நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். நவ நாகரீகம் என்கிற பெயரில் இதையெல்லாமல் மறந்ததன் விளைவால் தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்…
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
நிறத்தில் வெள்ளையான உப்பும், சீனியும் குணத்தில் நஞ்சாகின்றது: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு. எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
சகல நோய்களும் தீர வர்மப்புள்ளி குறிநிலை ஜீவசக்தி வாய்க்கால் நீட்டல் பயிற்சி Energy Meridian Stretches for Cure All Diseases மனித உடம்பில் சக்தி(‘Qi’-Energy) 14 வாய்க்கால்களில் சதா ஓடியவண்ணம் இருக்கும். அப்படி ஓடியவண்ணம் இருந்தால் உடம்பில் எது நோயும் இருக்காது. இந்த வாய்க்கால்களில் எங்காவது தடை ஏற்பட்டால் தடை ஏற்பட்ட இடத்திற்கு மேற்பக்கத்தில் சக்தி கூடியும்(Engery Excess) தடை இருக்கும் இடத்திற்து கீழ்ப்பக்கத்தில் சக்தி குறைந்தும்(Energy Deficiency) இருக்கும். இதனால் பலவித நோய்களும் தோன்றி தடை நீடிக்குமானால் நோயும் படிப்படியாக கூடும். இந்தத்தடையை நீக்கினால் சக்தி சமனப்பட்டு நோய்கள் நீங்கிவிடும் என்பது எமது மூதாதையர்களாகிய சித்தர்களும் அகத்திமாமுனிவர் போன்ற வைத்தி…
-
- 0 replies
- 1.7k views
-
-
இருப்பது தனித்தென்றால் இதயவியாதிகள் அதிகமா? ஏஜேஜி- 62 வயதை சராசரியாகக் கொண்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக 3267 பேரின் உடல் நிலை பற்றி ஆய்வொன்று நடாத்தியபோது, சில சுவாரஸ்ஸியமான, அதே சமயம் திடுக்கிட வைக்கும் தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், சமூகத்தோடு கலந்து பழக விரும்பாது, தனித்து வாழ்பவர்களுக்கு, இருதய வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கின்றார்கள். தனித்து இருப்பது அவ்வளவு சங்கடமான விடயமா? தனித்து வாழ்பவர்கள், உடல்ரீதியாகக் குறைவான அசைவுகளைக் கொண்டவர்களாகவும், அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருப்பதுண்டு. இது இருதய வியாதிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது என்கிறார்கள் மருத்துவர்கள். பலருடனும…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஒற்றைத்தலைவலி - மைகிறேன் கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு.. கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு: நாற்பத்தைந்து வயதுடைய பெண்ணொருவர் கடந்த 8 வருடங்களாக கடுமையான தலைவலியால் துன்பப்பட்டடிருந்தார். இவருக்கு கிழமையில் 2 – 3 தடவை இந்த தலைவலி. 24 – 36 மணித்தியாலங்களுக்கு நீடித்திருந்தது. தலையிடி தரும் நோவற்ற நாட்கள் இவருக்கு இருந்ததில்லை. வழமையான நோவு நீக்கிகள் (பெயின் கில்லர்) எதுவித நீண்ட நாள் பலனையுமு; தரவில்லை. சில சமயங்களில் தாங்க முடியாத நோவினால், நாள் முழுவதும் கட்டிலில் படுத்தேயிருக்க நேர்ந்தது. இவரின் உணவு பெரும்பாலும் காலையில் பாணும் மதிய உணவில் சோறும் இரவில் ( மாப்பொருளாலான) பிட்டும் அமைந்திருந்தன. நாளில் பல தடவை தேநீர், க…
-
- 0 replies
- 1.7k views
-
-
பரம்பரை காரணமாகவும் புற்று நோய் வரலாம் புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயல்ல என்று மருத்துவ உலகம் இன்று நிரூபித்து வருகின்ற தருணத்தில், மேலைத்தேய நாட்டவர்களைப் போல் தெற்காசியாவில் வாழ்பவர்களுக்கு பெருங்குடலில் புற்று நோய் வருவதில்லை என்றும், ஆனால் இன்றைக்கு மாறிவிட்ட உணவு பழக்கத்தாலும் இவ்வகையான புற்று நோய் வரக்கூடும் என்று எச்ரிக்கை செய்கிறார் சென்னையில் பணியாற்றி வரும் புற்று நோய் சத்திர சிகிச் சை நிபுணர் டொக்டர் எம். பி. விஸ்வநாதன். சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றி வரும் இவரை சந்தித்து புற்று நோய் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு கேட்டோம். புற்று நோய் கட்டியாக உருவெடுப்பதன் மருத்துவ காரணம் என்ன? …
-
- 1 reply
- 1.7k views
-
-
தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி? நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான். உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று படத்தின் காப்புரிமைGETTY IMAGES வாய்வழியாக பாலுறவு கொள்வது மிகவும் ஆபத்தான கொனோரியா என்ற பாலியல் நோய் தொற்றை உருவாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. மேலும், குறைந்துவரும் ஆணுறை பயன்பாடு அந்தத் தொற்று மேலும் பரவுவதற்கு உதவிகரமாக இருக்கிறது என்றும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. யாரேனும் ஒருவர் கொனோரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் தற்போது அதை குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது என்றும், சில நேரத்தில் அதை குணப்படுத்துவது இயலாததது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பாலியல் உறவின் மூலம் நோய் தொற்று மிக விரைவாக ஆன்டிபயோடிக்ஸ் எதிரான எதிர்ப்பு …
-
- 2 replies
- 1.7k views
-
-
''கிரேக்கத்துல ''கடவுளின் பானம்''னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!''. திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம். * இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம். * ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும். * திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது! * ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸ’ல் 80 சதவிகிதம் தண்ரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இரு…
-
- 1 reply
- 1.7k views
-
-
உடல் பருமன் கூடியவர்கள், அதிகம் சோடா குடிப்பவர்கள், சோடாவில் அதிகம் இருக்கும் வெல்லம் / சீனி உடல் எடை கூட கரணம், உடல் எடை அதிகரிப்பதால் இணைந்து வரும் இதய நோய்கள், சல ரோகம்/ நீரிழிவு என்பவற்றுக்கு காரணம் என சொல்லப்படுவதால் சோடா தயாரிப்பு நிறுவனங்கள் சீனி அற்ற செயற்கையான இனிப்பூட்டிகளை கொண்ட சோடக்களை விற்கிறன. உடல் நிறையில்/ உடல் நலனில் அக்கறை கொண்டோர் பலரும் "டயட்" சோடக்களை குடிக்கிறனர். ஆனால் டயட் சோடா பாவனை உண்மையில் உடல் நிறை குறைவதில் பங்க்கேடுக்குமா? அல்லது "டயட்" சோடக்களில் உள்ள செயற்கை இனிபூட்டிகள் உடல் நலனை பாதிக்குமா? அதிகரித்த செயற்கை இனிபூட்டி பவனை "சட்டியில் இருந்து தப்பி நெருப்பினுள் விழுந்த கதை" போன்றதா? 1. அண்மையில் செயற்கை இனிபூட்டிய சோடா குடிக்கும் …
-
- 1 reply
- 1.7k views
-
-
வல்லாரை செயலில் "வல்லாரை அறிவில் "வல்லாரை ஆற்றலில் "வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு "வல்லாரை "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே' என்பது பழமொழி. சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை . பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது. இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம்…
-
- 7 replies
- 1.7k views
-
-
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். 1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். 3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் …
-
- 2 replies
- 1.7k views
-
-
கொழுப்பு உணவு, முட்டை சாப்பிடுவதால் மாரடைப்பு வராது: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு கோப்பு படம் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவும், முட்டைகளும் சாப்பிடு வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப் புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல் 1989 வரை நடத்தப்பட்டது. இதய நோய் பாதிப்பு இல்லாத மிகுந்த ஆரோக் கியமான 42 முதல் 60 வயது நிரம்பிய 1,032 ஆண்களின் தினசரி உணவு பழக்க வழக்கத்தை வைத்து ஆய்வு மேற…
-
- 1 reply
- 1.7k views
-
-
மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து உள்ளது. புரதச்சத்து , நார்ச்சத்து விழுக்காடும், கார்போ ஹைட்ரேட், தாதுக்கள் சுண்ணாம்புச் சத்து மக்னீஷியம் அடங்கியுள்ளன. மேலும், விற்றமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மாதுளம் பழத்தைப் பொறுத…
-
- 5 replies
- 1.7k views
-
-
விரல்களாலும் வியாதிகளை விரட்டமுடியும்! [saturday, 2013-10-26 16:12:13] நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. …
-
- 4 replies
- 1.7k views
-
-
ஒரே இடத்தில் இருந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புதிதாக நடைபெற்ற ஆய்வில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரியவந்துள்ளது. லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிக…
-
- 19 replies
- 1.7k views
-
-
‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு. அ…
-
- 1 reply
- 1.7k views
-
-
உயிர்ச்சத்துகளில் வைட்டமின் டி முக்கியமானது. அதேநேரம் அதிகக் கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின் டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலும் வைட்டமின் டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களைப் பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி'…
-
- 0 replies
- 1.7k views
-
-
பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள். Beta-glucans எனப்படுபவை பல குளுகொஸ் (Glucose) மூலக்கூறுகளினால் ஆக்கப்பட்ட ஒரு பல் சக்கரைட் பசை (Polysaccharide gum ) ஆகும். இயற்கையாக பல தாவரங்களிலும், நுண்ணங்கிகளிலும் காணப்படுகிறது. இது உடல் நலனுக்கு உகந்த ஒரு சமிபாட்டு நார் சத்தாகும் (Dietary fibre). தற்போதைய நவீன உலகில் நுகர்வோர் பலரும் (அதாவது நாங்களே தான்) உடல் நலனுக்கு உகந்த உணவை தேடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே. அவ்வாறான தேடலுக்கு தீனி போடுபவை செயற்படு உணவுகள் (Functional Foods) எனும் உணவு வகைகளாகும். பீற்றா குளுக்கான்ஸ் உம் செயற்படு உணவு வகையை சேர்ந்தவையாகும். பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள் …
-
- 2 replies
- 1.7k views
-
-
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிரிப்பு தான். சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம். கள்ள கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிரிப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வணக்கம் நண்பர்களே, ஹீஸ்திரி வாவு எனும் ஒருவகை மன அழுத்த நோயைப்பற்றி நம்மில் அநேகர் கேவிப்பட்டிருப்பொம். இது பெரும்பாலும் பெண்களுக்கே அதிகமாக வருகிறது. இந்த நோயைப்பற்றி உங்களுக்கு தெரிந்த தகவழ்களை இங்கு வழங்க முடியுமா? இந்த நோயைப்பற்றிய புஸ்தகங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை தெரியப்படுத்த முடியுமா? அல்லது மன அழுத்த நோய்பற்றி அறிய, உளவியள் வைத்தியர்களை உங்களுக்கு தெரியுமா? உங்கள் உதவிக்கும் ஒத்துளைப்புக்கும் முன்கூட்டியே உங்களுக்கு நன்றிகள் அன்புடன் உங்கள் உறவு
-
- 16 replies
- 1.7k views
-
-
சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பப்ளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது. கோடைக்காலத்தின் அதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
இருதய நோய் குணமாக... செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும். செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும். ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும். செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி…
-
- 0 replies
- 1.6k views
-
-
1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. 4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். 5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். 6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. 7. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. …
-
- 10 replies
- 1.6k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-