நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்ற பழமொழி எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பதை தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளுக்கு பல்வேறு அரிய குணங்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மது போதை அடிமைகளை மீட்கவும் கூட ஆப்பிள் உதவுகிறதாம். போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, நமது உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இந்த பழங்கள் என்று குறிப்பிட்டதில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழமே. பைரஸ் மேலஸ் …
-
- 17 replies
- 1.4k views
-
-
நம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்!!! இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்). நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்…
-
- 0 replies
- 710 views
-
-
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள் அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள்தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்! ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும். சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலர…
-
- 25 replies
- 4.7k views
-
-
புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது. புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது. இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து எ…
-
- 10 replies
- 3k views
-
-
30 வயசுதான் ஆச்சு. அதுக்குள்ள ஹார்ட் அட்டாக்காம்', 'நல்லாத்தான் பேசிட்டிருந்தார். திடீர்னு மைலடு அட்டாக்' இப்போதெல்லாம் இப்படியான உரையாடல்களை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஹார்ட் அட்டாக் என்பது எங்கோ, எப்போதோ, யாருக்கோ என்று இருந்த நிலை மாறிவிட்டது. இதயம் காப்பது என்பது இன்று எல்லோருக்கும் மிக முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லை.ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர். 2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் என்று எச்சரிக்கின்றனர். இந்த உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும். இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங…
-
- 0 replies
- 4.4k views
-
-
முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது. * தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன? “முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூள…
-
- 1 reply
- 2.2k views
-
-
சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆந்தோசயானின், லைகோபீன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. லைகோபீன் ஊட்டச்சத்து புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது, ஆந்தோசயானின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆகவே இந்த காய்கறிகளை தினமும் இந்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதுளை மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களின் பட்டியல் இதில் அடங்கும். கொழுப்பைக் குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் காக்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும். ரத்த சோகை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம். சர…
-
- 1 reply
- 605 views
-
-
காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிட்டால் உடலை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறை, உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்துக் கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து, சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின…
-
- 0 replies
- 546 views
-
-
வயதைச் சொல்லும் கழுத்து வியாழன், 9 ஆகஸ்ட் 2007 ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால் கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள முடியும். தினசரி கழுத்துப் பயிற்சி தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை …
-
- 15 replies
- 5.1k views
-
-
கண்களும் கண்ணாடியும் பற்றி செல்வராஜ் எழுதிய மிகச் சுவையான வலைப் பதிவைப் படித்தபின் என் மூக்கு பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது. ஏனென்றால் என் மூக்கோடும் தும்மலோடும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போராடி அதற்கு ஒரு வேடிக்கையான தீர்வு இணையத் தொடர்பின் காரணமாகக் கிடைத்த கதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் கைகள் துடிக்கின்றன. நினைவு தெரிந்த நாளாய் .. மூன்று, நான்கு வயது சிறுவனாய் இருந்த காலந்தொட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தும்மிக் கொண்டே துயில் எழுவேன். அடுக்கடுக்கான தும்மல்கள் ஒவ்வொரு காலையும் நாற்பது .. அறுபது .. அல்லது நுாறு தும்மல்கள். காலை எட்டுமணிக்குப் பிறகு.. நல்ல வெய்யில் ஏறிய பிறகு தும்மல் தானாக …
-
- 3 replies
- 2.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–as…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
அமர்ந்தே இருப்பது ஆபத்து, ஏன்? கு.கணேசன் கொரோனா பெருந்தொற்று எப்போது பரவத் தொடங்கியதோ, அப்போதிருந்தே நம் அன்றாட வாழ்வியலில் பல மாற்றங்களைக் கண்கூடாகக் காண்கிறோம். ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ‘இணையவழி வணிக’த்தில் இறங்கினோம். அதை இப்போதும் கைவிட முடியாமல் கஷ்டப்படுகிறோம். இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசி பொத்தானைத் தட்டி, வீட்டுக்குத் தேவையான ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்துவிடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக்கொண்டோம். மற்ற வேலைகளுக்கும் தெருவில் இறங்க வேண்டிய தேவை குறைந்துபோனது. கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைகளில் கைபேசியைக் கொடுத்து, ‘இணைய…
-
- 0 replies
- 405 views
-
-
'கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?' என்னும் இக்கட்டுரை 'அருஞ்சொல்' இதழில் கு. கணேசன் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றது. பலருக்கும் பலதும் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான், ஆனால் இலகுவான ஒரு நடையில் இதை எழுதியிருக்கின்றார். நல்ல ஒரு வாசிப்பாக அமையலாம். *********** கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா? (கு.கணேசன், 07 Jul 2024) -------------------------------------------------------------------------------------------- இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒ…
-
- 0 replies
- 484 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் உலகில் 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ் ஸ்கெல்லி பிபிசி 14 நவம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆர்.எச் பூஜ்ய (Rh null ) ரத்த வகை உள்ளது. இப்போது ஆராய்ச்சியாளர்கள் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதை ஓர் ஆய்வகத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர். ரத்தமாற்று சிகிச்சை நவீன மருத்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எப்போதாவது காயமடைந்தாலோ, அல்லது பெரிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலோ, மற்றவர்களால் தானம் செய்யப்பட்ட ரத்தம் நம் உயிரைக் காப்பாற்றும். ஆனால் அரிய வகை ரத்தம் …
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
`லாக்டௌனில் அஜீரணமா? இந்த உணவுகள் எல்லாம் வேண்டாம்!' - டயட்டீஷியன் வழிகாட்டல் முட்டை, மீன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை நன்றாகச் சுத்தம் செய்து, முழுமையாக வேகவைத்து, சமைத்துச் சாப்பிடலாம். இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உணவுகள். லாக்டௌனில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நாம் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த எத்தனையோ புதுப்புது பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக இந்த லாக்டௌனில் நம் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது. பீட்ஸா, பர்கரை மறந்து வீட்டிலேயே சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளின் பக்கம் பெரும்பாலானோர் திரும்பிக்கொண்டிருக்கிறோம். என்றாலும் சிலர், அவசர சமையலுக்காக நூடுல்…
-
- 0 replies
- 569 views
-
-
இனிய வணக்கங்கள், எனக்கு ஒரு மாதத்துக்கு முன்னம் அக்காவிடம் இருந்து புற்றுநோய் சம்மந்தமாக ஒரு மின்னஞ்சல் வந்திச்சிது. வாசிக்க நேரம் இருக்க இல்லை. இண்டைக்குத்தான் பொறுமையாக இருந்து அதை முழுதுமாக வாசிச்சன். மிகவும் பயனுள்ள பல தகவல்களை அதில அறியக்கூடியதாக இருந்திச்சிது. குறிப்பாக புற்றுநோய் சம்மந்தமான பல புதிய தகவல்களை அதில பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திச்சிது. இதனால, அந்த மின்னஞ்சலை இதில இணைக்கிறன். நீங்களும் பொறுமை இருந்தால்.. இப்ப இல்லாட்டிக்கும் பிறகு வந்தால்... நேரம் கிடைக்கேக்க வாசிச்சு பயன் பெறுங்கோ. இது ஆங்கிலத்தில இருந்தாலும் கடினமான ஆங்கிலம் இல்லை. மெல்ல மெல்ல வாசிச்சால் விளங்கும். பொறுமையுடன் வாசிச்சு பாருங்கோ. நன்றி! >>>>>>&…
-
- 1 reply
- 1.5k views
-
-
ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்? தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை. ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம். சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது. துபாயிலிருக்கும் ஒரு நண்பர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவார். கள்ளக்குறிச்சியில் இருக்கும் இன்னொரு நண்பர் ஒவ்வ…
-
- 0 replies
- 694 views
-
-
நாவின் சுவையே வாழ்வின் சுவை" என உணர்த்தும் யுகாதியின் சிறப்பம்சமான Azadirachta indica என்ற வேம்பு தோன்றியது இந்தியாவில். Neem, Margosa, Nimba, Neem des Indes என அழைக்கப்படும் வேம்பு, இந்தியா, இலங்கை, மியான்மர், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. Azaddhirak என்ற பெர்சிய சொல்லுக்கு விலைமதிப்பற்ற மரம் என்ற பொருளாம்.. Nimba என்ற சமஸ்கிருத சொல், ஆரோக்கியம் என்ற பொருள்தரும்.. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும், சுஷ்சுருத, சாரக சம்ஹிதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள வேம்பு, ஐயாயிரம் ஆண்டுகள் பழமை மிகுந்த மரமாகும்.. மண்வளம், நீர்வளம் குறைந்த வறட்சிப் பகுதிகளிலும் நன்கு வளரும் வேப்ப மரங்களின் இலை, கனி, விதை, கிளை, பட்டை அனைத்தும் …
-
- 3 replies
- 817 views
-
-
உணவும் உடல்நலமும்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? - 3 முக்கிய டிப்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,அனாலியா லோரென்டே பதவி,பிபிசி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஆற்றல் மூலமாக குளுக்கோஸ் இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து கிடைக்கும் சக்தியே நாம் இயங்குவதற்கும் சிந்திப்பதற்கும் நம் இதயம் துடிப்பதற்கும் துணைபுரிகிறது. உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளுக்கு குளுக்கோஸ் அத்தியாவசியம். ஆனால், ரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) தேவையான அளவு இல்லையென்றால், பல்வேறு தீவிர உடல்நல…
-
- 0 replies
- 708 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், அஞ்சலி தாஸ் பதவி, பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. அவற்றில் சில, மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாலில் இருந்து தயிர் தயாரிக்கும் செயல்முறைக்கு பாக்டீரியா உதவுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியா…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். ----- இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம். ------ மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். ------- நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் ------ மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது! -------- இந்…
-
- 2 replies
- 923 views
-
-
பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்களது உணவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம். இதோ தூக்கத்திற்கான உணவுகள் பாதாம் பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தேநீர் தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில்…
-
- 0 replies
- 826 views
-
-
ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம். ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ‘ஏ.பி.என்.எம்.’ மருந்து, ரத்த சோகை உள்ள வளர் இளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய…
-
- 0 replies
- 570 views
-
-
காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதுதான் சுகாதாரம் என்றும் காது குடைவதால் சுகமாக இருக்கிறது என்றும் பலர் `பட்ஸ்' மூலம் காதை சுத்தப்படுத்துகின்றனர்.`பட்ஸ்' பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து `பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஜாஸ்மின். அவர் காதைச் சுத்தப்படுத்த தினமும் `பட்ஸ்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இரவுநேரத்தில் காட்டன் பட்ஸ் …
-
- 0 replies
- 526 views
-
-
[size=4]அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.[/size] [size=4]சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே…
-
- 1 reply
- 2.1k views
-