மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வி…
-
- 16 replies
- 4.5k views
-
-
எம் நினைவுகளின் என்றும் நின்றகலாத நேசத்துக்குரிய மருத்துவப்போராளி லெப்டினன்ட் கேணல் கமலினி, கேணல் லக்ஸ்மன் அண்ணனின் மனைவி. முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையில் கடமையின் போது வீரமரணத்தை தழுவிக்கொண்டார். ->Credit: Facebook
-
- 0 replies
- 370 views
-
-
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகனின் 23 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன…
-
- 3 replies
- 1k views
-
-
Sritharan Gnanamoorthy மேஜர் சோதியா! மேஜர் சோதியா என்றவுடன் நெடிதுயர்ந்த தோற்றம்,வெள்ளை நிறம், சிரித்த முகம் இவைதாம் எம் நினைவுக்கு வரும்.நான் முதன் முதலில் சோதியாவை மணலாற்றுக் காட்டில் புனிதபூமியிற்தான் பார்த்தேன்.நான் தலைவரோடு வாழ்ந்த அந்த மறக்க முடியாத நாட்களின் போதுதான் அடிக்கடி அவரைப் பார்க்க முடிந்தது. "பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை". பெண்கள் விடுதலை பெறாமல் தேசவிடுதலை…
-
- 1 reply
- 367 views
-
-
காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி (வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) (கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில் கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்) (இராமசாமி …
-
- 14 replies
- 1.2k views
-
-
ஓட்டுக்குழு கருணா சதிவலையில் சிக்குண்ட லெப். கேணல் நீலன் என்றும் அழியாத சுவடு மட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சி…
-
-
- 7 replies
- 1.9k views
-
-
[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size][size=2] [size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள…
-
- 0 replies
- 922 views
-
-
” பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.” - தமிழீழத் தேசியத் தலைவர் ,மேதகு வே.பிரபாகரன். எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சு…
-
- 13 replies
- 1.4k views
-
-
காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995 ... அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன. துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன. ” டோறா “ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “ பீரங்கிப் படகுகள் மூன்று. இரும்புக் காவல். அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள். ” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள். ஆரம்பித்தது உக்கிரமான சண்டை. …
-
- 8 replies
- 1.3k views
-
-
14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்க…
-
- 8 replies
- 2k views
-
-
அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பிலுள்ள அக்கரைப்பற்றிற்கு சென்றவேளை ஒட்டுக்குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவடைந்திருந்தார். இம் மாவீரரிற்கு எமது வீரவணக்கங்கள். http://www.eeladhesam.com/index.php?option இன்றையநாளில் களமாடி வீழ்ந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 5 replies
- 1k views
-
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்... தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா வவுணதீவு போராளிகளின் காவலரணைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை எதிரியின் சதிச் சூட்டில் வீரச்சாவடைந்தார். இயற் பெயர் – கந்தையா உலகநாதன் இயக்கப் பெயர் – ரமணன் தாய் மடியில் – 14.10.1965 தாயக மடியில் – 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப்…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
சென்ற 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட….. ….கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா…
-
- 9 replies
- 1.8k views
-
-
செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங…
-
- 0 replies
- 204 views
-
-
புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது லெப்.கேணல் தட்சாயினி (மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா - புலோப்பளை, யாழ்ப்பாணம்) கப்டன் பாஞ்சாலி (சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிய…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
[size=1]25.10.2006 அன்று திருகோணமலைத் துறைமுக கடற்ப்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோற படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட[/size][size=1] [/size][size=1] கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) கந்தசாமி கோபாலகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) தெய்வேந்திரன் யோகேஸ்வரன் திருகோணமலை ஆகிய கடற்கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=1] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size]
-
- 7 replies
- 841 views
-
-
07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகள் 12ம் ஆண்டு நினைவு நாளும், வடபோர் முனையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் அக்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும், இந்து மாகடலில் 07.10.2007 அன்று சிறலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகர தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்திய லெப்.கேணல் நிரோஜன் அவர…
-
- 8 replies
- 2.6k views
-
-
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர். முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படு…
-
- 13 replies
- 1.7k views
-
-
பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.! Last updated May 28, 2020 29.05.2000 அன்று மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன் ஆகிய மாவீரரின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட ந…
-
- 5 replies
- 1.5k views
-
-
லெப். கேணல் ஜீவன் டிசம்பர் 6, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து ஜீவனுள்ள நினைவுகள்… “மட்டக்களப்பு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி” தளபதி லெப். கேணல் ஜீவன். கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் (மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. ஆபத்தை தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து பின் செல்வதே ஒரு கலை. தென்ஈழக் காடுகளிலே இந்தக் கலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்திவெட்டுப் போல் ஒரு நகர்வு… …
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழ தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய நாட்களில் இப்பக்கத்தில் அவர்களின் பதிவு செய்யப்படும். (படங்களிற்கு கீழேயுள்ள இணைப்பில் சென்று அம் மாவீரர் தொடர்பான மேலதிக விபரங்களைப் பார்க்கலாம்) சனவரி 3ம் நாளில் மடிந்த மாவீரர்களின் ஒளிப்படங்கள் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14640 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14641 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&…
-
- 2 replies
- 7.3k views
-
-
-
லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன், 2ம் லெப். பரன், வீரவேங்கை ஜோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை கவர், வீரவேங்கை தேவன் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒ…
-
- 2 replies
- 695 views
-
-
தமிழீழ தேசிய மாவீரர் வாரம் ஜனவரி 15, 2013 | வழித்தடங்கள். களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான் “தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் “தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது ” உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது. “இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்” 1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் …
-
- 7 replies
- 1.8k views
-
-
21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும். http://eelavenkaii.blogspot.ch/2011/10/8.html
-
- 1 reply
- 1.4k views
-