Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. அழகு தமிழ் அன்னையாம் தமிழுக்கு ஆயிரமாயிரம் பேர்சொல்வர் அழகு செந்தமிழ் ,இன்பத்தமிழ் குழந்தையின் நாவில் தவழும் மழலைத்தமிழ், அமுதம் சொட்டும் தேன் தமிழ் இன்பத்தமிழ் அகிலம் எங்கும் காண்போம். அழுகின்ற குழந்தை கூட"அம்மா " என அழைத்தால் உருகாதார் நெஞ்சம் உருகாதோ? செந்தமிழால் இன்னிசையால் பாடடெழுதி கவி எழுதிய கண்ணதாசனுக்கும் எண்ணத்திலே சிந்தையிலே முந்தி வந்த தமிழ் என் உயிரான தமிழ் என் முதல் மொழி என் இனிய மொழி. தமிழ் என் உயிர். கரை காணாத கடல். சுடடால் மிளிரும் பொன் போல அதைக் கற்றால் புரியும் உலகம். வளரும் உலக அறிவும் . தமிழுக்கு நிலவென்று பேர் வளர்ந்து கொண்டே இருப்பதால். பழக பழக பண்பை சொல்லி வாழ வைக்கு…

  2. உறவுகளின் உயிர்ப்பை நுட்பமாய் தீர்மானிக்கிறது தேவை சரவிபி ரோசிசந்திரா

  3. கலிபோர்னியாவில் இடைவிடாமல் மழையும், பனியும் ஆக இருக்கின்றது. போன வருடமும் இவ்வாறே. கொட்டும் பனியிலும், கடும் காற்றிலும் ஒரு சோடி கழுகளின் கூட்டையும், அவைகளின் முட்டைகளையும் இங்கு சிலர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இது இங்கு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது ************* ஒரு வழிச் சாலை --------------------------- இரண்டு வெண்தலைக் கழுகுகள் அவற்றுக்கு பெயரும் உள்ளது ஒன்று லிபர்ட்டி மற்றது கார்டியன் மூன்று முட்டைகள் போட்டு மாறி மாறி அடைகாக்கின்றன வாழும் நாள் முழுதும் இவை சோடி மாறுவதில்லை கூடும் மாறுவதில்லை ஒவ்வொரு வருடமும் தண்டும் தடியும் கொடியும் புதிதாக அ…

      • Like
    • 3 replies
    • 431 views
  4. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகில…

  5. ப “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” (நன்னூல் நூற்பா 426) பிரிந்து போகும் 2021டே உனக்கு பிரியா விடைதந்து அனுப்பும் இவ்வேளை.. இன்று.. புலரும் புது ஆண்டே இனம்,மொழி, சாதி,மதம், கறுப்பு,வெள்ளை ஏழை,பணம், அகதி,அடிமை என்னும் மனிதப்பிரிவுகள் நீக்கி மனிதநேயத்தை மனங்களில் இருத்தி அனைத்துயிரோடும் அன்பைப் பொழிந்து. அகிலத்தில் அனைத்தும் ஒன்றேயென்ற உறுதி மொழி கொடுத்து உயிர் கொல்லி நோய்கள் நீக்கி எம்மை வாழவைக்க வா! வா! 2022 புத்தாண்டே! உன்னை வாழ்த்துகின்றோம், வணங…

  6. பேசிப்பார் மனம் மகிழும்..! ********************* இரத்தமும் தசையும் மரணமும் பார்த்துப் பார்த்து களைத்துப்போன கண்களும் நல்லது மறைந்து கெட்ட செய்திகளே.. கேட்டுக் கேட்டு கெட்டுப்போன காதுகளும் நல்ல வாசனைகளை நுகரமுடியாமல் நாற்றத்தால் மயங்கிக் கிடக்கும் மூக்குத் துவாரங்களும் அழகிய மொழிகள் மறந்து அருவருப்பு சொற்களால் நிரம்பி வழியும் வாய்களும் அவரவர் உணவை மறந்து யார்யாரோ உணவை உண்டு மரத்துப்போன நாவும் பற்களும் நல்ல பாதைகள் விடுத்து குறுக்குப்பாதைகள் தேடும் நம் கால்களும் கொடுத்து வாழும் தன்மை மறந்து குறுகிப்போன கைகளுமாய் மனம் இறுகி மகிழ்விழந்து மனிதனை மன…

  7. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது. இப்படியும் நடக்கலாம்..! ***************** வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம் விரும்பிய சமையலறை காணாமல் போகலாம் மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம் முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம் சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம் சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம் சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம். பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம் பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம் வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம் வயது வரமுன்னே பெரியவர் போலாக…

  8. யன்னல்களால் வெளியே ஓங்கி வீசும் பெருங்காற்றின் சத்தங்களை தடுக்க முடியுது இல்லை ... பிணைச்சல்களையும் பூட்டுக்களையும் கடந்து வீட்டின் உள்ளே நுழைந்து மாடிப்படிகள் ஒவ்வொன்றிலும் நிதானமாக ஏறி என் அறையின் வாசல் கதவு வரைக்கும் வந்து நிற்கின்றன காற்றின் சத்தங்கள் படுத்துக் கிடக்கும் எனை எழுப்ப விருப்பமின்றியும் சொல்ல வந்த பெருங்கதையை சொல்லாமல் போக மனமின்றியும் அறையின் கதவோரங்களில் காத்து நிற்கின்றன விடிந்த பின் கதவை திறக்கும் போது அவை மீண்டும் யன்னல்களினூடு வெளியேறிச் செல்லும் கொண்டு வந்த கதைகளை சுமந்து கொண்டு அவை சொல்ல எத்தனிக்கும் கதைகளையும் …

    • 2 replies
    • 1.4k views
  9. மாயபிம்பம் ------------------ ஆரம்பத்தில் தூரத்திலிருந்து அது ஒரு சிலையாக சிற்பமாக தெரிந்தது அப்படித்தான் அது ஒரு அழகு மிளிரும் சிலை என்றும் சொல்லியிருந்தனர் அதுவும் ஒரு காரணம் கொஞ்சம் நெருங்க அது சிற்பம் இல்லை அதில் அங்கங்கே சில செதுக்கல்கள் மட்டும் தெரிந்தது சிலையாக இல்லாவிட்டாலும் வெறும் பாறாங்கல்லாக அப்படியே படுத்தே இருக்காமல் செதுக்கல்கள் இருக்குதே இதுவே இந்நாளில் அரிது என்று இன்னும் இன்னும் நெருங்க பூமியுடன் தோன்றிய அதே கல்லுத் தான் இதுவும் என்று புரிந்தது.

  10. ஆயிரங்களில் ஒன்று ------------------------------ எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் ஒரு குடும்பத்தின் கதை இது ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர் தெரிந்தவர் தான் பலர் கவனம் கொண்டிருந்தார்கள் அந்த நாட்களில் அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் இலங்கை இராணுவமும் காவல்துறையும் அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது ஒரு முறை அகப்பட்டவர்களை ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது இன்னொரு முறை எங்கள் கடற்கரையில் முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும் எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள் எங்கு கண்டாலும் எங்களை இறக்கி அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள் ஊரே உயிர் காக்க சித…

  11. வாழ்வு என்றும் வசந்தங்களே மல்லிகை பூ வாசனையும் வசந்தத்தின் புன்சிரிப்பும் உன் கண் வரைந்த சித்திரமும் கால் கொலுசு சந்தங்களும் இன்னும் என்னை விட்டு போகவில்லை கால்நடை கொஞ்சம் தளர்ந்து கட்டினிலே நான் படுத்தாலும் உன் பூ மணம் விட்டு போகுமோடி முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே உன் கன்னத்தின் குழிகளிலே என் கவிதைகளை புதைத்தவளே காலம் ஒன்று இருந்தால் கல்அறையிலும் வாழ்வு செய்வோம் அதன் வழியால் செல்பவன் எவனாக இருந்தாலும் எழுதிவிட்டு செல்லட்டும் எம் கல்லறையின் நடுவினிலே வாழும் வரை காதல் செய்த வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் காதல் கிளி இரண்டு கண் மூடி தூங்குதென்றும் …

    • 2 replies
    • 1.5k views
  12. கோடி வருசமாய் காத்த அவள் அழகை கோடிகளில் ஒருத்தியாய் கோலமிகு கோளமவளை விண்ணியல் கணக்கில் நேற்று முளைத்த இருகால் நடை மூளை பெருத்த கூட்டம் குத்திக் குடைந்து குதறி கொட்டி வெட்டி கொழுத்தி சீரழிச்சு அவள் சீர்குலைத்து - இன்று சீமான்களாய் சீமாட்டிகளாய் சீமையில் சபை அமைத்து சிந்திக்கிறார்களாம் சீரமைப்போம் மீண்டும் என்று. அவலம் தந்தவனுக்கு அவலத்தை கொடுக்கும் கொடியவள் அல்ல அவர்களாய் தேடிக் கொண்டதுக்கு அவளாய் என் செய்வாள்..?! பெருத்த மூளைக்குள் பொருமிய அறியாமைக்கு அவளாய் என் செய்வாள்..?! சிந்திக்க முடியாத சிறுமைகளை சீமான்களாய் சீமாட்டிகளாய் வரிந்து நிற்கும்…

  13. சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு த…

      • Like
    • 2 replies
    • 395 views
  14. Started by karu,

    கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி …

    • 2 replies
    • 1.1k views
  15. ஒரு கல்லுக்கும் உண்டு சுதந்திரம் ஒரு மரத்துக்கும் உண்டு ஒரு வார்த்தையிலும் உண்டு சுதந்திரம் பறவையின் இறக்கையிலும் உண்டு சட்டம் சொல்கிறது விதி என்று... அழிந்து போகும் வரை உடல் இருக்கும் போவதும் வருவதும் என நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறைவது போல இருக்கும் சுதந்திரம் அர்த்தமற்றது... மனம் அது மிகை கொள்ளாது ஓர்நாள் நிலைபெற்ற வழியில் வெடித்து வெளியே நடமாடும் கை விலங்கை உடைத்த பின் அது மாறும்... ஒன்று உள்ளே போகும் அல்லது வெளியே வரும் உலகம் புதிதென நம்பும் எல்லாவற்றையும் அறியத் துடிக்கும் மனம் வீசியதில் சிக்கியதில் தொடங்கும் கவனம்... கடந்த காலத்தின் அனுபவம் மனதோடு கலந்து விட்டதால் அது தான் முன்னால் வருகிறது இருப்பதோடு கலக்கிறது தடுமாறுகிறது மனம் ஆனால் …

  16. கனவாய் வந்தாய் காவியமே எங்கு இருந்தாய் எங்கு இருந்தாய் எந்தன் கவியே எங்கு இருந்தாய் கண்ணில் உனை நான் கட்டிவைத்தேன் என் காதல் கவியே எங்கு இருந்தாய் என்னில் உனக்காய் உயிர் வடித்தேன் என் இதயம் முழுக்க உனை வரைந்தேன் உன்னில் பின்னால் நிழல் போலே உன்னோடு இருந்தேன் உன் உயிர் போலே காலை வந்த மழை துளிபோல் கவித்துளி போலே உனை வரைந்தேன் மாலை வந்த மதி போலே காலைக் கனவில் உனை கண்டேன் அழகே தமிழே என் கவியே என் அருகில் பூவாய் பூத்தவளே புலரும் பொழுதில் எனை எழுப்பி கனவாய் வந்தாய் காவியமே .

    • 2 replies
    • 1.4k views
  17. "எங்கு சென்றாய்?" [கசல் கவிதை] "காதல் தந்தாய் காத்திருந்தேன் நாள் முழுவதும்! வேதனை படுத்தி சோதனை செய்யவா எங்கு சென்றாய்?" "அழகிய உடல் ஆனந்தம் தந்தது! அருகில் இல்லாமல் தூர விலகினாயே எங்கு சென்றாய்?" "கொஞ்சும் பேச்சில் நெஞ்சைப் பறித்தவளே! வஞ்சக மனத்துடன் கஞ்சத்தனம் வேண்டாம் எங்கு சென்றாய்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந் தீவந்து பாயுது காதினிலே – அங்கு எம்தமிழ் பாடையில் ஏறியுலாவரல் எண்ண எரியுது நெஞ்சினிலே. ஆயிரம் கோடிக்கணக்கில் சுருட்டி அடைபட்டு மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் தயவினுக்காகவே தாழ்பணிந்தேத்தும் தமிழ்நாடு வாழ்வினில் ஊழல் பலபுரிந்தார்க்கும் வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே காவிய நாயகராக்கி அவரைக் கதிரையில் வைக்கும் தமிழ்நாடு மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்துத் தம் மக்கள் மருமக்கள் வாழ்வு பெற திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு அன்னை தமிழின் அருமை மறந்து பொய் ஆங்கில மோகம் தனி…

    • 2 replies
    • 1.2k views
  19. அறம் சிறக்க-நெஞ்சில் மறம் பிறக்க மானத் திறம் இருக்க இரும்புத் தோள்கள் கொண்டு தமிழர் துயர் துடைக்க ஈழ மண் விடுதலையடைய வியர்வை சிந்தி-தங்கள் அயர்வை மறந்து இளமைக் காலக் கனவைத் துறந்து கரிகாலன் படையில் இணைந்து நிலை தளராது-ஈழக் கனவினை மறவாது நெஞ்சில் உரம் இழக்காது நம்மை நம் நாட்டை நலம் பல பேணி நாளும் காத்து-மாற்றானுடன் வெஞ்சமர் புரிந்து-எதிரியை வீழ்த்தி தனித் தமிழீழம் பெற வழிகாட்டியே சந்தனப் பேழைகளில் உறங்கும் மாவீரர்களே!!!! சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது என உணர்ந்து வீறு கொண்டெழுந்து ஆண்டுகொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் பிடியினுள் மாண்டு கொண்டிருந்த எம் இனத்தினை மீண்டு கொண்டெழ உரிமை உணர்வினை தூண்டினீர்! உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும் எம் …

  20. தயவுடன் இந்த பரீட்சார்த்த கவிதைபற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள். கற்றுகொள்ள உதவும். . பாவைக் கூத்து - வ.ஐ.ச.ஜெயபாலன் * அம்ம வாழிய தோழி, பதிலுக்கு வாழ்த்தவும் மறந்து யார் அவன் யாரென மீண்டும் வினவுதி, உனக்கு வேறு வேலையே இலதோ? * அறிந்திலையோடி? மச்சு வீட்டின் காவல் மறந்து ஊரின் சந்து பொந்து மரத்தடி எல்லாம் காதல் குறுஞ்செய்தி பெய்து அலையுமே அந்த நாயின் சொந்தக்காரனடி. போயும் போயும் அவனையா கேட்டாய்? * அறம் இல்லாது ஒருத்தனுக் கெழுதிய காதல் சேதியை பிரதி பிரதியாய் பலருக்கு அனுப்ப…

    • 2 replies
    • 1.4k views
  21. https://www.facebook.com/photo/?fbid=10160014474376950&set=a.10151018148611950&__cft__[0]=AZWx_ghLUGUfdOGsEGqD0O1RrbmZSPkuwd00JPoBavte-iCSNhoJyTSCQXr1UYWhV-IfMvhGBBK_meknfAjNWTrbLXB-T-Q0GYuAVKZeZ0sps0QZ0BAQIgjnY16eW-KRdPc&__tn__=EH-R இலங்கைத் தலைமையின் இரங்கற் கூக்குரல் ஐயாமாரே ஐயாமாரே மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ பணச்சடங்கு நடத்திறம் பார்த்து ஏதும் செய்யுங்கோ பெரிய இடமென்று பிச்சைக்குப் போனால் கரியை வழிச்சுக் கையில கொடுக்கினம் தானத்தைப் பெற்றுக்கொண்டு இனவாதம் பேசியவை …

    • 2 replies
    • 943 views
  22. ”காற்றரனாய்தீபத்தில் கூப்பிய கரம்போல்,அலைப்புறும் என்மீதுநம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.” . இருமை.- வ.ஐ.ச.ஜெயபாலன்..நான் சிறுசாய் இருக்கையில்உலகம் தட்டையாய் இருந்தது.எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டிஒளித்து விட்டானாம்.அப்போதெல்லாம்பகல்தொறும் பகல்தொறும்ஏழு வண்ணக் குதிரைத் தேரில்சூரியன் வருகிற வழி பார்த்திருந்துபாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்..ஒரு நாள் வகுப்பறையில்என் அழகான ஆசிரியைஉலகை உருண்டையாய் வனைந்துபிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.சூரியனை தேரினால் இறக்கிபிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.பின்னர் கல்லூரியிலோஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்கோடிகோடி சூரியன் வைத்தார்..இப்படியாக என்பாட்டியின் மானச உலகில்வாழ்வு மனசிலாகியது.கற்ற உலகி…

    • 2 replies
    • 1.2k views
  23. Started by karu,

    நத்தார் கவிதை -2021 வாருங்கள் தோழர்களே! இந்த மானிலம் மீதினில் அன்பு செழித்து நம் மானுட வர்க்கம் மகிழ்ந்த நன்னாளிது வாருங்கள் தோழர்களே! மாட்டுத் தொழுவத்திலே எங்கள் மன்னன் பிறந்தனன் அந்த நற்செய்தியைக் கேட்டுக் கிழக்கிருந்தே - வந்து கிறிஸ்துவென்றே குறித்தேற்றினர் ஞானிகள் வாருங்கள் தோழர்களே! – நாமும் வாழ்த்திக் கொண்டாடுவம் யேசு பிறப்பினை வாருங்கள் தோழர்களே. பாவிகளாகாதீர் - உங்கள் பாவங்கள் தன்னை நான்ஏற்றுப் பரிசுத்த ஆவிக்குள் சேர்த்திடுவேன் உயர் அன்பில் முகிழ்த்து நற்பண்பில் மலர்ந்திட தேவையென் ரத்தமெனில் எந்தன் தேகத் தசையும் அதற்குரித்தே நோவைப் பொருட்படுத்தேன் நான…

    • 2 replies
    • 569 views
  24. தன்முனைக் கவிதை / "நினைவுகள்” "நினைவுகள் பறக்குது அவள் பிரிந்தது வதைக்குது! நினைவுகள்அணைக்குது அவள் வாழ்ந்தது இனிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.