நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
[size=4]உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால், உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாமல் ஏற்படுவதே நீரிழிவு நோய்.[/size] [size=4]இதை குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது. 2009 - 2013 வரை, டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது என்பது மையக்கருத்தாக உள்ளது.[/size] [size=4]2 வகை: [/size] [size=4]நீரிழிவு நோயில், இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வக…
-
- 0 replies
- 578 views
-
-
இன்று உலக நீரிழிவு நோய் தினமாகையால் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் மற்றும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும். தவிர்க்க வேண்டியவை: அ. சர்க்கரை, தேன், வெல்லம், குளுக்கோஸ், எலக்ட்ரால் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் முதலிய இனிப்பு வகைகளையும் பேரீச்சை, காய்ந்த திராட்சை, போன்ற உலர்ந்த பழங்களையும் தவிர்க்கவும். ஆ. கேழ்வரகு, கம்பு, கோதுமை, பார்லி, அரிசி முதலியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சி, களி மற்றும் கூழ் வகைகள். இ. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், திராட்சை. ஈ. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அறவே கூடாது. …
-
- 10 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 276 views
-
-
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். …
-
- 0 replies
- 451 views
-
-
இதோ மீண்டும் இளமையை பெற்றிட பணத்தை மிகுதி படுத்த தலை டைக்கு டாட்டா சொல்ல............ இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும் இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் முடி உதிர்வதைத் தடுக்கவும் இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எட…
-
- 0 replies
- 588 views
-
-
வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti) இன்றைய பல் மருத்துவ டிப்ஸ்... சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,ஒயின்,அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும். உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும்,அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலி…
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்றைய அம்மாக்களுக்கு பொறுமை குறைவு. எல்லாம் அவசரம். ஏதோ கடமைக்கு பிள்ளை வளர்க்கிற மனப்பான்மை. ஆனால் அவை பிள்ளைகளுக்கு பல வழிகளில் ஆபத்தாக முடிகின்றன. முதலில் அம்மாக்களோ அப்பாக்களோ.. தாங்கள் சின்னனா இருக்கேக்க என்னென்னத்தை அசெளகரியமா அனுபவிச்சாங்களோ.. அதை உணர்ந்து கொள்ளனும். பிள்ளைகள் அதனை அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக.. பிள்ளைகளை தூக்கும் முறைமையில் இருந்து அரவணைக்கும் பாங்கு.. கதை பேசும் இனிமை.. பொறுமை.. அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து குழந்தையாகவே ஆகிடும் மனநிலை.. என்று பல வழிகளில் தம்மை அவர்கள் முன்னேற்றிக் கொள்ளனும். அப்பாக்கள் அம்மாக்கள் குழந்தைகளின் முன்னால் குடிப்பது.. புகைப்பிடிப்பது.. சண்டை போடுவது.. கணணியில் அதிகம் மிணக்கடுவது.. குழந்தைகள…
-
- 2 replies
- 810 views
-
-
http://www.youtube.com/watch?v=4rGSlSwjssM இவர் பல கிலோ நிறையுள்ள கற்களை... தலையில் வைத்து ஒரு நாளைக்கு எத்தனை தரம், சுமக்கின்றாரோ... தெரியவில்லை. ஆனால்... அத்தனை, பாரமும்... எமது, முள்ளந்தண்டை பாதிக்கும் என நினைக்கின்றேன். குறிப்பிட்ட சில வருடங்களில், இவரால்... முற்றாக வேலை செய்ய முடியாமல் போகலாம். பாரம் சுமக்கின்ற, தள்ளு வண்டிலைக் கூட... இவரது முதலாளியால்.. வாங்கிக் கொடுக்க முடியாதுள்ளதா? அதில் இன்னும் அதிகமான கற்களை ஏற்ற முடிவதுடன், அவரது உடல் நலமும் பாதிக்காமல் இருக்கும்.
-
- 1 reply
- 514 views
-
-
மனித குலத்துக்கு இயற்கை தந்த சுத்தமான சுவையான பானம் தான் இளநீர். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. *இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். *ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக்கும், விந்துவை அதிகரிக்கும், மேக நோய்களைக் குணப்படுத்தும், ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர்- உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது. *இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது, இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளு…
-
- 0 replies
- 559 views
-
-
செரிமான கோளாறை போக்கும் புளி நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத…
-
- 0 replies
- 3.2k views
-
-
இயற்கை மருத்துவம்-மஞ்சள் தமிழ் உணவிலேயே மிக முக்கியமாக சேர்க்கப்படும் −ம்மஞ்சள், சமையல் பொருளாகவும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. நோய் பரவாமல் தடுக்கும் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் உலகிலே இலங்கையில் மிக அதிகமாக வளர்கிறது வகைகள்/பயன்கள் மூன்று வகை முதல் வகை முகத்திற்கு போடும் மஞ்சள். −தற்கு முட்டா மஞ்சள் என்று பெயர். உருண்டையாக −ருக்கும். பயன் முகத்திற்கு பூசும் மஞ்சள், முகத்தில் முடி வளர்வதை தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பை வசீகரத்தைத் தருகிறது. மஞ்சளை அரைத்து −ரவில் பூசி காலையில் கழுவ தேவையில்லாத முடி நீங்கும். −ரண்டாவது வகை கஸ்தூரி மஞ்சள் வில்லை, வில்லையாக தட்டையாக −ருக்கு…
-
- 22 replies
- 20.7k views
-
-
எல்லாவற்றுக்கும் பெண்கள் இப்போது இயற்கையை நாடுகிறார்கள். அழகியல் விஷயத்தில் இயற்கையை அதிகமாகவே சார்ந்திருக்க தொடங்கிவிட்டார்கள். பக்கவிளைவுகள் இல்லாத அழகிற்கு, இயற்கை மூலிகைகளில் உற்பத்தி செய்யும் அழகு சாதனப் பொருட்களே சிறந்தது என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். ரசாயனம் கலந்த பொருட்கள் கூந்தலுக்கு பயன்படுத்தும்போது, காலப் போக்கில் முடி பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் வறண்டு போகுதல், இறுதிப் பகுதியில் அறுந்து போகுதல், பிளந்து விடுதல் போன்றவைகளோடு கூந்தலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அத்தகைய கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வாக பெண்கள் இப்போது 'ஆர்கானிக் கரோட்டின் ட்ரீட்மென்ட்டை' நம்புகிறார்கள். இயற்கை மூலிகைகளில் இருந்து ப…
-
- 0 replies
- 496 views
-
-
-
எந்த உயிரினதுக்குமே... இயற்கை வழி "கரு" உருவாதலே சால சிறந்தது ! எல்லாத்தையும் சுலபமா கஷ்டம் இல்லாம, நோகாம நோம்பு கும்பிடனும்னு இன்னைக்கு எல்லோரும் செயற்கை கருவூட்டல் மூலம் சினை ஊசிய போட்டு மாட்டை சீரழிக்கிறோம் ! கண்ட கண்ட மாட்டு விந்து மூலம் உருவாகுற கரு நாளைக்கு எந்த குணத்துல வளரும்? அதுல பால் கறக்கும்போது பால் தூய்மையானதா இருக்குமா இல்ல கலப்பின இரத்தம் சேர்ந்ததா இருக்குமா? குடிக்கிற நம்ம மூளை தெளிவா இருக்குமா? மனுஷனோ மிருகமோ இனச்சேர்க்கை என்பது இயற்கை வழி மூலம் தான் அமையனும். அது தான் உடலுக்கும் மனதுக்கும் சிறப்பு. நம்மை விட அறிவு குறைவு என்பதால் உணர்ச்சிகள் அதற்கு இல்லாமல் போய்விடுமா என்ன? உணர்வுகள் என்பது எல்லோருக்கும் ஒன்னுதான். செயற்கை கருவூட்டலை…
-
- 0 replies
- 416 views
-
-
இரண்டு ஆண்டுகள் முன்பு பிரித்தானியாவில் நடந்த சம்பவம் இது. பிரிட்டிஷ் இராணுவத்தில் கப்ரனாகப் பதவி வகித்த இளம்பெண் நைய்மா முகமட்டிற்கு இரண்டாம் தடவையும் மார்பகப் புற்று நோய் வந்து விடுகிறது. அவரது மருத்துவர்கள் தமது முயற்சிகளின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில், நைய்மா இணையத் தேடலில் மாற்று மருத்துவ முறைகளைத் தேட ஆரம்பிக்கிறார். அமெரிக்காவில் ஒரு மாற்று மருத்துவ நிலையம் நடத்தும் ரொபர்ட் யங் என்பவருடன் தொடர்பை ஏற்படுத்தி, தனது புற்று நோய்க்கு மாற்று மருத்துவம் செய்ய ஆரம்பிக்கிறார் நைமா. உடலில் அமிலத் தன்மையைக் குறைத்து காரத் தன்மையை அதிகரித்தால் சகல நோய்களும் குணமாகும் என்று தானும் நம்பி, அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் விற்றுப் பெரும் காசு பார்ப்பவர் றொபர்ட் யங்…
-
- 24 replies
- 3.3k views
-
-
இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள் #HealthTips இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டு…
-
- 0 replies
- 835 views
-
-
ஆரோக்கியமான வாழ்வு . இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்! தட்டையான வயிற்றைப் பெற யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுப் பொருட்களால்இ இளமையிலேயே பானை போன்று தொப்பை வர ஆரம்பித்துஇ திருமணம் என்று வரும் போது 'அங்கிள்' போன்று காட்சியளிக்க நேரிடுகிறது. வெந்நீருடன் தேன் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் வாருங்கள்! இப்படி கண்ட கண்ட உணவுப் பொருட்களால் வந்த தொப்பையை குறைக்க ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பதோடுஇ ஒருசில செயல்களை அன்றாடம் பின்பற்றி வந்தால்இ விரைவில் பானை போன்ற தொப்பையைக் குறைத்துவிடலாம். இங்கு இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்…
-
- 21 replies
- 8.3k views
-
-
Instant Way To Lose Stomach Bulge A bulky tummy looks weird and that is highly true, anyone having bulge around stomach always want to get it out of body as early as possible. So if you too are finding ways to wash out this unwanted fat from your stomach area then here is the answer of you misery. Guys and Girls, if you have some money and you can spend some money for shaping up you stomach then here is the answer which will give you result in no time. Undoubtedly you need to spend some money over it but that’s too true you don’t need to wait for result and there is no long time exercise, wait and so on. Tuck Surgery, is the way by having this surgery you can hav…
-
- 1 reply
- 575 views
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர்’ (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான ‘டிரைகுளோசன்’ ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட…
-
- 3 replies
- 551 views
-
-
இரண்டு கிளாஸ்க்கு மேல் தினமும் பால் குடித்தால் சீக்கிரமே “பால்” – லண்டன் ஆய்வில் ”திடுக்” தகவல். லண்டன்: எங்குபார்த்தாலும் பால் உடம்புக்கு நல்லது என்ற கூற்று நிலவி வருகின்ற நிலையில் தினமும் இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் முடிவினை கண்டறிந்தவர்கள் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான குழுவினர் ஆவார்கள். இந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் பால் குடிப்பதால் எலும்புகளுக்கு கிடைக்கும் நன்மை சிறிதளவுதான். ஆனால், பாதிப்புகளோ கடுமையானது என்று தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளாக ஆய்வு: அவர்கள் இதுகுறித்து, "பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து…
-
- 23 replies
- 7.2k views
-
-
உப்பு, காரமில்லாத உணவு எப்படி பலருக்கும் தொண்டைக்குள் இறங்க மறுக்குமோ, அப்படித்தான் புளிப்புச் சுவை இல்லாத உணவும். இன்னும் சொல்லப் போனால் புளிப்பு சற்றே தூக்கலாக இருந்தால் தான் பலருக்கும் முழுமையாக சாப்பிட்ட திருப்தியே வரும்.புளியிலிருந்து பெரிதாக நமக்கு சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. அது சமையலுக்கு ருசி கூட்டுகிற தவிர்க்க முடியாத ஒரு பொருள் அவ்வளவுதான். வெறும் புளியைக் கரைத்துக் கொதிக்க வைத்து, கொஞ்சம் மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டுச் செய்கிற ரசம் பசியோடு இருக்கிற பல நேரங்களில் அமிர்தமாக ருசிக்கும். வெறும் புளித்தண்ணீர்தான் ஆனாலும், அதற்கு அப்படியோர் சுவை. இன்னும் அன்றாடச் சமையலில் சாம்பார், வத்தக் குழம்பு, கூட்டு எ…
-
- 0 replies
- 501 views
-
-
இரத்த அழுத்தத்திற்கு முதல் எதிரி சமையல் உப்பு [23 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] -கு.கணேசன்- உயர் இரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ- பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம் , இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ முதல் 140/90 மி.மீ வரை இரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். இந்நோ…
-
- 1 reply
- 3.6k views
-
-
இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி ( Celery )..! இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது. காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் …
-
- 3 replies
- 1.2k views
-
-
மனித மூளை குறுக்குவெட்டு முகம். மருத்துவ உலகம் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தது போல இரத்த அழுத்தம் (blood pressure - BP) இதயம் அல்லது சிறுநீரகம் அல்லது இரத்தக் குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளின் விளைவு என்பதற்கு மேலாக JAM-1 என்று குறியீட்டுப் பெயரளிக்கப்படுள்ள புரத மூலக்கூறு மூளையின் இரத்தக் குழாய்களில் இருந்து ஏற்படுத்தும் விளைவுகளால் ஒக்சிசன் அளவு மூளையில் குறைவடைவதாலும் இரத்த அழுத்தம் மாறுபடுவது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதுடன் இது இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சையில் புதிய அணுகுமுறைகளுக்கு வித்திட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..! Blood pressure 'is in the brain' The c…
-
- 0 replies
- 1k views
-
-
இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் என்றால் என்ன…?உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது…? பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன. இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) …
-
- 1 reply
- 1.5k views
-