Jump to content

இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள்


Recommended Posts

இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள்

sleep.jpg

அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள்தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும்.

சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து. பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன்? தூக்கம் வர மாட்டேங்குதே? என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம். காதலர்கள் தங்களுக்குள் முதன் முதலில் காதலை பரிமாறிக் கொள்வது இந்த கண்களால்தான். வாய் பேசாத பல வார்த்தைகளை இந்த சின்னக் கண்கள் எளிதில் பேசி விடும். கண்களால் தூது சொல்ல மாட்டாயா? என்று காதலன் காதலியை பார்த்து ஏங்குவதும் இதனால் தான்.

ஒரு மனிதன் தன் பரிபூரணமான வாழ்நாளில் சுமார் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே செலவிடுகிறான். உடலும், மூளையும் வளர்வதற்கு, புதுப்பித்துக் கொள்வதற்கு அவகாசம் தருவது இந்த தூக்கம்தான். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தூங்குகிறது. 35 வயது வரையிலான குழந்தை 11 மணி நேரம் தூங்குகிறது. போகப்போக தூங்கும் நேரம் குறைகிறது. காரணம், மூளையானது தேவை இல்லாத விஷயங்களையும் இழுத்துப் போட்டு யோசிப்பதுதான். சிலர் பணம்… பணம்… என்று அலைந்தே தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்.

நாளடைவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை எட்டுகிறார்கள். சிலர் உழைப்பின் மீதுள்ள அதீத காதலால் 67 மணி நேரம்தான் தூங்குகிறார்கள். இந்த தூக்கம்கூட வராமல் தவிப்பவர்களும் உண்டு. தூக்கத்தை இரு வகையாக பிரிக்கிறார்கள். ரெம் மற்றும் நொன் ரெம் தான் அவை. இதில், ரெம் வகை தூக்கத்தின்போது வரும் கனவுகள் தான் பளிச்சென்று ஞாபகத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மேலும், தூக்கத்தின்போது தான் அதிகம் கனவுகள் தோன்றுகின்றனவாம். அப்போது, விழிப்புடன் இருக்கும் மூளை, தன்னிடம் இருந்து செல்லும் எல்லா தகவல் வழித்தடங்களும் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து கொள்கிறதாம். எதிலும் ஆக்டிவ் ஆக உள்ளவர்களுக்கு தான் இந்த ரெம் வகை தூக்கம் அதிக நேரம் நீடிக்குமாம். கனவுகளும் அதிகம் வருமாம். மந்தபுத்தி உள்ளவர் என்றால் இவ்வகை தூக்கம் குறைவு தானாம். அதனால் கனவுகளும் குறைவாகத்தான் வருமாம்.

தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் என்பதை எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் பெண்கள்தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கிறார்கள். மென்மையான அணுகுமுறைதான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள். மென்மையாக நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அதிகமாக ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு இந்த அழகான தூக்கம் கிடைப்பது இல்லையாம். ஆண்களிலும் சொப்ட் கேரக்டர் உள்ளவர்கள் தான் அழகாக தூங்குகிறார்கள். எக்குதப்பாக அலைபாயும் மனம் கொண்டவர்கள், எப்போதும் எதையோ சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள். என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே கண்டபடி உருண்டு புரண்டு தூங்குகிறார்களாம்.

தின்மும் படுக்கைக்கு செல்வதற்கு ஒரு ரெகுலரான நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வார விடுமுறை நாட்களில் கூட அதை தவறாமல் கடைப்பிடியுங்கள்

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு 2 மணி நேரத்துக்குள்ளாக எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம். ஏனெனில் அது உங்களுடைய இதயத் துடிப்பையும், அட்ரினலின் அளவை பூஸ்ட் செய்து விடுவதால் தூக்கம் பிடிக்காது.

படுக்கைக்கு போவதற்கு முன்பு 4 மணி நேரம் வரை மதுபானம் எதுவும் அருந்த வேண்டாம். மது குடித்த முதல் 2 முதல் 4 மணி நேரத்துக்குள் தூக்கம் தூண்டி விடப்பட்டாலும், அதன்பிறகு தூக்கத்துக்கு இடையூறு ஏற்படும்.

காபி உள்ளிட்ட உற்சாக பானங்களை குடிக்க வேண்டாம். அவைகள் ஆழ்ந்த தூக்கத்துக்கு வேட்டு வைத்து விடும் புகைப்பிடிப்பதை தவிர்த்து விடுங்கள். புகைப்பிடிப்பவர்கள் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். அப்படியே தூங்கினாலும் அடிக்கடி தூக்கத்தில் விழித்துக் கொள்வார்கள். கொஞ்சநஞ்ச தூக்கமும் நிம்மதியாக இல்லாமல் இடையூறுகள் ஏற்படும்.

லேசான நொறுக்குத் தீனி நல்லது. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது வேலைக்கு உதவாது. பிறகு தூக்கம் வராமல் தவிக்க நேரிடும். குறிப்பாக நெஞ்செரிச்சல் தொல்லை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவதே சிறந்தது.

அதிகாலையிலேயே எழுந்து கொள்ளுங்கள். பிரச்சினைகள் இருந்தால் அதுபற்றி படுக்கைக்கு செல்வதற்கு பல மணி நேரத்துக்கு முன்பாகவே யோசனை செய்யவும்.

http://www.tutyonline.net/view/75_3987/20100517130833.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நுணாவில்.

இனி நானும் இஞ்சை நடுச்சாமத்திலை வந்து மினைக்கடுறதை குறைக்கோணும். :lol:

Link to comment
Share on other sites

உண்மையிலேயே....... மனிதனுக்கு உணவு எவ்வளவு அத்தியாவசிமானதோ அந்தளவுக்கு போதுமான தூக்கம் என்பதும் அத்தியாவசியமானது!

அனைவருக்கும் மிக அவசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்... நுணா அண்ணை! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனா இணைப்பிற்கு.இதை கட்டாயம் மனிசிக்கு காட்ட வேனும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நித்திரைக்குப் போகமுதல் கோப்பி, தேநீர். கோலா, Fபன்ரா குடித்தால் நித்திரை வரவே வராது.

ஒரு கப் பாலில், ஒரு தேக்கரண்டி தேன் விட்டு குடித்துப் பாருங்கள்.... நல்ல நித்திரை வரும்.

தகவலுக்கு நன்றி நுணாவிலான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கு தூக்க வர எளிய வழி சுபா என்றொரு நாவல் ஆசிரியர் இருகாரல்லோ அவரின்ட புக்க வாங்கி... 5 நிமிசம் படிக்க ஆரம்பித்தால் போதும் :lol:

MSN-Emoticon-sleeping-in-class-074.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுனாவிலான்.

படுக்கைக்கு போவதற்கு முன்பு 4 மணி நேரம் வரை மதுபானம் எதுவும் அருந்த வேண்டாம். மது குடித்த முதல் 2 முதல் 4 மணி நேரத்துக்குள் தூக்கம் தூண்டி விடப்பட்டாலும், அதன்பிறகு தூக்கத்துக்கு இடையூறு ஏற்படும்.

மதுபானம் உள்ளே போனால்தான் நித்திரையே வருது என்ன செய்ய என்ன செய்ய :lol:

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி நுணா

எனக்கு நித்திரைக்குப் போகமுதல் கோப்பி, தேநீர். கோலா, Fபன்ரா குடித்தால் நித்திரை வரவே வராது.

ஒரு கப் பாலில், ஒரு தேக்கரண்டி தேன் விட்டு குடித்துப் பாருங்கள்.... நல்ல நித்திரை வரும்.

தகவலுக்கு நன்றி நுணாவிலான். :lol:

சிறி அண்ண என்ன இது சிறுபிள்ளைத் தனமா பாலை அதுவும் தேன் விட்டு... :unsure:

..

மதுபானம் உள்ளே போனால்தான் நித்திரையே வருது என்ன செய்ய என்ன செய்ய :lol:

கறுப்பி அண்ணாக்கா :lol: ஒரு பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள்

சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். .

உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து.

நான் இந்த வகை

அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வதுடன்

படுக்கைக்கு சென்றால்

எதை பற்றியும் சிந்திக்கவே மாட்டேன்

ஏதாவது பிரச்சினையான நேரமானாலும் கூட

தற்போது தூக்கத்துக்காக வந்திருக்கின்றேன்

தூங்கப்போகின்றேன்

மிகுதி நாளை என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

அடுத்த நிமிடம் தூக்கம் என்னை அரவணைத்துக்கொள்ளும்

ஏதாவது சடுதியான சத்தங்கள் கேட்டால் ஒழிய

காலை எனது நேரத்துக்கு தான் எழுந்திருப்பேன்.;

எனக்கு கிடைத்த சொத்து இது என்று என் மனைவியே பொறாமைப்படுவாள் சில நேரங்களில்...

பாவிகள் எவராவது கண்ணூறு பார்த்துவிடாதீர்கள :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் படுத்தவுடன் உறங்கிவிடுவேன். ( அதுசரி, 12 , 1 மணிக்குப் படுக்கிறது. பிறகு உடனே உறங்காவிட்டால் எப்படி!)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை குடிச்சிட்டு இல்லை என்னத்தை சாப்பிட்டு படுத்தாலும் எனக்கு நடிகைகள் வந்து நித்திரையை உசுப்பிவிடுகிறார்கள் என்ன செய்ய நான் :D :D :D

Link to comment
Share on other sites

என்னத்தை குடிச்சிட்டு இல்லை என்னத்தை சாப்பிட்டு படுத்தாலும் எனக்கு நடிகைகள் வந்து நித்திரையை உசுப்பிவிடுகிறார்கள் என்ன செய்ய நான் :D :D :D

அதிலையும் பெரிய கொடுமை என்னண்டால் காலையில் எழுந்து கண்டதெல்லாம் கனவுதான் என்று தெரிந்தவுடன் விரக்தியாயிருக்கிறது. :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலையும் பெரிய கொடுமை என்னண்டால் காலையில் எழுந்து கண்டதெல்லாம் கனவுதான் என்று தெரிந்தவுடன் விரக்தியாயிருக்கிறது. :D:D

அது கனவு என்று தெரிவதால் தானே

அடுத்த நாளும் நிம்மதியாக கனவு காண முடிகிறது

அதுவே நிஜம் என்றால்..

வைத்தியசாலையில் அல்லவா இருப்பீர்கள்....???

Link to comment
Share on other sites

அது கனவு என்று தெரிவதால் தானே

அடுத்த நாளும் நிம்மதியாக கனவு காண முடிகிறது

அதுவே நிஜம் என்றால்..

வைத்தியசாலையில் அல்லவா இருப்பீர்கள்....???

அது காணும் கனவிலே தங்கியுள்ளது. :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை குடிச்சிட்டு இல்லை என்னத்தை சாப்பிட்டு படுத்தாலும் எனக்கு நடிகைகள் வந்து நித்திரையை உசுப்பிவிடுகிறார்கள் என்ன செய்ய நான் :D :D :D

மாலை வேளைகளில் வைரவருக்கு வடைமாலை சாத்தி வணங்கவும்.சுகம் வரும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலை வேளைகளில் வைரவருக்கு வடைமாலை சாத்தி வணங்கவும்.சுகம் வரும்......

வடை மாலை என்றால் ஓட்டை போட்ட வடையா அல்லது ஓட்டை போடாத வடையா கு.சா அண்ணை :D :D :D

[உழுந்து வடை,.பருப்பு வடை ,கீரை வடை, ]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடை மாலை என்றால் ஓட்டை போட்ட வடையா அல்லது ஓட்டை போடாத வடையா கு.சா அண்ணை :D :D :)

[உழுந்து வடை,.பருப்பு வடை ,கீரை வடை, ]

ஓட்டை போட்ட உளுந்து வடை தான்.... முனிவர் ஜீ. :D

719VM14.JPGvairavar+4+vadai+maalai.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! வைரவரும் , படையலும் அற்புதம். பழங்கள் படைக்க வில்லையா! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! வைரவரும் , படையலும் அற்புதம். பழங்கள் படைக்க வில்லையா! :lol:

அவர் இங்கே படம் போட்டது இவற்றைக்காட்ட அல்ல அல்ல அல்ல...... :rolleyes::lol:

Link to comment
Share on other sites

எனது நண்பன் ஒருவனுக்கும் உந்தப் பிரட்சனை, ஒரு நாள் சொன்னான் .... "படுக்கைக்கு போய் லஷ்சுமி, சரஸ்வதி, உமாதேவி எல்லோரையும் வரிசைக்கு கூப்பிட்டாலும் ... ம்ம்கூம்ம் நித்திரை வர மறுக்குதாம்" ... பாவம்! 36_1_6.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இங்கே படம் போட்டது இவற்றைக்காட்ட அல்ல அல்ல அல்ல...... :lol::lol:

வேறு எதற்காக என்று சொன்னால் தானே.... சுவிக்கு விளங்கும், விசுகு. :rolleyes:

எனது நண்பன் ஒருவனுக்கும் உந்தப் பிரட்சனை, ஒரு நாள் சொன்னான் .... "படுக்கைக்கு போய் லஷ்சுமி, சரஸ்வதி, உமாதேவி எல்லோரையும் வரிசைக்கு கூப்பிட்டாலும் ... ம்ம்கூம்ம் நித்திரை வர மறுக்குதாம்" ... பாவம்! 36_1_6.gif

உங்களது நண்பர் படுக்கைக்குப் போகும் போது.... தனது தாயையோ, சகோதரியையோ, மகளையோ கூப்பிட்டிருந்தால் நித்திரை வந்திருக்கும்.

sleep-anim-male-sleep-sleeping-smiley-emoticon-000368-large_105207849.gif

.

Link to comment
Share on other sites

எனக்கு இப்பவெல்லாம் வேலையால் வந்தவுடன் இரவு 7 மணிக்கெல்லாம் நித்தா வருது..! வேலை அழுத்தம் என நினைக்கிறேன். :rolleyes:

பிறகு நடுச்சாமத்தில எழும்பி குந்தியிருக்க வேண்டியதா இருக்கு..! :) இதற்கு யாரிடமாவது தீர்வு உள்ளதா? :lol:

பி.கு: வயசுக்கோளாறு என்று சொல்லித் தப்ப நினைக்க வேண்டாம்..!

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நல்ல தூக்கம் வேண்டுமாயின் பாதி நித்திரை குளீசை எடுங்கள்.

நிம்மதியான தூக்கம் வேண்டுமாயின் 10,15 மாத்திரைகள் ஒரேயடியாய் எடுங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

இரவு நல்ல தூக்கம் வேண்டுமாயின் பாதி நித்திரை குளீசை எடுங்கள்.

நிம்மதியான தூக்கம் வேண்டுமாயின் 10,15 மாத்திரைகள் ஒரேயடியாய் எடுங்கள் :lol:

சரிதான்.. இயற்கை முறையில் நித்திரைக்கு ஐடியா கேட்டால் இயற்கை எய்திறதுக்கு ஐடியா குடுக்கிறீங்கள்..! :lol: நல்ல எண்ணம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

எனக்கு இப்பவெல்லாம் வேலையால் வந்தவுடன் இரவு 7 மணிக்கெல்லாம் நித்தா வருது..! வேலை அழுத்தம் என நினைக்கிறேன். :rolleyes:

பிறகு நடுச்சாமத்தில எழும்பி குந்தியிருக்க வேண்டியதா இருக்கு..! :lol: இதற்கு யாரிடமாவது தீர்வு உள்ளதா? :lol:

[

வேலையால் வந்தவுடன் விரும்பிய ஒரு பொழுதுபோக்கில் ஈடுபட்டால் நேரம் போவதும் தெரியாது. மனதுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அல்லது உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வது நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.