பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழின் பொருள் தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன. உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்…
-
- 0 replies
- 6k views
-
-
-
இன்று தாய்த்தமிழகம் தொடக்கம் உலகம் முழுவதும் தமிழனுக்கு என ஒரு நாடு இல்லாத நிலையில் தமிழ் மொழியை நாம் திணிப்பதில் தான் நாம் வெற்றிபெற முடியும். இதில் தமிழ் இசையமைப்பாளர்கள் பங்கு, திரைப்படம் மற்றும் அதன் தொன்மை பற்றை நாம் அனைவரும் பேச வேண்டிய தேவை முக்கிய பங்கு வகிக்கின்றது. #1 : இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு இந்தி நடிகர் ஒருவர் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி. எனவே இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் தமிழைத்தான் கற்க வேண்டும். ஒரு இந்தி விரும்பியான நானே இதை மனதார சொல்கிறேன். இந்தி நாடு முழுவதும் பாப்புலராக இல்லாத நிலையில் அதை திணிக்க முயல்வது தவறானதாகும். இதை உணர வேண்டும். உல…
-
- 49 replies
- 6k views
-
-
கந்த முருகேசனாரும் ஆறுமுகநாவலரும் - இளங்கோ (இலண்டன்) இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி என்பது மிகக் கேவலமான ஒன்று. ஆனால் ஈழத்தமிழர்களின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிங்கள அரசு தமிழர்களை ஈவிரக்கம் அற்று படுகொலை செய்துவரும் இன்றய கண்ணீர் யுகத்தில் சாதியத்திற்கு எதிரான இந்தப் பதிவு தேவையா என்பதே எனது யோசனையின் காரணம். ஒரு காலத்தில் ஈழத்தில் மிகக் கொடுமையான சாதிய அடக்குமுறை இருந்தது. இலங்கை பொதுவுடைமைக் கட்சிகள் அதற்கு எதிராகப் போராடியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் கொடுமையை த…
-
- 36 replies
- 6k views
-
-
நீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள் நீராடல் : உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்று…
-
- 6 replies
- 5.9k views
-
-
கண்ணகி ஒரு போராளியே! - எழில்.இளங்கோவன் தமிழக வரலாற்றில் கண்ணகிக்குச் சிலை எடுத்தவர்கள் இருவர். ஒருவர் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சேர அரசன் சேரன் செங்குட்டுவன்; அடுத்தவர் ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழ் மாநாட்டின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைத்த அறிஞர் அண்ணாதுரை. முந்தைய முடியாட்சி அரசரோ காலச்சூழலுக்குகேற்ப கண்ணகியின் கற்பைப் போற்றிச் சிலை வைத்தார். பிந்தைய குடியாட்சி முதல்வரோ கண்ணகியின் நெஞ்சுரத்தைப் போற்றிஇ நீதி தவறாத ஆட்சியை வேண்டி ஓர் எச்சரிக்கைச் சின்னமாகக் கண்ணகி சிலையை நிறுவினார். தமிழக முதல்வரான அண்ணாவை எவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள்ளாகவே காலம் தன் வயப்படுத்…
-
- 13 replies
- 5.9k views
-
-
சங்கிலியன் சங்கிலியன் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட…
-
- 14 replies
- 5.8k views
-
-
தஞ்சை பிரகதீஸ்வரர் பெரிய கோவிலையும் இன்னும் சுமார் 52 சிறிய பெரிய கோவில்களையும் கட்டிய இந்த மாமன்னர் இறையடி சேர்ந்த இடம் உடையனூர். அது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அவர் இறையடி சேர்ந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் மாத்திரம் இருக்கிறது. அதனுடைய அருகில் ஒரு மாட்டுத் தொழுவமும் நுளைவாயினில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு அடங்கிய மரப் பலகையும் இருக்கிறது. ஓரு முதியவர் தினமும் விளக்கேற்றி வழிபடுகிறார். இராஜ இராஜ சோழனின் கல்லறை பொலிவிழந்து காணப்படுகிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் கல்லறைகள் மிகவும் சிறப்பாகக் கர்நாடகத்தில் பேணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்தக் கல்லறைகளை பக்திபூர்வமாகத் தரிசிக்கிறார்கள். சோளவம்ச மாமன்னனின் நினைவாக ஒரு மணிமண்டபம் கட்டப்பட …
-
- 8 replies
- 5.8k views
-
-
விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம். பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும…
-
- 31 replies
- 5.7k views
-
-
தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 இல்வாழ்க்கை) மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் …
-
- 10 replies
- 5.7k views
-
-
கம்போடியாவில் நாம் குலேன் மலைப் பகுதியில் கள அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் நிபுணர்கள். கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது. இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர். எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை …
-
- 5 replies
- 5.7k views
-
-
"தொல்காப்பியம் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது" உலகப் பெருந்தமிழர் நா. மகாலிங்கம் சிறப்புரை உலகத் தமிழர் பேரமைப்பு-சென்ற 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமுதாயத்தை அதனுடைய பண்பாட்டு அடையாளங்களோடு பாதுகாப்பதற்காக உருவான-உண்மையான பேரமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து அதைக் கவனித்து வருகிறேன். காரணம், அதனைத் தொடங்கியவர் எனது அரசியல் நண்பர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள். காங்கிரஸ் பேரியக்கத்தில் பெருந்ததலைவர் காமராஜர் அவர்களின் தலைமையில் நானும் அவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள். இந்த 5-வது மாநாட்டில் உலகப் பெருந்தமிழர் விருதினை எனக்கு வழங்க உள்ளதாக பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய கடிதத்தைப் படித்தபோது மகிழ்ச்சி அடைந்…
-
- 10 replies
- 5.7k views
-
-
சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம் - அக்னிபுத்திரன் ஒரு இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அம்மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுக்கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும். இவ்வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் …
-
- 2 replies
- 5.7k views
-
-
தமிழன் விடுதலை விரும்பி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் தமிழீழ இதயதெய்வத்திடம் இந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ற தமிழ் மக்களின் இதயக்கனி ஒரு நீங்கா இடம் பிடித்தார். ஈழத்தமிழரின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து குடிகொண்டிருக்கும் பொன்மன்ச் செம்மலின் கருத்தாளம் மிக்க பாடல்கள், அவர் படம்கள் அந்த காலங்களில் எப்படி எமது மக்களால் கவரப்பட்டது. எப்படியான் ஒரு சுவை அவரின்படங்களில் இருந்தது என்று சொல்வதே இம் மடலினூடாக நான் சொல்லவிருக்கும் விடையம். இதிலே எவராவது எனக்குத்தெரியாத தகவல்களினை தர உதவி செய்து இதை சிறப்பிக்க விளைந்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.
-
- 11 replies
- 5.7k views
-
-
முத்திரைகள் April20 அண்டம்,பிரபஞ்சம் ,யுனிவர்ஸ் என்றெல்லாம் சொல்கிறார்களே. ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி யோசனை செய்து பாருங்கள் , இது எப்படி நடக்கிறது. விஞ்ஞானம் ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும் அனைவருக்கும் புரிந்துவிடாது. ஒரு வெற்றிடமான அந்தரங்கத்தில் சூரியன் ,கோள்கள் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இவை எப்படி ஒரு ஒழுங்கு முறையோடு அதனதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது.இதற்கு யார் காரணம்? இது எப்படி சாத்தியம்? நாம் என்றைக்கும் சிந்தித்துணர முடியா விஷயம். ஆனால் இறை ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சொன்னது ,இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒழுங்கான இயக்கத்தில் தன்பணியை தொடர்ந்து செய்வதன் காரணம்,நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,நெருப்பு, இந்த ஐந்து விஷயங்கள்தான்.இந்…
-
- 0 replies
- 5.7k views
-
-
தமிழ் காட்டு மிராண்டி மொழி – ஏன்? எப்படி? தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். ஆங்கிலத்துக்கு ஆதரவு ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன். அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களா…
-
- 17 replies
- 5.7k views
-
-
உங்கள் குழந்தைகள்(பிள்ளைகள்) உங்களை எப்படி அழைப்பார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை எப்படி அழைபீர்கள். உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு உதவி செய்யுங்கள் மகா சனங்களே. அம்மா/ அப்பா மம்மி/¼¡¼¢ ÁõÁ¡/ பப்பா ெபயர் கூறி.
-
- 39 replies
- 5.6k views
-
-
சங்க இலக்கியத்தில் வெறியாட்டு என்ற வார்த்தையை அதிகம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதைப்பற்றி இணையத்தில் பல கட்டுரைகளை காணலாம். அதைப் பற்றி விரிவாக யாழில் ஒரு திரி இடலாம் என்ற உந்துதலே இது. வெறியாடுதல் என்பதற்கு இரண்டு வகையான விளக்கம் கொடுக்கப்படுகிறது. -> வேலைக் கையிற்கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுதல். -> பருவ மகளிருக்கு காதல் கொண்ட காதலனை அடைய வேண்டும் என்ற அவாவும், அடைய முடியுமோ என்ற அச்சத்தினாலும் உண்டாகும் ஒருவகை மன நோய். இந்த எண்ணம் முற்றுபெற்று ஊண் உறக்கமின்றி உடல் நலிந்து பேய் பிடித்து போன்ற ஒரு நிலையை வெறி என்றும் அழைப்பர். சங்க இலக்கியத்தில் வரும் ஒரு வீரக் காட்சி....... தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் போருக்குப் புறப்படுமுன், அந்தப் போரில் வ…
-
- 0 replies
- 5.6k views
-
-
பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்…
-
- 15 replies
- 5.6k views
-
-
தென்தமிழகத்தின் எல்லோரா “ கழுகுமலை " பண்டைய தமிழர் கலைகளின் அடையாளம் இயற்கையின் படைப்புகளை விரும்பாதவர்கள் இவ்வுலகில் எங்கும் இல்லை. அத்தகைய இயற்கையின் படைப்புகளில் மலைகளும் மலைசார்ந்த இடங்களும் நம் மனதை கொள்ளை கொள்ள செய்பவைகள். மலைகள் சார்ந்த இடங்களில், மெல்ல தவழ்ந்து வந்து நம்மை தொட்டுவிட்டு செல்லும் ’சில்லென்ற’ குளிர்ந்த காற்றும், அங்கு நிலவும் அமைதியையும் சொல்வதைவிட உணர்வதே சரியானதாகும். மலைப்பயணம் செய்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அந்த இனிமையும், குளுமையும். இன்றும் தங்களது இயந்திர வாழ்க்கையைவிட்டு மலைப்பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் சென்று மனதையும் உடலையும் இலகுவாக்கி உற்சாகமடைபவர்கள் பலர். அங்கு அவர்கள் கண்ட ரம்மியமான காட்சிகள் என்றுமே மனதைவிட்டு நீங்காத கா…
-
- 0 replies
- 5.5k views
-
-
சாத்தியம்தானா தமிழீழம்??!! நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம். Sovereignty என்று அழைக்கப்படும் இறைம…
-
- 22 replies
- 5.5k views
-
-
தமிழர் வரலாறு (Tamizhar History) தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. தமிழர் வரலாறு - கி.மு 14 பில்.- கி. மு. 776 கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்த…
-
- 3 replies
- 5.5k views
-
-
2043 ஆம் ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
-
- 6 replies
- 5.4k views
-
-
யாழ் இணையம் - மாவீரர் தினம் 2007 வணக்கம், இங்கு நான் உங்கள் குரலில் மாவீரர்கள் பற்றிய ஒலிப்பதிவுகளை தாங்கிவரும் கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் பாடிய மாவீரர்களின் பாடல்களின் ஒலிப்பதிவுகளை, மாவீரர் சம்மந்தமாக நீங்கள் எழுதிய கவிதைகளின் ஒலிப்பதிவுகளை... இவ்வாறு மாவீரர் சம்மந்தமாக உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை கூறும் ஒலிப்பதிவுகளை இங்கு இணையுங்கள். நான் மாவீரர்கள் சம்மந்தமாக வெளியிடப்பட்ட விடுதலை கானங்கள் சிலவற்றை எனது குரலில் பாடி இங்கு இணைக்கின்றேன். இதுபோல் நீங்களும் உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்து இங்கே இணையுங்கள். ஜிக்:தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! ஈ சினிப்ஸ்: தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! ----------…
-
- 30 replies
- 5.4k views
-
-
தாய் மண்ணை பிரிந்து உலகெங்கும் வாழும் ஈழத்து சகோதரர்களுக்கு நவம்பர் 27 மிகமுக்கியமான நாள். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் திரையில் தோன்றி இயக்கத்தின் நிலை பற்றியும், தமது எதிர்கால திட்டம் பற்றியும் உரையாற்றுவார். துரோகமும், சர்வதேச சதியும் கைகோர்ததன் விளைவாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பிறகு மாவீரர் தினம் என்பது தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் நாளாக உலகத்தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் தலைவர் பிரபாகரனது வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த அவரது திருமணத்தைப் பற்றியும், அது எங்கே நடைபெற்றது என்பது குறித்தும் அறிந்துகொள்வோம் வாருங்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈராயிரம் ஆண்டுகளாக ஈழத்தில் வாழ்ந்து வந்த தமிழ் இன மக்கள…
-
- 0 replies
- 5.4k views
-