யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
43 topics in this forum
-
குடை ராட்டினம் கண்ணுக்குள் நூறு கனவு. ஒரு பார்வை ஒரு உதட்டசைவு ஒரு புன்முறுவல் அடடா.. இதைத்தான் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து என்று பாடி வைத்தார்களோ? வந்த வேலை மறந்து மீண்டும் மீண்டும் அதே தேடல்.. பார்த்த விழி பூத்திருக்க அங்கே ஒரு மௌன நாடகம் அரங்கேறியது. ஆரம்பப் பாடசாலையை முடித்து இன்று உயர்தர பாடசாலையில் சேர்வதற்காக வந்திருக்கும் பல்லின மாணவர்களின் கூட்டம் அழகிய மலர்த்தோட்டம். இத்தனைபேர் நடுவில் அவள் மட்டும்..... என்ன இது... பார்வையை எங்கும் அலைமோத விடாமல் ஒரே இடத்தையே காந்தமாய் கட்டிப்போட்டது பதினாறின் பருவங்கள் உள்ளுக்குள் உமிழ்ந்து உடலெங்கும் மின்சாரம் பாய்ச்ச.... அவளுக்குள்ளும் அதே நிலைத…
-
- 14 replies
- 2.9k views
-
-
சான்றிதழ். அது ஒரு முன்னிரவு கூடிய மாலை நேரம். மலைநாட்டுக்கே உரிய குளிரும், குளிர்காற்றுடன் சாரலும் அடித்து கொண்டிருக்கு. பாதையும் படுத்திருக்கும் பாம்புபோல் வளைந்து நெளிந்து மேலே மேலே போகிறது.அதில் அந்த ஹையஸ் வண்டி கொண்டைஊசி வளைவுகளில் நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கு.அதன் ஹெட்லைட் இரண்டும் புலியின் கண்கள்போல் மினுங்கி கொண்டிருக்கு. இராகவன் மூன்றாவது கியரில் வண்டியை மிகவும் மெதுவாக செலுத்திக் கொண்டிருக்கிறான். வண்டியின் ஸ்டீரியோவில் சன்னமான குரலில் h.r ஜோதிபால......., "ஆதர மல் பவண்னே ஆயன மே கமண்ணே ஹொய்தோ யன்னே கவுதோ என்னே துலீகா ....துலீகா ...... பாடிக்கொண்டு வருகிறார். அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது.…
-
- 66 replies
- 7.4k views
-
-
இதுவரை என் வாழ்வில் சகல பிரச்சனைகளும் ஓய்ந்து விட்டது ஓர் தேடலைத்தவிர என்று வாழ்வை அமைதியாக கழிந்த நாட்களில் அந்த ஓர் அழைப்பொன்று வாழ்வின் அடிமனதில் புதைந்த ஓர் புதையலை மனதில் இருந்து மெதுவாக தோண்ட ஆரம்பிக்கிறது .ஹலோ வணக்கம் வணக்கம் நீங்கள் நான் கலியபெருமாள் பேசிறன்டா ஓ ஐயா சொல்லுங்க எப்படிடா இருக்க இருக்கன் ஐயா இருக்கன் நல்ல சுகம் நீங்கள் எப்படி நான் நல்லம் நலமா இருக்கிறன் என்ற பிள்ளைகள் உன்னை பார்க்க வேண்டுமாம் வாவன் உன்ற ரத்தமும் ஓடுது இங்க ஒருக்கா இந்தியா வந்துவிட்டு போவன் இல்லை ஐயா நான் இன்னும் பாஸ்போட் எடுக்கல எடுக்கவும் நினைக்கல எடுக்கணும் என்று நினைக்கிறன் நேரமும் கிடைக்கல அது எடுக்க போனால் இரண்டு மூன்று நாள் அங்க மெனக்கெடணும். அந்த கொழும்பில நிற்கிற நாளும் கஸ்ரம…
-
- 30 replies
- 3.5k views
-
-
பார்க்காதே பார்க்காதே புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்த பொழுது, “நாட்டுக்கே திரும்பி போய்விடலாமா?” என்ற நினைப்புதான் ஓங்கி நின்றது. குளிர் ஒரு காரணமாக இருந்தது என்றாலும்,குளிரில் வரும் நடுக்கத்தை விட டொச் மொழியை கேட்கும் போது ஏற்பட்ட உதறல் அதிகமாக இருந்தது. ஜேர்மனியர்கள் கதைக்கும் வார்த்தைகளுடன் ‘ஸ்ஸ்ஸ்’ என்று காற்று வரும் பொழுதெல்லாம் என்னுள் இருந்து தன்னம்பிக்கைக் காற்று தானாக வெளியேறிக் கொண்டிருக்கும். “என்ன பாஷை இது. தமிழுக்கு வசப்பட்ட நாக்கு டொச்சுக்கு பிரளமாட்டுதாம்” என்னுடன் ஊரில் இருந்து யேர்மனிவரை கூட வந்த ரத்தினம் இப்படி என்னுடன் அடிக்கடி சலித்துக் கொண்டிருப்பான். ரத்தினம் என்னைவிட இரண்டு வயது இளமையானவன். அவனது தமையன் சந்திரன் என்னுடன் ஒன்றாகப…
-
- 15 replies
- 1.7k views
-
-
“தம்பி சுடுவதாக இருந்தால் நீயே சுட்டுவிடு. அது உனக்கும் பெருமை உனக்கு சுட பழக்கிய எனக்கும் பெருமை.” மணலாறு கொண்டாடிய ஒரு முதுபெரும் தளபதியின் என்னுடனான இறுதி உரையாடலின் ஒரு பகுதியே மேற் கூறிய வசனம். போர் புதுகுடியிருப்பை தாண்டி, ஆனந்தபுரம் - தேவிபுரம் வரை வந்திருந்த காலம் அது. போர்க்களத்தை விட்டு, குடும்ப மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தளபதிகளும், முதுபெரும் வீரர்களும் ஓடி ஒளிந்து கொண்டிருந்த வேளையில், மூன்று நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து விட்டு கட்டாய ஆட்சேர்ப்பில் களமாடி கொண்டிருந்தார்கள் எம் விடுதலை வேங்கைகள். தலைமைக்கு கடுமையான முடிவெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை. தர்மத்தின் சமநிலையை சரிகாக்க வேண்டிய சூழல…
-
- 14 replies
- 2.1k views
-
-
அம்மாச்சி மகள் (குறுங்கதை) ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள். சில தினங்களுக்குள் சடுதியாக எடுக்கப்பட்ட முடிவை ஏற்கும் திராணியற்ற நிலையில் நான். அம்மாச்சி மகளின் மீதான் நம்பிக்கை சரிந்த கடைசி நிலையில் பொருமும் நெஞ்சும், முடக்கிய அழுகையும் , உறவுகள் முன்பு கலங்காத வீராப்புமாக பெரு நடிப்பில்…. நேரமும் துரிதமாக நகர்ந்தது. பார்த்த எவருடனும் பேசப்பிடிக்கவில்லை. செயற்கை சிந்திய முறுவல், சூழலின் கலகலப்பில் மறைக்கப்பட்ட யதார்த்தமாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன.. இன்னும் சில மணித்துளிகளில் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். புதிய பக்கம் எப்படி ஆரம்பிக்…
-
- 25 replies
- 2.9k views
-
-
கண் தெரியும் தூரம் வரை….. காலம் தின்று..துப்பிய …., எச்சங்களின் மிச்சங்களாய்…., செத்துப் போன வீடுகளின், எலும்புக் கூடுகள் ! வெறுமைகளை மட்டுமே…, வெளியே காட்டிய படி…, உண்மைகளை ஆழப் புதைத்து.., கண் மூடித் துயில்கின்ற….., வரலாறுகளின் சுவடுகள் ! அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்.., ஆளப் புதைந்திருக்கும் ….., வைரவ சூலம் மட்டும்…., எத்தனை வடை மாலைகளையும், எத்தனை தேசிகாய்களையும்,…., தன் மீது சுமந்திருக்கும் ? அந்தக் கருக்குவாச்சி மரம், எத்தனை காதலர்களின், இரவு நேரச் சந்திப்புக்களை…, விரக தாபங்கள் சிந்தும், கற்பூர சத்தியங்களை…., தன்னுள் புதைத்திருக்கும் …
-
- 16 replies
- 3.4k views
-
-
கடன் வாங்கிக் களியாட்டம் கள்ளன் பொலீஸ் விளையாட்டில் கள்ளனாக இருப்பதைவிட பொலீஸாக இருப்பதைத்தான் அதிகமான சிறார்கள் விரும்புவார்கள். பொலிஸ் என்றால் எங்களிடம் ஒரு மதிப்பு, பயம் எல்லாம் இருந்தது. ஆனால் பின்னாளில் விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் பொலிஸாக இருப்பது பொலிசுக்கே பயமாகப் போயிற்று. வடமராட்சியில் அதுவும் குறிப்பாக வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் கடமையாற்ற அன்று சிங்களப் பொலிஸார் பெரிதும் விரும்பினார்கள். அதிலும் வல்வெட்டித்துறை என்றால் பொலிசுக்கு சொர்க்கபுரி. குசேலனாக வரும் பொலிஸ்காரனை குபேரனாக மாற்றிவிடும் மந்திர பூமி அது. எதுவுமே இல்லாமல் பொலிஸ் சேவைக்கு வந்தவர்கள் கூட அங்கிருந்து மாற்றலாகிப் போகும் பொழுது இனி வாழ்க்கையிலே எதுவுமே தேவை இல்லை…
-
- 23 replies
- 2.1k views
-
-
இரவின் ஸ்பரிசம். இரவுக்கு உருவம் கிடையாது பகலுக்கு வட்டமான வடிவம் உண்டு தினமும் பகல் இரவை உரசி செல்லும் இரவு மீண்டும் வளர்ந்து நிக்கும் ஆனந்தமாய் அலைகள் பொங்குவது இரவில் அபரிதமாய் ஆசைகள் ஆர்ப்பரிப்பதும் இரவில் ஈசல்கள் தீயை அணைப்பதும் இரவில் இயற்கையம் இயல்பாய் உறங்குவதும் இரவில் மல்லிகை தூது விடுவதும் மலர் மணம் நாசி நுகர்வதும் அழகுமயில் அலங்கரித்து வந்து உண்ட தாம்பூலம் உண்ண தருவதும் சிறு நண்டு வளை விட்டு எழும்ப கிளையமர்ந்த ஆந்தை கிள்ளியே பறக்க ஓநாய்கள் கவிபாடும் காட்டில் குறு முயல்கள் குழிக்குள் குறட்டை விடும் விரலோடு விரல் பிணைந்திருக்க இ…
-
- 14 replies
- 2.1k views
- 1 follower
-
-
செத்துப்போன கருவாடு பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயன உரங்களைப் பாதிப்பதால், நுகர்வோருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது. பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை. வியாழக்கிழமை தமிழ்க்கடைக…
-
- 35 replies
- 5.2k views
-
-
இம்முறை கனடாவின் பனிக்காலம் மிகவும் உக்கிரமான குளிராக இருந்தது ...எத்தனை ஆடைகளுக்கு மேல் ஆடைகளாக துணி மூடடையாக உடுத்தினாலும் எலும்பை ஊடுருவும் குளிராக இருந்தது ...அது ஒரு மார்கழி மாதத்தின் இறுதி வாரம் ..வனிதாவின் கனடா வாழ்வின் ஏழாவது வருடம் ..தாயகத்தில் மூன்று அண்ணா மாருக்கு செல்லத்தங்கையாக வாழ்ந்தவள் . வான் மீகனுக்கு வாழ்க்கைப்பட்டு ஆறு வயதில் ஒரு மகளையும் .. தற்போது ஆறுமாதக் குழந்தையாய் ஒரு ஆண்மகவையும் பெற்று இருந்தாள் . நாட்டுக்கு வந்த தொடக்கத்தில் வெண் பனியை அள்ளி அழைந்து விளையாடியவள். தற்போது வெளியில் செல்லவே அஞ்சும் குளிராக மாறிவிட்டிருந்தது . வான்மீகனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் அவர்களது கலியாணம் வயதான பெற்றோரின் தேவைகள் அது இது என்…
-
- 19 replies
- 2.3k views
-
-
நான் சிறுத்துப் போனேன் அந்தத் தொலைபேசியின் மணி எப்போதாவதுதான் ஒலிக்கும். அது எனக்கு மட்டும் உரித்தான வீட்டுத் தொலைபேசி. எனது முக்கிய உறவினர்களுக்கு மட்டும்தான் அந்தத் தொலைபேசியின் இலக்கம் தெரியும். வேலை, நண்பர்கள், இன்னபிற தேவைகளுக்கு எனது கைத்தொலைபேசியையே பயன்படுத்திக் கொண்டிந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. அழைப்பை ஏற்கும் போது பார்த்தேன். அழைப்பு சிறிலங்காவில் இருந்து வந்திருந்தது. எனது உறவுகள் யாரும் சிறிலங்காவுக்குப் போவதற்கு சாத்தியமில்லையே என்ற நினைப்புடனேயே “ஹலோ” சொன்னேன். “ஆர் கவியே கதைக்கிறது?” அங்கிருந்து கதைப்பது யாராகா இருக்கும்? பரம இரகசியமாகப் பாதுகாத்த எனது வீட்டுத் தொலைபேசி எப்பட…
-
- 15 replies
- 2k views
-
-
நவநாகரீகமான உலகில் முழுகப்போகிறேன் என்றால் இவ்வளவு நேரமும் நன்றாக இருந்தவருக்கு இப்ப என்ன நடந்தது என்று யோசிப்பார்கள்.ஆனால் 1960 களிலும் அதற்கு முன்னரும் பிறந்தவர்களுக்கு முழுக்கைப் பற்றிய பெரிய பெரிய கதைகளே இருக்கும். ஊரில் இருந்த காலங்களில் குளித்தல், தோய்தல் ,முழுகுதல் என்று மூன்று வகைப்படுத்தியிருந்தனர். முதலாவதாக தலையிலே தண்ணீர் படாமல் அள்ளி ஊற்றிக்கொண்டே இருந்தால் குளித்தல். அடுத்து ஒரு செத்தவீடு போய் வந்தால் தலையிலே தோய் என்பார்கள். மூன்றாவது தான் முழுக்கு.எனது பதின்ம வயதுக்கு முதல் முழுக்கு எப்படி இருந்தது. உங்களுக்கும் முழுக்கைப் பற்றி நிறைய அனுபவம் இருக்கலாம்.ஆணாக இருந்தா என்ன பெண்ணாக இருந்தா என்ன வெட்கப்படாமல் எழுதுங்கள். அனேகமானவ…
-
- 18 replies
- 2.8k views
-
-
ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை) ஒரு நாள் மனைவியுடன் புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் கைத்தொலைபேசியில் முகநூலில் ஒன்றிப்போயிருந்த என்னை ஒரு தரிப்பிடத்தில் ஏறி பிச்சை கேட்கத்தொடங்கிய ஒருவரின் குரல் இடை மறித்தது அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால் வாகனத்தில் என்றால் ஐன்னல்களை மூடிவிடுவேன் புகையிரதத்தில் என்றால் தோழிலிருக்கும் துண்டால் மூக்கை மூடிக்கொள்வது தான் எனது வழமை புகையிரதத்தில் ஏறி பிச்சை கேட்பவர்கள் ஏதாவது ஒரு கதை சொல்வார்கள் இது வழமையானது தான் ஆனால் இவர் தனது வாழ்வு பற்றி சொல்லத்தொடங்கியது வித்தியாசமாக இருந்தது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சொல…
-
- 38 replies
- 2.9k views
-
-
கடந்த ஆண்டு தாயகம் சென்றிருந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நானும் கணவனும் மினி பஸ்சிலோ அல்லது பேருந்திலோ யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்துகொண்டிருந்தது. போய் வரும் நேரங்களில் அக்கம் பக்கம் புதினம் பார்ப்பது வழமைதானே. சில வேலைகளில் கூடப் பயணம் செய்வோரைப் பார்க்கும்போது அட எமது மக்கள் இத்தனை அழகாய் ஆடை அணிகிறார்களே என்பதற்கும் அப்பால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல உடுப்புகளாகக் கொண்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றாமல் இருந்ததில்லை. அன்று என்னவோ எனக்கு கோண்டாவிலுக்குக் கிட்டவே பின் இருக்கை ஒன்றில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிடைத்த நின்மதியில் எல்லோரையும் அராய முற்பட்டேன். நான் மற்றவகளின் ஆடைகளைஎல்லாம் பார்த்துவிட்டு காலில் என்ன அணிந்துள்ளனர் எனப் பார்க்கத் த…
-
- 39 replies
- 3.6k views
-
-
நான் வெளிநாடுகளில் கோயில்களுக்குப் போவதில்லை ஆயினும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறமுடியாது. அதுபோல் நல்ல காரியங்களுக்கு கடவுளிடம் நேர்த்தி வைத்து அவரும் எதோ இரக்கப்பட்டு எனக்கு சிலசில நன்மை செய்தாலும் சில விடயங்களில் இன்னும் கண்டும் காணாமல் தான் இருக்கிறார். கொஞ்ச நாளா இரண்டு மூன்று பண முடிப்பு முடிஞ்சு வச்சாச்சு. ஒண்டும் நல்லதா நடக்கிறதாக் காணேல்ல. நாட்டுக்குப் போறன் எண்டு சொன்னதும் என் நண்பியும் தனக்கும் சேர்த்து சுவாமி கும்பிட்டு வா என்றாள். சரி அவ்வளவு தூரம் போரம் வன்னியில உள்ள அந்தக் கோவிலுக்கும் போட்டு வருவம் என எண்ணி கடவுளே எந்தத் தடையையும் ஏற்படுத்தி விடவேண்டாம். நானும் கணவரும் உம்மிடம் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அது காட்டுக்குள் இர…
-
- 21 replies
- 2k views
-
-
அவர்கள் அவரை பீற்றர் என்று சத்தமாக அழைத்தமையால் தான் அவர் இருக்கும் திசையை நான் பார்க்க தொடங்கினேன். அதுவரைக்கும் நான் புத்தகம் வாசித்து கொண்டு இருந்தமையால் அவரை கவனிக்கவில்லை. அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் போல அவர்கள் தோழமையுடன் அவரை அணுகிக் கொண்டு இருந்தனர். இப்படியானவரை எப்படி இங்கு அனுமதிக்கின்றார்கள் என புரியவில்லை. மனசுள் கொஞ்சம் கோபமும் எழத் தொடங்குகியது. நேரம் நடு இரவு 10 மணியை தாண்டி சென்று கொண்டு இருந்தது. 8 மணிக்கே அருகில் இருக்கும் பொது மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்து விட்டேன். எல்லாம் பார்த்து என்ன பிரச்சனை என்று சொல்ல இன்னும் நான்கு மணி நேரமாவது செல்லும் சில வேளைகளில் என்னை மறிச்…
-
- 22 replies
- 2.8k views
-
-
வானவில் நள்ளிரவு தாண்டியும் தூக்கம்வர மறுத்தது. கண்ணிலிருந்து கொட்டிய நீர் வற்றி கன்னங்கள் காய்ந்து மனம் இறுகிக் கிடந்தாள் வாசுகி. நேற்றுவரை எத்தனை கனவுகளில் மிதந்தாள். நெற்றிச் சுட்டி முதல் பாதக் கொலுசுவரை அத்தனையும் பார்த்துப் பார்த்து வாங்கி கற்பனையிலேயே தன் எழிலை ஒத்திகை பார்த்து மனதுக்குள் சிரித்தது நினைவில் புரண்டது. 'நான் இத்தனை அழகா? ' தனக்குத்தானே கேட்டு 'ஆமாம் இந்த அழகை எத்தனை தரம் என் வசீகரன்'வாசுகி நீர் ரொம்ப அழகாயிருக்கிறீர்' என்று அவன் வாயால் கேட்டு ரசித்திருக்கிறாள். அடடா என் வசீகரன் என்று எண்ணியதை நினைக்க அவளது முகத்தில் நாணம் கோலமிட்டது. பெண் மனதுதான் எவ்வளவு விசித்திரம…
-
- 21 replies
- 2.9k views
-