Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. சில நேரங்களில் சில மனிதர்கள் இருக்கும் போது போற்றுவதும் இல்லாதபோது தூற்றுவதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். இருக்கும் போது வருவதும் இல்லாதபோது மறப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். நல்லவர் போல் நடித்து நம்மை கீழே போட கதைப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். பழைய கோத்திரம் பாடி பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை தெரியும் எமக்கு அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் போது தூற்றி விட்டு வாழ்வு போன பின் வந்து வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று பொய் உரைத்து போற்றுவார்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் எல்லோருக்கும் உபதேசம் …

    • 4 replies
    • 2.8k views
  2. 1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன. உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது. . * இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன். * …

  3. வானத்தில் வண்ணமாக பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது ஆயிரம் மழை துளியாய் வானம் சிந்துது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் உதயன்

    • 8 replies
    • 1.2k views
  4. பனியும் மழையும் இல்லா குளிர் கால இரவொன்றை கடும் காற்று நிரப்பிச் செல்கின்றது ... காற்றின் முனைகளில் பெரும் வாள்கள் முளைத்து தொங்குகின்றன எதிர்படும் எல்லாக் கனவுகளையும் வெட்டிச் சாய்கின்றன திசைகள் இல்லா பெரும் வெளி ஒன்றில் சூறைக் காற்று சன்னதம் கொண்டு ஆடுகின்றது புல்வெளிகளும் நீரோடைகளும் பற்றி எரிகின்றன தீ சூழும் உலகொன்றில் பெரும் காடுகள் உதிர்கின்றன காலக் கிழவன் அரட்டுகின்றான் ஆலகால பைரவன் வெறி கொண்டு ஆடுகின்றான் சுடலைமாடன் ஊழித் தாண்டவத்தின் இறுதி நடனத்தை ஆரம்பிக்கின்றான் அறம் பொய்த்த உலகில் அழிவுகள் ஒரு பெரும் யானையை போல் நடந…

  5. இருபது இருபது இளையவரே வருக வருக.. இன்பம் தந்து துன்பம் தொலைத்து இனிதாய் வருக வருக. இனி ஒரு காலை இவ்வவனியில் புதிதாய் உதிக்க வருக வருக இவ்வையகம் வெப்பம் தாழ்ந்து இனி குளிர் கண்டு இன்புற்றே நிற்க வருக வருக. இனிப் பல்லினமும் இன்பமாய்ப் பெருகி இச்சை கொள் பச்சை தந்து இவள் பூமகள் இனிதே வாழ வருக வருக. இழிசெயலாய் நெகிழிகள் பெருகி இனி இந்த தேசம் இருக்காது எனும் நிலை தொலைத்து இவ்வையகம் வாழ்வாங்கு வாழ இலைகுழை தான் போல் உக்கும் வகைகள் இனி பல்கிப் பெருகிப் புழங்க வருக வருக. இல்லை எனி நல்லார் இந்த நிலை இன்றி இங்கு இல்லை எங்கும் இருப்போர் நல்லோர…

    • 4 replies
    • 1.7k views
  6. அம்மாவின் அன்பு சாப்பிட்டியா மகனே மழை பெய்கிறது குடை பிடித்து போ மகனே ஏன் இருமிக்கொண்டு இருக்கிறாய் டாக்டரை போய் பாரு மகனே இரவாகிப்போய் விட்டது பார்த்து போ மகனே ஏன் மகனே இப்படி இளைத்து போய் விட்டாய் வேலை வேலை என்று எந்த நேரமும் திரியாதே மகனே நேரம் இருக்கும் போது அம்மாவை வந்து பார்த்து விட்டு போ மகனே உடம்பை கவனமாக பாரு மகனே உனக்காக கொச்சம் உனக்கு பிடித்த உழுந்துத் தோசை சுட்டிருக்கேன் வந்து சாப்பிட்டு போறியா மகனே இத்தனை கேள்விகளையும் இத்தனை அன்பையும் இத்தனை பாசத்தையும் ஓயாமல் ஒலிக்கும் ஒரே ஜீவன் அம்மா தான்.

  7. பாரதிக்கு பிறந்த நாள் பறவைகள் பறக்கும் பொழுது தான் சுதந்திரத்தின் அருமை புரிந்தது பாரதியை படித்த பின்பு தான் தமிழின் அழகு தெரிந்தது.

  8. Started by Kaviarasu,

    கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி

    • 1 reply
    • 1.7k views
  9. ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....! ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...! அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..! என்ன பாடம் என்றில்லை.., எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..! ஒரு நாள் கேட்டார்...! உனக்கு உரிமை இருக்கா எண்டு...? என்னடா இது புது வில்லண்டம்? வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..! அப்போது புரியவேயில்லை...! ஆறாம் வகுப்பு முடிஞ்சு ..., அட்வான்சு லெவல் வந்த போது.., எல்லாமே புரிஞ்சது...! நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு.... ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...! மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல…

    • 3 replies
    • 1.5k views
  10. வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது. வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன. எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது எதுவரைக்கும் தான் முடியும்? எழும்போது உலகம் தெளியும். வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன. வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது. உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள் கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன. முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன. மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன. செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள் நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது. எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன. சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது. ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட …

    • 15 replies
    • 2.7k views
  11. Started by Kaviarasu,

    பிரிவுகள் வலியை கொடுத்தாலும் , அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து. தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி ( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )

    • 0 replies
    • 1.2k views
  12. Started by Kaviarasu,

    என்னை சுமந்த உன்னை நான் சுமக்க ஆசை படுகிறேன் தாய்யாகவா ? அல்லது தாரமாகவா ? நீயே சொல் என் தமிழே...!

  13. Started by Kaviarasu,

    பார்வை கடலில் நீந்திய நாட்கள் நினைவாய் உடன் இருக்க. வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.

    • 3 replies
    • 1.9k views
  14. எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே. மொழியாகி எங்கள் உயிர்மூச்சான மாவீரர்களே! வழி ஏதும் தெரியாமல் இன்று தட்டுத்ததடுமாறுகிறோம் தளர்ந்து தள்ளாடுகின்றோம். தனித்து போய்விட்டோமென நாளும் நாளும் தவிக்கின்றோம். தன்முனைப்பு, போட்டி பொறாமை தன்னலம்,பொருளாசை என்று மக்களை மறந்து, தம்மினம் படும் துயரங்கள் புரியாமல் மனிதம் மறந்தவர்களாக தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு எம்மவர்கள் மாறிப்போகும் இந்த கொடுமையான உலகில,; எமக்காக உள்ளவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள் நீங்கள் மட்டுமே. உங்களுக்காக நீங்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. பெற்றவரையும் உற்றவரையும் துறந்து, உங்கள் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, மக்கள் வாழ்வுக்காக மனஉ…

  15. புஸ்பராசாவுடன் 1970ல் இருந்து 1980 வரை எனக்கு பழக்கம் இருந்தது. அப்ப அவர் தமிழரசு வாலிபர் முன்னணியிலும் பின்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் செயல்ப்பாட்டாளராக இருந்த காலத்தில் நான் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு அற்றுப் போய்விட்டது. பின்னர் 20 வருடங்களின் பின்னர் 2000 ஆயிரங்களின் ஆரம்பத்தில் பிரான்சில் சந்தித்து பேசினேன். அதன்பிறகு மீண்டும் தொடர்பு அறுந்துபோனது. . தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன். . 2006 ஆரம்பத்தில் நான் நோர்வேயில் இருந்தேன், திடீரென ஒருநாள் தொலைபேசியில் வந்த புஸ்பராசா தான் மரணித்துக்கொண்டிருக்கும் சேதியை சொல்லக் கேட்டு அதிர்ந்துப…

    • 1 reply
    • 823 views
  16. செக்கச் சிவந்த முகம் எப்பவுமே சிரித்த முகம் எங்க ஊரு சொந்தக்காறி தங்கமான உதட்டுக்காறி இவளை விட அழகுராணி எவள் இருப்பாள் அந்த அழகு ரோசா தோத்துப்போகும் இவள் ஆடிப்பாடி சிரிக்கும் போது .

  17. Started by uthayakumar,

    மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டு…

    • 6 replies
    • 1.9k views
  18. கனவாய் வந்தாய் காவியமே எங்கு இருந்தாய் எங்கு இருந்தாய் எந்தன் கவியே எங்கு இருந்தாய் கண்ணில் உனை நான் கட்டிவைத்தேன் என் காதல் கவியே எங்கு இருந்தாய் என்னில் உனக்காய் உயிர் வடித்தேன் என் இதயம் முழுக்க உனை வரைந்தேன் உன்னில் பின்னால் நிழல் போலே உன்னோடு இருந்தேன் உன் உயிர் போலே காலை வந்த மழை துளிபோல் கவித்துளி போலே உனை வரைந்தேன் மாலை வந்த மதி போலே காலைக் கனவில் உனை கண்டேன் அழகே தமிழே என் கவியே என் அருகில் பூவாய் பூத்தவளே புலரும் பொழுதில் எனை எழுப்பி கனவாய் வந்தாய் காவியமே .

    • 2 replies
    • 1.4k views
  19. யுத்தமும் அழிவும் அநீதியும் அவலமும் ஆக்கிரமிப்பும் பசியும் பட்டினியுமாக மனிதம் மறைந்துபோன உலகத்தின் மேனி சீழ் பிடித்து ஒழுகிக்கொண்டிருக்கும் போது உண்மைகளையும் சத்தியங்களையும் எழுதுங்கள் உலகத்தின் ஒரு மூலையில் ஒரு ஒரமாக நின்று அழும் குழந்தை எப்படியாவது வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்ற ஒரு சிறு நம்பிக்கையுடன் .

    • 0 replies
    • 1.1k views
  20. Started by uthayakumar,

    நிலம் எமக்கோ குந்தி இருக்க ஒரு முழ நிலம் கூட இல்லை எமக்கு முன்னும் பின்னும் அருகிலும் பக்கத்திலும் புத்தரின் வேர்கள் முளைத்து விட்டன இப்போது எல்லாம் சப்பாத்து கால்களின் சத்தங்கள் தான் நிலம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன உதைபடும் நிலங்கள் மௌனமாக அழுதுகொண்டு இருப்பதை யார் தான் அறிவர் .

    • 13 replies
    • 1.6k views
  21. இளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1970ல் பிரசுரமான எனது ஆரம்பகால கவிதை ஒன்று காட்டை வகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது: இதயத்தைக் கொள்ளையிட வண்ணத்துப் பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையே தூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும் எருதுகளோ, தரிக்கா. ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம். . . .

    • 2 replies
    • 1.5k views
  22. எமது உடலின் சதைகளை மட்டும் உண்டு விட்டு எங்களின் எலும்புகளை எறிந்து விட்டு மதம் என்ற போர்வைக்குள் போய் ஒளிந்து கொள்கின்றன ஆண் ஆதிக்கம் என்னும் மனித மிருகங்கள் அன்பே சிவம் என்று அறியாதவர் ஆயிரம் முறை ஆண்டவனை தொழுது என்ன பயன் .

    • 1 reply
    • 1k views
  23. . . ரூமிக்கு -வ.ஐ.ச.ஜெயபாலன் , நலமா ரூமி, கவிஞர்களின் கவிஞரே உலரும் நமது உடலும் உயிரும் செளிக்க மது வார்க்கிறவர்கள் எங்கே? சுவர்கத்து நூலேணிகளில் இறங்கி வருகிறதே வசந்தம். பாரசீக ரோஜாவோ, மதுரை மல்லியோ தேன் சிந்துமுன்னம் நம் இதயங்கள் திறக்க வேண்டுமே?. . ”இதயம் திறக்கும்வரை உடைத்துக்கொண்டிரு” என்கிறாயே. ரூமி. ஆம், மூடிய இதயம் சிறையிலும் கொடிதே. ஆனாலும் உடைந்த இதயம் நினைவின் ஆறாப் புண்ணல்லவா? என்போல் நீயு…

    • 8 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.