கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
'காதல் சொல்லத் தூண்டாதோ?' பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான் கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன் விண்ணில் வாழும் தேவதை இவளோ மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ? உதடு பிரித்து முத்துப் புன்னகை உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை உதடு சுழித்து கொல்லும் புன்னகை உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் என் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவந்து காற்று என்னைப் போர்க்காதோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்து பொங்கும் நட்பைக் காதலாய் மாற்றாதோ? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்து அவளுக்கு காதல் சொல்லத் தூண்டாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'காதல் சொல்லத் தூண்டாதோ?' https://www.facebook.com/group…
-
- 0 replies
- 116 views
-
-
என் அன்பு இதயங்களுக்கு..விரைவில் 2வது பாகமும் தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.நன்றிகள்
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆபாசமென தமிழ்நாட்டு சஞ்சிகைகள் சில எனது “பாவைக் கூத்து” கவிதையை பிரசுரிக்க முடியாது என்றார்கள். தயவு செய்து இக்கவிதையை வாசித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.பத்திரிகையாளர்கள் துணிச்சலுடன் பிரசுரிக்க விரும்பினால் பிரசுரியுங்கள். , பாவைக் கூத்து - வ.ஐ.ச.ஜெயபாலன் * அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி? * வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்த சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்? * பொம்மலாட்டப் பாவையைபோல் ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி. உன் மழலை அ…
-
- 2 replies
- 1.6k views
-
-
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி" "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன? இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!" "மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே! அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!" வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே! கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?" "விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே …
-
- 1 reply
- 356 views
-
-
-
- 0 replies
- 793 views
-
-
"தாய்மை" "காதல் உணர்வில் இருவரும் இணைய காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது முதலாவது கவிதை ’பாலிஆறு நகர்கிறது’ (1968. ) இரண்டாவது கவிதை (நம்பிக்கை 1968) இரண்டுமே புரட்ச்சியில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வன்னிக்காடு மையமாக அமையும் என்பதை இராணுவ புவியியல் அடிப்படையில் இனம்கண்டு முன் மொழிந்த கவிதைகளாகும். . நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் …
-
- 1 reply
- 1k views
-
-
இன்றும் அன்றும்..! ************** இன்டர் நெட்டை திறந்தாலே ஏதோ ஒரு விளம்பரம் இடை குறைப்பா எழில் அழகா.. தொந்தியா, வயிற்றில் தொல்லையா தூக்கமா-அது இல்லையா சுகரா,கொழுப்பா, சூம்பலா,வீங்கலா இதுபோன்று எத்தனை எத்தனை.. அத்தனைக்கும் மருந்து அவரவர் சொல்லி அதைசெய்,இதைசெய் அப்படிச் செய் இப்படிச்செய்-என ஆயிரம் அறிவுரை இந்தபழத்தை இதுக்கு சாப்பிடு என்றொருவர் இதைசாப்பிடதே இந்த நோய்க்கு என்றொருவர்.. படுக்கும் முறை நடக்கும் முறை பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும் முறை சொல்லிச் சொல்லியே சுகநலம் உள்ளவரும் ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
"எரிச்சலை ஊட்டுகிறது" "எனக்கு மேல்- ஒரு சக்தி உண்டு- அதை நம்புகிறேன் மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி உண்டு- அதை நம்புகிறேன் அணங்கு மேல்- ஒரு மோகம் உண்டு - அதை நம்புகிறேன் பிணக்கும் பிரச்சனைக்கும் - ஒரு தீர்வு உண்டு- அதை நம்புகிறேன்" "நந்தியை விலத்தி- ஒரு அருள் காட்டியவனை- எனக்குப் புரியவில்லை மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை வெட்டியவனை- எனக்குப் புரியவில்லை அந்தியில் வாடும்- ஒரு மலரை மாட்டியவளை- எனக்குப் புரியவில்லை இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம் மூட்டியவனை- எனக்குப் புரியவில்லை" "வருணத்தை காப்பாற்ற- ஒரு பக்தனை நீ அழைக்காதது- எரிச்சலை ஊட்டுகிறது கருணைக்கு அகலிகை- ஒ…
-
- 0 replies
- 160 views
-
-
எச்சரிக்கை! *************** கடிக்க வந்த நாய்க்கு கல்லெறிந்தேன் அது ஓடித் தப்பியது. தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன் ஒற்றுமையாக துரத்திவந்தது என்னை ஓடவைத்தது. இது போன்ற ஒற்ருமையே தமிழர்க்கும் தேவை ஒன்றுசேர் இல்லையேல் தனித் தனியாய் நின்று அழிந்தே! போவாய். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 5 replies
- 1.2k views
-
-
அம்மாவின் அன்பு சாப்பிட்டியா மகனே மழை பெய்கிறது குடை பிடித்து போ மகனே ஏன் இருமிக்கொண்டு இருக்கிறாய் டாக்டரை போய் பாரு மகனே இரவாகிப்போய் விட்டது பார்த்து போ மகனே ஏன் மகனே இப்படி இளைத்து போய் விட்டாய் வேலை வேலை என்று எந்த நேரமும் திரியாதே மகனே நேரம் இருக்கும் போது அம்மாவை வந்து பார்த்து விட்டு போ மகனே உடம்பை கவனமாக பாரு மகனே உனக்காக கொச்சம் உனக்கு பிடித்த உழுந்துத் தோசை சுட்டிருக்கேன் வந்து சாப்பிட்டு போறியா மகனே இத்தனை கேள்விகளையும் இத்தனை அன்பையும் இத்தனை பாசத்தையும் ஓயாமல் ஒலிக்கும் ஒரே ஜீவன் அம்மா தான்.
-
- 2 replies
- 654 views
-
-
ஏன் இந்த வெறுப்பு..! *************** தெளிந்தோடும் நீரோடை கூட கழிவு நீர் சேறாகிப் போச்சு அழகான.. மலர்த் தோட்டம் கூட கருவேலம் முள்ளாகிப் போச்சு மானுட இதயங்கள் கூட மரத்துப் போய் கல்லாகிப் போச்சு இயற்கையின் ரசனைகள் கூட இருள் சூழ்ந்த புகையாகிப் போச்சு இந்த.. வாழ்க்கையை ரசித்து வாழத்தெரியாத போக்கினை எவன் தான் புகுத்தியது. நாக்கினில் நஞ்சையும் பொய்யையும் கலந்து இளையோர் மூளைக்குள் யாரவன் செலுத்தியது. வானிலே பறக்கின்ற மகிழ்ச்சியின் எல்லையை குறோதக் கூட்டினில் எவனோ குறுக்கியது. உலகத்தில் அழி…
-
- 5 replies
- 1.2k views
-
-
Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத சுமைகளை சுமந்தபடியே பெரியவர் குழந்தைகள் என தாண்ட முடியாத ஒரு தூரத்தை தாண்ட முயற்சிக்கின்றனர் நிலவின் துணையோடு நீண்டதூரம் போகிறார்கள் அன்று ஒரு நாள் போர் தின்று முடித்த பூமியில் இருந்து போனவர் போலவே ஏதோ விதி என்றும் சிலர் தமக்குள் பேசிக்க…
-
- 0 replies
- 887 views
-
-
கொடிய கிருமி.!கொரோனாவா? என்னைவிட யாருமுண்டோ இங்கு மண்ணில் உயர்ந்த ஜாதி நானே மற்றவர் எல்லோரும் கீழ்ஜாதி தானே எண்ணத்திலூறிய வெறியர்கள் ஒருபால் கறுப்பு வெள்ளைத் தோலினை பிரித்து கசக்கி பூவினை எறிவதைப்போலே உலகநாடுகள் சிலவற்றில் அடிமையாய் உழைப்பை உறுஞ்சும் கூட்டமும் ஒருபால் ஏழை எளியோர் வாழ்வைச்சுறண்டியே ஏப்பம் விடுகின்ற முதளாளிக்கூட்டம் பணத்தை சேர்த்தே கோடீஸ்வரனாய் படைத்தவன்போலே நினைப்பவன் ஒருபால் மதங்கள் சொல்லும் அறிவுரை மறந்து மதம் பிடித்து மாக்களாய் அலைந்து-தன் மதம் ஒன்றே உலகில் பெரிதென… பிரபஞ்சம் மறந்து பிதற்றுவோர் ஒருபால் அணுவுலை நிறுவி ஆயுதம் குவித்து …
-
- 0 replies
- 497 views
-
-
போலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்
-
- 0 replies
- 929 views
-
-
என்னை விட்டு விடுங்கள். நான் சொன்னது என்ன? இவர்கள் செய்வதுதான் என்னவோ? இன்பம் துன்பம் கடந்த நிலையில் எனது போதனைகள் இருந்தன. கடவுளாக என்னை ஏற்கச் சொல்லவில்லையே? எனது பெயரால் ஏனிந்தக் கொடுமைகள்? அன்பைப் போதித்த என்னை இப்படி அவமதிப்பது சரிதானா? மனதை பக்குவப்படுத்தச் சொன்னேன். என்னை வைத்து இனவாதக் கொடுமைகளா? தமிழர் நிலங்களைக் கைப்பற்ற எனது பெயரில் சிலை வைப்பா? நானோ ஆசைகளைத் துறந்தேன் ஆனால் என்னை சொல்லி சொல்லியே தமிழினத்தை அழிக்க நினைக்கிறார்களே மனங்களை பண்படுத்தச் சொன்னேன் தமிழரின் உரிமைகளை பறிக்க என்னை பயன்படுத்துகிறார்களே. இவர்களா என்னைப் பின்பற்றுகிறார்கள்? உயிர்களிடத்தில் அன்பு காட்டத்தானே சொன்னேன். என் போதனைகள் வழி நடப்பதாகச் சொல்பவர்கள் அடாவடித்தனமாக தமிழர் நிலங…
-
-
- 1 reply
- 158 views
- 1 follower
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
"தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [ந…
-
- 0 replies
- 426 views
-
-
"வசந்தகால தொடக்கத்தில் எழுதிய வரிகள்" / "Lines Written in Early Spring" "தோப்பின் நிழலில் சாய்ந்து இருக்கையில் தோன்றின மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோரணமாய் தொங்கிய இன்ப சிந்தனையில் தோய்ந்து சில சோகத்தையும் தந்தன!" "இயற்கை மனித குலத்தின் ஆன்மாவுடன் இறுக்கமாக தொடர்பை பிணைக்கும் பொழுது இதயம்வருந்தி என்னை சிந்திக்க வைத்தது இவனேன் மனிதகுலத்துடன் பிணையவில்லை என்று?" "பசுமை வனப்பகுதியில் காட்டுச்செடிக் கூட்டத்தில் பஞ்சுச்செடி அழகிய மாலையை சூட்டிட பல்லாயிரம் மலரும் தாம்சுவாசிக்கும் காற்றை பரவசத்துடன் அனுபவித்து இன்பம் கண்டன!" "என்னைச…
-
- 0 replies
- 254 views
-
-
கருப்பு வர்ணங்கள் பலவுண்டு அதிலே எனக்கும் ஓர் இடமுண்டு என் பெயரோ கருப்பு என்பர் அதனால் என்னை விரும்புவோா் சிலருண்டு அபசகுனமாய் எண்ணி என்னை வெறுப்போரும் பலருண்டு இருந்தும் நான் கவலை கொண்டதில்லை ஏனென்றால் வர்ணங்களில் என்னை மட்டும் ஓர் கவிஞ்ஞன் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என என்னை வர்ணித்து பாடியுள்ளான் ஓபாமா என்னும் கருப்பு மனிதன் வெள்ளை மாளிகையை அலங்கரித்த போது வெள்ளைமாளிகையில் கருப்பு நிலவாய் அண்றொரு நாள் நான் மிளிர்ந்தேனே அதனால் பேருவகை கொள்கின்றேன் என் பெயராய் இப்படிக்கு கருப்பாக ஈழநிலா
-
- 3 replies
- 1.2k views
-
-
புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்" "பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில் தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!" "மாலைக் காற்று மெதுவாய் வீச பாடும் குயில்கள் பறந்து செல்ல வானவில் ஜாலங்கள் புரிய மனதை நெருடி மகிழ்ச்சி தர நாணம் கொண்ட என்னவளை நினைத்து என் எண்ணத்தின் பெரு வெடிப்பில் சிதறிய அவள் அழகுத் துகள்களை பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து ஓவியம் ஆக்கினேன்!" "அகன்ற மார்பும் சிறுத்த இடையும் …
-
- 0 replies
- 446 views
-
-
1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன. உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது. . * இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன். * …
-
- 2 replies
- 1.9k views
-
-
கடந்த இரண்டு வாரங்களாக இருமல் இருமல் இருமல் தொண்டை கழுத்து முதுகு தலை நுரையீரல் இதயம் எல்லா உறுப்புக்கும் இப்போது வேலை இருமல் இப்போது எனக்குக் கிடைத்த ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு நித்திரை தொலைந்தது மேல் மூச்சு வாங்குகிறது பகலை நீட்டிக்க இருமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படுகிறது தியா - காண்டீபன்
-
-
- 7 replies
- 714 views
- 1 follower
-
-
உயிர்த்த தினம் அன்று சிலுவையில் சிதறி கிடந்த சிவப்பு இரத்தத்தில் எதுகுமே தெரியவில்லை எவன் முஸ்லீம் எவன் கிறிஸ்தவன் எவன் இந்து எவன் கறுப்பு எவன் வெள்ளை என்று எல்லாமே ஒரே நிறமாக இருந்தது . பா .உதயகுமார் .
-
- 0 replies
- 1.1k views
-
-
சரித்திரம் மீண்டும் சுழர்கிறது உலக வரை படத்தில் ஒரு சிறு துளி போல் இலங்கை என்று ஒரு தீவு ஓடிக்கொண்டே இருக்கிறது இரத்தம் சிங்கள பெரும் தேசியமும் மதவாதமும் இனவாதவும் வளர்ந்து விட்ட சிறு தீவில் சரித்திரம் மீண்டும் மீண்டும் சுழல்கிறது யாருக்குமே அமைதி இல்லாத தேசமாகிப்போனது விஷம் விதைத்தவர்கள் எல்லாம் வினையை அறுபடை செய்துகொண்டு இருக்கிறார்கள் அமைதியாகவே இருக்கிறார் புத்தர் மட்டும் அந்த ஆலமரத்தடியில் யாரும் அவர் வழியை பின்பற்ரவில்லை என்ற கவலையோடு . B.Uthayakumar
-
- 0 replies
- 803 views
-