யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
43 topics in this forum
-
வேலாயுததத்தின் வீடு. வீட்டை சுற்றி பலா கமுகு பப்பாசி என மரங்கள் சூழ்ந்து சோலையாய் இருக்கின்றது,பின் பக்கம் மாதுளையும் தேசிமரமும், மரத்துக்கடியில் அடுப்பெரித்த சாம்பலை வேரை கரையான் அரிக்கமல் கொட்டிவிடுவது வழக்கம். மத்தியாண வெக்கைக்கு வீட்டு நாய்களும் படுத்திருக்கும் கோழிகளும் சாம்பல் அவ்வப்போது சம்பல் குளிக்கும். முன்பக்கம் சுவர் நீட்டுக்கும் நந்தியாவட்டையும் பக்கவாட்டில் குரோட்டன்களும் நாலுமணிப்பூச் செடிகளும் எப்போதும் செழிப்பாக இருக்கும் . வீட்டுக்கு ஈசான மூலையில் கிணற்றில் இருந்து குளிக்கும் தண்ணி சுவரோர பூச்செடிகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்கின்றது.. வீட்டு வாசலுக்கு இரண்டுபக்கமும் திண்ணைகள் மத்தியாணத்திலும் குழுமையாக இருக்கும்.. திண்ணைக்கு நே…
-
- 19 replies
- 2.4k views
-
-
ஆசைகளின் அலைதலுடன் அவாக்கொண்டு காத்திருந்தேன் எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் அத்தனை முகங்களும் கண்முன்னே கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி காலம் எண்ணிக் காத்திருந்தேன் கனவுகளின் கால்பரப்பலுடன் மனத்துள் நெருடிய முள்ளகற்றி என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது மனித முகங்கள் முதிர்வாய் மாறி ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி அயலின் நெருக்கம் அறுந்தே போக அந்நிய தேசம் ஆனது வீடு வெறிச்சோடிய வீதிகள் நடுவே விண் தொட்டன வீடுகள் ஆயினும் மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர் கிட்டிப்புள் விளையாடிய கிழவர்க…
-
- 18 replies
- 2.2k views
-
-
இங்கு, எத்தனை பிழைகள்... உள்ளது? இணையத் தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று, பிரபல செய்தி ஊடகங்கள் எழுதும்... தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் போது, அதில் வரும் தமிழ் எழுத்துப் பிழைகள்.... நாம்... கற்ற, பேசும் தமிழ் மொழியை கூட.... எது சரி, எது பிழை என்று, எமக்கே... சந்தேகம் வரும் போது, பெரும் சங்கடமாக இருக்கும். இங்கு... அந்த ஊடகங்களின் பெயரை குறிப்பிடாமல், அந்தச் செய்தியில் வந்த ஒரு பந்தியை... மட்டும் இணைக்கின்றேன். அதில் எத்தனை... பிழைகள் உள்ளது என்று, ஒரு, தமிழ் ஆசிரியராக..... உங்களை, நினைத்துக் கொண்டு... எத்தனை பிழைகளை.... கண்டு பிடிக்க முடிகின்றது என்பதே.... போட்டி. இதனால்... நாம் விடும் பிழைகளை, உங்கள் மூலம் அறியலாம…
-
- 18 replies
- 2.6k views
-
-
நவநாகரீகமான உலகில் முழுகப்போகிறேன் என்றால் இவ்வளவு நேரமும் நன்றாக இருந்தவருக்கு இப்ப என்ன நடந்தது என்று யோசிப்பார்கள்.ஆனால் 1960 களிலும் அதற்கு முன்னரும் பிறந்தவர்களுக்கு முழுக்கைப் பற்றிய பெரிய பெரிய கதைகளே இருக்கும். ஊரில் இருந்த காலங்களில் குளித்தல், தோய்தல் ,முழுகுதல் என்று மூன்று வகைப்படுத்தியிருந்தனர். முதலாவதாக தலையிலே தண்ணீர் படாமல் அள்ளி ஊற்றிக்கொண்டே இருந்தால் குளித்தல். அடுத்து ஒரு செத்தவீடு போய் வந்தால் தலையிலே தோய் என்பார்கள். மூன்றாவது தான் முழுக்கு.எனது பதின்ம வயதுக்கு முதல் முழுக்கு எப்படி இருந்தது. உங்களுக்கும் முழுக்கைப் பற்றி நிறைய அனுபவம் இருக்கலாம்.ஆணாக இருந்தா என்ன பெண்ணாக இருந்தா என்ன வெட்கப்படாமல் எழுதுங்கள். அனேகமானவ…
-
- 18 replies
- 2.8k views
-
-
கண் தெரியும் தூரம் வரை….. காலம் தின்று..துப்பிய …., எச்சங்களின் மிச்சங்களாய்…., செத்துப் போன வீடுகளின், எலும்புக் கூடுகள் ! வெறுமைகளை மட்டுமே…, வெளியே காட்டிய படி…, உண்மைகளை ஆழப் புதைத்து.., கண் மூடித் துயில்கின்ற….., வரலாறுகளின் சுவடுகள் ! அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்.., ஆளப் புதைந்திருக்கும் ….., வைரவ சூலம் மட்டும்…., எத்தனை வடை மாலைகளையும், எத்தனை தேசிகாய்களையும்,…., தன் மீது சுமந்திருக்கும் ? அந்தக் கருக்குவாச்சி மரம், எத்தனை காதலர்களின், இரவு நேரச் சந்திப்புக்களை…, விரக தாபங்கள் சிந்தும், கற்பூர சத்தியங்களை…., தன்னுள் புதைத்திருக்கும் …
-
- 16 replies
- 3.4k views
-
-
நாய்க்குட்டி தனது படுக்கையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நிமிடத்தில் அது பார்ப்பதை மட்டும் செய்து கொண்டிருந்தது. நாளைக்கான திட்டமிடல்களோ நேற்றைய நினைவுகளோ நாய்க்குட்டியிடம் இருப்பதில்லை. மகிந்தன் நாய்க்குட்டியினை நிலைகுத்திப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள், நாயின் கண்கள் என்ற வித்தியாசங்கள் அவனுள் மறைந்து, இடையில் இணையவலை இருப்பது மறந்து இந்தக் கதையினை இப்போது படித்துக்கொண்டிருக்கும் வாசகரைப் போல, மகிந்தனிற்கு நாய்க்குட்டி தெரிந்தது. நாய்க்குட்டிக்கும் தனக்கும் இடையே இருந்த தூரமோ நேரமோ அவனிற்குள் மறைந்து போனது. மிகமிகப் பழைய காலத்தில், படைப்பெதுவும் நடப்பதற்கு முன்னால், ஆதிக்கு முந்திய ஒரு ஆதிக் கணம் இருந்தது. அது வெறுமையாய் இருந்தது. ஒன்றில் …
-
- 15 replies
- 2.5k views
-
-
நான் சிறுத்துப் போனேன் அந்தத் தொலைபேசியின் மணி எப்போதாவதுதான் ஒலிக்கும். அது எனக்கு மட்டும் உரித்தான வீட்டுத் தொலைபேசி. எனது முக்கிய உறவினர்களுக்கு மட்டும்தான் அந்தத் தொலைபேசியின் இலக்கம் தெரியும். வேலை, நண்பர்கள், இன்னபிற தேவைகளுக்கு எனது கைத்தொலைபேசியையே பயன்படுத்திக் கொண்டிந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. அழைப்பை ஏற்கும் போது பார்த்தேன். அழைப்பு சிறிலங்காவில் இருந்து வந்திருந்தது. எனது உறவுகள் யாரும் சிறிலங்காவுக்குப் போவதற்கு சாத்தியமில்லையே என்ற நினைப்புடனேயே “ஹலோ” சொன்னேன். “ஆர் கவியே கதைக்கிறது?” அங்கிருந்து கதைப்பது யாராகா இருக்கும்? பரம இரகசியமாகப் பாதுகாத்த எனது வீட்டுத் தொலைபேசி எப்பட…
-
- 15 replies
- 2k views
-
-
பார்க்காதே பார்க்காதே புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்த பொழுது, “நாட்டுக்கே திரும்பி போய்விடலாமா?” என்ற நினைப்புதான் ஓங்கி நின்றது. குளிர் ஒரு காரணமாக இருந்தது என்றாலும்,குளிரில் வரும் நடுக்கத்தை விட டொச் மொழியை கேட்கும் போது ஏற்பட்ட உதறல் அதிகமாக இருந்தது. ஜேர்மனியர்கள் கதைக்கும் வார்த்தைகளுடன் ‘ஸ்ஸ்ஸ்’ என்று காற்று வரும் பொழுதெல்லாம் என்னுள் இருந்து தன்னம்பிக்கைக் காற்று தானாக வெளியேறிக் கொண்டிருக்கும். “என்ன பாஷை இது. தமிழுக்கு வசப்பட்ட நாக்கு டொச்சுக்கு பிரளமாட்டுதாம்” என்னுடன் ஊரில் இருந்து யேர்மனிவரை கூட வந்த ரத்தினம் இப்படி என்னுடன் அடிக்கடி சலித்துக் கொண்டிருப்பான். ரத்தினம் என்னைவிட இரண்டு வயது இளமையானவன். அவனது தமையன் சந்திரன் என்னுடன் ஒன்றாகப…
-
- 15 replies
- 1.7k views
-
-
ஓடிய ஓட்டம் என்ன? எங்கள் ஊரின் அன்றைய அழகு தேவதை அவள்தான். பெயர் எல்சி. நிறம் வெள்ளை. அதனால்தான் ‘லொள்ளு’ விட பல இளைஞர்கள் அவளைச் சுற்றிச் சுற்றி சைக்கிளில் திரிந்தார்கள். அவர்களுக்குள் கவியும் இருந்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை என்று சொல்ல மாட்டேன். இருந்தான். அழகு என்பது பொதுவுடமை. அதை யாரும் ரசிக்கலாம்தானே. ஆனால் பயம் காரணமாக தூரஇருந்தே கவி ரசித்துக் கொண்டிருந்தான். தங்களைப் பார்த்து ஒருத்தியாவது சிரிக்க மாட்டாளா என்று ஏங்கும் இளம் வயது வாலிபங்கள் மத்தியில் எல்சி எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள். கவனியுங்கள் அவளுக்கும் பொதுவுடமைத் தத்துவம் தெரிந்திருக்கிறது. அவளுக்கு முழங்காலுக்கு கீழே இருக்கும் பாவாடை அணியப் பிடிக்காது. இதுவும் வாலிபங்களுக்கு அவளிடம் …
-
- 15 replies
- 3.7k views
-
-
“தம்பி சுடுவதாக இருந்தால் நீயே சுட்டுவிடு. அது உனக்கும் பெருமை உனக்கு சுட பழக்கிய எனக்கும் பெருமை.” மணலாறு கொண்டாடிய ஒரு முதுபெரும் தளபதியின் என்னுடனான இறுதி உரையாடலின் ஒரு பகுதியே மேற் கூறிய வசனம். போர் புதுகுடியிருப்பை தாண்டி, ஆனந்தபுரம் - தேவிபுரம் வரை வந்திருந்த காலம் அது. போர்க்களத்தை விட்டு, குடும்ப மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தளபதிகளும், முதுபெரும் வீரர்களும் ஓடி ஒளிந்து கொண்டிருந்த வேளையில், மூன்று நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து விட்டு கட்டாய ஆட்சேர்ப்பில் களமாடி கொண்டிருந்தார்கள் எம் விடுதலை வேங்கைகள். தலைமைக்கு கடுமையான முடிவெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை. தர்மத்தின் சமநிலையை சரிகாக்க வேண்டிய சூழல…
-
- 14 replies
- 2.1k views
-
-
குடை ராட்டினம் கண்ணுக்குள் நூறு கனவு. ஒரு பார்வை ஒரு உதட்டசைவு ஒரு புன்முறுவல் அடடா.. இதைத்தான் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து என்று பாடி வைத்தார்களோ? வந்த வேலை மறந்து மீண்டும் மீண்டும் அதே தேடல்.. பார்த்த விழி பூத்திருக்க அங்கே ஒரு மௌன நாடகம் அரங்கேறியது. ஆரம்பப் பாடசாலையை முடித்து இன்று உயர்தர பாடசாலையில் சேர்வதற்காக வந்திருக்கும் பல்லின மாணவர்களின் கூட்டம் அழகிய மலர்த்தோட்டம். இத்தனைபேர் நடுவில் அவள் மட்டும்..... என்ன இது... பார்வையை எங்கும் அலைமோத விடாமல் ஒரே இடத்தையே காந்தமாய் கட்டிப்போட்டது பதினாறின் பருவங்கள் உள்ளுக்குள் உமிழ்ந்து உடலெங்கும் மின்சாரம் பாய்ச்ச.... அவளுக்குள்ளும் அதே நிலைத…
-
- 14 replies
- 2.9k views
-
-
இரவின் ஸ்பரிசம். இரவுக்கு உருவம் கிடையாது பகலுக்கு வட்டமான வடிவம் உண்டு தினமும் பகல் இரவை உரசி செல்லும் இரவு மீண்டும் வளர்ந்து நிக்கும் ஆனந்தமாய் அலைகள் பொங்குவது இரவில் அபரிதமாய் ஆசைகள் ஆர்ப்பரிப்பதும் இரவில் ஈசல்கள் தீயை அணைப்பதும் இரவில் இயற்கையம் இயல்பாய் உறங்குவதும் இரவில் மல்லிகை தூது விடுவதும் மலர் மணம் நாசி நுகர்வதும் அழகுமயில் அலங்கரித்து வந்து உண்ட தாம்பூலம் உண்ண தருவதும் சிறு நண்டு வளை விட்டு எழும்ப கிளையமர்ந்த ஆந்தை கிள்ளியே பறக்க ஓநாய்கள் கவிபாடும் காட்டில் குறு முயல்கள் குழிக்குள் குறட்டை விடும் விரலோடு விரல் பிணைந்திருக்க இ…
-
- 14 replies
- 2.1k views
- 1 follower
-
-
வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள் சூசை ஒரு Bci பட்டதாரி. அந்தப் பட்டப் படிப்புக்காக அவன் பல்கலைக்கழகம் எங்கும் போகவில்லை. அந்தப் பட்டத்திற்கான தகுதியை அவன் சினிமா தியேட்டர்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டான். பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர்கள்தான் அவனை (Bachelor of Cinema) பட்டம் பெற வைத்த முக்கிய கூடங்கள். எவ்வளவு கேவலமான படங்களாக இருந்தாலும் முதல்நாள் முதல் காட்சியில் பிரதம விருந்தினராக சூசை இருப்பான். அவனிடம் சினிமா சம்பந்தமாக எது கேட்டாலும் பதில் கிடைத்து விடும். அறுபதுகளின் பிற்பகுதியிலேயே வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதே அதை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர்கள் விபரங்களையும்…
-
- 13 replies
- 3.1k views
-
-
காரும் கதியாலும். ஆட்டுப்பால் ....முலைப்பால்.....அன்பால்....! அந்தக் கிராமம் பிரதான வீதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் உள்வாங்கி இருந்தது. அங்குள்ள மக்களும் விபரமானவர்களாகவும் அதே சமயம் வெள்ளந்தியானவர்களாகவும் இருந்தார்கள்.அங்கும் ஒரு பெரிய ஒழுங்கையில் இருந்து பிரிந்த சிறிய ஒழுங்கையில் சென்றால் அதன் முடிவில் எதிர் எதிராக இரண்டு வீடுகள்.அதில் ஒரு வீடு தங்கராசுவின் வீடு .அவன் மனைவி தனலட்சுமி. நண்டும் சிண்டுமாய் நாலு பிள்ளைகள். மூத்தவனுக்கு ஏழு வயசிருக்கும்.அடுத்த ஐந்து வயசில் ஆணும் பெண்ணுமாய் இரணைப்பிள்ளைகள்.மற்றது கைக்குழந்தை.அவர்களிடம் ஒரு சிறிய மொரிஸ்மைனர் கார் உண்டு. அதில்தான் வேலைக்கு போய் வருவது.தங்கராசுவுக்கு ஒரு ஆசை....ஒரு பெரிய ஃபரினா கேம்பிரிட்ஜ் வாங்க…
-
- 12 replies
- 3.4k views
-
-
அரோஹரா!ஆறுமுகா! “அந்தக் கூட்டத்துக்குள்ளை நேற்று உன்னைக் காணேல்லை” திங்கட்கிழமை வேலை இடத்தில் மரியா என்னைக் கேட்ட போது, எந்தக் கூட்டத்தை அவள் சொல்கிறாள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. அவளே தொடர்ந்தாள். “இத்தாலியில் வீதியில் வைச்சு ஆளாளுக்கு தக்காளி அடிச்சு ஒரு விளையாட்டுவிழா (Tomatina Festival) நடக்குமே அது போலை உங்கடை நாட்டிலையும் தேங்காய் அடிச்சு விளையாடும் ஒரு விளையாட்டுவிழா இருக்குதோ? ” “நீ என்ன சொல்ல வாறாய்?” நேற்று, போக்குவரத்து வீதியை மறிச்சு தடை போட்டிருந்தார்கள். அதாலை அடுத்த வீதியாலை போகவேண்டி வந்திட்டுது. என்ரை காரைத் திருப்பிக் கொண்டு அடுத்த வீதிக்குப் போற பொழுதுதான் பார்த்தன், உன்ரை நாட்டுக்காரர்கள் நிறையப் பேர் வீதியிலை ஊர்வ…
-
- 12 replies
- 2.5k views
-
-
ஆலமரமும் அழியாத ஞாபகமும் - சாந்தி நேசக்கரம் - __________________________________ வேர்கட்டிய மண்ணின் ஆழத்தை அழி(ரி)த்தது மழை. ஊர்கட்டி வளர்த்த காலத்தின் க(வி)தை இறுக்கம் தளர்ந்து சரியத் தொடங்கியது. வல்லியர் காலத்து வைரம் வசந்தம் காணாமல் இரவடி(ழி)த்த மழையின் பெயரால் பாறி வீழ்ந்தது. எம்மூரின் பரம்பரை ஆல்விழுதின் கதை விடிய முதல் ஆயுள் முடிந்தது. இருந்தவரை நிழல் நாங்கள் ஊஞ்சலாட விழுது ஊர் மடியில் கனத்தோரின் கதையறிந்து கண்ணீர் துடைத்த தோழமை. சோளகக் காலம் கால்நடைகள் உணவாக ஆலிலைகள் தந்த உரம் பாய்ந்த மரம். எங்கள் பெரிய ஆலமரம் ஓரிரவில் குடைசாய்ந்து ஓய்ந்தது உயிர். பங்கு பிரித்து கோடரி…
-
- 10 replies
- 5.4k views
-
-
கள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான். பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் க…
-
- 10 replies
- 2.5k views
-
-
கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே இது ஒரு கறுப்பு வெள்ளைக் கதை. பல வருடங்களுக்கு முந்தியது. நான், பாடசாலை முடிந்து வந்து மாலையில் கிளித்தட்டோ, கிரிக்கெற்றோ விளையாடிய காலம். ‘ட’ வடிவில் அமைந்த ஒரு காணிதான் எங்கள் விளையாட்டுத் திடல். காணியின் ஒரு பக்கம் மரங்கள் எதுவுமின்றி வெளியாக இருக்கும். மற்றைய பக்கத்தில் பனைமரங்கள் நிறைய இருக்கும். அது பீற்றர் குடும்பத்துக்கு சொந்தமானது. கிரிக்கெற் விளையாடும் போது பந்து பீற்றர் குடும்பத்துக் காணிக்குள் போய் விழுந்து விட்டால் பந்தை யார் போய் எடுப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வரும். பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாது. அந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச் ‘சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமா…
-
- 7 replies
- 2.3k views
-