Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை ராயப்பேட்டை, முத்து தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு.பட்டினப்பாக்கத்தில் ஸ்வீட் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19), சினேகா (16) என்று மூன்று மகள்கள். முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பவித்ரா, பரிமளா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். சினேகா பிளஸ்2 படித்தார். இவர்கள் கடந்த வாரம் சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று வந்துள்ளனர். கடந்த திங்கள் கிழமை முதல் இவர்களது…

  2. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதில், அதிமுக எம்எல்ஏ செம்மலை கருணாநிதி குறித்து கூறிய கருத்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் செம்மலை உண்மைக்கு மாறாக தகவல்களை தருகிறார். இலங்கையில் போர் நடைபெற்ற போது போரில் பொது மக்கள் உயிரிழப்பது இயல்புதான் என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று பதிலடி கொடுத்தார். …

  3. தமிழக அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்- கர்நாடகா எதிர்ப்பு! காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு, காவிரி நதியில் 45 டி.எம்.சி. தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்திக் கொண்டு நதிகள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், காவிரி தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளமை கண்டிக்கத்தக்கது எனவும் இந்த சட்ட விரோதத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழக முதல்வரைக் கேடுக் கொள்வதாக அவர் குறிப்பிட்ட…

  4. பெங்களூரு: விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் வரும் 20 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் …

  5. கமல்ஹாசன் கட்சி பாணியில் பெயர். திடீரென இயக்கம் தொடங்கிய விஷால்! மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் நடிகர் விஷால். நடிகர் விஷால், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருபவர். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலை முன்மொழிந்த 10 பேரில் சிலரது நம்பகத்தன்மை பற்றி எதிர்ப்பு கிளம்பியதால், விசாரணை நடத்தப்பட்டது. அதில், சுமதி, தீபன் இருவர் விஷாலை முன்மொழியவில்லை என திடீரென கூறிவிட்டனர். வேட்புமனுவில் உள்ள கையெழுத்து எங்களது கையெழ…

  6. ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தனது நண்பர் மூலம் ஒப்படைத்துள்ளார். சென்னை: அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். 2 ஆண்டுகளுக்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தவர். அப்போது அவரது பிரசார பயணத்துக்காக ஜெயலலிதா இனோவா காரை பரிசாக வழங்கின…

  7. மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார். இவர் 20 ம் திகதி நடக்கவிருக்கும் "ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டதில் கலந்து கொள்வர் என தெரியவருகிறது.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13408:som-pirahas&catid=36:tamilnadu&Itemid=102

    • 1 reply
    • 665 views
  8. "என் உயரம் எனக்கு தெரியும்" - தந்தையை பின்பற்றி தேசிய அரசியலில் பயணிக்கிறாரா மு.க.ஸ்டாலின்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாம் வெல்வதற்கு பணி செய்ய வேண்டும்" என்று கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து தொடர்ச்சியாக தேசிய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக ஒரணியில் த…

  9. தூத்துக்குடி: சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் - போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்? பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி டிபேனுடன் பிபிசி தமிழ் பேசிய போது, "22ஆம் தேத…

  10. கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர். இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோத…

  11. சேலம்: நீண்ட போராட்டம்; முதல் முறையாக திருமலைகிரி கோயிலுக்குள் நடந்த பட்டியல் சமூக திருமணம் வீ கே.ரமேஷ்எம்.விஜயகுமார் கோயிலுக்குள் திருமணம் ( எம். விஜயகுமார் ) சேலம் திருமலைகிரி கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சாமி வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருந்து, தற்போது கோயிலுக்குள் திருமணம் நடைபெற்றது வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. மிகுந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, முதல் தலைமுறையாக பட்டியல் சமூக மக்கள் சேலம் திருமலைகிரி ஈஸ்வரன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதோடு, முதல்முறையாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜோடிக்கு அந்த கோயிலில் திருமணமும் நடந்திருப்பது, அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. …

  12. காளான் வளர்ப்பில் கல்லா கட்டும் இன்ஜினியர் பெரம்பலூர்: காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத்தாவர உயிரினம். பலநாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பலதரப்பட்ட சூழல்களி லும் வளரக்கூடியது. எப்போதாவது இடியிடித்து மழைபெய்தால் அபூர்வமாக முளைக் கும் காளான்களை சமைத்து உண்பதில் ஆர்வம்காட்டும் இந்தியர்களினவ் முக்கிய உணவுப் பொருளாக காளான்கள் அசைவ உணவுக்கு மாற்றாக மாறி வருகிறது. இதில் சிப்பிக்காளான், பால் காளான், பட்டன் காளான் என ஆயிரக்கணக்கான வகைகள் காளான்களில் இருந்தாலும், சிப்பிக் காளான்களுக்கும், பால் களான்களுக்கும் மட்டுமே மவுசு அதிகரித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே ஆடம்பர உணவாகக் காணப்பட்ட காளான்கள் இப்போது நடுத்த…

    • 0 replies
    • 664 views
  13. திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருப்பது ஒரு கபட நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போ…

  14. ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு கோர்ட் அனுமதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ந் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். சிபிஐ வழக்கில் ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.முன்னதாக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் கைது செய்தது அமலாக்கப் பிரிவு. இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் இன…

  15. 'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி! போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர். வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். அந்த இரு தேர்தல்களிலும் இது தனது கடைசி தேர்தலாக இருக்கலாம் என்று 'அரசியல்' செய்தாலும், உடல்நிலையை பொறுத்தவரை அதுதான் உண்மையான நிலவரமாக இருந்தது. ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி. வயது, உடல் நிலையை மீறி இந்த முறை அவரை உற்சாகமாக…

  16. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெனியீட்டுள்ள அறிக்கையில்: முள்ளிவாய்க்கால்யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறியும். அந்தக் கொடூரம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அந்த இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் அதிகாரத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது. இப்போது பார்ப்பவர்களை நெஞ்சம் பதறவைக்கும் புகைப்பட ஆதாரத்தை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேதகு பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் என்ற பாலகன் இலங்கை ராணுவத்தால் கைக்கெட்டும் தூரத்திலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பால்வடியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் பாலச்சந்திரன் ஒர…

  17. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது புதுவை சிறுவன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுச்சேரியில் தாயைத் தவறாக பேசிய நபரை மிரட்டும் நோக்கில் யூடியூப் காணொளியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அந்த நபரின் வீட்டில் வீசிய சிறுவனிடம் விசாரணை நடந்துவருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ள…

  18. சென்னை: பாஜக அணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம்பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன. அழைத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடைசிவரை காத்திருந்தன. இவற்றில் திமுக விஜயகாந்துக்கான கதவை மூடிவிட்டது. காங்கிரஸ் காத்திருந்தது. இதற்கிடையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே…

  19. தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்! கழுகாரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு... ``ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறேன்... வாட்ஸ்அப்பைப் பார்க்கவும்’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். `முதல்வர்’ சென்டிமென்ட்! தொகுதி மாறும் மு.க.ஸ்டாலின்... `வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார்’ என்பதே தி.மு.க-வில் ஹாட் டாபிக். ``கட்சிக்காரருக்காக விட்டுக்கொடுக்கிறாரா?’’ என்று உடன்பிறப்புகளிடம் கேட்டால், `ம்ஹூம்... அவர் புள்ளை உதயநிதி ஈஸியா ஜெயிக்கணும்கிறதுக்காக கொளத்தூர் தொகுதியை அவ…

  20. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு... இனி விரைவில் தமிழகத்தில் ஆதார் ஐடி போல் மக்கள் ஐடி! தமிழ்நாட்டின் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஆதார் எண் என்பது அனைவரும் பயன்படுத்து முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் எண், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு எண் என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இது அனைவரது அடையாளங்களையும் கொண்ட முக்கிய ஆவணமாக மத்திய அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்திய அளவில், பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அரசு நலத்திட்டங்க…

  21. சென்னை: அமைச்சர்கள் தங்கள் துறை சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது கடும்புலி வாழும் காட்டில் வாழ்கிறோமா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் ஒவ்வொரு பகுதியிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும், மனிதச் சங்கிலி என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக் கூடிய அளவில் முறைப்படி காவல் துறையினரின் அனுமதியைக் கூடப் பெறாமல் நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில…

  22. சென்னை விமான நிலையம்:' 54 ' நாட்அவுட்! சென்னை விமான நிலையத்தில் 54 வது முறையாக இன்றும் கண்ணாடி கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது. சென்னை விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது. தென்னிந்தியாவின் வாயிலாக கருதப்படும் இந்த விமான நிலையத்தை நவீனமயமாக்கிய பிறகு தொடர்ந்து கண்ணாடிகள் கீழே விழுந்து உடைவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஒரு வித பயத்துடன்தான் நடமாடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பயணிகள் செல்வது போல கூட கேலிசித்திரங்கள் அவ்வப்போது வெளியாவதும் வழக்கமாகி விட்டது. எனினும் இந்த விஷயத்தில் விமான நிலைய அதிகாரிகள் மெத்தன போக்கால் கண்ணா…

  23. தமிழக தேர்தலில் இளைஞர்களின் வாக்கு யாருக்கு? - வீடியோ தமிழ் நாட்டின் அடுத்த தலைவரை, ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க மே 16 என நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் இன்றைய இளைய தலைமுறையின் வாக்கு யாருக்கு? அவர்கள் மனதில் இன்றைய அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொரு கட்சிக்கும் பலம் என்ன... பலவீனம் என்ன? கருணாநிதி, ஜெயலலிதாவின் பலவீனம், ஸ்டாலின் மீது உள்ள கோபம், அன்புமணியை ஏன் பிடிக்காது? இப்படி பல காரணங்களை முன் வைக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஜூனியர் விகடனின் நம் விரல், நம் குரல் கலைந்துரையாடலில் பங்கு கொண்டு, ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலனுடன் இளைஞர்…

  24. விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளம் ஆரம் பம் – அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமா? உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தனது படங்களின் அரசியல் பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது. இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத…

  25. வைகோவின் சொந்த கருத்து! மழுப்பும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!! பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், செலவுக்கு பணமில்லாமலும் திண்டாடி வருகிறார்கள். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-மையங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பதும் பணமில்லாமல் ஏமாற்றம் அடைவதுமான நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. மோடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் நிலை என்ன? தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பிரதமரின் ரூபாய் நோட்டு விவகாரத்தை கடுமையாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.