தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
ஜக்கி வாசுதேவின் பாம்புப்பிடி செயலால் தொடரும் சர்ச்சை - என்ன சொல்கிறது ஈஷா? க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISHA FOUNDATION படக்குறிப்பு, பாம்புடன் ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது கர்நாடகாவிலுள்ள சிக்கபல்லபூரில் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தை மீறி சாரைப் பாம்பு ஒன்றை தன்னுடைய நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக அம்மாவட்ட வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாக பூஜையின்போது அந்த இடத்திற்குள் நுழைந்த பாம்பை, அதன் பாதுகாப்பு மற்று…
-
- 0 replies
- 762 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் November 2, 2021 தமிழகம்:வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று ந…
-
- 12 replies
- 762 views
- 1 follower
-
-
பழனி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த முதியவர் பலி - அடுத்தடுத்து கடந்த பரபரப்பு நிமிடங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நடராஜ் பழனியில் நிலம் தகராறு தொடர்பான விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர் நடராஜ் சுட்டதில் காயம் அடைந்த இருவரில் ஒருவரான சுப்பிரமணி உயிரிழந்தார். துப்பாக்கி தோட்டா காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமபட்டினம் புதூரில் வள்ளுவர் என்ற திரையரங்கு இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவரு…
-
- 0 replies
- 762 views
-
-
ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வாழ்வு போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்தது. போராட்டமே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே போராட்டமாகவுமே தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு ஆதரவாக உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் என்றும் தோற்றுப்போவதில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக மாணவர்களின் போராட்டங்களை பார்க்கின்ற போது எமது உள்ளங்கள் உருவேறுகின்றன. உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன. ஆனால், நாங்கள் இங்கே எதுவுமே செய்ய முடியாமல் எமது பல்கல…
-
- 1 reply
- 762 views
-
-
தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால்? நீதிமன்றம் கேள்வி… March 7, 2019 தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால், அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சிறப்பாக எடுத்துச் செல்ல முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கொன்றில் மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மதுரை உலக தமிழ்ச் சங்கச் சிறப்பு அலுவலர் கே.எம்…
-
- 0 replies
- 762 views
-
-
நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம், மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நீண்ட காலம் சிறையில் இருந்த 6 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம்…
-
- 6 replies
- 762 views
- 1 follower
-
-
ரெகுலரான வாடிக்கையாளர்களுக்கு தூக்குவாளி: அசத்திய டீக்கடைக்காரர்.. பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் தாள்கள் தடையால் டீக்கடைகளும் சிக்கலில் சிக்கியுள்ளது. பிளாஸ்டிக் தாள்களில் ஊற்றி கொடுக்கப்படும் பார்சல் டீ வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர் தன்னிடம் ரெகுலராக பார்சல் வாங்குபவர்களுக்கு தூக்கு வாளி கொடுத்து அசத்தியுள்ளார். தமிழகத்தில் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சிக் கடைகளில் தேக்கு, தாமரை இலைகளில் பார்சல் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதேபோல் ஹோட்டல்களிலும் வாழை இலைக்கு மவுசு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் தடையால் டீக்…
-
- 1 reply
- 762 views
-
-
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் மாதமே மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், மாநாடு தள்ளிப்போனது. தற்போது புதிய திகதியை தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் திகதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்ப…
-
- 0 replies
- 762 views
- 1 follower
-
-
இலங்கையில் மட்டும் அல்ல தமிழகத்திலும் நெருக்கடிகள் உள்ளது” மு.அசீப் 57 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிற…
-
- 0 replies
- 761 views
-
-
போராட்டத்தின் அடுத்த நகர்வுகள் / தேவைகள் என்ன ? தமிழர்களுக்கு உரிமையும், நீதியும் கிடைக்க முதலில் புதுடில்லியை தள்ளி வைத்து விட்டு உலகநாடுகளோடு தமிழர்கள் நேரடியாக அழுத்தம் கொடுத்து, கோரிக்கைகளை முன்வைத்து சந்திப்புகளை நடத்தி ஆதரவை திரட்ட வேண்டும். எந்த காலத்திலும் புதுடில்லி தமிழர்களுக்கு நீதியும், உரிமையும் பெற உதவுமென்ற நம்பிக்கையில்லை. கிடைக்கிறவற்றையும் தடுக்கிற வேலையை டில்லி ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை கேட்க எந்த முயற்சியையும் எடுக்காத புதுடில்லியை புறக்கணிப்பது ஒன்றே தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை தரும். தமிழக அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டுமென்கிற மாணவர் கோரிக்கை மிக முக்கியமாகிறது. தமிழக கடல்…
-
- 3 replies
- 761 views
-
-
வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் கழித்து கண்டுபிடித்து கண்ணீர் விட்ட கணவன்! உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவியை 591 நாட்கள் கழித்து கணவர் கண்டுபிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிகம்புரா கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திர சிங். இவர் அங்குள்ள சுற்றுலா பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அந்நிறுவனம் செய்த ஏற்பாட்டின் படி கடந்த யூன் 2013 ஆண்டு 30 சுற்றுலா பயணிகளையும், தனது மனைவி லீலாவையும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கு சுற்றுலா சென்றார். பத்ரிநாத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக தலமான சர் தாம் கோயிலுக்கு அவர்கள் சென்ற அவர்கள் அங்கு தங…
-
- 9 replies
- 761 views
-
-
சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ? கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன. தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. இது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது. பெருமளவு தண்…
-
- 0 replies
- 761 views
-
-
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது என்றும் நடப்பாண்டில் கடன் சுமையின் உயர்வை தவிர்க்க முடியாது என்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரான ரங்கராஜன் தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரங்கராஜன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்ட…
-
- 0 replies
- 761 views
-
-
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.'' ''இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் மத்திய அரசுக்கு உகந்ததாக இல்லை. 'அரசியல்ரீதியாக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுமா? ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிப்பதாக அமையக் கூடாது’ என்று, இலங்கை சம்பந்தமான தீர்மானம் பற்றி மத்திய அரசு நினைக்கிறது. 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையை நட்பு நாடு என்று சொல்லக் கூடாது’ என்று, தமிழக சட்டம…
-
- 1 reply
- 760 views
-
-
தலைவர் பிரபாகரன், மனைவி சேலத்தில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ்.: துறையூர் என்ஜினீயர் கைது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் (வயது 32). என்ஜினீயர். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில் துரைராஜ், தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து தனியே வசித்து வந்தார். இங்கு வந்து வேலை தேடி வந்த துரைராஜ், கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு …
-
- 4 replies
- 760 views
-
-
உதயமாகிறது அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,அதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பதவி ஏற்கச்சொல்லி எம்.எல்.ஏ க்கள் ,அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பொதுச்செயலாளர் பதவி ஏற்கச்சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டுபரப்பி வருகிறார். இதில் மேல்மட்ட நபர்களுக்கு பதவியை தக்க வைக்க இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள்.ஆனால் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை.இதனால் பல்வேறு மா…
-
- 1 reply
- 760 views
-
-
”இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம்!”- ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் ``பாசிச சக்திகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை. மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் இவர்களுடைய இறுதிநாள்கள் எப்படி இருக்கும் என்பதை மனித இனம் நிச்சயம் பார்க்கும்.” நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப்பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். – பெரியார் (விடுதலை:23-8-1940) …
-
- 0 replies
- 760 views
-
-
தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவிகரம் நீட்டுகிறது கேரள அரசு! தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை கருத்திற்கொண்டு கேரள அரசு 20 இலட்சம் லீட்டர் தண்ணீர் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று குடிநீர் வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு 20 இலட்சம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தி.மு.க அரசு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 760 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பல புதிய தகவல்களைக் கொண்டிருந்த அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதிலிருந்த தகவல்கள் சரியானவை எனக் கூறியிருக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை என பகிரப்பட்ட அறிக்கையில், ரஜினிகாந்தில் உடல்நலம் குறித்து முன்பு இடம்பெற்றிராத பல தகவல்கள் இருந்தன. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஜூன், ஜூலை மாதங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெய…
-
- 0 replies
- 760 views
-
-
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார். புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியை இன்று வெளியிட்டு தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்க தனித்து போட்டியிடப்படும் என்று தெரிவித்தார். ஏ.பி.ஜே அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியின் அறிமுக விழா ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் புதிய கட்சியின் ஆலோசகர் பொன்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் துவங்கப்பட்ட புதிய கட்சியின் பெயரான அப்துல்காலம் வி.ஐ.பி (அப்துல்கலாம் லட்சி…
-
- 0 replies
- 760 views
-
-
தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய், 'டோக்கன்' வழங்கியதாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், தினகரன் எம்.எல்.ஏ., பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தேர்தல் பிரசாரத்தின் போது,பணத்தை வாரி இறைத்தார். தகுதி நீக்கம் அவர் பிரசாரத்திற்கு, எவ்வளவு பேர் வந்தனர்; அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரங்களை, தேர்தல் பார்வையாளர்கள், ஆதாரத்துடன் சேகரித்துள்ளனர். அவற்…
-
- 0 replies
- 760 views
-
-
உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு தமிழக அரசுக்கு உப்பா, சர்க்கரையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பது அரசியல் வட்டாரத்தில் விடைகாண்பதற்கு கடினமான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தகுத…
-
- 1 reply
- 760 views
-
-
தமிழகம் பாலை நிலமாக மாறுமா? செய்ய தவறியதும், செய்ய வேண்டியதும் - திணைகளின் கதை மு.நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 15 ஏப்ரல் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தேர்தல் குறித்து மக்கள் மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி…
-
- 0 replies
- 760 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, ஒருவர் தனது கையில் உள்ள செல்போனில் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார். அக்கம் பக்கம் யார் வருகிறார்கள் என்று கவனிக்காமல் மேப் காட்டும் வழியைப் பார்த்துக் கொண்டே சென்றார் அவர். திடீரென அவரருகே ஓடி வந்த இளைஞர் அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தார். செல்போனை இழந்தவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். “கூகுள் மேப் பார்த்துக்கொண்டு நடப்பவர்களிடம…
-
-
- 2 replies
- 760 views
- 1 follower
-
-
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி, சசிகலா அக்கா மகளுக்கு, மூன்று ஆண்டுகள்; 1.68 கோடி ரூபாய் சேர்த்த, மருமகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா குடும்பத்துக்கு, அடி மேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த அவர்களின் சொந்தங்களுக்கு, கிலி ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில், அதிகாரியாக பணியாற்றியவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவரது மனைவி, சீதளாதேவி. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகள்; தினகரனின் சகோதரி. 1998ல், பாஸ்கரனின் வங்கி ல…
-
- 0 replies
- 759 views
-