Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. அறம் சிறக்க-நெஞ்சில் மறம் பிறக்க மானத் திறம் இருக்க இரும்புத் தோள்கள் கொண்டு தமிழர் துயர் துடைக்க ஈழ மண் விடுதலையடைய வியர்வை சிந்தி-தங்கள் அயர்வை மறந்து இளமைக் காலக் கனவைத் துறந்து கரிகாலன் படையில் இணைந்து நிலை தளராது-ஈழக் கனவினை மறவாது நெஞ்சில் உரம் இழக்காது நம்மை நம் நாட்டை நலம் பல பேணி நாளும் காத்து-மாற்றானுடன் வெஞ்சமர் புரிந்து-எதிரியை வீழ்த்தி தனித் தமிழீழம் பெற வழிகாட்டியே சந்தனப் பேழைகளில் உறங்கும் மாவீரர்களே!!!! சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது என உணர்ந்து வீறு கொண்டெழுந்து ஆண்டுகொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் பிடியினுள் மாண்டு கொண்டிருந்த எம் இனத்தினை மீண்டு கொண்டெழ உரிமை உணர்வினை தூண்டினீர்! உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும் எம் …

  2. மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ................... அழிவை ஏற்படுத்தாமல் அன்பை பெருக்கிடவருக வருக..! ஆக்ரோயத்தை காட்டாமல் ஆனந்தத்தை ஏற்படுத்த வருக வருக ....! இழப்புகளை ஏற்படுத்தாமல் இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் ஈகையை வளர்த்திட வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்உள்ளம் மகிழ்ந்திட வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் ஊர் செழிக்க வருக வருக ..!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ஏற்றங்களை தந்திட வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ஒற்றுமையை ஏற்பட…

  3. மீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்

    • 3 replies
    • 1.2k views
  4. மீன்பாடும் தேன்நாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் . வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். . காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள…

    • 0 replies
    • 873 views
  5. இவ்வுலகில் யாரும் பசியோடு இல்லை உலகில் அமைதி நிலவுகிறது எங்கும் சண்டை இல்லை ஈழத் தமிழரின் இனப்படுகொலையை ஐ நா விசாரிக்கிறது யூதர்களும் பலஸ்தீனர்களும் ஒருவரை மற்ரொருவர் மிகவும் நேசிக்கிறார்கள் சமாதானம் ஒரே தீர்வென்று இரேலியர்கள் விரும்புகிறார்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் நேற்றைய விருந்தொன்றில் ஈஸ்டர் முட்டையை பரிமாறிக் கொண்டார்கள் ஆம் நம்புங்கள் முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் அறிவாளிகள் அனைவரும் கோமாளிகளே! தியா காண்டீபன்

      • Like
    • 3 replies
    • 559 views
  6. முதுமையாகிலனோ ——— அப்போ வாய் பொத்தியபடி என் கதை கேட்டவர்களிடம் இப்போ நான் வாய் பொத்தியபடி அவர்கள் கதை கேட்டுக்கொண்டு காலாவதியான பொருள்களைப்போலவே காத்திருக்கிறேன் தூக்கி எறியும் காலம் ஒன்றுக்காக. பா .உதயகுமார் /OSLO

    • 0 replies
    • 1.1k views
  7. முதுமையும் மறதியும் நினைவு நினைவு மறந்து விட்டது நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை . அம்மாவின் மறதி என் பிறந்த தினத்தில் எப்பவும் மறக்காமல் வந்து வாழ்த்து சொல்லும் அம்மா இன்று எப்படி மறந்தாளோ . முதுமை வயது திண்டு கொண்டு இருக்கிறது என்னை மறந்து போகிறேன் என்னை என்ன செய்ய . கனவுகள் என் கனவுகளை சட்டமாக்கி கொள்ள அரசிடம் அப்பீல் கொடுத்து இருக்கிறேன் . மறதி மறதி மட்டும் மறக்காமல் இருக்கிறது மற்ரவை எல்லாம் மறந்து விட்டது . மறந்து போகிலேன் எல்லா என் நினைவுகளும் மறந்தே போகிலும் உந்தன் நினைவை மட்டும் மறக்காது இருக்கச் செய்வாய் தாயே . வெள்ளை மயிர் வெள்ளை மயிர் ஒன்று க…

    • 4 replies
    • 1.7k views
  8. அணையா நெருப்பாய் ஆண்டுகள் முப்பத்தாறு உரிமைக்காய் சுழன்றடித்த ஊழித்தீ தன் உயிர் நெய்யூற்றி தான் வாழவன்றி செந்தமிழ் வாழ சொந்தங்கள் செழிக்க செருக்காய் ஒரு தேசம் அமைக்க சோர்வின்றி எரிந்தது.! தேசங்கள் பல பொறாமை கொள்ள முள்முடி தரித்து முள்ளிவாய்க்காலில் ஊதியணைக்கப்பட்டது அந்த உரிமைத் தீ. காலக் கடிகாரத்தின் கரம் ஒன்று ஒடிந்து தசாப்தம் ஒன்று ஆனது தமிழுக்கு. கரிகாலன் படையது கரிந்தே போனது பொஸ்பரஸோடு மல்ரிபரல்கள் தூவிய கந்தகப் புயலுக்குள். கருவிற் சுமந்த சிசுக்களாய் புலிகள் சுமந்த - மக்கள் சிதைந்தே போயினர் சிங்களத்தான் …

    • 7 replies
    • 1.4k views
  9. தமிழீழ மூச்சே எதுக்கம்மா போனாய் முள்ளி வாய்க்கால். ஊரின் பெயரே உன்னை எச்சரிக்கவில்லையோ... இல்லை.. முள்முடி தரித்த தூதரின் நிலை போல் முள்ளி மேல் நடக்கப் பிரியப்பட்டனையோ..?! சத்திய சோதனைக்கு சுய பரிசோதனைக்கு அதுவா வேளை..??! நாலாம் இராணுவ வல்லரசையே வன்னிக் காட்டுக்குள் கட்டிப் போட்டு கால் பறித்து கதறி ஓட வைத்த அனுபவம் இருந்தும்.. ஆழ ஊடுருவல் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்ததுக்காய் எதுக்கம்மா காலி செய்தாய் காட்டை..! இன்று வன்னிக்காடுகள் கண்ணீர் விடுகின்றன காவல் தெய்வங்கள் இல்லா நிலையில் தம் கால் தறிபடும் தறிகெட்ட தனம் தலைவிரித்தாடுவதால்.…

  10. முள்ளி வாய்க்கால்..! ************* 2009.. மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழுக்கு கொள்ளி வைத்ததை-எம் மூச்சிருக்கும் வரையும் முடியுமா மறக்க.. அன்று.. கல்லும் கூட கரைந்தது கடலும் கூட அழுதது முள்ளிவாய்க் கால் எரிந்தது-உலகம் முதளைக் கண்ணீர் வடித்தது. முப்பது வருடமாய் நடந்தது முதலில் அகிம்சை தோற்றதால் இப்புவி தன்னில் தமிழுக்கு-ஒரு இருக்க இடம்தான் கேட்டது. அப்பாவித் தமிழரைக் குவித்து வைத்து அகிலத்தில் சிலநாட்டை சேர்த்து வைத்து ஆயுதகுண்டாலே கொட்டித்தீர்த்து அழித்தாயே வீரனா? நீயே சொல்லு. பச்சிளம் பாலக குஞ்சு…

  11. முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் ———————————————————————————————————- அடங்கிப் கிடந்த டிராகன் ஒன்று முழித்துக் கொண்டது ஆயுதம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்கிறது அத்தனை உலக வேலியும் அறுத்து கடன் இராஜதந்திர வலையில் கழுகுப் பிடியில் கட்டி இழுக்கிறது கம்யூனிச சீனா கன நாடுகளை இன்று இலங்கை பாகிஸ்தான் பர்மா வங்கம் என்று வளைத்து விட்டது தனக்கு கீழே இப்போ இந்து கடலில் டிராகன் குந்தி இருந்து எறிகிற வலையில் இந்த சின்ன மீன்கள் அகப்பட்டுப் போயினர் வலையை கிழித்து இனி வருவது கடினம் இந்த பட்டிப் பாதை முத்து மாலை மூலாபாயத்தை இனி செத்தாலும் அவிழ்க்க முடியாது…

    • 11 replies
    • 1k views
  12. மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளும…

      • Like
      • Thanks
    • 4 replies
    • 503 views
  13. (உன் கணவன்) ”காட்டான்தான். என்றாலும் எம்முன்னே, நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள் இன்றும் கமழும். ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன் இந்த ஞாலம் கடுகு” . . மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். . என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். . ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால்…

    • 0 replies
    • 1.4k views
  14. Started by uthayakumar,

    ஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் மே 18 ம் நாள் காலை பொழுது ஒன்றில் கையில் இரத்தங்களுடன் கடந்து போகின்றன பேரிரைச்சலோடு இராணுவ வண்டிகள் சாம்பல் மேடுகளை தாண்டியபடி அந்த ஊழியின் கடைசி தினம் அன்று பாதி பாண் துண்டை என் தம்பியின் கையில் கொடுத்து விட்டு நானும் தம்பியுமாக அம்மாவை பார்த்தபடி அந்த பதுங்கு குழியில் என்று தொடங்கும் அவளது டயரி குறிப்பு அன்று ஒரு நாள் அந்த நாசி படைகளுக்கு அஞ்சியபடி அந்த அவுஸ்வைஸ் சிறையில் இருந்து எழுதிய சிறுமி அன்னா பிராங்கின் யுத்த கால டயரி குறிப்புகள் போலவே இருந்தன .

    • 0 replies
    • 1.1k views
  15. மகிந்த மாமா வீட்டு மைத்திரி அங்கிள்… ஜனவரி 28, 2015 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழீழம் அலரி மாளிகை மாடி வீட்டு மகிந்த அங்கிள் வர்ணக் கிளி வளர்க்க குறுனி தூவி… ஏசி றூமில் நாய் வளர்க்க நாய்க்கு ஒரு நாலு பெயர் வைச்சு அழகு பார்த்த மைத்திரி அங்கிள்… கொடூர சுறா வளர்த்து குஞ்சு மீனை தீனியாக்கி அது துடிச்சுச் சாக துள்ளிக் குதித்து குரூரமாய் ரசித்து மகிழ்ந்த கோத்தா எனும் கொடூரன் குருவி சுடுவது போல் தமிழனை சுட்டு தள்ள கைக்கட்டி வேடிக்கை பார்த்த மைத்திரி அங்கிள்… செம்மணி…

  16. கலைந்த ஆடையை உடுத்திக் கொள்ள மறுக்கிறது அப்பால்... சற்று தாமதமாக வந்தால் பொங்கி வழிகிறது முழு ஆடை... தெரியாதுபோல் சில நேரம் தெரிந்ததே தெரியாமல் போகிறது பலநேரம். .. சரவிபி ரோசிசந்திரா

  17. கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரை‌யை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா

  18. Started by uthayakumar,

    மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டு…

    • 6 replies
    • 1.8k views
  19. மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!"…

  20. முழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே!! உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்...! கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்!!??

  21. Started by nochchi,

    யாரென்றால்! --------------- நேற்றும் வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்கிறார்கள் நாளையும் வாழ்வார்கள் யாரென்றால் இனத்துக்காக ஈகம் புரிந்த மாவீரர்கள்!

    • 8 replies
    • 1.6k views
  22. யாரைத்தான் நம்புவதோ? **************************** எழுபது ஆண்டுகளாக எம்மேல் ஏறி உழக்கியவர்களும் எம்மில் சவாரி செய்தவர்களும் எம்மினத்தை கொத்துக் கொத்தாக கொண்றழித்தவர்களும் எம்மை பயங்கர வாதிகளாக காட்டி வாக்கு பறித்தவர்களும் எம் தேசமெங்கும்-புத்தர் சிலை விதைத்தவர்களும் ஊழல் லஞ்சமென பெருக்கி உயிர் வாழ்ந்த அந்த அரசியல் தலைமைகளை.. சிங்களமக்களே! ஓடவெருட்டி ஒன்றுசேரும் இந்நேரம் இங்கோ. அனைத்துத் தரப்பும் மேடையில் ஏறி தமிழ் உரிமை தமிழ் விடிவு தமிழ் சுதந்திரம் தமிழ் ஈழத்துக்கான சம உரிமை. தமிழ்! தமிழ்! தமிழ்! எனக் கத்திவிட்டு-பின் தமிழை அழித்த இன…

  23. Started by nige,

    யார் இவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள் இவர்கள் முகம் ஞாபகத்தில் கூட இல்லையே எம் ஒவ்வொரு சறுக்கல்களிலும் கைகொடுத்ததாக நினைவில்லையே ஒருநேர உணவுக்கே நாம் திண்டாடியோது ஓடி வந்து உதவிய முகங்களில் இவர்கள் முகம் இருந்ததில்லையே போகவழி தெரியாமல் பரிதவித்தபோது எம் கைபிடித்து வழிகாட்டிய - அந்த நல்ல மனிதர்களில் இவர்கள் ஒருவரேனும் இல்லையே அடுக்கடுக்காய் வந்த சவால்களை சமாளிக்க நாம் திணறியபோது நம்பிக்கை கொடுத்த நாலுமனிதர்களுள் இவர்கள் நிழல்கூட வந்ததில்லையே இப்போது மட்டும் எப்படி ஓ..! இப்போது புதிதாய் பார்வை பெற்ற முன்னாள் குருடர்களோ இவர்கள் உறவு முறை சொல்கிறார்கள் உறவென்றும் சொல்கிறார்கள் மறுபக்கம் விமர்சனமும் செய்கிறார்கள் அவர்கள் அகராதியில…

    • 0 replies
    • 980 views
  24. யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அழிக்க யாரால் முடிகிறது அன்று படித்தது இன்று புதியது எனும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.