தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
“இனி கேப்டன்...”- கண்ணீர் விட்ட பிரேமலதா: தேமுதிகவுக்கு புது தலைமை! மின்னம்பலம்2021-12-12 தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் உடல் நலம் எப்படியிருக்கிறது என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் உள்ளது உள்ளபடி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கண்ணீரோடு தெரிவிக்க, மாவட்டச் செயலாளர்கள் அதைக் கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்கள். தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கோயம்பேட்டிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விஜயகாந்துக்கு சமீப ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லை. அவரால் சரிவர பேச முடியவில்லை. நடக்க முடியவில்லை. அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக செய…
-
- 1 reply
- 645 views
-
-
முதலில் ராஜ்நாத் சிங் அடுத்து ஜனாதிபதி... வித்யாசாகர் ராவின் டெல்லி மூவ்! டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதியை அவர் சந்திக்க உள்ளார். தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தபோதும், அதிகாரத்துக்கான சண்டைகள் ஓயவில்லை. கடந்த மாதம் ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிட…
-
- 1 reply
- 447 views
-
-
மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் - என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற விவகாரத்தில் அந்த இரு பேருந்து ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகட்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ,வாணி ஸ்ரீ தம்பதி. ஆட்டோ ஓட்டுநரான கோபாலகிருஷ்ணனுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஹரி பிரசாத் என்ற மகன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் மூவரும் கிருஷ்ணகிரி …
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம் 2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி-ன் படி குற்றம்சாட்டப்பட…
-
- 1 reply
- 513 views
-
-
இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது கல்வீச்சு! சென்னை: சென்னையில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் இன்று கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் அந்த அலுவலகத்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பதாகவும், அதை ஆராய்ந்து குற்றவாளிகளை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிறகு, இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு ம…
-
- 1 reply
- 826 views
-
-
இலங்கை நோக்கி படகு பேரணி! ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு! இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களையும் விடுதலை செய்ய வற்புறுத்தி, இலங்கை நோக்கி படகுகளில் பேரணி நடத்துவது என்ற போராட்ட அறிவிப்பை ராமேசுவரம் மீனவர்கள் வெளியிட்டுள்ளனர். ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 06.06.2013 அன்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க சம்மேளனத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களையும், படகுகளையும் வருகிற 20-ந்தேதிக்குள் விடுதலை செய்யவேண்…
-
- 1 reply
- 583 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைகளை காங்கிரஸ் முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக திமுகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தது. திமுகவும், மத்திய அரசில் பங்கேற்றது. ஈழ இறுதிப் போர் நடைபெற்ற சூழலிலும் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அண்மையில் தமிழக மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில் மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக திமுக அறிவித்தது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி முதலில் அறிவித்தது. திமுக கேட்காமலேயே கா…
-
- 1 reply
- 442 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மழலையின் சிரிப்பொலியைக் கேட்பதற்குத்தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கதீஜா பீவிக்கு, பிறந்த சிசுவின் முதல் அழுகுரலைக் கேட்பதில்தான் அதீத ஆர்வம். கடந்த 33 ஆண்டுகளாக விழுப்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு செவிலியராக பணியாற்றி வரும் கதீஜா பீவி, தனது பணிக்காலத்தில் 10,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களை வெற்றிகரமாகக் கையாண்டவர். அவரது 33 ஆண்டு காலப் பணிவாழ்வில், தன்னிடம் வந்த தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை அளித்த கதீஜா, ஒ…
-
- 1 reply
- 745 views
- 1 follower
-
-
புதுடில்லி:"சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் போது, ராமர் சேது பாலத்திற்கு எந்த விதமான சேதமும் ஏற்படக்கூடாது. அப்படி சேதம் ஏற்பட்டால், அதை பொறுத்துக் கொள்ள மாட்டோம்,'' என, பா.ஜ., தகவல் தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் கூறினார். இந்தியா - இலங்கை இடையே, பாக் ஜலசந்தியின் குறுக்கே, 30 மீட்டர் அகலம், 12 மீட்டர் ஆழம் மற்றும் 167 கி.மீ., நீளத்திற்கு, சேது சமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. 2005ல், இந்த கால்வாய் பணியை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.ஆனால், இந்த சேது சமுத்திர கால்வாயை பணியை முடிக்க, அதன் வழித்தடத்தில் உள்ள, இந்துக்கள் புனிதமாக கருதும், ராமர் சேது பாலத்தை இடிக்கக் கூடாது என, பா.ஜ., வினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் த…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஸ்டாலின் வீட்டு சோதனை குறித்து அழகிரி அளித்த பேட்டியால் பரபரப்பு முக ஸ்டாலின் வீட்டில் நடைமுறைகளை பின் பற்றிதான் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. நடைமுறைகளை பின் பற்றியே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று மு.க. அழகிரி பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி ஐ.மு., கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திமுக கடந்த செவ்வாய் கிழமை வாபஸ் பெற்றது. அதனை தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த முக அழகிரி உள்பட ஐந்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர். தி.மு.க.,நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் முதலில் ஜெகத்ரட்சகன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர் த…
-
- 1 reply
- 823 views
-
-
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/12/protest-channei.jpg விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சியினரும், தொழிற் சங்கத்தினரும் இன்று போராட்டம் நடத்தினர். 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாயிகள் சங்கத்தினரும் இந்த போர…
-
- 1 reply
- 521 views
-
-
சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டது வர்தா புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை இரத்து செய்யவும் அதிகாரிகள் உத்தர…
-
- 1 reply
- 491 views
-
-
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில், 37 பேருக்கு கொரோனா! இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள முகாமிலே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த முகாமில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 528 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 5 பேர் மாத்திரமே ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே வ…
-
- 1 reply
- 507 views
-
-
ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? அதிமுகவை கால்நூற்றாண்டுகாலமாக குத்தகைக்கு எடுத்தவர்களாக ஆட்டம் போட்ட சசிகலா கோஷ்டிக்கு குட் பை சொல்லப்பட்டுவிட்டது. சென்னை: கவியரசர் கண்ணதாசனின் ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? என்ற பாடல் வரிகள் அப்படியே சசிகலா கோஷ்டிக்குத்தான் கனகச்சிதமாக பொருந்துகிறது. எம்ஜிஆர் எனும் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரால் உருவாக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம், ராகவானந்தம், ஹண்டே என பழுத்த அரசியல்வாதிகள் பலரும் நிறைந்து இருந்த இயக்கம்.. இளைய தலைமுறை அரசியல்வாதிக…
-
- 1 reply
- 3.5k views
-
-
தமிழ்நாட்டை... அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை, மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அத்துடன் தற்போது…
-
- 1 reply
- 341 views
- 1 follower
-
-
’அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்!’ - லதா ரஜினிகாந்த் ’ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் லதா ரஜினிகாந்த். சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், ‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார். ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும். அவர் அரசியலுக்கு வருவது எப்போது என்பது அவருக்குதான் தெரியும். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும்’ என்று பேசியுள்ளார். சில நாள்களுக்கு முன்னர் ரஜினி புதிய கட்சித் தொடங்க உள்ளதாக வதந்தி பரவியது. இணையத்தில் விவாதப் பொருளா…
-
- 1 reply
- 479 views
-
-
ஜெயலலிதா, சசிகலா மீதான வழக்கு வாபஸ்! ஜெயலலிதா மீதான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்த வழக்கை திரும்பப் பெறுவதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்து ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், சுமார் 18 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில், ஜெயலலிதாவும், சசிகலாவும் அபராதம் செலுத்த தயார் என்று கூறி அபராதத் தொகையை வருமான வரித்துறைக்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அபராதம் செலுத்திவிட்டதால், சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வருமான வரித்துறை இன்று நீதிமன்றத…
-
- 1 reply
- 898 views
-
-
சென்னை: “தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்” என்று திமுக சாடியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது. தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் க…
-
- 1 reply
- 310 views
-
-
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2025 | 04:33 PM இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே திருவிழாவையொட்டி சனிக்கிழமை (22) தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதன்போது, 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் சென்றுள்ளன. இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியி…
-
-
- 1 reply
- 569 views
- 1 follower
-
-
தமிழக அரசியலில் உருவெடுக்கும் புதிய வாரிசுகள்! அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரம், வாசன், அன்புமணி, பிரேமலதா, சுதிஷ் ஆகிய அரசியல் வாரிசுகள் நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி அடுத்த தலைமுறை வாரிசுகளும் தேர்தல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். அதிமுக: போயஸ் கார்டனில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் 25 வயதேயான விவேக் ஜெயராமன். இளவரசியின் மகனான இவர் பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சுமார் ஓர் ஆண்டுக்கு முன்புவரை கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குக்கூட இவரை தெரியாது. ஜெயலலிதா பெங…
-
- 1 reply
- 685 views
-
-
ஜல்லிக்கட்டு போட்டி : புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறை: 1) ஜல்லிக்கட்டு காளைகளுடன் வழக்கமாக 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவர் மட்டுமே வர வேண்டும். 2) ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் கொரோனோ பரிசோதனை செய்து கொரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற வேண்டும். 3) காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். 4) அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி…
-
- 1 reply
- 420 views
-
-
தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்) தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்) விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளின் மிஸ் கூவாகம் போட்டியில் சாயாசிங் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகத்தில் உள்ளது கூத்தாண்டவர் கோவில். இங்கு எழுந்தருளியிருக்கும் அரவாணனை தங்கள் கணவராக நினைத்து, திருநங்கைகள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொள்வார்கள். இந்த சமயத்தில் விழுப்புரம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் ரூம்கள் வாடகைக…
-
- 1 reply
- 3.4k views
-
-
இடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்! ''இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது. இந்த இன அழிப்பு குறித்தான விவாதங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் இனஅழிப்பு நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டு வருவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையம் இன்றுவரை ஏற்க மறுக்கிறது. அங்கு நடந்தது போர்க்குற்றம்கூட அல்ல என்று உலகநாடுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நம்…
-
- 1 reply
- 537 views
-
-
பட மூலாதாரம்,TN FOREST DEPT கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முதல் முறையாக தட்டான்பூச்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 80 வகையான தட்டான்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 அரிய வகை தட்டான்பூச்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,TN FOREST DEPT சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், நம் வீடுகளுக்கு அருகிலேயே காணப்பட்ட தட்டான்களின் எண்ணிக்கை தற்போது காலநிலை நெருக்கடி காரணமாக வெகுவாகக் குறைந்து வருகிறது. சூழலியல் முக்கியத…
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,POOVALUGIN NANBARGAL கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் அமெரிக்க சிப்பி இனத்தால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே பறிபோவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் இந்த உயிரினம் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது? சென்னை மாவட்டம், எண்ணூரில் முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்படை குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதி மக்க…
-
- 1 reply
- 869 views
- 2 followers
-