பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
பெருமைப்படவைக்கும் தமிழர் தொன்மைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, அரும்பொருள்காட்சியகத்தில் இலங்கைத்தமிழரின் பூர்வீகத்தொன்மையை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் எச்சங்கள் பல பாதுகாக்கப்பட்டுவருகின்றன. தென்இந்தியப் படையெடுப்புகளின்போது, குடியேறியோர் அல்ல தமிழர்கள்; அவர்கள் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்த வாழ்வியல் முறைமைகளுடனும் ஆட்சியதிகாரத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள தொல்லியல் பொருள்கள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துகின்றன. கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியங்களில் நாகநாடு என்றும் பாளி இலக்கியங்களில் நாகதீபம் என்று கூறப்படுவதன் வாயிலாக மட்டுமே நாம்…
-
- 1 reply
- 4.4k views
-
-
நேற்று ஓசுரில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த த.வ.ஆ.ந'வின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுகளின் சுருக்கம் ஒரிசா பாலு ஐயா அவர்களால் பகிரப்பட்டது. அவரின் உரைகளை காணொளியில் காண்பதற்கும் நேரில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவரிடம் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ஏராளம். கூட்டத்தில் சொல்ல முடிந்தவை சொற்பமே. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாகரிகம் விளங்கியது எவ்வாறு என்றும், ஆமைகளிள் கடல் நீரோட்டத்தினை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதையும், அதனை ஆமைகளிடத்திலிருந்து தமிழர் கற்றுகொண்டு உலகம் முழுவதும் பயனம் செய்த விதத்தினையும் தக்க சான்றுகளோடு விளக்கினார். இன்றைக்கு மற்ற மொழிகளிலும் ஊர் பெயர்…
-
- 6 replies
- 4.4k views
-
-
இலக்கியங்களில் யாழ் தொல்காப்பியத்தில் தொடங்கி, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பைப் பற்றியும், பல்வகை யாழ்களைப் பற்றியும், யாழின் உறுப்பமைதியைப் பற்றியும் குறிப்புகள் பல இருக்கின்றன. இசைக் களஞ்சியமாய் விளங்கும் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், …
-
- 6 replies
- 4.4k views
-
-
தனித் தமிழா, கலப்புத் தமிழா? தமிழில் வடமொழி சொற்களைக் கலந்து எழுதுவது முறையா? உங்கள் கருத்து என்ன?
-
- 20 replies
- 4.4k views
-
-
(1) மனிதா . . . மனிதா ......!” நாமும் தமிழர்களா . . . ? ( இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் - அன்னை தெரேசா) “புலம்பெயர் தமிழர்களே !!!!! நீங்களும் கடவுள் ஆகுங்கள்” “நியூ யவ்னா” இணைய தளத்தில் சில சமயங்களில் காணப்படும் தலையங்கம் இது . அந்த தலையங்கத்தை முதல் முதல் பார்த்தபோது “ கடவுள் ஏன் கல்லானார் . . . கல்லாய் போன மனிதர்களாலே…” கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றில் வரும் தொடக்க வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. கடவுள்தான் ஏற்கனவே கல்லாகிவிட்டாரே இந்த கேடு மனிதர்களாலே. மேலும் படித்து பாருங்கள் கீழே உள்ள ஒரு கவிதையின் …
-
- 10 replies
- 4.4k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய அறிவு இயக்கம் நாள்: 10.04.2015 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- “மாட்டு இறைச்சி விருந்தும் தாலி கழற்றுதலும்” என்றதொரு நிகழ்வைப் பகுத்தறிவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. பகுத்தறிவாளர்கள் என்றால் திராவிடர்கள் என்றும், திராவிடர்கள் என்றால் ஆரிய எதிர்ப்பாளர்கள் என்றும், அத்தகையோரே உண்மைத் தமிழர்கள் என்றும் பரப்புரை செய்து அரசியல் களத்தில் வெற்றியும் பெற்று, ஆள்வினை ஏற்றுத் தின்று கொழுத்து இன்று உண்மைத் தமிழர்களின் வாழ்வியலுக்கு நேர் எதிர் நிலையை எடுத்துத் தாலியறுப்பது ஏன…
-
- 4 replies
- 4.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இந்தியா 10.10.87 ம் ஆண்டு யுத்தப் பிரகடனம் செய்ததை தெடர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனால் எழுதப்பட்ட முதலாவது கடிதம்... தலைமைச்செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம். 12.10.1987 கனம் ராஜீவ்காந்தி அவர்கள் இந்தியப்பிரதமர் புதுடில்லி கனம் பிரதம மந்திரி அவர்களே யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப்புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காகவும் எமது போராளிகளையும் பொதுமக்களையும் காப்பதற்காக நாம் இந்தியா மற்றும…
-
- 5 replies
- 4.4k views
-
-
பார்ப்பனிய நஞ்சு கலந்து வணிகமாக்கும் மணிரத்னம் - தமிழ்செல்வன் நிகழ்காலத்தில் ஏற்படும் அரசியல் அதிர்வுகளை அப்படியே பார்ப்பனிய நஞ்சு கலந்து வணிகமாக்கும் கலையை (!) கற்றவர் மணிரத்னம். அதில் கொஞ்சமும் அச்சு பிசகாமல் வந்திருக்கும் அவரின் சமீபத்திய வெளியீடு “இராவணன்” தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் தேசிய சந்தையை குறி வைத்து எடுத்த இப்படத்தில் அவர் கையில் எடுத்திருப்பது இந்திய பழங்கடி மக்களின் பிரச்சனைகள். ‘வரலாற்று நம்பிக்கைகள் + காட்சி திருட்டு + அக்குள் தொப்புள் தெரியும் ஆபாச நடனம் + பார்ப்பனிய புரட்சி = மணிரத்னம் படங்கள்’ என்ற அவரின் வழக்கமான ஃபார்முலாவை மீறாமல் வந்திருக்கும் இப்படம் பார்வையாளர்களை சிந்திக்க விடாமல் குழப்பியுள்ளது. ப…
-
- 15 replies
- 4.3k views
-
-
தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்குச் சோதனை தமிழ் மொழியை தெரிந்து கொள்வது முக்கியமல்ல அதனை எழுத்துப் பிழைகளின்றியும் பேசும்பொழுது அதற்கான ஒலிக்குறிப்புகளை அட்சரசுத்தமாக பேசுகின்ற தமிழர் எத்தனைபேர்?? இவைகளை ஆய்வு செய்வதே இந்தப்பதிவின் நோக்கம் . சங்கம் வளர்த்து தமிழைக்கட்டிக் காத்த தமிழகம் இன்று தமிழ் மொழிப்பாவனையில் தலைகீழாக நிற்கின்றது . இதற்கு மூலகாரணமாக கடந்த 20 வருடங்களுக்குப் பின்பு முன்னணியில் இருக்கின்ற இரண்டு திராவிடக்கட்சிகளின் ஊடகங்கள் , தொலைகாட்சிகள் தமிழக இளைய சமூகத்திடம் ஏற்படுத்திய தமிழ்கொலை என்பன முன்னணியில் நிற்கின்றன . அதையே பின்பற்றி இலங்கையிலும் , புலத்திலும் தமிழ்கொலைகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன . முன்பு தமிழ் உச்சரிப்பை மக்களிடம் கொண்டு செ…
-
- 12 replies
- 4.3k views
-
-
கொறியா என்னும் நாடு இருபிரிவுகளாகப் பிரிந்திருக்க வட கொறியா சமீப காலமாக உலக நாடுகளுக்கு ஓரச்சுறுத்தலாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். அவர்களது மொழியில் பல தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. லண்டன் soas பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவி, தமிழ் அறிஞர்கள் பலராலேயே கொறிய மொழி வளம்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு கற்கும் கொறிய மாணவர் ஒருவர் கூறியதாகக் கூறினார். எத்தனையாம் நூற்றாண்டில் என்று தெரியவில்லை. கொறிய மன்னன் ஒருவருடன் தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன் நட்புப் பூண்டிருந்தான் என்றும், அவன் கனவில் அவர்களின் தெய்வம் வந்து "தமிழ் இளவரசி ஒருதத்தியை மணமுடித்து வைத்தால் உன் நாடு செழிப்புறும்" என்று கூறியதாகவும், அதை நம்பிய கொரிய மன்னன் தன்னுடன் நட்புப் பூண்டிருந்த கன்னியாகுமர…
-
- 23 replies
- 4.3k views
-
-
பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண…
-
- 3 replies
- 4.3k views
-
-
- ஆரியர்
- தமிழர்
- திருக்குறள்
- நாகசாமி
-
Tagged with:
திருக்குறள் ஆரிய சாத்திர நூற்களின் வழிநூலா? ஆய்வுத் தொடர்-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" -பாவேந்தர் பாரதிதாசன் இப்போது இந்தக் கேள்வியின் அவசியம் ஏன் வந்தது என்று தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்கலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வழிநூலே என்றும், குறிப்பாக, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று தரப்படுத்தி, பிராமணருக்கு ஏனையோர் கீழ்நிலை என்றும், குறிப்பாக, சூத்திரர் பிராமணருக்கு அடிமை ஊழியம் செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவர் என்று சொல்லும் நால்வருண வருணாசிரம தருமத்தைத் தூக்க…
-
- 4 replies
- 4.3k views
- 1 follower
-
அவ்வையார் படம் அரை நூற்றாண்டுக்கு முன்பு மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியம். அவ்வையாராக நடித்த கே.பி. சுந்தராம்பாள் அக்காலக்கட்டத்திலேயே ஒரு லட்சரூபாயை அப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக பெற்று தமிழ் திரை சரித்திரத்தில் இடம் பிடித்தார். ஜெமினி பிக்சர்ஸின் எஸ்.எஸ். வாசன் இப்படத்தை தயாரித்து பெரும் லாபம் சம்பாதித்தார். இவையெல்லாம் நமக்கு தெரிந்த செய்திகள். இத்திரைப்படத்தின் பின்னணியில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்று பலரும் அறியாதது. அவ்வையார் கதையை திரையில் கொண்டுவர முடிவு செய்த ஜெமினியின் கதை இலாகா கதை விவாதத்துக்காக அமர்ந்திருக்கிறது. இது ஏற்கனவே நாடகமாக பெரும் வெற்றி பெற்ற கதை என்றாலும் திரைக்காக சில புதிய விஷயங்களை மெருகேற்றுகிறார்கள். கதையின் பாத்திரங்களுக்கு …
-
- 17 replies
- 4.3k views
-
-
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் #உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் …
-
- 0 replies
- 4.3k views
-
-
கடந்த பதிவில் களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம். களப்பிரர்கள் என்பவர்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்கள். அவர்கள் தான் பிறகு ஒன்று சேர்ந்து படை திரட்டி தமிழகத்தைக் கைப்பற்றி முன்னூறு வருடங்கள் ஆண்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தொண்டை நாடு என்பது பல்லவர்கள் ஆண்ட பகுதி. அதாவது தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்று சென்னையை உள்ளடக்கிய ப…
-
- 3 replies
- 4.3k views
-
-
நூல் மதிப்புரை ஈழக்கதவுகள் 2002 அக்டோபர் திங்களில் யாழ் நகரில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க்கடல்" மாநாட்டுக்குச் சென்று வந்த சூரிய தீபன் நமக்கு ஈழக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு பயண நூல் அல்ல. தமிழீழத்தின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்கூட அல்ல. தமிழீழ மக்களின் தணியாத விடுதலை வேட்கையையும் வீர உணர்வுகளையும் வடித்துத் தரும் வீர காவியம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். வியத்நாமிலும் கியூபாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்தவர்கள் கூப்பிடு தூரத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் அவலத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் சூரிய தீபன் உலகம் ஆதிக்கக்காரர்களை மாவீ…
-
- 0 replies
- 4.3k views
-
-
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பத…
-
- 0 replies
- 4.3k views
-
-
சங்கிலிய மன்னன் சங்கிலிய மன்னன் தொடரின் முன்னுரை வித்தியாசமாக ஒரு தொடர் பதிவு தொடர் கதையாக எழுதுவது எனத் தீர்மானித்து நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தாமதம் தொடர் ஆரம்பித்த பின் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தாமதம். இனி நான் எழுத இருக்கும் சங்கிலிய மன்னனின் கதைக்கான முன்னுரைக்கு வருவோம். இதில் எனது கதைக்கான தயார்படுத்தல்களும் உண்டு. முன்னுரை ‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித…
-
- 4 replies
- 4.3k views
-
-
மனிதா .... மனிதா ..... ! இவர்களும் தமிழர்களா . . . ? [ “ ……. பொய்யை நான் வெறுப்பதன் காரணம் என்னவென்றால் உன்னைப்போலவே நான் என் வாழ்கையையும் கவனமாக கொண்டு செலுத்த விரும்புகிறேன், அப்படி செய்ய என் உண்மையான நிலைமையை நான் கணக்கிடக் கூடியதாக இருக்க வேண்டும். நீ எனக்கு பொய் கூறும்போது, உனக்கு உன் நிலைமை தெரியும் ஆனால் நீ எனக்கு பொய்யான விபரத்தை தந்து என்னுடைய வாழ்கையை இருட்டடிப்பு செய்கிறாய். …… “ (… The reason that I hate lies is because, like you, I wish to navigate carefully through life, and to do so I must be able to calculate my true position. When you lie to me, you know your position but you have given me f…
-
- 12 replies
- 4.2k views
-
-
உடையார் பாரி வரலாறு -2 ` பாரிவள்ளல் மகள்களாகிய அங்கவை சங்கவைக்குத் திருமணம். ஔவையாரே முன்னின்று நடத்திவைக்கிறார். மணமகன் திருக்கோவலூர் மலையமானாகிய தெய்வீகன். விநாயகப் பெருமானிடம் சொல்லி சேர சோழ பாண்டியர்களுக்குத் திருமண அழைப்பு எழுதச ்செய்வித்தார். அவர்கள் ஏற்கனவே பாரியிடம் பெண்கேட்டுப் போர் தொடுத்தவர்கள். இரண்டு பெண்கள்; மூன்று பேர் பெண் கேட்டார்கள். எவ்வகையில் பார்த்தாலும் யாராவது ஒரு வேந்தன் போர் தொடுப்பான். அவர்கள் நோக்கம் போரேயன்றி மண உறவல்ல. யாருக்குமே கொடுக்கவில்லையென்றாலும் போர் தொடுப்பார்கள். பாரியின் இறப்புக்குப் பின்னர் மூவேந்தர்களும் பறம்புநாட்டை அபகரித்துக்கொண்டார்கள். பாரி மகளிர் அபலைகளாக அநாதைகளாக ஒரு காட்டின் ஓரத்தில் விறகு பொறுக்கி ஜீவனம…
-
- 0 replies
- 4.2k views
-
-
சுமார் 12 வது நூற்றாண்டில் தான் அதாவது 800 வருடங்களுக்கு முன்னர் தான் 'கன்னடம்' என்கிற மொழி தமிழில் இருந்து தனியாக பிரிந்தது. தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் பலபல . அதில் நமக்கு நெருக்கமானவையாக இன்னும் இருப்பது 3 மொழிகள் . அவை நம்மை சுற்றியுள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை. இதில் மலையாளம் என்பது 75% தமிழும், 25% சமஸ்கிருதமும் கலவையாக கொண்ட மொழி . தெலுங்கு மொழியாவது 50% தமிழும், 50% சதவிகிதம் சமஸ்கிருதமும் கலந்தது. கன்னடமானது. 25 % தமிழும், 75% சமஸ்கிருதமும் கலந்தது. இந்த கன்னடம் 800 வருடங்களுக்கு முன்பு நம்மிடம் இருந்து பிரிந்தது. மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களால் ஆளப்பட்ட நிலம் தான் கர்நாடகம் என்பது இங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான சோழ வம்சத்து கோயில்களை பார்த…
-
- 1 reply
- 4.2k views
-
-
ART ATTACK: Drawings as old as 5000 years face threat from vandals,who have defaced most of the works by adding their element of creativity Until a year ago,the rocks of Porivarai boasted of prehistoric paintings.Drawings of deer,bull,mongoose,elephant and figures of human beings,dating back to 5,000 years,decorated the hill,situated near Karikkiyoor,34km from Kotagiri in the Nilgiris.Today,the paintings face threat from vandals,who have defaced most of the works by adding their own bit of creativity.The graffiti by the vandals,using ordinary paints over the prehistoric works,indicates scant regard for heritage. K T Gandhirajan,a member of the team that excavated the …
-
- 1 reply
- 4.2k views
-
-
இக் கட்டுரையை இப்பதான் ஈழநாதம்-மட்டக்களப்பு வார வெளியீட்டில் படித்தேன். குறித்த உதவி விரிவுரையாளர் "மட்டக்களப்பை" ஆய்வுக்களமாகக் கொண்டு எழுதியிருந்தாலும், "முழுமையான" தேச விடுதலையை முனைப்புடன் முன்னெடுக்கும் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விடையங்கள்தான்.... ஊர் கூடித் தேர் இழுப்போம்....[/ ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் மட்டக்களப்பு தமிழர் பண்பாடு சு.சந்திரகுமார்இ உதவி விரிவுரையாளர் பண்பாடு என்றால் ஆங்கிலத்தில் culture என அழைக்கப்படுகின்றது. பண்பாடு பற்றிப் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் முன் வைக்கப்பட்ட போதும் பின்வருபவை குறிப்பிடத்தக்கது. ''ஒரு மக்கட் கூட்டம் தமது சமூகஇ வரலாற்று வளர்ச்சியின் அடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதீ…
-
- 2 replies
- 4.1k views
-
-
சங்க இலக்கியங்கள் காட்டும் சோழநாட்டு இடப்பெயர்கள் முனைவர் அ. ஜான் பீட்டர் சங்க இலக்கியங்கள் இரண்டாயிரமாண்டு காலப் பழமையுடையன. இவ்விலக்கியங்களில் ஆங்காங்கே இடப்பெயர்களைச் சுட்டி புலவர்கள் பாடியுள்ளனர். புற இலக்கியங்களில் புரவலர்களின் வள்ளன்மையைப் பாடும் போது அவர்களின் ஊர்ப்பெயர்களையும் அவர்களின் உடைமையாய் விளங்குகின்ற இடங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடுகின்றனர். அக இலக்கியங்களில் உவமைக்காக இடப்பெயர்களையும் இடப்பெயர்களோடு தொடர்புடைய பிற பொருட்களையும் பிறரையும் குறித்துப் பாடுகின்றனர். இவையன்றி ஆலங்குடி வங்கனார் குடவாயில் கீரத்தனார் எனப் புலவர்களின் பெயர்களுக்கு முன்னொட்டாய் அப்புலவர்களது ஊர்ப்பெயர்கள் குறிக்…
-
- 1 reply
- 4.1k views
-
-
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!! பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும். சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்…
-
- 6 replies
- 4.1k views
-