Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. 17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/17/ தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  2. தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்…

  3. இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் ச…

  4. தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்.... எல்லைப்படை மாவீரர்கள் எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர் மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர் -அன்பரசு ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக…

  5. எமக்காக தனது உடலை உருக்கி எம் ஈழ விடுதலைக்கு உரம் தந்த தியாக தீபம் லெப். கேணல் தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் . [இந்த இசைப்பாவை பல பழுக்கள் மத்தியில் ஈழப்பிரியனின் வேண்டுதலுக்கு அமைய ஒரு மணித்தியாலத்தில் இசை வடிவம் செய்தோம் .இசை குரலில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க .] https://www.facebook.com/video.php?v=1497927537128752&set=vb.100007345609043&type=2&theater

  6. 30.10.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பல்மீதான (துன்கிந்த) தாக்குதல் . ஐனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 22.04.2000 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு மாவீரர்களின் தியாகத்தால் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்கள் மீட்க்ப்பட்டன .(சுமார் இருபது கடல்மைல் கரையோரப் பிரதேசங்களும் உள்ளடக்கம். ) அந்தவகையில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ராடர் நிலையமும் யாழ் குடாரப்புக்கரையோரத்தில் அமைக்கப்பட்டு கடற்கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளும் யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த சிங்களப்டைகளுக்காக திருகோணம…

  7. 30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  8. தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்! நன்றி "விடுதலைப்புலிகள்" விடுதலை வீரியம் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல் அக்பர் / வழுதி.................. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில…

  9. தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி ! வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி ! "உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்" என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த ஆரம்பம் கல்முனை - துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. பெரும் பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர். அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா, " இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது…

  10. "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு லண்டன் Northwick Park மருத்துவமனைக்கு அண்மையில் WATFORD ROAD, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள "WESTMINISTER UNIVERCITY HALL" இல் "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மற்றும் இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. http://youtu.be/tj7ASCYiUpQ எதிர்வரும் 18-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த ந…

  11. தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணை…

  12. கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும், இராசதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். 14.12.2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் இறுதியெய்தினார். அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய சரித்திரம், http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/tamil-eelam/history-of-bala-anna-3.html

  13. தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.! “தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி ஆழியவளை மண்ணிலிருந்து விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட கரும்புலி மேஜர் விடுதலை” கந்தையா இந்திராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவள் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மண்ணில் பிறந்து வளர்ந்தவள். இந்த மண்ணும் தேசவிடுதலைக்குப் போராட பல போராளிகளை உகந்தளித்த மண். அந்த வகையில் இவளும் போராட்டத்தின் தேவையை உணர்ந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக 1992ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகளில் முழுமையாக இணைத்துக் கொண்டாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தொடர்ந்து ஏனைய பயிற்சிகளையும் முடித…

  14. விந்தன் அண்ணாவுடனான அறிமுகம் கிடைத்தது எனது ஒன்றுவிட்ட அண்ணன்கள் மூலம்தான். அது 1983களின் பிற்பகுதி. ஆடிக்கலவரம் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் தமிழ் இளைஞர்களிடம் அது விட்டுச்சென்ற தாக்கம் அதிகம். இளைஞர்கள் எல்லோரும் ஏதேனுமொரு அமைப்புடன் தொடர்புகொண்டு தீவிரமாக இயங்கியகாலமது. அவ்வாறே விந்தன் அண்ணாவும் புலிகள் அமைப்புடன் இணைந்து தீவிரமாக இயங்கத்தொடங்கியிருந்தார். அண்ணன்களைப்போலவே அவரும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதிநேரமாக வல்லையிலும் வெவ்வேறு இடங்களிலும் இரவில் சென்றிக்கு செல்வார். அக்காலத்தில் சென்றிக்கு செல்வோர் கொழித்தி எறியும் கிரனைட்டையே வைத்திருப்பார்கள். குமுழமுனையில் வாழ்ந்துவந்த மாமாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு சிறையுடைத்து வெளியேறிய புள…

  15. தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒருசேர போற்றி வணங்கும் மாவீரர் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.

      • Like
    • 58 replies
    • 6.7k views
  16. தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள். 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29…

  17. தேசியத் தலைவரின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டிய குடும்பத்தில் பிறந்த கப்டன்அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் 'விடுதலை இயக்கம்' என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால் , எத்தனை விதமான உள்ளங்களை , சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின்உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம். எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத்தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான். மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொ…

  18. தேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..! லெப் கேணல் கருணா நாகேந்திரம் நாகசுதாகர். வீரச்சாவு. 15.04.2009 சம்பவம்..புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது. இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்குச் செல்கிறான். அங்கு ம…

  19. தேசியத் தலைவர் தோள்தட்டி வளர்த்த கடல்வேங்கை. லெப் கேணல் பழனி. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசியக் கடல் நடவடிக்கையான ‘ஒப்பரேசன் மூச்சு’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். நினைவுகளுடன் புலவர். க…

  20. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. எந்தக் கடல் சண்டையெனிலும் படகுக் கட்டளை அதிகாரியாய் அங்கே பழனி நிற்பான். "பப்பா வண்" எனும் கோட்வேட் அவனுக்கு பொருத்தமாய் அனைவர் வாயினிலும் உச்சரிக்கலானது. பூநகரி தவளைப்பாச்சல் சமர் தொடக்கம், முல்லை வெற்றிச்சமர், ஆனையிறவு முப்படைத்தள அழிப்பு வரை குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்க நடவடிக்கையின் கதாநாயகன் எங்கள் பழனி என்பது தமிழர் வரலாற்றுப்பதிவுகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது. சிங்களத்தின் கடற்கலங்களை எல்லாம் புரட்டிப் போட்ட சமர்களிலெல்லாம் பழனியின் கொமாண்டும் கணிசமாய் இருக்கும். உகண, பபதா, வலம்புரி…

  21. தோல்வியில் மீளுவோம் ************************ நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர் மட்டுமே…

    • 3 replies
    • 886 views
  22. 04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர். முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.