Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 21 மார்ச் 2024 சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டம் பெரிய ஊடக கவனம் இன்றி 600 நாட்களைக் கடந்திருக்கிறது. 600வது நாள் போராட்டத்தை கடந்த ச…

  2. இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு சென்னை: இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென…

    • 1 reply
    • 1.1k views
  3. Started by akootha,

    நல்ல இனிமையான ஒரு மாலைப் பொழுதில் சுவையான தேநீர் குடித்து, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம்.. வீட்டு வரவேற்பறையில் நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே தொலைக்காட்சியில் காதுக்கு இனிய இசை நிகழ்ச்சியையோ, மனதிற்கினிய தொடர்களையோ பார்த்து ரசிக்கிறோம். நன்றாக இருக்கிறது. ஒரு பார்வையாளராய் நமக்கு பிடித்ததை, நமது ரசனைக்கு உகந்தவற்றை ரசிக்கிறோம்.. அந்த பொழுது மிக இனிமையாகத்தான் கழிகிறது. ஆனால்.. இலங்கையில் மண்ணை நனைத்த மனித உரிமை மீறல் காட்சிகள் ஒவ்வொரு முறையும் புதிய தலைமுறையில் வெளிப்படுகிறது.. வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளில், ரத்தம் தோய்ந்த.. மனிதாபிமானம் அற்ற மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒரு…

    • 1 reply
    • 675 views
  4. இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு.. https://tamil.oneindia.com/img/2021/02/bjp5-1613968233.jpg சென்னை: நடப்பதெல்லாம் நல்லதுக்குதான்.. இப்போ புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறதே ஒரு அரசியல், அது எண்ணற்ற பாடங்களை நமக்கு கற்று தந்து கொண்டிருக்கிறது.. இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு..! புதுச்சேரியில் ஒவ்வொரு காங்கிரஸ் எம்எல்ஏவாக ராஜினாமா செய்தது போக, திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்து விட்டார்.. இதனால் காங்கிரஸ் அரசின் கவிழ்ப்பு அப்போதே உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டுக்கு சென்று ராஜினாமா லெட்டரை தந்தார்.. அவர் கிளம்பி சென்ற அடுத்த 10 நிமிஷத்துலயே திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சென்று அவரது ராஜினாமா லெட்ட…

  5. இரட்டை இலை யாருக்கு? டில்லியில் இன்று பஞ்சாயத்து கட்சியும், சின்னமும் யார் கைக்கு கிடைக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த, அ.தி.மு.க.,வுமே திகிலுடன் காத்திருக்கும் நிலையில், அது குறித்து முக்கிய முடிவை எடுப்பதற்கு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., என, இருதரப்புக்கான பஞ்சாயத்தை, தேர்தல் கமிஷன் இன்று கூட்டியுள்ளது. இந்த விஷயத்தில், இன்று இரவோ அல்லது நாளையோ முடிவு அறிவிக்கப்படலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், அ.தி.மு.க., இரு அணிக ளாக பிளவுபட்டு உள்ளது; இருதரப்புக்குமே, உள்ளுக்குள் பெரும் அச்சம் நிலவுகிறது. மற்ற எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத அளவு,…

  6. மதுரை: மதுரை அருகே டாஸ்மாக்கில் விற்ற மதுவை குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை அடுத்துள்ள காரியாப்பட்டி பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தவர்கள் மலைச்சாமி மற்றும் குருசாமி. இவர்கள் இருவரும் இன்று (23ஆம் தேதி) அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் 'குவார்ட்டர்' ஒன்று வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அருகில் இருந்து ஓய்வுக் கூடத்திற்கு சென்று ஆளுக்கு பாதியாக குடித்து இருக்கிறார்கள். இந்நிலையில், பாதி குவார்ட்டரை குடித்து முடிப்பதற்குள் குருசாமி சம்பவ இடத்திலேயே தொண்டையை பிடித்துக் கொண்டு இறந்து விட்டார். இதையடுத்து, உயிருக்கு போராடிய மலைச்சாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவரு…

  7. `நடராசன் மருத்துவமனையில் அனுமதி' - பரோலில் வருகிறார் சசிகலா! சசிகலாவின் கணவர் ம.நடராசனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நடராசனு…

  8. பயணியர் விமானமா..? மாட்டு வண்டியா..? தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் திக்.. திக்.. அனுபவம்..! பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 70 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. அப்போது விமானத்தில் ஏதோ கோளாறு. கம்ப்யூட்டரில் சிறு கோளாறு தான் என்று கூறி விமானத்தை ரன்வேயில் ஓட்டியபோது மாட்டு வண்டி போல் குதித்து, குதித்து ஓடி பாதி ரன்வேயில் நின்று விட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று விமானத்தை மீண்டும் …

  9. வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி... ஜெயலலிதா பிறந்தநாளில் அ.தி.மு.க.வினர் எங்கே? ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட அமளிதுமளியானது அந்தக் கட்சியை மட்டுமல்லாமல், தமிழகத்தையே பெரும்பாடுபடுத்திவிட்டது. பின், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, ''இந்த வருடம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகுவிமர்சிகையாக நடத்த வேண்டும்'' என்று அறிவித்திருந்தார். அதன்பின் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்ததுடன், பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டார். இருப்பினும், 'அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவின் பிறந்தநாளை விமர்சியாகக் கொண்டாட வேண்டும்' என அந்தக் கட்சிக்குள் பேச்சு நடந்தது. ஆனால், ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (24-02-17) …

  10. சிவகாசி: சிவகாசி அருகே எம்.துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் உயிரிழப்பு பற்றி எதுவும் இதுவரை ஆதரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலி…

  11. மன்னார் வளைகுடா : கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு! மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலோர காவல்படையினர் தண்ணீர் மற்றும் மணலில் செல்லும், ஆற்றல் படைத்த ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் ஒவ்வொரு கடலோர கிராமங்களுக்காகச் சென்று சோதனையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1242738

  12. காவல்நிலையத்தைக் கண்டு அஞ்சும் போலீஸ்காரர்கள்! | Police men does rituals to enter police station M.Ganesh தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை. இப்பகுதிக்கு எனப் புதிதாக காவல்நிலையம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டு அதில் குடியேறினார்கள் காவலர்கள். ஆனால், பெரும்பாலும் யாருமே ஸ்டேஷனுக்குச் செல்வதில்லை. என்ன காரணம் எனத் தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். "என்ன ஆச்சு... ஏது ஆச்சுனு தெரியல... அந்த போலீஸ் ஸ்டேஷன் எப்போ திறக்கப்பட்டதோ அது முதல் தொடர்ந்து எங்கள் தரப்பில் இழப்பைச் சந்தித்தோம். பல்வேறு காரணங்களில் எங்கள் உடன் பணியாற்றிய மூவரை நாங்கள் இழந்தோம். இது எல்லாமும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற பிறகுதான…

  13. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது: திருமாவளவன் தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். மேலும் தேசிய அளவில் உருவாகி உள்ள இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது என தெரிவித்தார். அத்துடன் எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என உறுதிபட கூறிய திருமாவளவன், வேண்டுமானால், கமல் ஹாசன் தங்களுடன் இணைந்தால் வரவேற்க தயார் என்றும் தெரிவித்தார். http://athavannews.com/தி-மு-க-காங்கிரஸ்-கூட்டணி/

  14. வரப்போகும், புதிய அரசுக்கு... உதவுவோம் : குஷ்பு தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, நல்ல பணிகளைத் தொடர வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.வின் வேட்பாளர் டாக்டர் எழிலனை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பு தோல்வியடைந்தார். இதன் பின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், “ஒவ்வொரு வெற்றியும் தோல்வியோடுதான் ஆரம்பமாகிறது. மக்களின் தீர்ப்பை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் எழிலன் அவர்களுக்கு எ…

    • 1 reply
    • 534 views
  15. 'ஒரு குற்றத்துக்குத்தான் எத்தனை விசாரணை?!' - வேலூர் சிறை அதிகாரிகள் மீது பாயும் முருகன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகனைச் சந்திப்பதற்காக, இலங்கையிலிருந்து வந்த அவருடைய தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. ' எனக்குச் சிறை நிர்வாகம் தண்டனை வழங்கியிருப்பதால், 'சந்திக்க அனுமதிக்க முடியாது' என்ற காரணத்தைக் கூறியுள்ளனர். என்னுடைய தரப்பு நியாயத்தை விளக்கக்கூட அதிகாரிகள் வாய்ப்பு அளிக்கவில்லை' என வேதனைப்படுகிறார் முருகன். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகனைச் சந்திப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தார் அவருடைய தாய் சோமணி. சிறையில் மனு போட்டுவிட்டு முருகனுக்காகக் காத்திர…

    • 1 reply
    • 563 views
  16. தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அழகிரி Colors: சென்னை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைத்தால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி கூறினார்.…

  17. ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்கவைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Chennai: சேகர் ரெட்டியின் டைரி விவகாரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, அது தன்னுடைய டைரி அல்ல என்று கூறும் சேகர் ரெட்டி, அமலாக்கத்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன? ஒரு பத்திரிகை பேட்டியைப் போன்ற நேர்த்தியோடு அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளும் அதற்கு சேகர் ரெட்டி அளித்த பதில்களும் இங்கே அப்படியே... ''2014 முதல் 2016 வரை எவ்வளவு தங்கம் வாங்கினீர்கள்? எதற்காக வாங்கினீர்கள்?'' ''2014 ஜனவரி முதல் எஸ்.ஆர் மைனிங் நிறுவனத்திலிருந்து வ…

  18. 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு December 10, 2018 சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு இதற்காக 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசா…

  19. 'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா 'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா? என்ன நடந்தது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் 'இலவசங்கள்' தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்கள் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவை பற்றிய விவாதம்…

  20. கருணாநிதி அஞ்சலி நிகழ்வு; ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட இல்லாமல் தொண்டர்கள்-பொதுமக்கள் மத்தியில் சிக்கிய ராகுல்: பிரதமர் வருகைக்குப் பின் பாதுகாப்பு தளர்ந்ததா? பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சிக்கிய ராகுல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்குக்கு வந்தபோது, தனி பாதுகாப்பு அதிகாரிகள் இன்றி, தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராகுல் காந்திக்கு தமிழக போலீஸார் யாரும் பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஏற்கெனவே எழுந்துள்ள குற்றச்சாட்டை இந்த வீடியோ நிரூபிப்பது போன்று உள்ளது. வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்…

  21. நான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன்- ஸ்டாலின் நான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன், உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களிற்கு முகம்கொடுத்து வென்று காட்டுவேன் என மு.கா. ஸ்டாலின் தொண்டர்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். நாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன, தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்ந்த தமிழகத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளியிருக்கின்றார்கள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியார்கள் மதவெறியை விதைத்து மாநிலங்களின் உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தலைவரை இழந…

  22. `300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை' - திருச்சி ரயில்வே பணிமனையில் வெடித்த போராட்டம் "சமீபத்தில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை" என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்ற தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சமீபகாலமாகத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்…

    • 1 reply
    • 1.2k views
  23. நான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி! பாஜக ஆதவாளனாக தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளால் ரஜினி வேதனை அடைந்திருப்பதாகவும் இது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் அவர் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதை நினைத்து மன்ற நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, 1996ம் ஆண்டில் தொடங்கி சுமார் 21 ஆண்டுகள் ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார் அப்போது வருவார் என பரபரப்பாக ஊடகங்கள் பேசிக்கொண்டே இருந்தன. ஆனால் ரஜினி ஒருமுறைகூட வருவேன் என்பதை உறுதியாக சொல்லவில்லை. ஆனால் வரவே மாட்டேன் என்பது குறித்தும் ரஜினி எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி கட்சி ஆரம்பிப்பேன் என்று …

  24. தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று கூறினார். தன்னையும், தமது அரசையும் அவதூறாக பேசுவது மக்கள் மீதான நம்பிக்கையை …

  25. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வரமா... சாபமா? முதல்வர் பதவி, ஒ.பன்னீர்செல்வத்துக்கு வரமா? சாபமா? என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகும் சூழல் ஏற்படும் போதெல்லாம் முன்னிறுத்தப்பட்டது இவர் தான். 'பதவியை திரும்பக் கொடு' என்று கேட்டாலும் சிரித்துக் கொண்டே கொடுத்துவிட்டுச் செல்வதும் இவர் தான். 'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டுப் போன்றது' என்பார் அறிஞர் அண்ணா. அவருடைய இந்த வரி நாவலர் நெடுஞ்செழியனுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்திற்குத்தான் சரியாகப் பொருந்தி போகிறதோ என்று தோன்றுகிறது. தோளில் கிடக்கிற துண்டைத் தொடர்ந்து நழுவ விடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர் ஒ.பன்னீர்செல்வம். 2001 - ல் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் மற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.