கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"2020"மரணித்த உடல்காவி செல்கிறது..! ******************************** உன்னுக்குள் எமைவைத்து ஒருவருடம் ஆண்டுவிட்டு பின்னுக்கு போகுமாண்டே இதுவரையும் உனைப்போல உயிர் எடுக்கும் ஆண்டெதுவும் எம் வாழ்வில் கண்டதில்லை. சங்ககால இலக்கியத்துள் சரித்திரத்தில் இறப்புக் கண்டோம் உலக மகா யுத்தத்தில்-கிட்லர் உயிர் பறித்த கொடுமை கண்டோம் இனத்துவேஷம் காட்டிக் காட்டி ஈழத்தில் அழிவு கண்டோம் மதங்கள் சண்டைபோட்டு-பல மரணங்கள் நேரில் கண்டோம் வல்லரசு நாடுகளால் வதைத்து உயிர்கள் பறிக்கக் கண்டோம் தோல் நிறச் சண்டையாலே தொடர் மரணம் நாமும் கண்டோம் இத்தனையும் மனிதநேயம் இல்லாத ஈ…
-
- 4 replies
- 1.3k views
-
-
"நிலவில் முகம் பார்த்து" "மஞ்சள் நிலவில் முகம் பார்த்து கொஞ்சும் மொழியில் இனிமை கண்டு நெஞ்சம் நிறைந்த காதல் கொண்டு மஞ்சம் காண மணம் முடித்து தஞ்சம் அடைந்தேன் அவள் மடியில்!" "மதியின் அழகு மனதைக் கவர விதியின் பயனில் அவளும் சேர புதிய மலராய் மகிழ்ச்சி மலர பதியாய் என்னை உவந்து ஏற்க கைதி ஆனேன் பாசக் கூண்டில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 575 views
-
-
இக்கவிதை “நெதர்லாந்து இளமுதிர்சோலை” மண்றத்தின் தைப்பொங்கல் விழாவில் படித்திருந்தேன். என் இனிய யாழ் கள உறவுகளுக்காக.. பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றி இழப்புகள்..! அப்பாவின் அறிவை இழந்தோம் அம்மாவின்அறுசுவை உணவை இழந்தோம் அவர்களுடன் கொஞ்சி குலாவும் அன்பை இழந்தோம்-ஏன் அவர்களை கூடவே இழந்தோம். கோழி கூவலை இழந்தோம். கோவில் மணிச் சத்தம் இழந்தோம். வாய்க்கால் வயல்கள் இழந்தோம். வழமான வாழ்வையே இழந்தோம். காலை விடியலை இழந்தோம், கடல் தொட்டுவரும் தென்றலை இழந்தோம் பட்டியில் நின்ற பசுக்களை இழந்தோம், பங்குனி மாத வெய்யிலை இழந்தோம்-மண் சட்டியில் கு…
-
- 1 reply
- 969 views
-
-
பொங்கல் வாழ்த்து 2020. இரண்டாயிரத்து இருபதிலே எங்கும் தமிழர் இனமதனை அண்டாதிருக்கப் பெருந்துயரம் அகலத் தீமை இருள் விலக உண்டாயிருக்கத் திருவெல்லாம் ஓடி மறையப் பகையெல்லாம் திண்டோளுயர்த்தி ஞாலமதில் சீரும் சிறப்பும் பெறுவோமா?; தமிழைக் கணனி தனிலேற்றி தரணியறியப் புகழேற்றி அமிழ்தின் இனிய எம்மொழியை அகிலத் துயர்த்தி அறிவியலில்; கமழும் மொழியாயுருவாக்கி கலைகள் நிறைத்துச் செறிவாக்கி திமிரோடிருந்த எம் பெருமை திரும்ப நாங்கள் பெறுவோமா நாடொன்றமைத்துப் படைபலத்தால் நாங்கள் வாழ்ந்த பெருவாழ்வை கேடென்றுலுத்தர் எண்ணியதால் கீழ்மைச் செயல்கள் பலசெய்து வாடப் பலபேர் அகதிகளாய் வதைகள் புரிந்து வன்னியிலே ஆடத் தருமம் நிலை தாழ்ந்த …
-
- 2 replies
- 957 views
-
-
விழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய் ஆசையோடு அழுத்தினாய் தழுவலிலே தளர்வறிந்தாய் தீண்டியும், நிமிண்டியும் – எனைத் திரள வைத்தாய். உன் விரல்களிடை என் இதழ் குவித்தாய் விதவிதமாய் இரசித்து உன்னுதடழுத்திக் கவ்வினாய் உரசலிலே தீ மூட்டி – எனை உன்மத்தம் கொள்ள வைத்தாய் என் தகிப்பில் தணல் வைத்தாய் உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய் மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன் சுவாசத்துள் சிறைப்பிடித்தாய் தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய் கணம் பிரிய மறுத்தபடி யாசகம் கேட்கிறா…
-
- 10 replies
- 2.5k views
-
-
-
- 3 replies
- 944 views
-
-
கட்டுமரம் மூழ்காது.......! ஆழ்கடல்மேல் அலையில் அசைந்தாடுகின்றது கட்டுமரமொன்று அதிலிருந்து வலையெறிகின்றார் மீன்பிடிக்கும் மீனவர் இருவர் அமைதியை அகற்றியே இடிபோலொரு முழக்கம் அடுத்து ஆர்பரித்துக்கொண்டு வந்ததோர் அலை ஆகாயம் தொட்டு அந்தோ பரிதாபம் அந்தமரம் அவர்களையும் புரட்டிவிட்டு அங்கேயே மூழ்கியது அடுத்து வந்த அலைகளும் மறைய அமைதியானது கடல் மீண்டும் அதில் மிதந்தது அந்த மரம் அதை பற்றியபடி மீனவர்கள் முகம் மட்டும் தெரிய முழுஉடலும் கடலுக்குள் அண்ணாந்து வானம் பார்த்த முதியவன் முக்குகன் பகன்றான் கருமுகிலைக் காணவில்லை மழைக்கறிகுறி ஏதும் இங்கில்லை அ…
-
- 1 reply
- 1k views
-
-
விசித்திரமான நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் வரலாறு முக்கியமானது. அது என்னை விட என்னை அதிகம் அறிந்தது. துயரங்களைக் கடக்க, கடினமான நாட்களில் காலத்தைக் கழிக்க, வலி நிறைந்த அத்தருணங்களை எதிர்கொள்ள, இன்னும் என்னென்னமோ கற்றுத் தந்தது. காலப் பெருவெளியில் சிக்கி நான், சுழலில் சிதைந்த பந்துபோல் பேரழிவுகளுக்கிடையில் அலைந்தேன். பெருங்கடலின் ஆழத்தில், தொலைந்து போன, ஒரு பேய்க் கப்பலானேன். சில சமயங்களில் நான், மென்மையான நித்திய ஒளியில், என் உயரிய நேரத்தை இழந்தேன். இன்னும் சில நேரம், கனவுகள் பிடிப்பவர்களின் …
-
- 2 replies
- 733 views
-
-
செஞ்சோலைத் தளிர்களே! ------------------------------ வெள்ளையுடைபூண்டு வென்மனம் சூடிய மாணவர்காள் உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு உயிர் உள்ளவரை உள்ளத்துள் உலவிடும் உங்களை அகமேந்துகின்றோம்! தர்மம் வெல்லுமொரு நாளில் உங்கள் முகங்களை எம் தேசம் தரிசிக்கும் உலகெங்கும் அலைகின்ற தமிழினம் ஒருநாள் தலைநிமிரும் வேளைவரும் உங்கள் படுகொலைக்கு பதில்காணும் காலம்வரும்!
-
- 3 replies
- 760 views
-
-
"காந்தி மடியில் சரணம் அடைந்தேன் ....." "உறங்கிக் கிடந்த மனது ஒன்று உறக்கம் இன்றி தவிப்பது எனோ? உறவு தந்து உள்ளம் கவர்ந்து உலகம் துறந்து போனது எனோ?" "கண்கள் மூடி கனவு கண்டால் கலங்கிய ஒளியில் மிதப்பது எனோ? கருத்த வெள்ளை உருவம் தோன்றி கண்ணீர் துடைத்து மறைவது எனோ?" "காற்றில் விண்ணில் குரல் கேட்க காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ? காலம் போனாலும் கோலம் மாறினாலும் காமாட்சி நினைவு வருத்துவது எனோ?" "காந்தி மடியில் சரணம் அடைந்தேன் காந்தமாய் என்னை இழுப்பது எனோ? காமம் துறந்த காதல் அவன் காதில் கீதை ஓதியது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 134 views
-
-
வன்னி மக்களும் முள்ளிவாய்க்காலும் அது தந்த வலிகளும்
-
- 2 replies
- 932 views
-
-
நீ தந்த உணர்வுகளால் நான் என் நிஜம் தொலைத்தேன்.. மனசெல்லாம் ரணமாகி யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாழ்வது உறுதியானது.. நான் கொண்ட மனநிலைப் பிறழ்வுகளால் என்னை வேண்டாமென வெறுத்து பிடிவாதமாய் விலக்கி வைத்திருக்கும் உறவுகளை சந்திக்கும் நிலையில் என் மனநிலை இல்லை.. மன்னிப்பு கேட்கும் முன்பே நிராகரிப்பட்டேன் என் நிஜங்களின் முன்.. நிஜங்கள் இல்லாது வாழ்வென்பது எப்படி? மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்னொரு பிறவியில் தெரிந்து கொள்கிறேன்.. நான் தவறானவன்.. செய்த தவறுகளுக்காக இந்தப் பிறவி வலிகளோடு போகட்டும்.
-
- 1 reply
- 815 views
-
-
"தளதள ததும்பும் இளமை பருவமே" "தளதள ததும்பும் இளமை பருவமே தகதக மின்னும் அழகிய மேனியே நறநறவென பல்லைக் கடித்து நின்று திருதிருவென விழித்து அழைப்பது ஏனோ ?" "சல்சல் என சலங்கை ஒலிக்க சிலுசிலு எனக் காற்று வீச கமகம என முல்லை மணக்க தடதடவென கதவைத் தட்டுவது ஏனோ ?" "திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க திடுதிடு இன அறையில் நுழைந்து தரதர என்று என்னை இழுத்து விக்கிவிக்கி மெதுவாய் அழுதது ஏனோ ?" "தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு துடிதுடிக்கும் இதயத்தை சாந்தப் படுத்தி கிளுகிளுப்பு தந்து மடியில் சா…
-
- 0 replies
- 177 views
-
-
தாத்தாவின் நம்பிக்கை - - - - - - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தாத்தா இந்த முறையும் சொன்னார் பல தையும் போய் பாவம் தாத்தா பார்த்திருந்தார் பல தடவை காணியும் போலீசும் வரும் என்று காத்திருந்தார் சில தடவை திரும்பவும் யாரோ தீர்வு பற்றி கதைத்ததால் தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று காத்திருக்கிறார் இந்தத் தடவையும் தாத்தா.
-
- 0 replies
- 678 views
-
-
உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை- உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை ஒட்டவும் முடியாமல் உயர்த்தவும் முடியாமல் கட்சிக்கு ஒரு கொள்கை இல்லை ஆளுக்கு ஒரு கொள்கை அவர் அவரே தனித் தனியே ஆனால் வீட்டுக் கட்சி என்று மட்டும் பெயராம் வீணாய்த் தான் முடிஞ்சுபோச்சு கதையாம் ஈழம் கேட்டு வந்தவர்கள் எல்லாம் தாளம் மாறிப் பாடுறாங்கள் இப்போ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிக் காச்சல் பூனைக் காச்சல் இன்னும் விட்டுப் போகல்ல புதுசு புதுசாய் கதையை மட்டும் அளந்து தள்ளுறான் ஐயா சம்மந்தர் தம்பி சுமந்திரனோடு தனி வழியாம் அடுத்தவரின் சொல்லு ஒன்றும் கேட்பதில்லையாம் ஆங்கிலமும் சட்டமும் அவர்கள் மட்டும் …
-
- 4 replies
- 514 views
-
-
எவரை எவர் ஏமாத்துகின்றனர் வளமை போலவே இந்த முறையும் இந்திய அதிகாரி அதே 13 க் கதையை சொல்லிப் போனார் எத்தனை முறை சொன்னார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் முப்பது வருட கதை இது இத்தனை வருடமாக இந்தியாவை ஏமாத்த இலங்கைக்கு மட்டும் தெரியும் இது சிங்கள இராஜதந்திரம் முப்பது வருடமாய் ஈழத் தமிழனை ஏமாத்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டும் தெரியும் இது இன்னும் ஒரு இராஜதந்திரம் இனி வரும் காலமும் இன்னும் ஒரு பொருளாதார ஓப்பந்தம் எழுத இந்திய அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் அப்பவும் இன்னும் ஒரு முறை நினைவூட்டுவர் அந்த 13 க் கதையை சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை போலே மீண்டும் வேதாள…
-
- 1 reply
- 625 views
-
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு ஆண்: "வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே காலுனக்குப் பொசுக்கலையோ கற்றாழைமுள்ளுக் குத்தலையோ?" பெண்: "திண்ணை திண்ணையாத் தாண்டிப் போறவனே பாசாங்கு வேண்டாம்டா பசப்புவார்த்தை வேண்டாம்டா?" ஆண்: "இடுப்புச் சிறுத்தவளே இறுமாப்புநீ பேசாதேடி சிவத்த பாவாடை சித்தம் கலக்குதடி?" பெண்: "நேற்றுவரை உன்னை வெகுவாக நம்பினேனே அறம் அற்றவனே நானே விலகுகிறேனே?" ஆண்: "சிவத்த புள்ள நெனப்பெல்லாம் ஓமேல கரம்நீட்டி இவனைச் சந்திக்கக் கூப்பிடாயோ?" பெண்: "சந்திலே பொந்திலே மேஞ்சு பார்ப்பவனே உன் ஆசைதீர்க்க என்னை நண்பியேன்றாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 3 replies
- 540 views
-
-
“செங்காந்தள்” [அந்தாதிக் கவிதை] "செங்காந்தள் முகிழ்விடும் நம் தேசமே தேசம் எமக்கு ஈன்ற மாவீரர்களே மாவீரர்களே எங்கள் நிலத்தின் தெய்வமே தெய்வமே உங்களுக்கு தீபம் ஏற்றுகிறோம் ஏற்றிய சுடரில் உங்களைக் காண்கிறோம்! காண்கிறோம் நேர் உரிமைப் போராட்டத்தை போராட்டம் காட்டிய உங்கள் வீரத்தை வீரத்தில் நீங்கள் உரைத்த நீதியை நீதி நிலைநாட்டிடச் செய்த தியாகத்தை தியாகம் விதைத்த பூமியே செங்காந்தள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 275 views
-
-
மரண ஓலம் மனதைக் கிழிக்க மனித உடல்கள் சிதறிக் கிடக்க மனிதம் வெட்கி மௌனித்து மரணித்து போன நாளை மறக்க முடியுமா? மானிட வரலாற்றில் எங்கும் கண்டறியா செங்குருதியாறு மண்ணில் பெருக்கெடுத்தோட இருப்பிழந்த இனமொன்றின் இகத்தின் மீது உலகமே சேர்ந்து நெருப்புமிழ்ந்த நாளை மறக்க முடியுமா? மனித உரிமைகள் தமிழருக்கில்லை தமிழர்களெல்லாம் மனிதர்களில்லை தமிழர்களெல்லாம் மனித ஜாதிகளில்லை மிருக ஜாதிகளென்று உலக வல்லரசுகளால் உணர்த்தப்பட்ட நாளை மறக்க முடியுமா? கொட்டும் எறிகணை மழையிலும் கொத்துக் குண்டு வீச்சிலும் கொதிக்கும் இரசாயன குண்டுப் பொழிவிலும் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகளைக் கடந்தபடி உணர்வுகளெல்லாம் மரத்தபடி உயிரைக் கையில் பிடித்தபடி ஒற்றை வரிசையில் நின்றபடி ஒரு குவளை கஞ…
-
- 0 replies
- 487 views
-
-
"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்" "மனதின் மூலையில் ஒரு நினைவு அணையா தீபமாய் இன்றும் எரிகிறது தேநீரின் வாசனை காற்றில் வருகிறது வடையின் மெதுமை வாயில் ஊறுது!" "உரையாடல் மலர்ந்து நட்பு வளர்ந்தது கிசுகிசு கதைகளும் இடையில் வந்தது சிரிப்பும் சச்சரவும் முட்டி மோதின வெற்றிலை பாக்கு வாயில் ஆடின!" "விடைகள் புரியா வாங்கு அரசியல் குடையில் போகும் பூவையர் மகிழ்ச்சி இடையில் பறக்கும் ஈக்கள் ஒருபக்கம் கடையின் நினைவு மறையா காலமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 219 views
-
-
"இரு கவிதைகள்" [1] "கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [2] "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அ…
-
-
- 13 replies
- 905 views
-
-
நயாகராவே என் நாயகியே..! ஈழத்து ஒரு மூலையில் இருந்த போதே ஒருதலைக் காதல் உன் மேலே என்றோ ஒரு நாள் சந்திப்போம் காதலை அன்று சொல்ல நினைத்திருந்தேன். கொலண்டிருந்து பறந்து வந்தேன் நான்கு பனை உயரத்தில்-நீ இருந்து பார்த்தாய் இருநாடுகளுக்கான இதயம் நீ என்றாலும்-என் கனவுக்கன்னியே கலங்காத தெளிந்த உன் வெள்ளை மனம் என்னை கொள்ளை கொண்டதடி வானவில்லாய் உன் புருவம் வற்றாத ஜீவனாய் உன் உயிரோட்டம் அமெரிக்காவில் தலை வைத்து கனடாவில் கால் பதித்து-நீ ஆடும் மயில் ஆட்டமோ என்றும் காணாத …
-
- 7 replies
- 861 views
-
-
-
- 2 replies
- 542 views
-
-
வருக வசந்தமே-பா.உதயன் 🌺 வானத்தில் வண்ணமாய் பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியுதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது அழகிய கதிரவன் கண்ணைத் திறக்கிறான் ஆயிரம் பூக்களின் அழகு சிரிக்குது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு மணி ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது கனவுகள் உயிர்த்தொரு காலம் பிறக்குது காலைப் பொழுதொன்று மெல…
-
- 0 replies
- 779 views
-