Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழ்ப்பாண யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் யுவதி ஒருவரை சூனியம் நீக்குவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மந்திரவாதியால் பாதிக்கப்பட்ட யுவதி தனக்கு நடந்தவற்றை தனது தாயிடமும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுவ…

  2. கொசோவோ நாட்டில் ஜேர்மனின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரை போலவே நபர் ஒருவர் வசிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் தனது சர்வாதிகார ஆதிக்கத்தை நிலைநாட்டி, உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு மாபெறும் கொடூர தலைவர் ஹிட்லர். இவரை போலவே கொசோவோ நாட்டில் மிட்ரோவிகா(Mitrovica) நகரில் இமின் ட்ஜினொவ்சி(Emin Djinovci Age-49)என்ற நபர் வசித்து வருகிறார். அந்நாட்டு மக்கள் எல்லோரும் இவரை ‘கொசோவோ ஹிட்லர்’(Kosovo Hitler)என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இவர் தலை முடி, மீசை, நடை, உடை, பாவனை எல்லாமே ஹிட்லரைப் போலவே செய்துகொண்டு வலம் வருகிறார். கடந்த 1998ம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து கோசோவோவுக்கு சென்ற இவர், செர்பியாவுடன் நடந்த யுத்தத்தில் பங்கேற்றார். அப்போது போரினால் ஏற்பட்ட பலத…

  3. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 42 வயதான பெண்.. ஒரு ஆண்டில் மட்டும் 65,000 தொலைபேசி அழைப்புக்கள் (தினமும் சராசரியாக 178 அழைப்புக்கள்..)... ரெக்ஸ்ட்கள்.. ஈமெயில்கள் என்று.. தூதுவிட்டு.. 62 வயதான ஒருவரை ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்.. அந்த வயதானவரை நிம்மதியாக தனிய வாழ விட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்.. பிணையில் விடுதலையாகி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே தனக்கு அந்தப் பெண்ணுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.. அந்தப் பெண்ணால் ஒருதலையாக காதலிக்கப்ப்பட்ட.. 62 வயதான.. ஒருதலைக் காதலன்..! http://www.bbc.co.uk...e-14913053#_tab

  4. நாடுகளைச் சுற்றி- கியூபா நில அமைப்பில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாகவும் கொள்கை கோட்பாடுகளில் மிகத் தொலைவிலும் உள்ள உலகின் 7வது பெரிய தீவு கியூபா. அமொக்காவின் மியாமி கடற்கரையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்த நாடு. 1898-ல் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுபட்டது. 1920ஆம் ஆண்டில் சுதந்திரக் குடியரசு என்ற நிலையைப் பெற்றது. ஆனால் ஏனைய நாடுகளுடன் கியூபா எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. அமெரிக்காவின் ஆசி பெற்ற குடியரசாக கியூபா தொடர்ந்தது. 1952ல் பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா (Bill Batisda) ஆட்சி அதிகாரத்தை இராணுவ புரட்சி மூலமா…

    • 0 replies
    • 854 views
  5. நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு முழுக்க முழுக்க அன்பினால் மட்டுமேயானதென்று தெளிவாகப் புரிகிறது. 46 லட்சம் பேரை நெகிழ வைத்த இந்த யூ-டியூப் வீடியோவை பார்த்த பிறகு. ’ஆஸ்பெர்கர்’ என்பது ஒரு வகையான ஆட்டிசம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உலகம் ’ஆஸ்பெர்கர்ஸ்’ என்று அழைக்கிறது. சரியாகப் பேச முடியாது, சமூகத்துடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது, எல்லா தவறுக்கும் தான் மட்டும் தான் காரணம் என்று தோன்றி தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் தூண்டும் இந்த வகை ஆட்டிசத்தால் ’ஆஸ்பெர்கர்ஸ்’ அடையும் வலியும், தனிமை உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இதுபோன்ற ஒரு ஆஸ்பெர்கர்தான் ’டேனியல் ஜேகப்ஸ்’, அவர் வளர்க்கும் நாயின் பெயர் சாம்சன். கடந்த ஜூன் 1-ம் தேதி இவர் யூ-டி…

  6. நாயின்... காலைப் பிடித்து, தலைகீழாக சுற்றி தூக்கி வீசிய.... இளைஞர் கைது. டெல்லி: டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவர் நாயை அடித்துத் துன்புறுத்துவதை வீடியோவாக எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அந்த நபரின் பெயர் ராகுல் குமார். 21 வயதாகும் அவர் விவேக் விகார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் ஒரு தெரு நாயைப் பார்த்து அதை முதலில் அருகே போய் அதைத் தட்டிக் கொடுத்து கட்டித் தழுவுகிறார். பின்னர் அந்த நாயை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார். அதை அடிப்பதோடு, ஒரு காலைப் பிடித்துத் தூக்கி சுற்றுகிறார். பின்னர் படு வேகமாக அந்த நாயை தூக்கி ஒரு கார் மீது வீசுகிறார். அந்த நாய் வீறிட்டுக் கத்து…

    • 4 replies
    • 333 views
  7. பணிக்குத் தடையாக மாதவிடாய் இருப்பதால் கருப்பையையே அகற்றிவிடும் ஏழைப் பெண்கள்: ஒப்பந்ததாரர்கள்-மருத்துவ முறைகேடுகள் கூட்டு சேர்ந்த அவலம் Published : 11 Apr 2019 16:28 IST Updated : 11 Apr 2019 16:34 IST பிடிஐ மும்பை 0 1.14K - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube கரும்புக் கூலிகளாக பணியாற்றும் பெண்கள்.| ராஜேந்திர ஜாதவ். பெண்கள் மாதவிடாய் காரணமாக தங்களால் பணியை இடையூறு இன்றி செய்ய முடியவில்லை இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டிய…

  8. 99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் 99 வயது பாட்டி ஒருவர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் இசேபியா லியோனார் கார்டல் (99). படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டார். தாயின் இறப்பு, திருமணம் என தொடர்ந்து ஏற்பட்ட தடைகளால் இசேபியாவின் பாடசாலைக் கனவு நிறைவேறாமல் போனது. ஆனாலும் தனது படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தனது 98வது வயதில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இசேபியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர், அடல்ட்ஸ் ஆப் லப்ரிடா பாடசாலை…

    • 1 reply
    • 463 views
  9. பெண் எம்.பி. கணவருடன் காரில் சில்மிசம் : வெடித்தது குண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சியை சேர்ந்த பெண் எம்.பி Oksana Bobrovskaya (30) மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் காருக்குள் வைத்து உறவு கொண்டிருந்த போது குண்டு வெடித்து உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று, சைபீரியா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து இவரின் காரில் குண்டு வெடித்துள்ளது. அதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அரை நிர்வாண நிலையில் எம்.பி மற்றும் அவரது கணவரின் உடல்…

  10. ஜப்பானில் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம்! ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறதுடம் அந்நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா உள்ளார். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், ‘சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் எனக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதுடன் மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ள…

  11. கோஸ்டிச் சண்டை குழுச் சண்டை என்று சினிமாவில் நிறையப் பார்த்திருக்கிறோம். கதாநாயகன் எதிராளியையும் அவனது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்யும் வரை சினிமாவில் போலீஸ் வரவே வராது. ஆனால் நிஜத்தில் அது வேறு விதமாக இருக்கிறது. யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள Lidl என்கிற சூப்பர்மார்க்கெட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. எதற்காக மோதிக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. Baseball bat, கோடாரி என்று பல ஆயுதங்களுடன் மோதல் நடந்திருக்கிறது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். பலருக்கு சில வீரவடுக்கள் மட்டுமே. சினிமாபோல் அல்லாமல் சண்டை நடக்கும் போதே போலீஸ் வந்துவிட சண்டையை அப்படியே விட்டு வி…

  12. லண்டன்: முற்றிலும் புதியவர்களைக் கண்டால் கூச்சம் வருகிறதா?, பார்ட்டிகளுக்குப் போக வெட்கமாக இருக்கிறதா?, காதலைச் சொல்ல தயக்கம் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள். அத்தனையையும் போக்கும் வகையிலான ஹார்மோன் ஒன்றின் மீது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆக்ஸிடாசின் என்பது இந்த ஹார்மோனின் பெயர். இந்த ஹார்மோனால் கூச்சம், வெட்கம், பதட்டம் போய் விடுமாம். இந்த ஹார்மோன் ஏற்கனவே வேறு சில வேலைகளையும் செய்து வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பையில் வளரும் சிசுவுக்கும், தாய்மாருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது, பதட்டத்தைத் தணிப்பது, பயத்தைக் குறைப்பது ஆகியவற்றை இந்த ஹார்மோன் செய்து வருகிறதாம். இந்த நிலையில் ஆக்சிடாசின் ஹார்மோனைப் பயன்படுத்தி வெட்கம், கூச…

  13. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா கரவாங் கிராமத்தை சேந்ர்தவர் இர்மா புலே (வயது 29). இவர் உள்ளூரில் பிரபல பெண் பாப் பாடகர். மலைப்பாம்பு மற்றும் கொடிய விஷ பாம்புகளுடன் பாட்டுப்பாடி நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்விப்பார். இவரின் நடன நிகழ்ச்சி கரவாங் கிராமத்தில் நடைபெற்றது கொடிய விஷ பாம்புடன் அவர் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அவரது தொடையில் பாம்பு கடித்தது . அதற்கு அவர் விஷ முறிவு ஊசியும்ம் போட்டு கொண்டார். தொடர்ந்து அந்த பாம்புடன் 45 நிமிட நேரம் பாடினார். இந்த நிலையில் மேடையிலேயே அவருக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் மரணம் அடைந்து விட்டதாக கூறி விட்டனர். இது க…

  14. மஹிந்தவின் உருவத்தை பச்சை குத்திய நாமலின் நண்பன்..! முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபகஷவின் உருவத்தை நாமல் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். ஹெவலோக் விளையாட்டு சங்கத்தின் றகர் வீரரான பிஹெட்லியே இவ்வாறு பச்சை குத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/5820

  15. மலேசியாவில் காலனால் கவரப்பட்ட சாரங்கன் வீரகேசரி நாளேடு 12/5/2008 11:02:09 PM - எந்தவொரு பெற்றோருமே தமது பிள்ளைச் செல்வங்களை எப்பாடுபட்டாவது நன்கு வளர்த்து கல்விச் செல்வத்தை வழங்கி சமுதாயத்தில் நற்பிரஜைகளாக ஆளாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். சில பிள்ளைகள் தமது பெற்றோரது விருப்பை நிறைவேற்றுவதுமுண்டு. மாறாக சிலர் புறம்போக்கான முறையில் செயற்படுவதுமுண்டு. இவ்வாறு சமூகத்தில் சிறந்த கல்விப் பிரஜைகளாக திகழ வேண்டும் என்ற இலட்சியத்தில் எம்மில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியை பல்கலைக்கழக மட்டத்தில் பயின்று சிறப்புற்ற உதாரணங்கள் பலவுண்டு. அந்த வகையில் கல்வித் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியில் தனது பெற்றோரின் பூரண ஒத்துழைப்புடன் கடந்த 2…

  16. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், கோபன்ட்மீ.கொம் (gofundme.com) மூலம், 82,882 டொலரை திரட்டினார். இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற ஹாஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீதுக்காக பலரால் சமூக ஊடகங்களில் விசா…

    • 1 reply
    • 491 views
  17. லண்டனுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டுவரப்பட்ட மீன்கள் பறிமுதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி முனையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த ஒரு வகையான மீன்கள் சுங்க பல்லுயிர் பிரிவின் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள இந்த மீன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, இலங்கை ஏயர்லைன்ஸின் யுஎல் -503 என்ற விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் லண்டனுக்கு நேற்று காலை ஏற்றுமதி செய்ய, கட்டுநாயக்க விமான நிலைய பொருட்கள் ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போதே சுங்க அதிகாரிகளினால் இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முறையான ஆய்வுகளுக்கு பின்னர் அது அழிக்கப்படவுள்ளது. வித்தியாச…

  18. இந்த பால் வடியும் முகத்தினை பாருங்கள். வயது 29. கீழே உள்ள நபரின் முகத்தினை பாருங்கள் வயது 67. இருவரும் ஒருவரே என்றால் நம்புவீர்களா? அதற்கும் மேலே, இவரால் ஒரு சட்டமும் பாராளுமன்றத்தால் மாற்றி எழுதப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? முதல் படத்தில் இருக்கும் தோற்றம் வயது 29..... மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்த நபர் சீரியல் பாலியல் பலாத்காரி (serial rapiest) என்ற நிலையில், பொறி வைத்து பிடிக்கப்பட்டார். தனது சட்டவாளர்கள் சரியான கேள்விகள் கேட்கவில்லை என்று, தானே, பாதிக்க பட்ட பெண்களை குறுக்கு விசாரணை செய்யப்போகிறேன் என்று, இவர் கேட்ட, எந்த பெண்ணுமே விடையளிக்க முடியாத, ஆபாசமான கேள்விகளால் நீதிமன்றமே ஆடிப்போனது. இவர் மீதான குற்றச்சாட…

    • 0 replies
    • 1.1k views
  19. திஸ்ஸமகாராமய பகுதியில் சீன இராணுவமா? (எம்.மனோசித்ரா) திஸ்ஸமகாராமய வாவி அபிவிருத்தி திட்டம் சீன - இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவ்வாறிருக்கையில் குறித்த வாவி தூய்மைப்படுத்தும் பணிகளில் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த ஆடை அணிந்த சீனப்பிரஜைகள் சிலர் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. எனினும் இலங்கை குளங்களை சீனா அபிவிருத்தி செய்வது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நாம் அறியோம். எவ்வாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பது எமக்கு தெளிவாக தெரியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெ…

  20. வரலாற்றில் இன்றைய நாள் (12-03-2010) 1496 இல் யூதர்கள் சிரியாவில் இருந்து துரத்தப்பட்டார்கள் 1894 இல் கொக்கோ கோலா முதல் முதலாக போத்தலில் விற்கப்பட்டது. 1940 இல் பின்லாந்து ரஸ்யாவிடம் சரண் அடைந்தது. இதன் மூலம் ரஸ்ய - பின்லாந்து போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. http://www.on-this-day.com/onthisday/thedays/alldays/mar12.htm

    • 4 replies
    • 2.9k views
  21. ஜேர்மனியில் சாலைகளை சுத்தம் செய்பவர்களுக்கு பீர் வழங்க அறக்கட்டளை நிறுவனம் ஒன்று தீர்மானம் செய்துள்ளது. ஜேர்மனியில் எசன்(Essen) என்ற அறக்கட்டளை நிறுவனத்தால் (Pick up Initiative) என்ற பெயருடன் சாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு பீர் மட்டுமின்றி, உணவுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. இந்த பணியில் முன்று முதல் ஆறு மணி நேரம் வேலை செய்வதற்கு வேலை இல்லாதவர்களும், ஆதரவற்றவர்களும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. மேலும் இதில் ஈடுபடுபவர்களுக்கு பீர் மட்டுமின்றி, கை செலவிற்காக ஒரு மணி நேரத்திற்கு 1.25 யூரோ கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனம் கூறுகையில், இவ்வாறு பீர் கொடுத்தால் இ…

  22. வேல்ஸ், இங்கிலாந்து: இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார். பயப்பட வேண்டாம்.. இவை செயற்கை மார்பகங்கள்தான். அந்த மார்பகங்கள்தான் வெடித்து விட்டன. இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஓரளவு பெரிதான மார்பகம்தான் தேவை என்று மருத்துவர்களிடம் கூறியிருந்தேன். அதாவது 2 கப் சைஸ் மார்பகம்தான் தேவை என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்களோ பெரிய சைஸ் மார்பகத்தை இம்பிளான்ட் செய்து விட்டனர். அது தற்போது வெடித்து விட்டது. அதற்கு முன்பு அது சைஸ் மாறி, அலங்கோலமான நிலையை அடைந்து பின்னர் வெடித்து விட்டது. எனக்கு இது மிகவும் மோசமான அனுபவமாக மாறி விட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார். இவரது…

  23. (எஸ்.கே) நுகேகொட பிரதேசத்திலுள்ள சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியையின் முகத்தை நிர்வான பெண்ணொருவரின் புகைப்படத்தில் பொருத்தி அப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட 14வயது மாணவனை ஒருலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன உத்தரவிட்டார். ஆசிரியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறையிட்டதையடுத்த மாணவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்த போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டார். குறித்த ஆசிரியையின் நிர்வாணப்படமொன்று சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் வெளிவந்திருப்பதாக அவரது நண்பியான ஆசிரியை ஒருவர் தெரிவித்ததையடுத்து இது குறித்து ஆராய்ந்ததாக ஆசிரியை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பேஸ்புக…

  24. பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய சம்பவம் – பொலிஸ் அதிகாரி கைது பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக களனி பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பிற்காக கடமையாற்றியிருந்த பெண் பொலிஸை குறித்த கான்ஸ்டபிள் தாக்கியுள்ளதுடன், அவரது கைத்தொலைபேசியையும் திருடியுள்ளார். சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த ஆண் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1325987

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.