தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
இணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார். ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , 'டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்க…
-
- 3 replies
- 973 views
-
-
உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் முதன்மை இயக்குனர் ஆன ஸ்டீவ் ஜாப் மீண்டும் மருத்துவ விடுமுறையில் செல்ல உள்ளார். முன்பு தை 2009இல் மருத்துவ விடுமுறையில் சென்றிருந்தார் இவருக்கு சதையியில் புற்றுநோய் (pancreatic cancer) முன்பு இருந்தது. அது மீண்டு பரவி இருக்கலாம் என நம்பப்படுகின்றது. பலரும் இவர் இல்லாமல் இந்த நிறுவனம் ஒருபோதுமே அவர் உள்ளது போல இருக்காது என்கிறார்கள். Apple Says Jobs Will Take a New Medical Leave Steven P. Jobs, the co-founder and chief executive of Apple, is taking a medical leave of absence, a year and a half after his return from a liver transplant, the company said on Monday. Mr. Jobs announced his leave in a lett…
-
- 3 replies
- 1.4k views
-
-
நமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான பயனைப் பெற முடியும் . ந என்பது நிலம் ம என்றால் நீர் சி என்றால் அக்கினி வா என்றால் காற்று ய என்றால் ஆகாயம் . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி எனவே தான் நமச்சிவாய வாழ்க என வழிபாடுகிறோம். படித்ததில் பிடித்தது திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ........( thodarum)
-
-
- 3 replies
- 840 views
- 2 followers
-
-
கூகிள் இன்று ஐபோனுக்கான நிலப்படங்களை வெளியிட்டது தனது சொந்த நிலப்படங்களை (மாப்ஸ்) விட்ட ஆப்பிள் பல சர்சைக்கு உள்ளாகி இருந்தது. பல இடங்களில் அது தவறான வழிகளை கூட கோரி இருந்தது. இதனால் இதற்கு பொறுப்பான சில அதிகாரிகள் பதவில்யில் இருந்தும் நீக்கப்பட்டனர். இன்று கூகிள் அந்த பிரச்னையை தீர்த்து வைத்துள்ளது. நிலப்புகைப்படங்களில் முன்னோடியான கூகிள் இதன் மூலம் தனது நிலையை இந்த விடயத்தில் மேலும் பலப்படுத்தியுள்ளது. Problem Resolved: Google Maps for iPhone Is Here, Looks Good It seem like iPhone users have been obsessing over the possible arrival of an iOS version of Google Maps for about a century now. Actually, it’s been less than three months. Before that, we ha…
-
- 3 replies
- 769 views
-
-
FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது. இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல இணையதளங்களின் பயனாளிகளின் பாஸ்வேர்டை ஆயிரக்கணக்கில் களவாடிச்செல்வது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்த பாஸ்வேர்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. விழிப்புணர்வுக்காக இணையத்தில் வெளியிடப்படுவதும் உண்டு. இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கலாம். அல்லது இந்த திருட்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் பலியாகவில்லை என்று உறுதி செய்து கொள்வது நல்லது இல்லையா? அதை தான் மேலே சொன்ன இணை…
-
- 3 replies
- 730 views
-
-
-
-
கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://beta.xm.comஇலவசமாக ஒரு இணையத்தளம் வடிவமைத்து பயன்படுத்த இந்த இணையத்தளம் வசதி செய்து தருகிறது எனக்கு பிடித்திருக்கிறது நீங்களும் போய்த்தான் பாருங்களேன் சில காலம் வழங்குவதை நிறுத்திவிட்டு இப்போது தான் மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள் அவர்கள் மீண்டும் நிறுத்துவதற்குள் முந்திச் செல்லுங்கள் இது எனக்கு பலரால் பரிந்துரைக்கப்பட்டது இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் இது போல www.protopage.com எனும் தளத்தில் நிமிடத்தில் நேரடியாக தளம் தயாரிக்கலாம். thanks to tamilmanram
-
- 3 replies
- 2.3k views
-
-
நீங்கள் You Tube கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல தான் இந்த இணையமும். தற்போது பரீட்சார்த்தமாக இயங்குகின்றது. இது ஒரு தமிழ் இணையமாகும் :P http://medianetware.com
-
- 3 replies
- 1.7k views
-
-
உலவிகளில் [browser] தற்போது பட்டையக்கிளப்பிக் கொண்டு இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் “க்ரோம்” தான். கூகுள் ரசிகனான நான் க்ரோம் அறிமுகப்படுத்தப்பட்ட 2008 ம் ஆண்டில் இருந்து இதை பயன்படுத்தி வருகிறவன் என்ற முறையிலும், இதைப் பற்றி கூடுமானவரை அறிந்து இருப்பவன் என்கிற முறையிலும் இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்தப்பதிவு நீங்கள் ஏன் (இது வரை பயன்படுத்தவில்லை என்றால்) க்ரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்? இதன் பயன்கள் / சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறேன். Image credit http://kapiti.seniornet.co.nz வடிவமைப்பு க்ரோம் அறிமுகப்படுத்தியவுடன் அனைவரையும் கவர்ந்தது இதன் வடிவமைப்பு தான். வந்தவுடன் ரொம்ப “லைட்டாக” இருக்கிறது என்று அனைவராலும் கூறப்பட்டது. உலவியில் என்ன லைட் எ…
-
- 3 replies
- 667 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனபெல் லியாங் பதவி, வணிகச் செய்தியாளர் 16 ஜனவரி 2024, 11:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும். ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு…
-
-
- 3 replies
- 614 views
- 2 followers
-
-
பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் இனிய பாடல்களை கேட்டு மகிழுங்கள் http://www.kunchu.com/friends/manoharanAE/index.html
-
- 3 replies
- 375 views
-
-
மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக அமெரிக்க அதிபர் பைடன் செயல்பட நினைப்பது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் வெளியாவதற்கு முன், மியான்மரில் ஒரு இனத்தையே அழிக்க ஃபேஸ்புக் தளம் உதவியதாக அந்நிறுவனம் ஒப்புக் கொள்வதற்கு முன், இந்தியாவில் வாட்சாப் மூலம் பரவிய வதந்திகளால் ஏற்பட்ட கொலை சம்பவங்களுக்கு முன், கியூ அனான் & ப்ரவுட் பாய்ஸ் என்கிற வலது சாரி இயக்கங்களுக்கு முன், மார்க் சக்கர்பெர்க்-கின் காலடியில் உலகம் இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தார் மார்க் சக்கர்பெர்க். "அமெரிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வேலை செய்க…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
இணையத்தில் மிகப் பெரிய ஈமெயில் முகவரி வேண்டுமா? இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இடவசதி 6MB தான் தருவார்கள். http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcde...abcdefghijk.com
-
- 3 replies
- 1.6k views
-
-
நவீன மற்றும் தொடுகையுணர் கைத்தொலைபேசிகளுக்கான பட்டயம் (தீம் - theme) மற்றும் பல இதர வசதிகள் (ringtones and so on) கீழுள்ள இணையத்தில் உள்ளன. உங்கள் கைத்தொலைபேசியூடு மேற்படி இணையத்திற்கு சென்று தேவையான theme ஐ (உதாரணமாக ஐபொட் தீம்) தரவிறக்கம் செய்து கொண்டால் சரி. உங்கள் கைத்தொலைபேசி புதிய பொலிவோடு ஐ பொட் போல அழகாக காட்சியளிக்கும். http://www.zedge.net/ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். (அனைத்தும் இலவசம் மற்றும் பாதுகாப்பு உறுதி ஓரளவு நம்பத்தக்கது.) :lol:
-
- 3 replies
- 1.5k views
-
-
5G என்றால் என்ன? | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் – பாகம் 1 Tam Sivathasan B.Eng. (Hons) இன்ரெர்நெட், செல் ஃபோன், கணனி, செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI)) என்று வரும்போது கடந்த சில வருடங்களில் 5G என்ற சொற்பதம் அதிகம் பாவிக்கப்பட்டுவருகின்றது. இங்கு G எனப்படுவது தலைமுறை (generation). 1990களில் பொதுமக்கள் பாவனைக்கு வந்தபோது இது 1G எனப் பெயரிடப்படாவிட்டாலும் அதில் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றங்களின் படிகளின்படி நாம் இப்போது 5G க்குள் செல்லவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் முன்னோடியான கம்பிகள் இல்லாமல் காற்றில் செய்திகளை அனுப்பும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆரம்ப விளக்கம் இங்கே தரப்படுகிறது. ‘கூப்பிடு தூரம்’ ஒருவர் பேசும்போத…
-
- 3 replies
- 1k views
-
-
விண்டோஸ் எக்ஸ் பி :shock: போல் ஓர் இணையதளம் பாருங்கள் http://omar.mvps.org/ குறிப்பு: பாப்அப் பிளாக்கர்( popup blocker ) இருந்தால் இந்த இணையதளம் திறக்கப்படாது. ஆக இந்த பக்கத்தை பார்க்கும் போது பாப்அப் பிளாக்கருக்கு ஓய்வு கொடுங்கள்.
-
- 3 replies
- 2k views
-
-
-
இணைப்பக்கத்தை திறக்கும்போது இவ்வாறான ஒரு செய்தி வருகின்றது. இதற்கான பரிகாரம் என்ன ? தெரிந்த வைத்தியர்கள் தீர்வு தருவீர்களா ? நோய் முற்ற முதல் மாற்றவேண்டும். ..
-
- 3 replies
- 2k views
-
-
எல்லோ (Ello ) பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம். எல்லோ என்றால் என்ன? இது என்ன எல்லோ புதிதாக இருக்கிறது ? எங்கிருந்து முளைத்தது இந்த எல்லோ! இது என்ன சேவை ? ஏன் இதைச்சுற்றி இத்தனை பரபரப்பு? எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியா? இப்படி சொல்லிக்கொ…
-
- 3 replies
- 1.2k views
-
-
GOOGLE நிறுவனத்தின் ADSENSE பகுதியில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது AdSense now supports Tamil Friday, February 09, 2018 Continuing our commitment to support more languages and encourage content creation on the web, we’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages. AdSense provides an easy way for publishers to monetize the content they create in Tamil, and help advertisers looking to connect with a Tamil-speaking audience with relevant ads. To start monetizing your Tamil content website with Google AdSense: …
-
- 3 replies
- 863 views
-
-
உலகம் ஒரு முடங்கல் நிலையில் உள்ளது. பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. தலைவர்கள் செய்வதறியாது உள்ளனர். மருத்துவ சமூகம் தங்கள் வலிமைக்கும் மேலாக சவால்களை எதிர்கொள்ளுகிறார்கள். மக்கள், தங்களால் முடிந்தளவு அறிவுரைகளை பின்பற்றுகிறார்கள். வீட்டில் இருக்கிறார்கள். முடிந்தளவு இடைவெளிகளை பேணுகிறார்கள். கைகளை கழுவுகிறார்கள். இந்த பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் பல வழிகளில் தற்காலிக தீர்வுகளை தருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்த வண்ணம் வேலைகளை செய்யவும் உறவுகளுடன் இணையவும் முடிகின்றது.பிள்ளைகள் கல்வியை தொடரமுடிகின்றது. ஆப்பிளின் பேஸ் டைம் (FACETIME) ஒரே நேரத்தில் 35 பேருடன் ஒரு குழுமமாக கதைக்க, படிக்க முடிகின்றது.
-
- 3 replies
- 957 views
-
-
ஐபோன்.. ஐபொட்.. ஐபாட் போன்றவற்றிற்கு தேவையான அப்ஸ் கீழுள்ள இணையத்தில் நிறைந்து இருக்கின்றன. நீங்கள் உங்கள் அப்பிள் உபகரணத்தை ஜெயில் பிரேக் செய்தால் மட்டும் இந்த முழு அப்ஸையும் காசின்றி இலவசமாக பயன்படுத்த முடியும். இவற்றை ஐரியுனில் பெற வேண்டின் பெருந்தொகையை நீங்கள் செலவிட்டே அனுபவிக்க முடியும். யாழில் பிறிதொரு தலைப்பில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=76271) ஜெயில் பிரேக் பற்றி எழுதப்பட்டுள்ளது. வாசிக்குக. http://apptrackr.org/
-
- 3 replies
- 1.5k views
-