமெரிக்காவில் ஒருவர் நிரூபித்துள்ளார். கீழே அதற்கான ஒளிக்கோப்பை இணைத்துள்ளேன். எப்படி அனைவரையும் அசத்தியுள்ளார் என்று பார்த்து விட்டு கூறுங்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல். செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts institute of technology ) செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனாளர்களின் மூளையின் செயற்பாட்டை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக chatgpt பயனாளர்கள் பலருக்கு சில நிமி…
-
-
- 5 replies
- 355 views
-
-
கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன் (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா வகை மீன் இனமானது நேற்று (12) கிண்ணியா கடற்பரப்பில் மீனவர்களுக்கு சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சேர்த்தனர். கிண்ணியா கடலில் சிக்கிய 5,000 கிலோ எடை கொண்ட சுறா மீன் | Virakesari.lk
-
- 5 replies
- 439 views
-
-
சர்வதேச அழகுராணி நாவிதன்வெளியில் சரஸ்வதி அழகுசிலையை திறந்துவைத்தார்! By Gowsith ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேசஅழகி (MISS INTERNATIONAL UK -2020-2022) செல்வி இவஞ்சலின் லட்சுமணர் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) அவரால் நிறுவப்பட்ட 10அடி உயர சரஸ்வதி சிலையை நேற்றுமுன்தினம் (20)ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திறந்துவைத்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர். இலங்கை சுற்றுலாஅதிகாரசபை அவர்களுக்கான விருந்தினர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் கூடவே அதன்பிரதிநிதிகளும் …
-
- 5 replies
- 539 views
- 1 follower
-
-
நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான். https://vampan.net/wp-content/uploads/2021/12/269565160_242147331382458_1406662015373078646_n.mp4?_=1 https://vampan.net/34938/
-
- 5 replies
- 527 views
-
-
தோனிக்கு நல்ல செய்தி ஜனவரி 31, 2015. புதுடில்லி: இந்திய கேப்டன் தோனி விரைவில் அப்பாவாக போகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி, டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் உலக கோப்பை தொடர் தோனிக்கு, மறக்க முடியாததாக அமையவுள்ளது. அதாவது, தொடர் நடக்கும் போது (பிப்., மாதம்), அப்பா ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான், வழக்கமாக தோனி எங்கு சென்றாலும் நிழலாக செல்லும் அவரது மனைவி சாக் ஷி, கடந்த 7 முதல் 8 மாதங்களாக வீட்டிலேயே உள்ளார். ஆஸ்திரேலியாவில் இடைவிடாது போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து தனது சாக் ஷியின் நலம் விசாரித்துக் கொண்டு தான் உள்ளார் தோனி. இவரது குழந்தை, உலக கோ…
-
- 5 replies
- 699 views
-
-
http://m.youtube.com/watch?v=HTTBlIwNR0s
-
- 5 replies
- 1.4k views
-
-
காதலன் செய்த வேலையால் பொது இடத்தில் மயங்கி விழுந்த காதலி மெக்சிகோவில் காதலன் தன் காதலிக்கு வியப்பளிப்பதற்காக செய்த செயலினால் காதலி மயக்கமடைந்து கிழே விழுந்த காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவி வருகின்றது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெனிடெஸ் என்பவர் மெக்சிகோ மொடல் அழகியான ரெனா ரென்டேரியாவிடம் தன்னுடைய காதலை கூறுவதற்காக இசைக்கருவி வாசிப்பவர்கள், காதல் கூறுவதை புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பதற்கு என ஒரு திருமண அரங்கு போல் அவர் காதல் கூற நினைத்து வைத்த இடத்தை வடிமைத்துள்ளார். பெனிடெஸை காண்பதற்கு ரெனா ரென்டேரியா வந்த போது இசைக்கலைஞர்கள் அனைவரும் இசை வாசித்துள்ளனர். இதனால் ஆச்சரியமடைந்த ரென்டேரியா அவர் …
-
- 5 replies
- 346 views
- 1 follower
-
-
இன்றைய நாள் 1996 லெப். நடேசன் நினைவு நாள் 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது. 1933 அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின்அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
-
ஓடும் விமானத்தில் 'பேக்' சீட் வழியாக கை விட்டு பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது லண்டன்: லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து சிக்கினார். அந்த ஆண் ஒரு இந்தியர் ஆவார். அவரது பெயர் வினய் போச்சம்பள்ளி. ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் அந்தப் பெண்ணின் பின் சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார். பின்னால் இருந்து எக்கி அந்தப் பெண்ணின் மார்புகளைப் பிடித்து அநாகரீகமாக நடந்துள்ளார். இவரது இந்த செயல் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. இதைப் பார்த்த சக பயணிகள் சத்தம் போடாமல் கண்டுகொள்ளாமல் இருந்துள…
-
- 5 replies
- 702 views
-
-
மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!! திருப்பூர் : திருப்பூரை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுவதால் உலகப் போர் மூளலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் தோன்றி ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படும். உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்துவதற்காக ஆண்டவன் இடும் கட்டளையே இந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஐதீகம் பக்தரின் கனவில் தோன்றும…
-
- 5 replies
- 2.2k views
-
-
மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர். நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைச…
-
- 5 replies
- 986 views
-
-
விமானத்தில் நிர்வாண பயணம் அலைமோதுகிறது கூட்டம் நிர்வாணத்தை விரும்புவோருக்காக, பிரத்யேகமாக இயக்கப்படும் விமானத்தில் டிக்கெட் எடுக்க, உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒஸ்ஸிஉர்லாப் என்ற சுற்றுலா நிறுவனம், இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஜெர்மன் நாட்டவர்கள், இயற்கையான பகுதிகளில் நிர்வாணமாக இருப்பதை விரும்புபவர்கள். இதற்கென்றே உள்ள நிர்வாண கடற்கரையில் இவர்கள் அவ்வப்போது திரள்வது வழக்கம். இவர்களுக்காக பிரத்யேகமான இடத்தை தேர்வு செய்துள்ளது ஒஸ்ஸிஉர்லாப் நிறுவனம். இந்த விமானங்களில், பயணிப்பவர்கள், நிர்வாணமாக செல்லலாம். ஆனால், விமான இருக்கைகளில் உட்கார்ந்து செல்லும் போது, அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 378 views
-