நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பாம்பெண்ணை மருத்துவம்! 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார். கோவிட் 19 இற்கு தீர்வினைத் தேடி மருத்துவ விஞ்ஞானம் உழைத்துக் கொண…
-
- 15 replies
- 2.1k views
-
-
கொரோனாவை கட்டுப்படுத்த மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் காரத்தன்மை உள்ள உணவுகள் வைரஸ் உடலுக்குள் வாழ்வதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்த உலகையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நுண்ணுயிரி! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி, தொற்றை ஏற்படுத்தும் இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க தற்போது சமூக விலகலிலும் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்திவரும் நாம் இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். "கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை எதிர்த்துப் போராட சத்து மிகுந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். …
-
- 0 replies
- 505 views
-
-
சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்! மின்னம்பலம் சத்குரு காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை... யோகா என்ற வார்த்தைக்கு "உங்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்" என்று அர்த்தம். யோகா என்ற வார்த்தை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அது எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அது யோகாவாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சிக…
-
- 0 replies
- 538 views
-
-
பிராண வாயுவை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எளிய யோக - வர்மப் பயிற்சிகள்! மு.ஹரி காமராஜ் யோகா பூரக, ரேசக, கும்பக, தம்பன எனும் நால்வகை சுவாசப் படி நிலைகளில் கால நிர்ணயத்தோடு செய்யப்படும் சுவாசப் பயிற்சியால் பிராண சக்தி பெருகும். இதனால் நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு உயிர் ஆதாரம் என்றால், உயிருக்குப் பிராணனே ஆதாரம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்று அடிப்படை உடல் காரணிகளில் வாதமே ஆன்மாவையும் இயக்கக் கூடியது. நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பங்கு கொண்ட ஆக்சிஜன் நாசியில் தொடங்கி உள்ளே சென்று நலம் பயக்கிறது. பிறகு வெளியேறும் ஆக்சிஜன் நாபியில் எழுந்து நுரையீரல் கடந்து விஷ்ணு பாதம் எனும் வெட்டவெள…
-
- 0 replies
- 562 views
-
-
கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை; முந்தைய இரண்டையும் விட இது ஆபத்தானதா? க.சுபகுணம் Mucormycosis ( AP Photo/Amit Sharma ) சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை பாதிப்புகள் இந்தியாவில் தீவிரமடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது மீண்டும் மஞ்சள் பூஞ்சை என்று மற்றுமொரு பூஞ்சை பாதிப்பு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. இந்த மஞ்சள் தொற்று, கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். …
-
- 0 replies
- 218 views
-
-
இந்தியாவின் மாற்றமடைந்த கொரனா வைரஸ்: கேள்விகளும் பதில்களும் முன்கதை விகாரமடைந்த நவீன கொரனா வைரசுகள் பற்றி ஒரு கட்டுரையை முதலில் எழுதிய போது உலகில் மூன்று பிரதான நவீன கொரனா வைரஸ் விகாரிகள் காணப்பட்டன. பிரிட்டன் விகாரி (B.1.1.7), பிரேசில் விகாரி (P1), தென்னாபிரிக்க விகாரி (B1.351) ஆகிய அந்த ஒவ்வொரு வைரசு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு இருந்தது. பிரேசில், பிரிட்டன் வைரசுகள் ஆரம்பத்தில் பரவிய கொரனா வைரசை விட வேகமாகத் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன நேரடியாக இது நோய்த்தீவிரத்தை அதிகரிக்கா விட்டாலும், மருத்துவ சேவைகள் மீது அதிக சுமைகளை ஏற்படுத்துவதன் மூலம் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருந்தன. தென்னாபிரிக்க விகாரிக்கு, தடுப்பூசிகளினால் உருவாகும் நோய்ப்பாதுகாப்பி…
-
- 4 replies
- 940 views
-
-
ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க? - Dr. K. முருகானந்தம் Sponsored content சிறுநீரகக் கல் வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள். ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வியர்வை மற்றும் மூச்சு மூலம் நிறைய நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் உடலின் கழிவுகள் மற்றும் தேவையற்ற தாது உப்புகளை வெளியேற்றத் தேவையான நீர் இல்லாமல் சிறுநீரகம் கஷ்டப்படுகிறது. தாது உப்புகள் சிறுநீர…
-
- 0 replies
- 386 views
-
-
பூஞ்சணங்கள் தரும் கிலி: என்ன நடக்கிறது இந்தியாவில்? கோவிட் தொற்றுக்களின் சமகால அல்லது பின்விளைவாக கறுப்புப் பூஞ்சணமும் (தற்போது வெள்ளைப் பூஞ்சணமும்) பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. இவற்றுள் கறுப்புப் பூஞ்சணத்தின் தொற்றுக் காரணமாக இளம் வயதினர் பலர் கண்களை இழக்க வேண்டிய சத்திர சிகிச்சைக்குட்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கறுப்புப் பூஞ்சணம் என்பது என்ன? எங்கள் சூழலில் அழுகல் வளரிகளாக ஏராளமான பூஞ்சண (fungi) இனங்கள் வளர்கின்றன. மண்ணிலும், நீரிலும் வளரும் இந்தப் பூஞ்சண இனங்களில் மிகப் பெரும்பாலானவை மனிதர்களிலோ விலங்குகளிலோ நோய்களை உருவாக்குவதில்லை. தினசரி நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே இந்தப் பூஞ்சணங்களின் விதைகளுக்கொப்பான மகரந்தங்கள் எங்கள் உடலினுள் சே…
-
- 2 replies
- 659 views
-
-
-
- 0 replies
- 481 views
-
-
மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என்று இத்தகைய பாதிப்புகள் குறித்த முதல் சர்வதேச ஆய்வில் தெரியவந்தது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. …
-
- 0 replies
- 542 views
-
-
சிகரெட் பிடிப்பதை விடுங்கள்,,, பாலகுமாரனின் அனுபவ பாடம்...! இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன். நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும் மின்னம்பலம் அ.குமரேசன் கொரோனா முதல் அலை ஏற்படுத்திய காயங்களிலிருந்து வடிந்த குருதியின் ஈரம் உலர்வதற்குள்ளாக இரண்டாம் அலை குதறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை கூரிய பற்களோடு வர இருப்பதையும், சில நாடுகளில் நான்காம் அலை தன் நகங்களைக் கூர் தீட்டிக்கொண்டிருப்பதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தேவை உணரப்படுகிறது. விளையாட்டாகவோ வீம்பாகவோ பொதுமுடக்க விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. வழிபாடு, கொண்டாட்டம் என எந்த வகையிலும் மீறுகிறவர்கள் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவேதான் அணுகுமுறைகளில் மாற்று…
-
- 6 replies
- 892 views
-
-
தடுப்பூசியைத் தவிர்த்து, கொரோனாவிடம் வீழத் தயாராகிறோமா? மே 11, 2021 –ஆதி வள்ளியப்பன் மனித குல வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இயற்கைச் சீற்றங்கள், போர்கள் உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துகளை எதிர்கொண்டிருந்தாலும், தொடர்ந்து வாழ்வதற்கான யத்தனங்களை மனித குலம் மேற்கொண்டபடியே இருந்துவந்திருக்கிறது. நோயால் மனித குலம் எத்தனை கோடிப் பேரை இழந்தது என்பதை வரலாற்றின் ஓரிரு பக்கங்களைப் புரட்டினாலேயே தெரிந்துகொள்ளலாம். வட அமெரிக்கா-தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் ஐரோப்பியக் காலனியாதிக்கமும் குடியேற்றமும் நிகழ்ந்தபோது, புதிய தொற்றுநோய்களால் பல கோடி உள்ளூர் இனக்குழுக்கள்/பழங்குடிகள் பலியாகினர். அதற்குப் பிறகு அந்த இனக்குழுக்கள்/பழங்குடிகளின் மக்கள்தொகை ப…
-
- 0 replies
- 357 views
-
-
கொரோனா காலத்தில் அசைவ உணவு... நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மா.அருந்ததி Biriyani கொரோனா காலத்தில் அசைவ உணவு உண்பவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எனப் பல சிக்கல்கள் மக்களையும் அரசையும் வதைக்கின்றன. பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசியின் மூலம் கொரோனா வைரஸிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் தவிக்கின்றனர். இதுமட்டுமன்றி தங்களின் உணவுப் பழக்கத்தின் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும் பாதிப்பை குறைக்க முயல்கின்றனர். இந்நிலையில் அசைவ உணவு குறித்து மக்களிடையே சில சந்தேகங்க…
-
- 0 replies
- 384 views
-
-
இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று நாமே மருத்துவராகி அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வோம். அதே சமயம் கல்லீரல் நம் உடலில் என்ன வேலைகளைச் செய்கிறது என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. சமூகத்தில் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இருக்கும் அளவுக்குக்கூட கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் கிடையாது. கல்லீரல் pixabay ``இதயத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் அறிகுறிகள் வெளியே தெரிந்துவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தில் 10 சதவிகிதம் தடைபட்டால்கூட நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். ஆனால் கல்லீரலில் மிகுதியான பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்" என்கிறார் கல்லீரல் மாற…
-
- 1 reply
- 540 views
-
-
பழைய கஞ்சி போதும்.! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!! நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பழைய சோறுதான் நம் நிலத்தின் பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது எனக் கண்டறிந்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் உஷா ஆண்டனி. தன்னுடைய ஆய்வுப்படிப்புக்காக இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘பழைய சாதம்’. இதுகுறித்து பல ஆண்டுகள் ஆய்வுசெய்து சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளார் இவர். சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறுநாள் காலையில் அது பழைய சோறு. கிராமங்களில் அந்தக் காலத்தில் எப்போதுமே மாலையில்தான் சோறு வடிப்பார்கள். மின்சாரம் இல்லாமல் கூரை வீடுகள் அதிகம் இருக்கும். எளிதில் தீப…
-
- 13 replies
- 2k views
-
-
உடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா? - ஊட்டச்சத்து நிபுணர் பதில் பட மூலாதாரம், GETTY IMAGES டயட் – சமகாலத்தில் பெரிதும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தை என்று சொல்லலாம். உடல் எடையை குறைக்க டயட்டை பின்பற்ற வேண்டும். டயட் என்றால் உணவு உட்கொள்வதை குறைத்து கொள்வது என்ற பரவலான எண்ணம் உள்ளது. இது முற்றிலும் தவறு என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மினாக்ஷி பஜாஜ். உடல் எடை குறைப்பது, சத்தான உணவை எடுத்துக் கொள்வது குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். கேள்வி: ஒரு வாரத்தில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம். உடற்பயிற்சி தேவையில்லை. உணவு கட்டுப்பாடுகள் தேவையில்லை என பல விளம்பரங்களை சமூக ஊடகங்களிலும் தொலைக்காட…
-
- 0 replies
- 607 views
-
-
துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் தீரும் பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிற…
-
- 28 replies
- 3k views
- 1 follower
-
-
பெண்களைக் குறி வைக்கும் 'பிரெயின் அட்டாக்' - டாக்டர் வி. சதீஷ் குமார் Sponsored content பிரெயின் அட்டாக் மூளைக்குச் செல்கின்ற ரத்த நாளங்களில் ஏற்படும் தடை மற்றும் மூளைக்குள் ஏற்படும் ரத்தக்கட்டுதான் ஸ்ட்ரோக் / பக்கவாதத்தை உண்டாக்குகிறது. இதனால் மூளைச் செல்கள் பிராண வாயுவின்றி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றன. அந்தப் பெண்மணிக்கு வயது 34. கணவர், 2 குழந்தைகள், ஐ.டி.யில் வேலை என்று அமைதியான வாழ்வு. காலை 8 மணி, சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தவரின் வலது பக்க கை மற்றும் கால் திடீரென செயலிழந்துபோக, கிச்சனில் நிலைகுழைந்து விழுந்தார். இனி அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு முக்கியம், காரணம் அவருக்கு வந்திருப்பது 'பிரெயின் அட்டாக் (Brain At…
-
- 0 replies
- 400 views
-
-
-
சிறுநீரகங்களை கவனியுங்கள் இந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்! ரத்த அழுத்தம் அதிகரிப்பது சிறுநீரகங்களுக்கு கேடு விளைவிக்கும். ரத்த அழுத்த அளவானது 140-க்கு அதிகமாகவும், 90-க்கு குறைவாகவும் இருப்பது சிறுநீரக செயலிழப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது. மதுப்பழக்கமும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க…
-
- 1 reply
- 543 views
-
-
இன்று உலக தூக்க தினம்: நன்றாக தூங்கினால் நலமாக வாழலாம் இன்று உலக தூக்கம் தினம்.13.03.2021 ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த தூக்கம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக நாடுகளில் இன்று தூக்கம் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர், மற்றவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இரவில் குறட்டை விடுவதாக உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்களில் 4–ல் ஒருவரும், பெண்களில் 9–ல் ஒருவரும் குறட்டை மற்றும் தூக்கமின்மை பிரச்சினையில் அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது. குறட்டை விட்டு மற்றவர்களை நோகடிப்பவர்களில் 90 சதவீதம் பேர் அதற்குரிய சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்வதில்லை. நிறைய பேர் குறட்டையை ஒரு …
-
- 6 replies
- 812 views
-
-
சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு உடற்பயிற்சி தேவை? நீங்கள் ஓர் ஆரோக்கியமான இதயத்தை பெற விரும்பினால், உடல் செயல்பாடு மற்றும் இருதய நோய்க்கு இடையிலான தொடர்புகள் பற்றிய ஊக்கமளிக்கும் புதிய ஆய்வின்படி, அதிக உடற்பயிற்சி மிகவும் சிறந்தது என ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது. அரிதாக நகரும் நபர்களைக் காட்டிலும் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று அது கண்டறிந்துள்ளது. இந்த உடற்பயிற்சியில் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஜாகிங் அல்லது வாரத்திற்கு பல மணிநேரங்கள் நடைபயிற்சி தேவைப்படுகிறதா என்பதைப் பார்ப்போம். 90,000-க்கும் அதிகமான பெரியவர்களிடமிருந்து உடற்பயிற்சி குறித்த ப…
-
- 0 replies
- 919 views
-
-
ஆபத்தான உணவாக இடியப்பங்கள்.! இடியப்பம் இலங்கையில் பிரபலமாக விற்பனையாகும் அல்லது வீட்டில் செய்யப்படும், எம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த ஆரோக்கியமான காலை, மாலை உணவாகும். சுமார் இருபது வருடங்கள் முன் பிரம்பு மற்றும் பனையோலை தட்டுகளில் அவிக்கப்படும் இடியப்பம் உண்மையிலேயே ஓர் பாதுகாப்பான உணவாக இருந்தது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் தட்டுகளின் வருகையுடன் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அண்மையில் கொழும்பில் உள்ள ஓர் சகோதர மொழி பொறியியலாளரான நண்பர் ஒருவர் இடியப்பம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையில் அதிர்ச்சி தரக்கூடியனவாக இருந்தன. தினசரி மூன்று வேளை கூட இடியப்பம் விரும்பி உண்ணக்கூடிய அவரின் உறவினர் ஒருவருக்கு வந்த புற்றுநோய்க்கு, ப…
-
- 10 replies
- 2k views
-
-
நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது. பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும். தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள். * தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. * நடைப்பயிற்சி இரத்த …
-
- 42 replies
- 4.8k views
- 2 followers
-