Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தென்கிழக்காசியாவிலுள்ள தாய்லாந்தில் நிலையாகக் குடியேறி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தாக்கம் பழங்காலத்திலிருந்து தாய்லாந்தில் இருந்தது, இன்றும் ஓரளவு தொடர்ந்து இருந்து வருகிறது. 5,14,000 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள தாய்லாந்தின் வடக்கே பர்மாவும், இந்துமாப்பெருங்கடலும், கிழக்கே தாய்லாந்து வளைகுடாவும், கம்பூசியாவும் (கம்போடியா), தெற்கிலும், வடக்கிலும் லாவோஸ”ம் இருக்கின்றன. மேலும் கிரா பூசந்தி வழியாக மலேசியா தீபகற்பத்தின் எல்லை வரையிலும் தெற்கு நோக்கிச் செல்லும் தாய்லாந்து, மலேசியாவின் எல்லை அருகே இருக்கின்றது. பாங்காக் இந்நாட்டின் தலைநகரமாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சியாம் ஆகும். முதல்கட்ட தமிழர் குடியேற்றம் …

    • 6 replies
    • 2.7k views
  2. இந்நாட்டு மக்கள் தனக்கு பெறுவெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து என வழங்கப்படும். போருக்குச் செல்லும் முன் வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தலும் நறவம் என்னும் கள் வழங்குதலும் பண்டைக்கால தமிழர் மரபாகும். சங்க கால சேர மன்னர்களில் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அரசன் பெருஞ்சோறு அளித்ததை பாலைக்கௌதமனார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர் ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக் கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி தன்னைத் தேடி வருபவர்கள் வரையற…

  3. தாய்த்தமிழ் உறவுகள் தமிழீழ உணர்வாளர்கள் இந்த உலகத்தமிழர் நாட்காட்டியை வாங்கி பயனடைவீர். நண்பர் பொய்யாமொழி அவர்களின் சீரிய முயற்சியால் உருவான சிறப்பான நாட்காட்டி. சென்னை புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும். நாட்காட்டி திங்கள்காட்டி நன்கொடை ரூ. 100. கீழுள்ள எண் மூலமாக தொடர்பு கொண்டு நாட்காட்டியை பெற்றுக் கொள்ளவும். ------------------------------- * உலகத்தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை நாள்காட்டி வடிவில் பதிவுச் செய்யும் ஒரு *ஆவணத் தொகுப்பு.* * உலகில் முதன் முறையாக *''எண்ணுக்குள் எண்''* வைத்து உருவாக்கப்பட்ட *தனித்தமிழ் நாள்காட்டி.* * நம் மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, உரிமைக் காக்க, விடுதலைக்காக ஈகம் செய்தவர்வர்களின் படங்கள், …

    • 0 replies
    • 2.6k views
  4. முழுமையாக படிக்கவும்.....! (சோழப் பேரரசு 11ம் நூற்றாண்டில்) இந்திய சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும் பளபளக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி தகதகவென மின்னும் தந்தையும், மகனும் வந்தார்கள். அவர்கள் வாள் வீச்சு வடக்கையும் தாக்கி யது, கடல் கடந்தும் தாவியது. வேழம் அவர்களுக்கு வெள்ளாடாகவும், மலைகள் அவர்களுக்கு மண்மேடாகவும் காட்சியளித்தன. ‘வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரு…

    • 0 replies
    • 2.6k views
  5. விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும் கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும் புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள் எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள் வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த தீரர்களே எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள் தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள் [விண்வரும்.....] எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும் இன…

    • 2 replies
    • 2.6k views
  6. தமிழ் மொழியின் அவசியம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2.6k views
  7. ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது‪#‎அரசு‬ பள்ளிகளில் மற்றும் ஒரு சில ‪#‎தனியார்‬ பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம்‪#‎கலாச்சாரம்‬ ‪#‎பண்பாடு‬ போற்றும் ‪#‎ஆங்கில‬ ‪#‎பாடல்கள்‬தான்" ! # தமிழ் தாய் வாழ்த்து # ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒர…

  8. தமிழின் பிற சிறப்புகள்◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘ - தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது. – கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. - யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும். – இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல…

  9. தெவிட்டாத தமிழின் சுவையை, வெளிப்படுத்தும் பாடல்களை, இந்தத் திரியில் இணைக்கலாம் என எண்ணி, இந்தத் திரியை ஆரம்பிக்கிறேன்! முதலாவதாக, மகாகவியின் பதினாறு பாடல்களை இணைக்கின்றேன்! நீங்கள், முதல் பாடலைக் கேட்டதும், மற்றைய பாடல்கள், ஒவ்வொன்றாகத் தொடரும்! நீங்கள், தனித்தனியாகவும், தெரிவு செய்து கேட்கலாம்! பாடல்களைக் கேட்பதில், ஏதும் தடங்கல் ஏற்படின், திரியில் தெரியப் படுத்துங்கள்! வருகைக்கு நன்றிகள்!

  10. இந்து புத்தாண்;டு என்று எந்த ஒரு நாளில் உலகில் எந்த ஒரு பகுதியிலும், கொண்டாடப்படுவதில்லை. ஏனெனில், இந்து சமயத்தின் ஆரம்பம் எப்பொழுது என்று எவருக்குமே தெரியாது. ஆனால் சரித்திரமும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கிறிஸ்த்துவுக்கு முன் 3000 ஆண்டளவில் திராவிடர்கள் இந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்ததாகவும், அவர்கள் சிவலிங்கத்தையும் - அவரின் பாகமான சக்தியையும், வணங்கியுள்ளதாக சான்று பகர்கின்றனர். லிங்கவழிபாடு கிறிஸ்த்துவுக்கு முன் 1500ம் ஆண்டளவில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கு உரிய வணக்கமாக இருக்கவில்லை. அரச மரமும் கூட இந்துநதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த திராவிடர்களுக்கு புனிதமாய் இருந்தது. இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் அரசமரம் புனிதமாய் இருந்தது.…

  11. http://img119.imageshack.us/img119/298/pooddulf5.jpg பொட்டு வைத்த முகமோ... எவ்வளவு அழகாக மேக்-அப் செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், அழகு முழுமை பெறவில்லை என்பது பலரின் கருத்து. அதுவும் பட்டுப்புடவை கட்டிவிட்டால், பொட்டு அவசியம் தேவை என்று வலியுறுத்துகிறவர்களும் உண்டு. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரையில் பொட்டு அழகின் சின்னமாக கருதப்படுகிறது. முன்பு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும்தான் பொட்டு வைப்பார்கள் என்று கருதப்பட்டது. இப்போது அழகு என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பிடித்ததாக பொட்டு மாறிக்கொண்டிருக்கிறது. கடல் கடந்து வெளிநாடுகளிலும் ப…

    • 14 replies
    • 2.6k views
  12. வீர பாண்டிய கட்டபொம்மன் நாள் : 17.10.1799. இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம் ""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.'' ""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்த…

  13. தமிழின் தற்போதைய வரிவடிவம்(script) மற்ற எந்த இந்திய மொழிகளையும் விட எளிமையானது. அதிகம் நேர்க்கோடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாத கூட்டெழுத்துக்கள் கொண்ட எழுத்து முறை ஒரு மொழியை எளிமையாக்குகிறது. இந்தக் கூறுகளை ரோமன் வரிவடிவங்களில் காணலாம். ஒரு மொழியின் எதிர்காலம் வெறும் காகிதத்தில் எழுதப்படுவது, அச்சிடப்படுவது என்பதிலிருந்து, வாழ்க்கைக்காக பன்மொழியும் கற்கவேண்டிய மாணவர்களும் எழுத, வாசிக்க எளிதாக இருத்தல் என்ற நிகழ்கால, இயந்திரத்தால் வாசித்துணரப்படுதல் என்ற எதிர்கால, (தூரத்திலில்லை, மிக சமீபத்தில்தான் உள்ளது) தேவைகளுக்கு ஈடு கொடுப்பதில் உள்ளது. வரிவடிவத்தின் எளிமை இத்தகைய வளர்ச்சிக்கு ஒரு மொழியைத் தயாராக்குகிறது. ஓஹோ, இன்னொரு பெரியாரெழுத்து சமாசாரம் பேச வந்துவிட்ட…

    • 8 replies
    • 2.6k views
  14. ஒவ்வொரு ஊர்களுக்கும் பழங்கதைகள் நிறைய இருக்கும் அவற்றை அகழ்ந்து எடுத்துப் புதுப்பித்து அல்லது எதிர்காலச்சந்ததிக்கு ஆதாரமாக சேகரித்து வைக்கவேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. சிறிது சிறிதாக நம் கண் முன்னாலேயே நம்முடைய மூதாதைகளின் ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது தேடல்கள் அற்று மக்கிப் போகின்றன. இத்தகைய ஒரு கால கட்டத்தில் எமது இருப்பின் சாட்சிகள் திட்டமிடப்பட்டு அரச வல்லமையால் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராகப் போராடி பாதுகாக்கத் திராணியற்று வாழும் மக்களாக எம்மினம் இன்று வாழத்தலைப்பட்டிருக்கிறது. முகவரி தொலைந்த மனிதர்களாக நீண்ட கால ஒழுக்கில் நம் இனம் வாழ்ந்துவிட முடியாது. இன்றைய காலம் மிகவும் சோதனைக்கு உரியதாக இருப்பினும் எம்மினம் சாதிக்கவேண்டிய பலவிடயங்கள் இருக்கின்றன.…

  15. மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் யார் இவர்கள்? மொரிஷியஸ் நாட்டு(Mauritius) தமிழர்கள் யார் இவர்கள்? இந்த நாடு எங்கே இருக்கிறது? இந்து மகா சமுத்திரத்த்தில் தென் ஆபிரிக்கா அருகில் இருக்கும் சிறு தீவு இது. மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் 1820ளில் பிருத்தானிய, பிரான்சு காலனித்த்துவ ஆட்சியாளர்களால் மொரிஷியஸ், ரியுனியன் தீவுகளுக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். இந்த தீவுகளை வளம்பெற செய்தவர்கள் தமிழர்கள். யாழ் மாவட்ட அளவில் உள்ளதே இந்த மொரிஷியஸ் தீவு. அவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இருக்கும் உறவு என்ன? ஏன் அவர்களுக்கு இந்த பற்று? தமிழினம் என்ற தேசிய இனம் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப் படவேண்டும், தாங்கள் வெறும் அந்நியர்களின் கூலிகள் அல்ல என்ற உணர்வுடன் தமிழ் மொழி, தமிழ் இனம…

  16. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=QY4b9sB45Jc தமிழர்களின் தொன்மையை பறை சாற்றும் வரலாற்று சான்று தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழந்தமிழர் நாகரீகம் உலகிற்கு தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளி கால நாகரீகத்திற்கு இணையான இந்த நாகரீகத்தை இந்திய அரசு ஏற்குமா என்பது தான் கேள்விக் குறி. மண்ணின் மைந்தர்களாகிய தமிழனின் தொன்மையை மறைக்க இந்தியம் இந்துத்வா என பல்வேறு சக்திகள் முயன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த மதுரை நரசிங்கப்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப் பட்ட முதுமக்கள் ஈமக் காடுகள் வெளிச்சத்திற்கு வருமா எனத் தெரியவில்லை. எனினும் தமிழர்கள் மூதாதையர் வெளிப்பாடு செய்துள்ளனர் என்பதற்கு இது சான்றாக உள்ளது. பழந்தமிழரின் தொன்றுதொ…

  17. ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின 1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர் 2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன. அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு. 3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை. 4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை இதில நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும். எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்லதுவிட்டாலும் சில நூற்வருடங்க…

  18. தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? [size=3] ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெய…

  19. சோழர்களின் ஆட்சி: இலங்கையின் தமிழர் பகுதிகள் எவ்வாறு இருந்தன? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையை சோழர்கள் கி.பி. 993ல் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்த நிலையில், சோழர்களின் இலங்கை வரலாறு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். சோழ மன்னனான முதலாம் ராஜராஜன், கி.பி. 993ம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்துள்ளார். இவ்வாறு இலங்கையை கைப்பற்றிய சோழர்கள், அநுராதபுரத்தை தலைநகராக பயன்படுத்தியுள்ளனர். …

  20. https://www.facebook.com/manivannan.ehambaram/posts/218399424956760[size=5] [size=3] ஓயாத அலைகள் நான்கின் படைகள் ஆனையிறவு முகாமை தகர்த்து பலாலியை நோக்கி முன்னேறும் பொது எவ்வாறு அமெரிக்க அதை தடுத்தது என்பதை இங்கு விளக்குகின்றார், அன்று பலாலி முகாமின் கடல் கரை பிராந்திய கட்டளை தளபதி ரோகன் விக்கிரமசிங்க.... ஆக அன்றே 15 ஆண்டுகளுக்கு முன்னமே சிங்கள ராணுவம் தமிழன் காலில் விழுந்து விட்டது .ஈழம் பிறந்து இருந்தது. தமிழனின் வீரத்தை பறை சாற்ற இதை தவிர வேறு என்ன தேவை . சிங்களம் அன்று முழுமையாக மண்டியிடும் நிலையில் இருந்தது. அவ்வாறு மண்டியிட்டால் முழு இலங்கையும் தமிழனிடம் போய்விடும் என்று இந்தியா கலங்கியது. இலங்கை அதிகாரம் தமிழனிடம் விழுமானால் . தமிழ் நாடு பலம் பெற்…

    • 0 replies
    • 2.5k views
  21. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவு தினம் இன்று (28-04-1942), உ.வே.சா. இவர் ஒரு தமிழறிஞர், பலரும் ம(து)றந்து அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை பலவற்றைத் அரும்பாடுபட்டுத் தேடி அச்சிட்டு உயிர் கொடுத்தவர், இந்(தி)யாவின் மகாத்மா காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் இவரும் குறிப்பிடத்தக்கவர், தமது அச்சுப்பதிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையின் செழுமையையும் அறியச் செய்தவர், இவர் 90க்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் சேகரித்திருந்தார், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள்,புராணங்கள்,சிற்றிலக்கியங்கள்,எனப…

  22. திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு. கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி…

  23. கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை - சிறப்பு கட்டுரை தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே, தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே... - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை அன்னை மடியில் குழந்தையாய் அறிந்து கற்ற முதல் மொழி தாய்மொழி. தாயானவள் குழந்தைக்கு உணவூட்டுவதோடு உணர்வையும் ஊட்டுகின்றாள். அதற்கு பயன்படுத்துவது தாய்மொழியே. “தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை”என்பது போல “தாய்மொழியிற் சிறந்த வேறு மொழியில்லை. என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஒருவன் எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறில்லை எனினும் அ…

  24. தமிழருக்கான தனித்துவநாள் தமிழர்களின் ஆண்டின் முதல் மாதம் சித்திரை மாதம் என்றே பலர் கூறுகின்றோம். ஆனால் உழவர்கள் தை மாதத்தையே ஆண்டின் தொடக்க மாதம் என்று போற்றுகின்றனர். தை மாதப் பிறப்பை ஒரு புத்தாண்டைப் போல தெய்வ வழிபாட்டுடன் உண்டு உடுத்து கொண்டாடி மகிழ்கிறார்கள். தை மாதத்திற்கு சிறப்புகளும், பெருமைகளும் நிறையவே உண்டு. அந்தவைகையில் பொங்கல் விழாவானது தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகும். தமிழர்கள் எத்தனையோ விழாக்களைக் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் இல்லாத தனிச் சிறப்பு பொங்கலுக்கு மட்டுமே உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா மதத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் அற்றதாகவும் உள்ளது. உழைக்கும் மக்கள் உழவர்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிப…

    • 5 replies
    • 2.5k views
  25. உலகின் மிக உயரமான கோபுரம் ! முருதேஸ்வர் கர்நாடகா உலகின் மிக உயரமான கோபுரம் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை உள்ள இடம். நன்றி! அருண் குமார். (https://www.facebook.com/arun.mk.794)

    • 3 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.