பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
சோழன் குடா நக்காவரம் தமிழர் ஆடையின்றி ஒருவர் வந்தார். நகைப்புக்குரியவராக, பழிப்புக்குரியவராக, இழிவுக்குரியவராக, தாழ்வானவராக, கேலிக்குரியவராக, கிண்டலுக்குரியவராக அவரை ஆடையணிந்த சமூகம் கருதியது; ஆடையற்றவர் நகுதற்குரியவரானார். என் நாட்டைப் புகழ்ந்து பாடுவோர் போரில் நான் தோற்றால் என்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறநானூறு) எனத் தொடங்கும் அவனது வரிகள் புகழ்பெற்றவை. நகுதக் கனர் என்பது காலப்போக்கில் நக்கர் ஆயிற்று. என்ன நக்கலா எனக் கேட்கும் பேச்சு வழக்கும் இன்று உண்டு. ஆடையற்றவர் நகுதற்குரியராதலால் நக்கர் ஆயினர். எவரோ ஒருவர் ஆடையற்றிருந்தால் நகுந்து விட்டுவிடலாம். ஒரு மனிதக் குழுவினரே ஆடை…
-
- 0 replies
- 1.9k views
-
-
Ranmasu Uyana Stargate of Gods Found Ancient Aliens in Sri Lanka| அண்டங்களிற்கு ஆன திறவுகோல்
-
- 5 replies
- 1.5k views
-
-
-
எதைப் பேசித் தமிழன் கெட்டான்..?! “தமிழன் பேசிப் பேசியே கெட்டான்” “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” “தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” "தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள். இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். எதைப் பேசி தமிழன் கெட்டான்? தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் அறிஞர் க.பூரணச்சந்திரன் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் பற்றிப் பலர் கவலையோடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள். அவற்றைப் பகுத்துப்பார்த்தால், பெரும்பாலும் 1. உலக/ இந்திய நாகரிகத்திற்குத் தமிழகத்தின் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை 2. இந்தியாவில் தேசிய நலனுக்கு உகந்த கூட்டாட்சிகள் அமையாத நிலை-தமிழ்த் தேசியம் உருவாகாத நிலை 3. ஆங்கிலத்தின் ஆதிக்கம்/ அதன் பின்னணியிலுள்ள உலகமயமாக்கல் 4. செம்மொழிப் பிரச்சினை 5. ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலும் அதனோடு இணைந்த தமிழ்மேம்பாடும் என்ற பொருள்களில் அடங்குகின்றன. சிலருக்கு தமிழனுக்கு இனவுணர்வில்லையே என்ற…
-
- 0 replies
- 804 views
-
-
வணக்கம் என்றால் என்ன? வணக்கம்: வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் (சம்மதிக்கின்றோம் உடன்படுகின்றோம்) என்பதே இதன் பொருள்.
-
- 10 replies
- 17.9k views
-
-
தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன். தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்ற…
-
- 0 replies
- 920 views
-
-
தமிழர் திருநாள் தி .பி.2043 தமிழ் ஆண்டு மேற்கு நாட்டவர்களுக்கு சனவரி முதல் நாள் புத்தாண்டு என்றால் தமிழர்களுக்கு தமிழ்த் தை மாதம் முதல் நாள் தான் புத்தாண்டின் தோற்றம். தைப் பொங்கல் என்று பரவலாக அழைக்கப்படும் பெரு விழா இந்த நாளில்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு நாட்கள் கொண்டாடப் படுகிறது. கிழே உள்ள படங்கள் 14 .01 .2006 அன்று விடுதலைப்புலிகளின் படையணிகள்தைத்திருநாளைக் கொண்டாடின படங்களை இணைத்துள்ளோம். தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கைப்பூர், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா, தென்னாபிரிக்கா, மொரீசியசு, பர்மா எனத் தமிழர் வாழும் நாடுகளில் இந்தத் தனிப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. உலகத் தமிழர்களை இனைக…
-
- 1 reply
- 1.4k views
-
-
9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை வெறும் 30,000 மட்டும்தான். அதே சமயம், கம்போடிய அங்கோர் நகரில் 10 லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விவரம். 10 லட்சம் மக்கள் வசித்தார்கள் என்பதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். அந்த மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரத்துக்குத் தேவையான தண்ணீரும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. கம்போடியா கோயிலுக்கும் பனைக்கும் மட்டும் பிரபலமல்ல, அங்குள்ள ஏரிகளுக்காவும்தான். கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 ச.கி.மீ. அந்நாடு, 443 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டது. கம்போடியாவில் சிறப்பாகச் சொல்லக்கூடிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவ…
-
- 0 replies
- 738 views
-
-
யாப்பகூவ கோட்டை. குருநாகலை மாவட்டத்தின் மகவ என்னும் கிராமத்துக்குச் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோட்டையானது அமைந்துள்ளது. ஈழத்தின் கலை வரலாற்றில் இரண்டாவது சீகிரியா என வர்ணிக்கப்படுகிறது. கி.பி 478 தொடக்கம் 496 ஆண்டுகள் வரையான காலப் பகுதிகளில் காசியப்ப அரசன் சீகிரியா கோட்டையை நிறுவி குபேரனைப் போல வாழ்ந்தான் என்று மகாவமிசம் கூறுவதைப் போல இயற்கை அரணாக விளங்கும் யாப்பகுவவை சுப எனப்படும் இராசதாணி தங்கியிருந்து தனது ஆதிக்கத்தை செலுத்தியதாக பௌத்த சாதுக்களின் கல்வெட்டுக்களின் மூலம் அறியக் கிடைக்கிறது. சுப எனப்படுபவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர். இருந்த போதிலும் பதின் மூன்று பௌத்தப் பிக்குகளின் பௌத்த அனுஷ்டானங்களை பாதுகாத்து வந்துள்ளார். மேலும் 121…
-
- 0 replies
- 2.2k views
-
-
[size=2][/size] [size=3]பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கட... ல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறை…
-
- 4 replies
- 983 views
-
-
http://3.bp.blogspot.com/_2SMOVFpZr3M/SaAbqYhXDJI/AAAAAAAAAJc/-9UavYbCgj4/s1600/2009-01-29-1438-55.jpg மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும். போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்…
-
- 2 replies
- 2.9k views
-
-
-முடிந்தால் எல்லோரும் கீழுள்ள முகவரிக்கு எமது உறவுகளுக்கு நடந்துகொண்டிருக்கும் அனியாயத்தையும் ஆதங்கத்தை தெரியப்படுத்தவும். ---------------------------------------------------------------------- Media Report - Humanitarian Disaster in NE Sri Lanka [ Editor-TamilOosai ][ 28.12.2004] Dear Sir/Madam RE: Humanitarian Disaster in Sri Lanka As you are all already aware there are more than 13000 people have been killed in Sri Lanka as of 27th December (20:43 GMT) alone and this figure is expected to rise. While the international media reports the numbers it focuses on the plight of Tourists and the dead in the South alone. However the largest …
-
- 7 replies
- 2k views
-
-
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை யாழ் தென்மராட்சியின் மட்டுவில் கிராமத்தில் 1899 ஆம் ஆண்டு ஆணிமாதம் 27ம் திகதி சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். தயாரின் தனங்கிளப்பு ஊரிலுள்ள காரைத்தூவிநாயகர் குலதெய்வமான படியால் இவருக்கு கணபதிப்பிள்ளை என்று பெயர் சூட்டப்பெற்றது. மட்டுவில் அமெரிக்கமிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அதன் பின்னர் தனது 17ஆவது வயதில் நம்பிக்கை, தெய்வமயம் இலக்கிய, இலக்கண அறிவு நிரம்பப் பெற்ற மட்டுவில் க.வேற்பிள்ளையிடம் பாடம் கற்று வந்த பொழுது நாவலர் காவியப் பாடசாலையைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்று கல்விபயின்றார். வண்ணார்பண்ணை காவியப்பாடசாலை பெரிதும் அவரை விருப்பத்தோடு கல்வி கற்க வைத…
-
- 0 replies
- 3.8k views
-
-
திருக்குறளின் சிறப்பை விளக்கி இளைஞர்கள் திருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், திருக்குறளை இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும் என்றும் அழைக்கிறார் சத்யராஜ் ஆகஸ்ட் 12, திங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை. காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை. - பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு! திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க திரள்வோம்: வைகோ அறிக்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை :பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் நடத்த இருக்கும் திருக்குறள் மாநாடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத மாநாடு ஆகும். செத்துப்போன வடமொழியை புத்துயிர் கொடுத்து…
-
- 1 reply
- 966 views
-
-
கள உறவு 'கரு' அவர்களின் வேண்டுகோளின் பேரில் இணைக்கப் பட்டது!
-
- 3 replies
- 1k views
-
-
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி சென்னை: திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மண்டபத்திலே நடைபெற்றிருக்கின்றன. தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தத் திருமணங்கள் நல்ல முறையிலே நடைபெற்றன என்பதும், அந்த வகையில் திருமணம் புரிந்துகொண்ட மணமக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்து கொண்ட பின்னரும்கூட, இன்னும் பலர் நம்மு…
-
- 19 replies
- 8.7k views
-
-
நீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள் நீராடல் : உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்று…
-
- 6 replies
- 5.9k views
-
-
கடந்த பதிவில் களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம். களப்பிரர்கள் என்பவர்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்கள். அவர்கள் தான் பிறகு ஒன்று சேர்ந்து படை திரட்டி தமிழகத்தைக் கைப்பற்றி முன்னூறு வருடங்கள் ஆண்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தொண்டை நாடு என்பது பல்லவர்கள் ஆண்ட பகுதி. அதாவது தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்று சென்னையை உள்ளடக்கிய ப…
-
- 3 replies
- 4.3k views
-
-
ஒரு உதவி யாரிடமாவது எங்கள் ஊரில் மரண வீட்டில் அல்லது கோயில் திருவிழா காலத்தில் அடிக்கப்படும் பறையின் (பறைமேளத்தின்)ஒலி பதிவு இருந்தால் தந்து உதவவும் அல்லது அதனை யாராவது பதிவு செய்ய வசதி உள்ளவர்கள் உதவி செய்யவும் அதற்குரிய செலவுகள் நான் அனுப்பு வைக்கிறேன் அந்த இசை பதிவு தேவை
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ் இருக்கை என்றால் என்ன ? Posted on January 14, 2018 AuthorComments Offon தமிழ் இருக்கை என்றால் என்ன ? தமிழ் என்றால் நம்ம எல்லோருக்கும் தெரியும்.அதென்ன தமிழ் இருக்கை ? பல்கலைகழகங்களில் ஒரு துறை தொடர்பான விடயத்தை கற்பிக்க பீடங்களை அமைப்பார்கள் அல்லவா ? அது போன்ற ஒரு ஒதுக்கீடு தான் இந்த இருக்கை.வெறும் கற்றல் கற்பித்தலுக்கு மட்டுமல்ல அதையும் தாண்டி குறித்த துறை தொடபான ஆய்வுகள் ,மாநாடுகளை இவிருக்கை முன்னெடுக்கும்.இதற்கான விதை இடப்பட்டு அததற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஏன் தமிழுக்கு இப்படியொருமுன்னெடுப்பு தேவை தானா ? தமிழ் ஏற்றகனவே பிரபலயமான மொழி தானே ? இதற்க்கு எதற்கு என்று கேட்டு ஒதுக்கி விட முடியாது.காரணம் இன்றைய த…
-
- 11 replies
- 2.8k views
-
-
மொஹஞ்சதாரோ (ஆவணப்படம்) சிந்துசமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலசொற்குறியீடுகள் என்கிற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம் (Dravidian Proof of the Indus Script via Rig Veda) என்கிற தலைப்பிலான அவரது ஆய்வுக்கட்டுரையில் சிந்துசமவெளிக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்பது உறுதியாகத் தெரியவந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். சிந்து சமவெளி முத்திரைகள் சொல்ல…
-
- 2 replies
- 973 views
-
-
தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும் -வள்ளுவம் வழி கிருஷ்ணன் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 இல்வாழ்க்கை) மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் பாடல் …
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ் களத்தின் உறவுகள் பலபேரிற்கு மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு கடவுள் நம்பிக்கை பற்றி விவாதம் தொடக்க முயல்வது ஆகும். இந்த விவாதப் பொருள் பரந்து பட்டது தான். புதிது புதிதாகப் பல முனைகளில் எமது மனம் இந்த விடயம் பற்றி (சாதகமாகவோ பாதகமாகவோ) சிந்திப்பது உண்மைதான். எனினும் யாழ் களத்தில் இந்த விடயத்தில் ஏனோ ஒரே மாவு தான் திருப்பத்திருப்ப அரைக்கப்படுகின்றது. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. உதாரணத்திற்கு, புராணக் கதைகளினை ஆதாரமாகக் கொண்டு இந்து சமயத்தைத் தாக்குவது நாம் இக்களத்தில் அடிக்கடி காணக்கூடியதாக உள்ள ஒன்று. இது தொடர்பில் எனது கருத்தினைப் பதிவு செய்வதே இப்பதிவினது நோக்கம். ஒருவர் ஒரு ஓவியத்தை வரைந்தாலோ, கவிதையை எழுதினாலோ, சொற்பொழிவு ஆற்றினாலோ, பார்ப்பவர், …
-
- 32 replies
- 10k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 2-ஆம் பதிவு நாள்: 13.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல் முழு நிலவு நாள் கடந்த 09.01.2016-ல் செவ்வனே அமைந்தது. 08.01.2016 விடியற்காலை 06.30-க்கு மெல்லிய கீற்றாகப் பிறை கீழ்வானில் தெரிந்தது. ஆண்டின் 27-ஆம் நாளில் அமைய வேண்டிய முதல் மறைநிலவானது சரியாக 26-ஆம் நாளில் பொருந்தியிருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். கடந்த முதல் முழுநிலவு ஒரு நாள் தடுமாறியதன் விளைவே இதுவாகும். 09.01.2016-ன் மறைநிலவை அச்சாகக் கொண்டு அடுத்து வரும் 15-ஆம் நாளில் இரண்டாவது முழுநிலவானது முறைமுற்றியும் நாள் முதிர்ந்தும் தோன்ற வேண்டும். அதாவது 24.01.2016 அன்று தோன்றிட வேண்டும். …
-
- 0 replies
- 1.3k views
-