கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
என்ர பிரச்சனைக்கெல்லாம்.. ஒரே தீர்வு இந்தக் குதிரையளிட்டத் தான் இருக்குது எண்டு என்ர ‘உள்ளறிவு' அடிக்கடி சொல்லிகொள்ளும்\, மச்சான் ! அவனவன்.. அவனவனிட்டை இருக்கிற திறமையளைப் பாவிச்சு முன்னுக்கு வாறதில ஒரு தப்பும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியேல்லை என்ற படி பேப்பரை மிகவும் அவதானமாகப் படித்துக்கொண்டிருந்தான்! நானும் எதுவும் பேசாமல், இந்தக் கவனத்தைப் படிக்கிற காலத்தில காட்டியிருந்தால் இப்ப எங்கேயோ போயிருப்பாயே சூட்டி என எனக்குள் மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்! அதோட மாதாவிட்டையும் ஒரு சின்னப் பந்தயம் வைச்சிருக்கிறன்! எனக்குப் பெரிய தொகை விழுமெண்டு சொன்னால்.. அவவுக்கு அரைவாசி தாறதாச் சொல்லியிருக்கிறன்! சரி.. உனக்கு எப்ப குதிரையில ‘காசு' விழுந்து...எப்ப.. உன்ர குடும்பத்த…
-
- 7 replies
- 2.4k views
-
-
கதையின் ஆரம்பப் பகுதியைப் பார்க்க, பின்வரும் இணைப்பில் அழுத்தவும்...!. http://www.yarl.com/forum3/index.php?showtopic=137109 பகுதி-2 பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவ…
-
- 20 replies
- 2.3k views
-
-
காகித ஓடம் நீடித்த மழைக்குப் பின் வானம் வெளுக்க ஆரம்பித்தது. சிலு சிலு வென்ற காற்று உடலை வருடி சிலிர்ப்பூட்டியது. மரத்திலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி. நட்பு, காதல், திருமணம், குடும்பம், உரசல், மோதல், கசப்பு, பிரிவு, வெறுமை.. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட அருந்ததிக்கு தன் உணர்வுகளை நிதானமாகக் கையாள்வது இலகுவாக இருந்தது. சென்ற வாரம் நடைபெற்ற ஒன்றுகூடலின் பின் சலனமுற்ற மனம் சமநிலைக்கு வந்திருந்தது. பல வருடங்களின் பின் பழகிய பல நண்பிகளும் நண்பர்களும் ஒன்றுகூடிய அந்த தருணம் அற்புதமானது. பசுமை நிறைந்த நினைவுகளை மனதில் விதைத்து பொத்திப் பொத்திப் பாதுகாத்த அந்த இனிய பொழுதுகள் அனைவ…
-
- 13 replies
- 2.3k views
-
-
**நாம் வாழ்க்கையில் உயர்வதை கண்டு மகிழ்ச்சியடையும் நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்** அது 2005ம் ஆண்டின் நடுப்பகுதி என நினைவு..வன்னி ரெக்கின் 3து batchல படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது நாட்டின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களைச்சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 4 பேரை ஒரே ரூமில் போட்டார்கள் வாழ்க்கையின் முதல் முதல் ஹொஸ்டல் வாசம். முதலில் பெரிதாக ஒருவரிற்கொருவர் எந்த ஈர்ப்பும் இல்லை ரூம் மேட் என்ற அளவில் மட்டுமாகவே தொடர்ந்தது .எனக்கு நண்பர் கூட்டம் அவ்வளவாக சேர்வது குறைவு . அவனோ நண்பர் கூட்டத்துடனே திரிவான்.. அத்துடன் அவனின் பாடப்பிரிவு நெட்வோர்கிங் ,நானோ எலக்ட்ரோனிக்ஸ் ஹொஸ்டல் வாழ்க்கையில் சண்டை…
-
- 9 replies
- 3.3k views
-
-
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வ…
-
-
- 7 replies
- 413 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவுக்கு வந்த பின்புதான் சொந்தமாக தொலைபேசி வைத்திருக்க கூடிய நிலை வந்தது.அந்த கால கட்டத்தில் பட்டன் அழுத்தி இலக்கங்களை தெறிவு செய்யும் தொழில் நுட்பம் கொண்ட தொலை பேசிதான் பிரபலம் .வீட்டின் வரவேற்பறையில் ஒரு தொலைபேசியை தொலைபேசி நிறுவன ஊழியர்கள் இணைத்து விட்டு சென்றார்கள்.அத்துடன் இரண்டு மகாபாரத புத்தகத்தையும் இலவசமாக தந்துவிட்டு சென்றார்கள்.ஆர்வக் கோளாறு காரணமாக புத்தகத்தை உடனடியாக திறந்து பார்த்தேன் ,ஒரு புத்தகம் தொலைபேசி பாவனையாளர்களின் பெயர்களும் இலக்கங்களும் ,மற்றது வியாபார ஸ்தாபனங்களின் இலக்கங்களும் பெயர்களுமாக இருந்தது.தொலைபேசி வைக்கும் மேசையாக அந்த புத்தகத்தை பாவிக்கலாம் என்ற யோசனை இந்த புத்திஜீவிக்கு வரவே அதை அமுல் படுத்திவிட்டு மனைவியின் பாராட்டுக்காக கா…
-
- 15 replies
- 2.8k views
-
-
ஆளையே அடையாளம் காணமுடியாதளவுக்கு பயங்கர இருட்டு, கையில் அரிக்கன் லாம்புடன் அருகில் இருக்கும் வைரவர் கோயிலுக்கு தனிய நான் போய்க்கொண்டிருக்கிறேன். பென்னாம் பெரிய புளியமரம் அது கீழே ஒரே ஒரு சூலம் அதற்கு நாற்புறமும் சூழ சீமெந்தால் சுற்றிக்கட்டிய அரைச் சுவர். பனங்குற்றியாலான தூண், ஓட்டுக்கூரை நேர் எதிரே ஒற்றைப்பனை மரம் ஒன்று. கீழே ஒரு நடுகல் அது காளியின் சிலை. இது தான் அந்தக் கோயிலுக்குரிய அடையாளம். சற்று அகன்ற ஒற்றையடிப் பாதையும், சுற்றி வர பனங்கூடலும்,சிறுபற்றைக்காடுகளும் ஆங்காங்கே தெரியும் சிறு வீடுகளும் பகலில் கூட அமானுஸ்யத்தை உணர்த்தும். அரிக்கன் லாம்பை வைத்து விட்டு வைரவருக்கு விளக்கை ஏற்றிவிட்டு காளிக்கும் கற்பூரம் ஏற்றி விட்டு வருகிறேன். என்றைக்குமில்லாதவாறு அன்ற…
-
- 7 replies
- 1.3k views
-
-
இன்றும் அன்றும் அரசியலிலும் சிங்கள ஆதிக்கத்திலும் மாற்றம் இல்லை என்பதால் இதை இங்கு இணைக்கின்றேன் ---- 1994 இல் இடம்பெற இருந்த தேர்தலில் சந்திரிக்கா ஒரு சமாதான தேவதையாக பிரச்சாரப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். சந்திரிக்கா வந்தால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றளவுக்கு அவர் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பட்டுக் கொண்டு இருந்தது. சிங்கள அரசியலமைப்பில், முற்றிலும் சிங்கள இயந்திரமயப்படுத்தப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பில் தமிழருக்கு எக்காலத்திலும் தீர்வு வராது என்ற அரசியல் ரீதியிலான உண்மையை சரிநிகர் எமக்கு வழங்கியிருந்தது. அந்த உண்மையை ஒற்றி நான் எழுதிய சிறுகதை இது, இதை நான் எழுதியது 1994 இல். சரியாக 20 வயதில். இது பிரசுரிக்கப…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.meeraspage.com/novels-and-kids-stories/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4/
-
- 18 replies
- 2.7k views
- 1 follower
-
-
தலைப்பு : முக பவுடர் முக பூச்சு சாயங்களுடன் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தவள் திடீரெனகத்தினாள்கதை ; கண்ணாடி ^^^ஒரு வார்த்தை கதைகள் எழுத்துருவாக்கம் கே இனியவன் மேலும் தொடரும்
-
- 0 replies
- 1.7k views
-
-
"மர்மம் விலகியது" இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு கட்சியை நிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும் 1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட] எதிராக செய்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இரு…
-
- 0 replies
- 407 views
-
-
கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை …
-
-
- 11 replies
- 874 views
-
-
கலப்புத் திருமணம் ------------------------------- சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து 'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் …
-
-
- 7 replies
- 870 views
-
-
காலை வேலையை முடிச்சிட்டு மெட்ரோவில் பப்பரக்கா என்று முன்சீட்டு வரை காலை நீட்டி இருந்தது வந்தேன் ஒரு இடத்தில ஒரு அண்ணை ஏறினாறு அப்படியே வந்து என் முன்னாடி இருந்தாரு நானு காலை மடிச்சு மரியாதையா இருந்தேன் .. காரணம் ஏறினவர் நல்ல அழகா உடை அணித்து ஒரு உயர்தர வேலைக்கான மிடுக்குடன் அவ்வளவு அழகா இருந்தார் சிறிய புன்னைகையை தவழவிட்டபடி .. ஒரு சிறிய அமைதியின் பின் பேச்சு கொடுத்தார் தம்பி நீங்க தமிழா நான் மனதில் (படிச்சபயல் நம்மகூட பேசுது )நினைத்தபடி ஆமா அண்ணே என்று சொல்லிட்டு இருக்க சொன...்னாரு உலகத்தில வன்முறை ;பயங்கரவாதம் தலை தூக்கி ஆடுது (ஒருவேளை இவன் ரகசிய போலீஸோ) இதில இருந்து மீள ஒருவழிதான் இருக்கு .. நான் ஆவலா என்ன வழி அண்ணே நீங்கள்எல்லோரும் ஆண்டவரிடம் சரண் அடையவேணும் (இத…
-
- 5 replies
- 966 views
-
-
"ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் நீண்ட கருங் கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கி வந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்து சென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொ…
-
- 0 replies
- 156 views
-
-
"தாயின் பரிசு" [உயிர் பிழைத்த வளையல்] இலங்கையின் தமிழ் மக்களின் முதன்மையான தாயகமான யாழ்ப்பாணம் டச்சு காலனித்துவ அம்சங்கள் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கங்களால் உருவான சுவாரசியமான கலாச்சாரத்தைக் கொண்ட தனித்துவமான ஒரு பகுதியாகும். அப்படியான, அதேநேரம், பெரும்பாலும் வெயிலின் கொடுமையில் வாடிய யாழ்ப்பாண நகரத்தில், அழகு மற்றும் உள்நாட்டு போரின் போதும் அதன் பின்பும் பல விதமான கஷ்டங்கள், பாதிப்புகள் கொண்ட ஒரு பகுதியாகவும் இருந்தது. அங்கே, தெருக்கள் குறுகலாக, மிதிவண்டிகள், பழ வியாபாரிகள், காற்றில் கலந்த தமிழ் மொழியின் ஓசைகள் என பரபரப்பாக இருக்கும் அதன் மையப் பகுதியில் அடக்கமான ஒரு சிறிய வீட்டில் மாரியம்மா என்ற விதவை வாழ்ந்து வந்தார். அவளது வாழ்க்கை …
-
- 0 replies
- 114 views
-
-
01 திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கேணல் புலேந்தியம்மான் காலம் தொடக்கம் அந்த மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்து, பல உதவிகளைச் செய்து, போராட்ட அமைப்பு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெரும்பான்மையானோர் இறுதிவரை விடுதலைப்போராட்டத்தோடு பயணித்திருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் இழந்தது ஏராளம். இக்கிராமத்தில் ஒரு போராளி குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் தந்தை, தாய், மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்கள் என ஏழுபேரைக் கொண்ட குடும்பம். அதில் மூன்றாவது மகன்தான் தன்னைப் போராட்டத்தில் (காந்தன் புனைபெயர்) இணைத்திருந்தான். 2002…
-
- 24 replies
- 3k views
-
-
"அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவுபடுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன் நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின், காலி, மாத்தறை, அம்பாந்தோட்…
-
- 0 replies
- 224 views
-
-
வருடம் பிறந்தவுடன் உறவுகளுக்கு தொலைபேசி மூலமும், இணைய நண்பர்களுக்கு இணையத்தின் மூலமும்,மின்னஞ்சல் மூலம் பாடசாலை நண்பர்களுக்கும்,முகப்புத்தகத்தின் ஊடாக முகபுத்தக நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.பதிலுக்கு அவர்களும் நன்றிகள் உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றனர்.சிலர் இது எங்கன்ட புத்தாண்டு இல்லை ஆரியரின்ட புத்தாண்டு என்றனர்.அப்படி சொன்னவரில் கந்தரும் ஒருத்தர்.இவர் உப்படிதான் சொல்லுவார் என்று தெரிந்து அவரை கண்டவுடன் அண்ணே ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றேன்..நன்றி ஆனால் நான் தமிழர் புத்தாண்டைதான் கொண்டாடுவேன் இவங்கன்ட புத்தாண்டை கொண்டாமாட்டேன் என்றார். நானும் ஒவ்வொரு முறையும் சித்திரை புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு,சிங்கள புத்தாண…
-
- 17 replies
- 6.1k views
-
-
இன்றுடன் அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை அங்கு என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல் பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது தாரணிக்கு. “நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.” “நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா” “நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா” விடைபெற்றுச் செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட…
-
- 44 replies
- 5.5k views
-
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும்18 வயது ரவியும்…
-
- 0 replies
- 179 views
-
-
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் …
-
- 0 replies
- 259 views
-