Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. 'படிமப்புரவு: NTT' இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன். இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel …

  2. வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்த 'வீரமங்கை' செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு 2011 ம் ஆண்டு இதே தினத்தில் தூக்குத் தண்டணையை நிறைவேற்ற இந்திய அரசு தீர்மானித்திருந்தது. இவர்களுக்கான தூக்குத் தண்டனையை தடுத்து அம் மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27 ) என்ற வீரமங்கை காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச்சாவடைந்தார். இந்நிலையில் 3 பேரது உயிரையும் காக்க அரசுக்கு உருக்கம…

    • 14 replies
    • 1.4k views
  3. மேஜர் கணேஸ் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு மலையின் சரிவு! அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும். மேஜர் கணேஸ் தமிழ் ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை – தடித்த உதடுகள் – பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஸ். மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு .கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி . இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும்…

  4. அன்புக்குரிய தமிழீழ மக்களே! இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ந…

  5. 29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தம்மை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/மாவீரர்கள்/2011/10/29 தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவ…

  6. கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்... தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா வவுணதீவு போராளிகளின் காவலரணைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை எதிரியின் சதிச் சூட்டில் வீரச்சாவடைந்தார். இயற் பெயர் – கந்தையா உலகநாதன் இயக்கப் பெயர் – ரமணன் தாய் மடியில் – 14.10.1965 தாயக மடியில் – 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப்…

  7. 1987 ஜூன் மாதம் - முகாம்களுக்குள் விடுதலைப்புலிகளால் முடக்கப்பட்டு மூச்சுத்திணறிய சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூர்க்க வெறியுடன் புறப்படுகிறது.தங்களை துட்டகைமுனுக்களாக கற்பனை பண்ணிக் கொண்டிருந்த விமல் விஜயவர்த்தினா, டென்சில் கொப்பேக்கடுவ ஆகியோர் தலைமை தாங்க பலாலி படைத்தளத்திலிருந்து தொண்டமனாறு வழியாக ஒரு அணியும் அச்சுவேலி வல்லை ஊடாக இன்னொரு அணியும் நகர்கின்றன. தொண்டமானாற்றில் விடுதலைப்புலிகள், பெரும் எடுப்பில் விமானக் குண்டுவீச்சுக்கள், கவசவாகனங்களின் துணையுடன் முன்னேறிய இராணுவ அணியைத் தடுத்து சமராடுகின்றனர். கிடுகு வேலிகளும் பனை வடலிகளும் தெருவோர மரங்களும் கக்கிய நீர்ப் பிழம்பில் படையினர் சுருண்டு விழுகின்றனர். வல்வெட்டித்துறை நோக்கி ஒரு அடி கூ…

  8. நாவற்குழியில் எதிரிகளின் பாசறையைத் தேடிச் சென்று பாசறை தகர்ப்பின் முயற்சியில் வித்தான மாவீரர்களின் நினைவினைச் சுமந்து.. விழிகளை நனைத்த வெடியின் ஓசை இன்னும் செவிகளின் சேமிப்பில் .. விடியலின் வித்தாகிப் போன வீரர்களே.. – உங்கள் சிரித்த முகங்களை நினைத்து .. தளராது தொடர்வோம் உம் பயணம்… தமிழீழம் அமைப்போம் உறுதி…. லெப் கேணல் பொன்னம்மான் யோகரத்தினம் குகன் தாயின் மடியில் : 23-12-1956 தாயக மண்ணில் : 14-02-1987 யாழ்ப்பாணம்,தமிழீழம் லெப் கேணல் பொன்னம்மான் உடன் விடுதலைக்காய் வித்தானவர்களின் விபரம் மேஜர் கேடில்ஸ் ( திலீபன்) கப்டன் வாசு (சுதாகர்) லெப். சித்தாத்தர் (வசீகரன்) 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்) வீரவேங்கை யோகேஸ்(பாலன்) வீரவேங்கை…

  9. 15.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள். இன்றையநாளில் களமாடி வீழ்ந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

  10. Started by karu,

    வீரம் பிறந்ததடா.... வீரம் பிறந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய ஆண்மைக் குமரனடா - பெரும் ஆபத்தையே பனியாக மதித்திட்ட ஆதித்ய சோதியடா சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய சிந்தனையாளனடா - எங்கள் செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற செல்வக் குமரனடா இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட எங்கள் தலைவனடா - தமிழ் விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும் விதியை மறுத்தவன் டா செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச் செதுக்கிய சிற்பியடா - ரத்தம் சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச் சீறிய வேங்கையடா. குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து குதறிட வைத்தவன் டா - அட எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற - எம் ஈழத்தலைமகன் டா து…

    • 0 replies
    • 1.4k views
  11. சொந்தப்பெயர்: சிவஞானசுந்தரமூர்த்தி ஐங்கரன் இயக்கப்பெயர்: ஜெயம் முகவரி: புலோலி தெற்கு , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் சம்பவம்: முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம். உறவுகளே! இம் மாவீரன் பருத்தித்துறையிலுள்ள யா/புற்றளை மகாவித்தியாலயத்தில் 1995 வரை கல்வி கற்று அவ்வாண்டிலேயே விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் ஜெயம் என்னும் பெயருடன் சிறந்த விடுதலைப் புலியாக முள்ளிவாய்க்கால் இறுதி வரை செயற்பட்டவர். ஏற்கனவே இவரது தம்பியாரான கடற்கரும்புலி மேஜர். பொதிகைத்தேவன்( சிவஞானசுந்தரமூர்த்தி. தயாபரன்)மாவீரராகியுள்ளார். இப்புகைப்படத்திலுள்ள ஐங்கரன்/ ஜெயம் என்பவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் , சிங்…

  12. ” பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.” - தமிழீழத் தேசியத் தலைவர் ,மேதகு வே.பிரபாகரன். எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சு…

  13. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. போராளி போராளி புலிபடையின் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில்…

  14. 1976 இல் இருந்து 83 வரை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் ஒன்றாக படித்தோம். 83 a/l இக்கு பின்பு சில காலங்கள் இருவரும் சந்திக்கவில்லை, பின்பு கூடிய சீக்கிரம் சந்திப்போம் என்று நினைக்கவில்லை. 1986 என்று நினைகின்றேன், ஒரு நாள் எங்கள் கிராமத்து தெருவில், சில பெடியல் நடந்து வந்தார்கள். அதில் மெல்லிய உயரமான உருவமும் சாரம் அணிந்த , உடம்பிக்கு பெரிய சேட்டும், சுருள் முடியுடன் ஒருவர் எனது பெயரை சொல்லி கூப்பிட்டார். அது வசந்தன்தான். அதன் பின்பு எங்கள் ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வந்து போவார். சில மாதங்களில் வடமராச்சி லிபேரசன் ஆபரேஷன் தொடங்கி, எங்கள் குடும்பம் தென்மராட்சி இக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின்பு வசந்தனை சந்திக்கவில்லை. அவரின் நெல்லியடி தாக்குதல் பெரிய செய்தியாகி, அவ…

  15. ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்ட பழம்பெருமை வாய்ந்த தமிழர்தம் பூநகரி மண்ணில் அவதரித்த லெப் கேணல் தமிழ்வாணன் படைத்துறைச் செயல்பாடுகளிலும் முத்திரை பதித்தவர் ஆவார். ஆரம்பத்தில் மன்னார் மாவட்டப் படையணியில் இயங்கியவர். இவரை புலியாகப் புடம்போட்ட பாசறை”மன்னார்- 14” ஆகும். கரும்புலி மேஜர் டாம்போ அவர்களிடம் போர்க்கலையை பயின்றதாக நண்பர்கள் கூறக் கேள்விப் பட்டதுண்டு.(உறுதி செய்யவும்) மன்னார் மாவட்ட மருத்துவப் பொறுப்பில் இருக்கும் போது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அரும்பணி ஆற்றிவர். இயக்கத்தில் மிகுந்த விசுவாசம் கொண்டவர். பிழைகள், தவறுகள் யார் இழைத்தாலும் தயங்காமல் தண்டனை கொடுப்பார். அல்லது தண்டனை பெற்றுக்கொடுப்பார். பூநகரி மண் மீட்புக்கான “தவளைப் பாய்ச்சல்”…

  16. இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு..!

  17. [size=3]பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க மு…

  18. ஜெயக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் மாங்குளம் மற்றும் கனகராயன்ஆற்று பகுதிகளில் காவியமான லெப்.கேணல் டயஸ் உட்பட்ட 17 மாவீரர்களினதும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளில் காவியமான ஒன்பது மாவீரர்களினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 06.10.1998 அன்று மாங்குளம் நோக்கி முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் லெப்.கேணல் தீபராஜ் (டயஸ்) (சுப்பிரமணியம் வரதச்சந்திரன் - அம்பாறை) கப்டன் இலக்கியன் (லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின் - யாழ்ப்பாணம்) கப்டன் மதர்சகுமார் (கோகுலன்) (நாகலிங்கம் சிவநேசன் - மட்டக்களப்பு) கப்டன் கெங்காதரன் (சிவசுப்பிரமணியம் பகீரதன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தமிழ்மணி (யோதி) (கோபாலப்பிள்ளை நமசிவாயம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் புதியவன்…

  19. 31.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் நிசாரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/31 தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.

  20. முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மேஜர் சர்மா என்றா மாவீரனதும் , மற்றும் அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் , 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || முல்லைக் கடற்பரப்பில் 04.08.2001 அன்று நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில்…. || இதேநாளில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில்…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

    • 4 replies
    • 1.4k views
  21. [size=4]“ரணகோச - 5” முன்னகர்வு முறியடிப்பின்போது காவியமான 23 மாவீரர்கள், நல்லூரில் காவியமான லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன் உட்பட 12.09.1999 அன்று வீரச்சாவைத் தழுவிய 28 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 12.09.1999 அன்று “ரணகோச -5” நடவடிக்கை மூலம் மன்னார் மாவட்டத்தின் சிராட்டிக்குளம், பள்ளமடு மற்றும் பெரியமடுப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் சிறிலங்கா படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய படை நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதன்போது 50ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 700ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர். இந்த வெற்றிகர முறியடிப்புச் சமரின்போது 23 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு பள்…

    • 9 replies
    • 1.4k views
  22. இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்திருந்தனர். இவர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

  23. [size=4]இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா - இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா - பாலையூற்று, திருகோணமலை.) மேஜர் அப்துல்லா …

  24. 30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) (கணேசன் சிவகுருநாதன் - ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) (கந்தசாமி தனேந்திரன் - காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் புகழினி (விஜயராணி வடிவேல் - மூதூர், திருகோணமலை) கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) (இராசலிங்கம் மலர்விழி - பூநகரி, கிளிநொச்சி) ஆகியோர் வீர…

  25. களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி On Apr 1, 2020 லெப்.கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:06.07.1973 வீரச்சாவு:01.04.2000 நிகழ்வு:கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி உசாரடைந்து, எமது நகர்வுகளையே அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச வாகனங்களையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவரின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.