மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
யாழ். வலிகாமத்தில் 30.10.1995 அன்று சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் அகிலா - லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தம்மை அர்ப்பணித்து வழிமூடிய இந்த வீரவேங்கைளிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 15 replies
- 2.6k views
-
-
24.06.1997 அன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன்…
-
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
நாளை கரும்புலிகள் நாள் , தகர்க்க முடியாத எதிரியின் இரும்புக் கோட்டைகளைத் தமதுயிரை ஆயுதமாக்கித் தகர்த்து எறிந்த வீர மறவர்களின் நாள். 1987 ஜீலை ஐந்தாம் நாள் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இருந்த இராணுவக் காம்ப் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்றக் இனால் மோதியதன் மூலம் புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அந்த இமாலய சாதனையைச் செய்தவன் துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் வசந்தன் எனப்படும் கப்டன் மில்லர் ஆவார். வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியினரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டார் மில்லர். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் இரா…
-
-
- 15 replies
- 2.7k views
-
-
மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வி…
-
-
- 15 replies
- 3.2k views
-
-
திருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் இருந்து 13ம் கட்டைப் பகுதி நோக்கி வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மாதவன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாய் மண்ணின் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்
-
- 14 replies
- 1.9k views
-
-
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. இன்று அவரின் நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோ…
-
- 14 replies
- 1.9k views
- 1 follower
-
-
18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 14 replies
- 1.5k views
-
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 27.02.2009 அன்று விமானக்குண்டுத் தாக்குதலால் வீரச்சாவடைந்தார். 3ம் ஆண்டு கடந்த நினைவுநாளில் இன்று அருணாண்ணா பற்றிய பதிவுகள் சில:- கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும் ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைக…
-
- 14 replies
- 2.4k views
-
-
[size=4]மன்னார் அடம்பன் பகுதியில் காவியமான மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் ஆகிய மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் (மருசலீன் பியூஸ்லஸ் - பனங்கட்டிக்கொட்டு - மன்னார்) 2ம் லெப்டினன்ட் றோம் (செல்வராசா செல்வநாதன் - அடம்பன் - மன்னார்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வீரவரலாற்றின் சி…
-
-
- 14 replies
- 2.2k views
-
-
இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டு…
-
-
- 14 replies
- 2.4k views
-
-
வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் லெப்.கேணல் சிவாஜி உட்பட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த 25 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் சிவாஜி (கிருஸ்ணன் சிறிக்குமார் - கொக்குவில், யாழ்ப்பாணம்) மேஜர் றோயல் (சோமசுந்தரம் சோபராசா - தென்னமரவடி, திருகோணமலை) மேஜர் அப்பன் (சின்னத்துரை ரவிக்குமார் - மட்டுவில், யாழ்ப்பாணம்) மேஜர் பொழி…
-
- 14 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடிய…
-
- 14 replies
- 3.5k views
- 1 follower
-
-
கேணல் ரமணன் வீரவணக்கம் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம்இ நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க …
-
- 14 replies
- 3.6k views
-
-
14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிய நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு இன்றாகும் . வாகரை - வாழைச்சேனை சாலையில் கிருமிச்சை சந்தியில் அமைந்திருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் சோழவளவன் - சோழன் (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு) மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு) மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு) …
-
- 14 replies
- 6.4k views
-
-
-
-
- 14 replies
- 4k views
-
-
காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி (வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) (கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில் கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்) (இராமசாமி …
-
- 14 replies
- 1.1k views
-
-
புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது லெப்.கேணல் தட்சாயினி (மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா - புலோப்பளை, யாழ்ப்பாணம்) கப்டன் பாஞ்சாலி (சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிய…
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமாமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய் பார்க்க படங்கள் மீது அழுத்தவும்
-
- 14 replies
- 2.4k views
-
-
அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் - தம்புலுவில், அம்பாறை) கப்டன் கமால் (கந்தையா செல்வராசா - அம்பாறை) கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் - கோமாரி, அம்பாறை) லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் - தம்புலுவில், அம்பாறை) 2ம் லெப்டினன்ட் அறிவொளி (…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
அம்பாறை வனப்பகுதியில் 15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பவமாறன், லெப்.கேணல் அயோனி லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்க…
-
- 14 replies
- 3k views
-
-
கண்டிவீதியைக் கைப்பற்றவென ‘வெற்றி நிச்சயம்” (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது. 13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
தமிழீழ கடற்பரப்பில் 01.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அண்ணாச்சி(சிறி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈந்த இந்ம மானமாவீரனிற்கு வீரவணக்கங்கள். படத்தைப் பெரிதாய்ப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்.
-
- 14 replies
- 2.6k views
-
-
வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்த 'வீரமங்கை' செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு 2011 ம் ஆண்டு இதே தினத்தில் தூக்குத் தண்டணையை நிறைவேற்ற இந்திய அரசு தீர்மானித்திருந்தது. இவர்களுக்கான தூக்குத் தண்டனையை தடுத்து அம் மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27 ) என்ற வீரமங்கை காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச்சாவடைந்தார். இந்நிலையில் 3 பேரது உயிரையும் காக்க அரசுக்கு உருக்கம…
-
- 14 replies
- 1.4k views
-
-
மணலாற்றில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், வவுனியாவில் காவியமான வீரவேங்கை கபில்ராஜ் என்ற மாவீரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மணலாற்றில் சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். அவர்களின் விபரம் வருமாறு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் (பொன்னுச்சாமி பாஸ்கரன் - தையிட்டி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மில்ராஜ் (வைரமுத்து விஜேந்திரன் - கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை) வீரவேங்கை அறிவழகன் (சுப்பிரமணியம் வேலாயு…
-
- 14 replies
- 1.8k views
- 1 follower
-
-
பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ற குறியீட்டுப் பெயருடன் பெருமெடுப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமா…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-