யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
43 topics in this forum
-
கடந்த ஆண்டு தாயகம் சென்றிருந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நானும் கணவனும் மினி பஸ்சிலோ அல்லது பேருந்திலோ யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்துகொண்டிருந்தது. போய் வரும் நேரங்களில் அக்கம் பக்கம் புதினம் பார்ப்பது வழமைதானே. சில வேலைகளில் கூடப் பயணம் செய்வோரைப் பார்க்கும்போது அட எமது மக்கள் இத்தனை அழகாய் ஆடை அணிகிறார்களே என்பதற்கும் அப்பால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல உடுப்புகளாகக் கொண்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றாமல் இருந்ததில்லை. அன்று என்னவோ எனக்கு கோண்டாவிலுக்குக் கிட்டவே பின் இருக்கை ஒன்றில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிடைத்த நின்மதியில் எல்லோரையும் அராய முற்பட்டேன். நான் மற்றவகளின் ஆடைகளைஎல்லாம் பார்த்துவிட்டு காலில் என்ன அணிந்துள்ளனர் எனப் பார்க்கத் த…
-
- 39 replies
- 3.7k views
-
-
டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது. எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள். மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார். இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்? எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்? …
-
- 31 replies
- 4.8k views
-
-
கடன் வாங்கிக் களியாட்டம் கள்ளன் பொலீஸ் விளையாட்டில் கள்ளனாக இருப்பதைவிட பொலீஸாக இருப்பதைத்தான் அதிகமான சிறார்கள் விரும்புவார்கள். பொலிஸ் என்றால் எங்களிடம் ஒரு மதிப்பு, பயம் எல்லாம் இருந்தது. ஆனால் பின்னாளில் விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் பொலிஸாக இருப்பது பொலிசுக்கே பயமாகப் போயிற்று. வடமராட்சியில் அதுவும் குறிப்பாக வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் கடமையாற்ற அன்று சிங்களப் பொலிஸார் பெரிதும் விரும்பினார்கள். அதிலும் வல்வெட்டித்துறை என்றால் பொலிசுக்கு சொர்க்கபுரி. குசேலனாக வரும் பொலிஸ்காரனை குபேரனாக மாற்றிவிடும் மந்திர பூமி அது. எதுவுமே இல்லாமல் பொலிஸ் சேவைக்கு வந்தவர்கள் கூட அங்கிருந்து மாற்றலாகிப் போகும் பொழுது இனி வாழ்க்கையிலே எதுவுமே தேவை இல்லை…
-
- 23 replies
- 2.1k views
-
-
ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். சில மாதங்கள் கழித்து........ ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க.. அது ஒன்னுமில்ல.. எங்க பார்ப்பம்.. அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ.... ஐயையோ.............................................. நானும…
-
- 31 replies
- 5.1k views
- 1 follower
-
-
செத்துப்போன கருவாடு பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயன உரங்களைப் பாதிப்பதால், நுகர்வோருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது. பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை. வியாழக்கிழமை தமிழ்க்கடைக…
-
- 35 replies
- 5.2k views
-
-
முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு. போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்…
-
- 38 replies
- 6.9k views
-
-
இங்கு, எத்தனை பிழைகள்... உள்ளது? இணையத் தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று, பிரபல செய்தி ஊடகங்கள் எழுதும்... தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் போது, அதில் வரும் தமிழ் எழுத்துப் பிழைகள்.... நாம்... கற்ற, பேசும் தமிழ் மொழியை கூட.... எது சரி, எது பிழை என்று, எமக்கே... சந்தேகம் வரும் போது, பெரும் சங்கடமாக இருக்கும். இங்கு... அந்த ஊடகங்களின் பெயரை குறிப்பிடாமல், அந்தச் செய்தியில் வந்த ஒரு பந்தியை... மட்டும் இணைக்கின்றேன். அதில் எத்தனை... பிழைகள் உள்ளது என்று, ஒரு, தமிழ் ஆசிரியராக..... உங்களை, நினைத்துக் கொண்டு... எத்தனை பிழைகளை.... கண்டு பிடிக்க முடிகின்றது என்பதே.... போட்டி. இதனால்... நாம் விடும் பிழைகளை, உங்கள் மூலம் அறியலாம…
-
- 18 replies
- 2.6k views
-
-
கள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான். பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் க…
-
- 10 replies
- 2.5k views
-
-
அவர்கள் அவரை பீற்றர் என்று சத்தமாக அழைத்தமையால் தான் அவர் இருக்கும் திசையை நான் பார்க்க தொடங்கினேன். அதுவரைக்கும் நான் புத்தகம் வாசித்து கொண்டு இருந்தமையால் அவரை கவனிக்கவில்லை. அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் போல அவர்கள் தோழமையுடன் அவரை அணுகிக் கொண்டு இருந்தனர். இப்படியானவரை எப்படி இங்கு அனுமதிக்கின்றார்கள் என புரியவில்லை. மனசுள் கொஞ்சம் கோபமும் எழத் தொடங்குகியது. நேரம் நடு இரவு 10 மணியை தாண்டி சென்று கொண்டு இருந்தது. 8 மணிக்கே அருகில் இருக்கும் பொது மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்து விட்டேன். எல்லாம் பார்த்து என்ன பிரச்சனை என்று சொல்ல இன்னும் நான்கு மணி நேரமாவது செல்லும் சில வேளைகளில் என்னை மறிச்…
-
- 22 replies
- 2.8k views
-
-
இந்த உலகம் தொழிநுட்பத்தில் வளர்கிறது நாமும் அதன் போக்கில் காலத்துக்காலம் அதில் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈர்க்கப்பட்டு அதன் பின்பே சென்று கொண்டிருக்கிறம் என்பத விட ஓடிக்கொண்டிருக்கிறோம். நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி நம்மை எவ்வாறு அடிமையாக்கிறது நமது வாழ்வை அது எப்படி விளையாடுகிறது என்பதே இந்த கதை. இலங்கை போக்குவரத்துசபை பஸ் மட்டும் கைபோட்டால் நிற்குமா என்ன? நிற்கவில்லை அந்த கொழுத்தும் வெயிலில் மீண்டும் அடுத்த பஸ்ஸ்சுக்காக காத்திருந்தேன் அந்த மொபலை நொண்டிக்கொண்டே இந்த போணும் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் சாமி. என்ற நினப்பில் பஸ் கோர்ண் சத்தம் கேட்டது நிற்பானா ?மாட்டானா? என்று கைய போட்டாலும் அங்கே இறங்கும் பயணிக்காக நிற்பாட்டினான். உடனே ஏறிவ…
-
- 22 replies
- 2.9k views
-
-
வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள் சூசை ஒரு Bci பட்டதாரி. அந்தப் பட்டப் படிப்புக்காக அவன் பல்கலைக்கழகம் எங்கும் போகவில்லை. அந்தப் பட்டத்திற்கான தகுதியை அவன் சினிமா தியேட்டர்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டான். பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர்கள்தான் அவனை (Bachelor of Cinema) பட்டம் பெற வைத்த முக்கிய கூடங்கள். எவ்வளவு கேவலமான படங்களாக இருந்தாலும் முதல்நாள் முதல் காட்சியில் பிரதம விருந்தினராக சூசை இருப்பான். அவனிடம் சினிமா சம்பந்தமாக எது கேட்டாலும் பதில் கிடைத்து விடும். அறுபதுகளின் பிற்பகுதியிலேயே வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதே அதை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர்கள் விபரங்களையும்…
-
- 13 replies
- 3.2k views
-
-
அம்மாச்சி மகள் (குறுங்கதை) ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள். சில தினங்களுக்குள் சடுதியாக எடுக்கப்பட்ட முடிவை ஏற்கும் திராணியற்ற நிலையில் நான். அம்மாச்சி மகளின் மீதான் நம்பிக்கை சரிந்த கடைசி நிலையில் பொருமும் நெஞ்சும், முடக்கிய அழுகையும் , உறவுகள் முன்பு கலங்காத வீராப்புமாக பெரு நடிப்பில்…. நேரமும் துரிதமாக நகர்ந்தது. பார்த்த எவருடனும் பேசப்பிடிக்கவில்லை. செயற்கை சிந்திய முறுவல், சூழலின் கலகலப்பில் மறைக்கப்பட்ட யதார்த்தமாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன.. இன்னும் சில மணித்துளிகளில் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். புதிய பக்கம் எப்படி ஆரம்பிக்…
-
- 25 replies
- 2.9k views
-
-
இரவின் ஸ்பரிசம். இரவுக்கு உருவம் கிடையாது பகலுக்கு வட்டமான வடிவம் உண்டு தினமும் பகல் இரவை உரசி செல்லும் இரவு மீண்டும் வளர்ந்து நிக்கும் ஆனந்தமாய் அலைகள் பொங்குவது இரவில் அபரிதமாய் ஆசைகள் ஆர்ப்பரிப்பதும் இரவில் ஈசல்கள் தீயை அணைப்பதும் இரவில் இயற்கையம் இயல்பாய் உறங்குவதும் இரவில் மல்லிகை தூது விடுவதும் மலர் மணம் நாசி நுகர்வதும் அழகுமயில் அலங்கரித்து வந்து உண்ட தாம்பூலம் உண்ண தருவதும் சிறு நண்டு வளை விட்டு எழும்ப கிளையமர்ந்த ஆந்தை கிள்ளியே பறக்க ஓநாய்கள் கவிபாடும் காட்டில் குறு முயல்கள் குழிக்குள் குறட்டை விடும் விரலோடு விரல் பிணைந்திருக்க இ…
-
- 14 replies
- 2.1k views
- 1 follower
-
-
நவநாகரீகமான உலகில் முழுகப்போகிறேன் என்றால் இவ்வளவு நேரமும் நன்றாக இருந்தவருக்கு இப்ப என்ன நடந்தது என்று யோசிப்பார்கள்.ஆனால் 1960 களிலும் அதற்கு முன்னரும் பிறந்தவர்களுக்கு முழுக்கைப் பற்றிய பெரிய பெரிய கதைகளே இருக்கும். ஊரில் இருந்த காலங்களில் குளித்தல், தோய்தல் ,முழுகுதல் என்று மூன்று வகைப்படுத்தியிருந்தனர். முதலாவதாக தலையிலே தண்ணீர் படாமல் அள்ளி ஊற்றிக்கொண்டே இருந்தால் குளித்தல். அடுத்து ஒரு செத்தவீடு போய் வந்தால் தலையிலே தோய் என்பார்கள். மூன்றாவது தான் முழுக்கு.எனது பதின்ம வயதுக்கு முதல் முழுக்கு எப்படி இருந்தது. உங்களுக்கும் முழுக்கைப் பற்றி நிறைய அனுபவம் இருக்கலாம்.ஆணாக இருந்தா என்ன பெண்ணாக இருந்தா என்ன வெட்கப்படாமல் எழுதுங்கள். அனேகமானவ…
-
- 18 replies
- 2.8k views
-
-
ஓடிய ஓட்டம் என்ன? எங்கள் ஊரின் அன்றைய அழகு தேவதை அவள்தான். பெயர் எல்சி. நிறம் வெள்ளை. அதனால்தான் ‘லொள்ளு’ விட பல இளைஞர்கள் அவளைச் சுற்றிச் சுற்றி சைக்கிளில் திரிந்தார்கள். அவர்களுக்குள் கவியும் இருந்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை என்று சொல்ல மாட்டேன். இருந்தான். அழகு என்பது பொதுவுடமை. அதை யாரும் ரசிக்கலாம்தானே. ஆனால் பயம் காரணமாக தூரஇருந்தே கவி ரசித்துக் கொண்டிருந்தான். தங்களைப் பார்த்து ஒருத்தியாவது சிரிக்க மாட்டாளா என்று ஏங்கும் இளம் வயது வாலிபங்கள் மத்தியில் எல்சி எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள். கவனியுங்கள் அவளுக்கும் பொதுவுடமைத் தத்துவம் தெரிந்திருக்கிறது. அவளுக்கு முழங்காலுக்கு கீழே இருக்கும் பாவாடை அணியப் பிடிக்காது. இதுவும் வாலிபங்களுக்கு அவளிடம் …
-
- 15 replies
- 3.7k views
-
-
வேலாயுததத்தின் வீடு. வீட்டை சுற்றி பலா கமுகு பப்பாசி என மரங்கள் சூழ்ந்து சோலையாய் இருக்கின்றது,பின் பக்கம் மாதுளையும் தேசிமரமும், மரத்துக்கடியில் அடுப்பெரித்த சாம்பலை வேரை கரையான் அரிக்கமல் கொட்டிவிடுவது வழக்கம். மத்தியாண வெக்கைக்கு வீட்டு நாய்களும் படுத்திருக்கும் கோழிகளும் சாம்பல் அவ்வப்போது சம்பல் குளிக்கும். முன்பக்கம் சுவர் நீட்டுக்கும் நந்தியாவட்டையும் பக்கவாட்டில் குரோட்டன்களும் நாலுமணிப்பூச் செடிகளும் எப்போதும் செழிப்பாக இருக்கும் . வீட்டுக்கு ஈசான மூலையில் கிணற்றில் இருந்து குளிக்கும் தண்ணி சுவரோர பூச்செடிகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்கின்றது.. வீட்டு வாசலுக்கு இரண்டுபக்கமும் திண்ணைகள் மத்தியாணத்திலும் குழுமையாக இருக்கும்.. திண்ணைக்கு நே…
-
- 19 replies
- 2.4k views
-
-
ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை) ஒரு நாள் மனைவியுடன் புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் கைத்தொலைபேசியில் முகநூலில் ஒன்றிப்போயிருந்த என்னை ஒரு தரிப்பிடத்தில் ஏறி பிச்சை கேட்கத்தொடங்கிய ஒருவரின் குரல் இடை மறித்தது அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால் வாகனத்தில் என்றால் ஐன்னல்களை மூடிவிடுவேன் புகையிரதத்தில் என்றால் தோழிலிருக்கும் துண்டால் மூக்கை மூடிக்கொள்வது தான் எனது வழமை புகையிரதத்தில் ஏறி பிச்சை கேட்பவர்கள் ஏதாவது ஒரு கதை சொல்வார்கள் இது வழமையானது தான் ஆனால் இவர் தனது வாழ்வு பற்றி சொல்லத்தொடங்கியது வித்தியாசமாக இருந்தது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சொல…
-
- 38 replies
- 2.9k views
-
-
புதிய ஊர்கள் நாடுகள் பார்ப்பதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விருப்பம் தான். ஆனாலும் பணம் பணம் என்று அதைச் சேர்ப்பதில் உள்ள ஆர்வம் செலவழிப்பதில் இருப்பதில்லை பலருக்கு. யேர்மனியில் வசித்தபோது நானும் கணவருமே முழுநேர வேலை செய்தோம். முழுநேரம் என்றால் எட்டே எட்டு மணிநேரம் தான். அதற்குமேல் பெரும்பாலானவர்கள் வேலை செய்வதில்லை. ஆண்டில் ஆறு வாரங்கள் விடுமுறை உண்டு. சம்பளத்துடன் ஒரு நாளுக்கு 32 டொச் மார்க்குகள் மேலதிகமாக விடுமுறைக்காகத் தரப்படும். அப்ப சொந்த வீடும் ஒருத்தரிட்டையும் இல்லை. அதனால் மற்றவரைப் பார்த்துப் புகைந்து நாமும் சொந்த வீடு வாங்கவேணும் எண்ட துன்பமும் இல்லை. வாடகை லண்டன் போல் உச்சத்துக்கு போவதும் இல்லை. ஒருவரின் உழைப்பிலேயே மிக மகிழ்வாக வாழக்கூடிய நிலை. நத்த…
-
- 44 replies
- 8.2k views
-